Published:Updated:

வாழ்க்கையை மாற்றுவதுதான் சங்கீதம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
வாழ்க்கையை மாற்றுவதுதான் சங்கீதம்!
வாழ்க்கையை மாற்றுவதுதான் சங்கீதம்!

சந்திப்புஆர்.வைதேகி - படங்கள்: பா.காளிமுத்து

பிரீமியம் ஸ்டோரி
வாழ்க்கையை மாற்றுவதுதான் சங்கீதம்!

‘இசை இல்லாத வாழ்க்கை பிழையானது’ என்றொரு பொன்மொழி உண்டு. இசையே தெரியாதவர்களையும் இசை ரசனையே இல்லாதவர்களையும்கூட தன் சங்கீதத்தால் கட்டிப் போடுகிற மாயக்குரல் அருணா சாய்ராமுடையது. ரசிகர்களாலும் இசை விமர்சகர்களாலும் இசை அரசி எம்.எஸ்.சுப்புலட்சுமியுடன் ஒப்பிடப்பட்டு, பாராட்டப்படுபவர் பத்மஸ்ரீ அருணா சாய்ராம்!

சங்கீத சீசனுக்கான தயாரிப்புகள்... தான் நடத்துகிற ‘நாத யோகம்’ அறக்கட்டளைப் பணிகள்... குடும்பம், உறவுகள் மற்றும் நண்பர்களுக்கான நேரம்.... இப்படி அருணா சாய்ராம் ரொம்பவே பிசி. ‘அவள் விகடன்’ வாசகிகள் சந்திக்க விரும்புகிறார்கள் எனத் தெரிந்ததும் அத்தனை வேலைகளுக்கு இடையிலும் அரை நாளை நமக்காக ஒதுக்கி நிறைய பேசினார்... நிறைவாக பாடியும் காட்டினார். திரு. சாய்ராம் தயாரித்துக் கொடுத்த இதமான தேநீருடன், அருணாவின் இனிமையான இசையும் சேர்ந்த அந்த சுகானுபவ சந்திப்பில் இருந்து...

கீதா ரவிக்குமார்

``உங்களோட குரு பத்திச் சொல்லுங்களேன்...''

‘`காலையில நான் கண் முழிக்கிறபோதே பாட்டு கிளாஸ் எடுத்திட்டிருப்பாங்க அம்மா. ஒரு கட்டத்துல என்னையும் காலையில 4 மணிக்கு எழுப்பி விட்டுப் பாடச் சொன்னாங்க. அகார, இகார, உகாரம்னு எல்லா வரிசையிலயும் பாடணும். தினமும் அதைப் பண்ணினாதான் சுடச்சுட ஒரு டம்ளர் பால் கிடைக்கும். எங்கம்மா, அப்பா ரொம்ப ஸ்ட்ரிக்டும் இல்லை, ரொம்ப சுதந்திரம் கொடுக்கிறவங்களும் இல்லை. தட்டிக் கொடுத்து வளர்த்தாங்க. எந்த இங்கிலீஷ் படம் வந்தாலும் அப்பா கூட்டிட்டுப் போவார். இந்திப் படமும், தமிழ்ப் படமும் வந்தா அம்மா கூட்டிட்டுப் போவாங்க. தேவையான சுதந்திரமும் இருந்தது. ஒழுக்கமும் இருந்தது.

என்னோட பத்தாவது வயசுல கே.பிருந்தாம்மா கிட்ட சங்கீதம் படிக்க ஆரம்பிச்சு 15 வருஷங்கள் கத்துக்கிட்டேன். அப்புறம் ஏ.எஸ்.மணி, எஸ்.ராமச்சந்திரன், டி.ஆர்.சுப்ரமணியம், கே.எஸ்.நாராயணஸ்வாமினு பல குருக்கள்... டாக்டர் பாலமுரளிகிருஷ்ணா சார்கிட்ட முறைப்படி கத்துக்கலைன்னாலும், சில விஷயங்கள்ல அவர்தான் எனக்கு கண்ணைத் திறந்து விட்டிருக்கார்.''

கிருஷ்ணகுமாரி

``எல்லா அம்மா, அப்பாவுக்கும் அவங்க குழந்தைங்களை பெரிய கலைஞர்களாக் கணும்ங்கிற ஆசை இருக்கே..?''

‘`இன்டர்நெட், கம்ப்யூட்டர், விஷுவல் மீடியா, யூடியூப்னு பலதும் இருக்கிறதால குழந்தைகளுக்கு குருகிட்ட கத்துக்கிறதுக்கு மேல சட்டுனு ஒரு விஷயத்தைக் கிரகிச்சுக்க முடியறது. அவங்களோட வளர்ச்சி வேகமா இருக்கு. ஜப்பான்ல போன்சாய் செடிகள்னு கேள்விப்பட்டிருப்போம். சின்ன செடியா இருக்கும். ஆனா, அதுக்கு வயசு அதிகமிருக்கும். அந்த மாதிரி இருக்காங்க இன்றைய குழந்தைகள்.

திறமையுள்ள குழந்தைங்களை ரொம்ப சீக்கிரமா மக்கள் பார்வைக்குக் கொண்டு வரணுமானு கேட்டா, ‘வேண்டாம்’னுதான் சொல்வேன். மக்கள் பார்வைக்கு வந்ததும் எல்லார் கவனத்துக்கும் ஆளாகறாங்க. புகழ்ச்சியும் பாராட்டும் அதீதமா வருது. இன்னும் வளரக்கூடிய நிலைமையில இருந்தாகூட அவங்களோட வளர்ச்சி அதோட தடைப்படறது. சின்னக் குழந்தைங்களை மேடையில ஏத்தும்போது அவங்க கத்துக்கிறதுக்குத் தேவையான அளவு மட்டும் எக்ஸ்போஷர் கொடுத்து, சின்னச் சின்னப் போட்டிகள்ல கலந்துக்க வச்சு, முழுமையா வளர்ற வரை பொறுமையா பாதுகாத்து வளர்க்கிறதுதான் பெற்றோரோட மிகப்பெரிய பொறுப்பா இருக்கணும்...''

ஹர்ஷிதா

``சராசரியான சங்கீத ரசிகர் ஒருத்தர் உங்களை மாதிரி பிரபலமானவங்களோட இசையைக் கேட்கணும்னா, டிக்கெட் வாங்கி சபாவுக்குப் போறது மட்டும்தான் வழியா இருக்கு... வசதியில்லாத ரசிகர்களுக்கு அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லையே...''

‘‘ரொம்ப நியாயமான கேள்வி. ஒவ்வொரு கலைஞருக்கும் இந்த விஷயத்துல பொறுப்பு இருக்கணும். வருஷத்துல இவ்வளவு சபா கச்சேரிகள் பண்ணினா, அதுக்கு ஏத்த மாதிரி குறிப்பிட்ட கச்சேரிகளை பொது இடங்கள்ல கொடுக்கணும். அப்படி ஒரு கோட்பாட்டை கலைஞர்கள் வச்சுக்கணும்...’’

வாழ்க்கையை மாற்றுவதுதான் சங்கீதம்!

சந்திரிகா பாலசுப்ரமணியன்

``எம்.எஸ்.அம்மாவோட நூற்றாண்டு இது. பக்தி பாவத்துல அவங்களுக்கு அடுத்து எங்களுக்கெல்லாம் நீங்கதான் தெரியறீங்க... எம்.எஸ்.அம்மா பத்தின மறக்க முடியாத சம்பவங்கள் ஏதாவது இருக்கா?''

‘`எம்.எஸ். அம்மாவை நான் பீடத்துலதான் எப்போதுமே வச்சிருக்கேன். எங்கம்மாவும் எம்.எஸ்.அம்மாவோட ரசிகை. நான் பிறக்கறதுக்கு முன்னாடி மும்பை மடுங்காவுல அம்மாவும் அப்பாவும் சின்ன அபார்ட்மென்ட்டுல இருந்தாங்களாம். அப்போ ரேடியோலதான் பாட்டு கேட்க முடியும்.

எம்.எஸ்.அம்மாவோட பாட்டு வந்ததுன்னா, ரெண்டு, மூணு பெண்கள் சேர்ந்து, ஆளுக்கு ரெண்டு வரிகளா பங்கு போட்டு, அந்தப் பாட்டு வரும்போது அந்த வரிகளை மட்டும் எழுதி வச்சு, அதை மட்டும் மனப்பாடம் செய்வாங்களாம். அப்புறம் எல்லாத்தையும் சேர்த்து அந்தப் பாட்டைக் கத்துப்பாங்களாம்.

எனக்கு 8, 9 வயசிருக்கும்போது அம்மா, அப்பாவுக்கு எம்.எஸ்.அம்மாவோட நல்ல பரிச்சயம் வந்திருந்தது. அம்மாவும் சதாசிவம் சாரும் வீட்டுக்கு வருவாங்க. காபி, டிபனோ, சாப்பாடோ சாப்பிடும்போது எனக்கு தரையில கால் நிற்காது. எம்.எஸ்.அம்மா என்னைப் பார்த்துட்டாலோ, சிரிச்சாலோ அவ்வளவு சந்தோஷமா இருக்கும். என் கல்யாணத்துக்கும் வந்து ‘ஊஞ்சல்’ல பாடினாங்க.

அம்மா பாட்டு கேட்டதும் நல்ல நல்ல காரியங்கள் பண்ணணும்னு தோணும். கையில இருக்கிறதை எல்லாம் இன்னொருத்தருக்குக் கொடுத்துடலாமேனு தோணும். யாரையாவது கட்டிக்கலாமே, அன்பு செலுத்தலாமேனு தோணும். கஷ்டப்படறவங்களோட கண்ணீரைத் துடைக்கலாமேனு தோணும். நான் பிரமாதமா ராகம் பாடிட்டேன்னு நினைக்காம, இன்னிக்கு ஒருத்தரோட மனசைத் தொட்டேனா, ஒருத்தர் வாழ்க்கையை மாத்தினேனா... அதுதான் சங்கீதம்னு அம்மா நிரூபிச்சாங்க!’’

ஜோதிலட்சுமி

``பரதநாட்டியமோ, கர்நாடக சங்கீதமோ... வசதியில்லாத - ஆனாலும் திறமையுள்ள குழந்தைகள் வெளிச்சத்துக்கு வருவதற்கு உங்களை மாதிரி கலைஞர்கள் என்ன செய்யறீங்க?''

‘` ‘நாதயோகம்’னு ஒரு டிரஸ்ட் வச்சிருக் கேன். அது மூலமா என்னால முடிஞ்ச உதவிகளைப் பண்ணிட்டிருக்கேன். திருப்பதி யுனிவர்சிட்டிக்கு சங்கீதம் படிக்க வந்திருக்கிற கிராமத்துக் குழந்தைங்களுக்கு இசைக் கருவிகள் வாங்கக்கூட வசதியில்லை. அவங்களுக்கு இசைக்கருவிகள் வாங்கிக் கொடுத்திருக்கேன். கூர்க்ல உள்ள ஒரு குடும்பத்துல ரெண்டு குழந்தைகள் புல்லாங்குழல் வாசிக்கிறாங்க. அவங்களுக்கு நிதி உதவி பண்றேன். இது மாதிரி சின்ன அளவுல பண்றேன்.  பிரதிபலன் எதிர்பார்க்காம சொல்லிக் கொடுக்கிற குரு எத்தனையோ பேர் இருக்காங்க. சீனியர் கலைஞர்கள் வித்யாதானமாகவும் இதைச் செய்யறாங்க.’’

ஹர்ஷிதா

``உங்க குடும்பத்தைப் பத்திச் சொல்லுங் களேன்...''

‘`கணவர் சாய்ராம். ரொம்ப எளிமையானவர். எதிர்பார்ப்புகளே இல்லாத மனிதர். மைத்ரேயி, காயத்ரினு எங்களுக்கு ரெண்டு மகள்கள். ரெண்டு பேரும் வெளிநாட்ல இருக்காங்க.

அம்மா, அப்பா மாதிரியே மாமனார், மாமியாரும் தங்கமா அமைஞ்சதை என் பாக்கியம்னுதான் சொல்லணும். என் மாமியார் உயிரோட இருந்தவரைக்கும் என் கச்சேரி ஒண்ணையும் தவறவிட்டதில்லை. முழுக்க கேட்டு ரசிப்பாங்க. கச்சேரிக்குப் புடவை எடுத்துக் கொடுக்கிறது, முடிஞ்சு வீட்டுக்கு வந்ததும் எனக்கு சுத்திப் போடறது வரைக்கும் பார்த்துப் பார்த்துப் பண்ணியிருக்காங்க!’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு