Published:Updated:

அவள் கிளாஸிக்ஸ்... வெந்நீரில் நெய் விட்டு...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
அவள் கிளாஸிக்ஸ்... வெந்நீரில் நெய் விட்டு...
அவள் கிளாஸிக்ஸ்... வெந்நீரில் நெய் விட்டு...

வி.ஐ.பி. டிப்ஸ் - பாடகி நித்யஸ்ரீ

பிரீமியம் ஸ்டோரி
அவள் கிளாஸிக்ஸ்... வெந்நீரில் நெய் விட்டு...

*    டீ டிகாக்   ஷனில் தேன் விட்டு சாப்பிட்டால் தொண்டைக் கட்டு உடனே நீங்கும்.

*    தொண்டையிலே ‘கிச்கிச்’ இருந்தால் மிளகுப்பொடி, மஞ்சள்பொடியோடு, அதிமதுரம் தட்டிப் போட்டு, பாலுடன் அருந்தினால் ‘ஊலல்லா’ பாடலாம்!

*    இதமான வெந்நீரில் ஒரு துளி நெய்விட்டு தினம் 10-15 தடவை சாப்பிட்டால் குரல் வெண்ணெய் போல வளமாகும்.

*    அத்திப்பழம், பேரீச்சம்பழம், கேரட் ஆகியவற்றை ஜூஸ் ஆக்கி, காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் நாளடைவில் கிட்டப்பார்வை குறைபாடு குறையும்.

*    கையில் தீக்காயம் ஏற்பட்டால், உடனே தோசை மாவு அல்லது இட்லி மாவை அந்த இடத்தில் தடவினால் புண்ணாகாது.

 சமையல்


*    உருளைக்கிழங்கு மலிவாகக் கிடைக்கும் போது சிப்ஸ் வடிவில் நறுக்கி வெயிலில் உலரவைத்துக்கொண்டால், அவசரத்துக்கு அப்பளம் போல பொரித்துச் சாப்பிடலாம்.

*    சப்பாத்தி மாவோடு கொஞ்சம் உப்பு, மஞ்சள்பொடி, காரப்பொடி, பெருங்காயத் தூள், சீரகம், கறிவேப்பிலை கலந்து சுட்டால், தொட்டுக்கொள்ள எதுவும் தேவையில்லை.

*    வெஜிடபிள் சாலட் தயாரிக்கும்போது, வேகவைத்த வேர்க்கடலை, முளை கட்டிய பச்சைப்பயறு ஆகியவையும் சேர்த்து, வினிகரில் ஊறவைத்தால் கூடுதல் ருசி!

அவள் கிளாஸிக்ஸ்... வெந்நீரில் நெய் விட்டு...

பட்டு

*     பட்டுச் சேலையில் தவிர்க்க முடியாமல் எண்ணெய் பட நேரிடு வது சகஜம். உடனே கறைபடிந்த இடத்தின் மீது டால்கம் பவுடரை போட்டு, பிறகு ஷாம்பு அல்லது பூந்திக்கொட்டை போட்டு ‘வாஷ்’ செய்தால் எண்ணெய்க் கறை காணாமல் போய்விடும்.

அழகு

*     ஷாம்புவால் முடி உதிர்வதைத் தவிர்க்க - செம்பருத்தி இலை, சிறிதளவு மருதாணி இலை, கறி வேப்பிலை, தேங்காய்ப்பால், ஊற வைத்த வெந்தயம் ஆகியவற்றை தலைக்குத் தேய்த்தால் முடி கொட்டாது. புசுபுசுவென்று இருக்கும்.

*     முகம் பளபளப்பாகவும் சிவப்பாகவும் இருக்க வேண்டுமா? தக்காளி, தயிர், கடலை மாவு ஆகியவற்றோடு, சந்தனத்தையும் சேர்த்து முகத்தில் பூசி, 15 நிமிடம் கழித்து கழுவினால், முகம் பளிச்சென்று ஆகிவிடும்.


*     இரவில் உறங்கச் செல்லும் முன் ஆலிவ் ஆயிலை முகத்தில் தேய்த்துப் படுத்தால் சரும வறட்சி நீங்கி முகம் பொலிவடையும்.


*     பல்லின் மஞ்சள் நிறம் நீங்க, சாதா ரண டேபிள் சால்ட் உபயோகித்து பல் தேய்த்தால் போதும், பற்கள் பளிச்சிடும்!

ஆபரணம்

*     தங்க வளையல், செயின், மோதிரம் போன்றவற்றை காட்டனில் சுருட்டி வைத்தால், புது மெருகோடு இருக்கும்.

(மே 14, 1999)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு