Published:Updated:

கேபிள் கலாட்டா - “வாழ்க்கை அழகா மாறிடும்!”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கேபிள் கலாட்டா - “வாழ்க்கை அழகா மாறிடும்!”
கேபிள் கலாட்டா - “வாழ்க்கை அழகா மாறிடும்!”

ரிமோட் ரீட்டா, படம்: உ.கிரண்குமார்

பிரீமியம் ஸ்டோரி

`‘நான் இப்போ மாப்பிள்ளை செந்தில்... அவங்க ‘ஜெயா சந்திரன்’...’' சரவணன் - மீனாட்சி’யில் ஜோடியாக கலக்கிய ரியல் தம்பதி ‘செந்தில் - ஸ்ரீஜா’ இப்படித்தான் அறிமுகம் செய்துகொள்கின்றனர். நீண்ட இடைவெளிக்குப்பின் விஜய் டி.வி-யின் ‘மாப்பிள்ளை’ சீரியல் மூலமாக ரீ-என்ட்ரி கொடுத்துள்ளனர் இருவரும்.

கேபிள் கலாட்டா - “வாழ்க்கை அழகா மாறிடும்!”

`‘நிழல்கள் ரவி, குன்னக்குடி வைத்யநாதன் இந்த மாதிரி அடைமொழிகள்தான் நிறைய பேருக்கு அடையாளம். அந்த மாதிரிதான் எனக்கு ‘மிர்ச்சி செந்தில்’. ‘சரவணன் - மீனாட்சி’ தொடருக்கு அப்புறம் நிறைய பேர் என்னோட பெயர் சரவணன் அப்டினு நினைச்சுட்டு இருக்காங்க. உண்மையா என்னோட பெயர் ‘செந்தில்குமார்' '' என்று நீண்ட விளக்கம் கொடுத்தார் செந்தில்.

``மூணு வருஷமா ஆக்டிங் விட்டதால, சுத்தமா நடிப்பு மைண்டை விட்டு போயிடுச்சு. ஆனாலும், எனக்கு தைரியம் சொல்லி நடிக்க வெச்சது இவர்தான். மாப்பிள்ளையில் இவருக்கு நான் பாஸ். அதனால ஷாட் அப்போ ‘செந்தில் இங்க பாருங்க... அப்டி பண்ணுங்கனு’ டயலாக் பேசிடுவேன். ஷாட் முடிஞ்சதும் எல்லாரும் சிரிப்பாங்க செட்ல’' என்று கணவரைப் பார்த்து கண்ணடித்து சிரிக்கிறார் ஸ்ரீஜா. 

``கல்யாணமாகி இந்த மூணு வருஷத்தில் நான் தமிழ்நாட்டில் இருந்து கொஞ்ச தூரம் போயிருக்கேன். அவங்க கேரளாவில் இருந்து கொஞ்ச தூரம் வந்திருக்காங்க. ரெண்டு பேரும் பாலக்காட்டில் ஸ்டக் ஆகி நிக்கறோம். அப்டிதான் மலையாளத்தையும், தமிழையும் சமாளிக்கிறோம். ஆனா, மேடத்துக்கு கோபம் வந்தா ஃபுல் மலையாளம்தான்’' என்னும் செந்திலை இடைமறிக்கும் ஸ்ரீஜா, `‘நான் தமிழில் திட்ட ட்ரை பண்றப்போ ‘நீ பேசறது தமிழா?’னு கேட்பார். உடனே நான் மலையாளத்தில் கடகடனு திட்ட ஆரம்பிச்சுருவேன்’' என்று சொல்ல, ``தமிழில் திட்டும்போது நான் தமிழ்லையாமா திட்றனு கேட்டா போதும், மலையாளத்தில் வறுத்து எடுத்துடுவாங்க’' என்று போலியாக பயப்படுகிறார் செந்தில்.

`‘ஒரே ஒரு நல்ல விஷயம்... எனக்காக சமையல் நல்லா செய்ய கத்துக்கிட்டாங்க. மட்டன் சாப்ஸ், மீன்குழம்பெல்லாம் எனக்காக கேட்டுக் கேட்டு கத்துகிட்டாங்க. அதே மாதிரி நானும் இவங்களோட நடிப்பில் ரொம்ப சப்போர்ட் பண்ணுவேன். கணவன், மனைவி ஒருத்தருக்கு ஒருத்தர் அன்பா, ஆதரவா இருக்கறதுதாங்க வாழ்க்கை. அடக்கி ஆள்றது கிடையாது. எல்லா ஹஸ்பண்ட் அண்ட் வொய்ஃபும் இதை புரிஞ்சுக்கிட்டா வாழ்க்கை அழகா மாறிடும்’' ஆழமான கருத்தொன்றை முன்வைத்து முடிக்கிறார் செந்தில்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு