பேஸிக் மேக்கப் முதல் பிரைடல் மேக்கப் வரை! - 4

ஹலோ வாசகிகளே!

ல்லூரிப் பெண்களுக்கு எப்படி மேக்கப் செய்வது என இந்தப் பகுதி மூலம் ஏற்கெனவே கற்றுக்கொண்டிருப்பீர்கள். கல்லூரிக்கு அடுத்து அலுவலகம்தானே...

ஆமாம்... இந்த இதழில், அலுவலகம் செல்பவர்கள் எவ்வாறு மேக்கப் செய்து கொள்ள வேண்டும் என்பதைப் பார்க்கலாமா ?

இதோ `அலுவலகப் பெண்களுக்கான தினசரி மேக்கப் '...

பேஸிக் மேக்கப் முதல் பிரைடல் மேக்கப் வரை! - 4

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மேக்கப் செய்ய தேவையானவை:

1. மாய்ஸ்ச்சரைஸர்
2. ஃபவுண்டேஷன்
3. காம்பாக்ட் பவுடர்
4. ஐ ஷேடோ
5. ஐ லைனர் பென்சில்
6. மஸ்காரா
7. ஐப்ரோ பென்சில்
8. பிளஷர்
9. ஹை லைட்டர்
10. லிப் லைனர் பென்சில்
11. லிப்ஸ்டிக்

பேஸிக் மேக்கப் முதல் பிரைடல் மேக்கப் வரை! - 4

1. சிறிதளவு மாய்ஸ்ச்சரைஸர் எடுத்துக்கொள்ளவும்.

2. பிரஷ்ஷினால் தொட்டு முகத்தில் அப்ளை செய்யவும்.

3. சருமத்துக்குப் பொருத்தமான ஃபவுண்டேஷன் க்ரீமை தேவையான அளவு எடுத்துக்கொள்ளவும்.

4. ஃபவுண்டேஷன் பிரஷ்ஷினால் தொட்டு முகம், காது மற்றும் கழுத்து என அனைத்துப் பகுதிகளிலும் ஒரே சீராக அப்ளை செய்யவும்.

5. சரும நிறத்துக்கு ஏற்ற காம்பாக்ட் பவுடரை எடுத்துக்கொள்ளவும்.

6. காம்பாக்ட் பவுடரை பவுடர் பிரஷ்ஷினால் எடுத்து  முகம், காது மற்றும் கழுத்து என அனைத்துப் பகுதிகளிலும் ஒரே சீராக அப்ளை செய்யவும்.

7. உடைக்கு தகுந்த, அதேசமயம் மிதமான நிறத்தில் ஐ ஷேடோ எடுத்துக்கொள்ளவும்.

8. பிரஷ்ஷினால் கண் இமைகளின் மேற்பகுதியில் அப்ளை செய்யவும்.

9. ஐ லைனர் பென்சிலை எடுத்துக்கொள்ளவும்.

10. ஐ லைனரை கண்  இமைகளின் மேற்பகுதி இமை முடிகளையொட்டி விருப்பத்துக்கு ஏற்ற வடிவில் வரைந்துகொள்ளவும்.

11. மஸ்காரா எடுத்துக்கொள்ளவும்.

12.
மேல் பகுதி இமை முடிகள் மற்றும் கீழ் பகுதி இமை முடிகளுக்கு மஸ்காரா அப்ளை செய்யவும்.

பேஸிக் மேக்கப் முதல் பிரைடல் மேக்கப் வரை! - 4

13. ஐப்ரோ பென்சில் எடுத்துக்கொள்ளவும்.

14. புருவங்களை விரும்பிய அளவுக்கு வரைந்துகொள்ளவும்.

15. பிளஷர் எடுத்துக்கொள்ளவும்.

16. மிதமான நிற பிளஷரை பிரஷ்ஷினால் தொட்டு கன்னங்களுக்கு அப்ளை செய்யவும்.

17. ஹை லைட்டர் எடுத்துக்கொள்ளவும்.

18. பிரஷ்ஷினால் ஹைலைட்டரை தொட்டு கன்ன மேடுகளில் மட்டும் அப்ளை செய்துகொள்ளவும். இது கன்னங்களை வழவழப்பாகவும், மினுமினுப்பாகவும் காட்டும்.

பேஸிக் மேக்கப் முதல் பிரைடல் மேக்கப் வரை! - 4

19. லிப் லைனர் பென்சிலை எடுத்துக் கொள்ளவும்.

20. லிப்லைனர் பென்சிலின் மூலம் உதட்டு வடிவத்துக்கு ஏற்ப, உதட்டு ஓரங்களில் வரைந்துகொள்ளவும்.

21. மைல்ட் கலர் லிப்ஸ்டிக்கை எடுத்துக் கொள்ளவும்.

22. லிப்ஸ்டிக்கை பிரஷ்ஷினால் எடுத்து, உதடுகளில் வரைந்த கோட்டுக்குள் அப்ளை செய்யவும்.

`பளிச்' தோற்றத்தில் அலுவலகத்துக்கு கிளம்பத் தயார்.

 உதவி: நேச்சுரல்ஸ் மாடல்: வைஷாலி

பேஸிக் மேக்கப் முதல் பிரைடல் மேக்கப் வரை! - 4

நேச்சுரல் ஹேர் அண்ட் பியூட்டி சலூனின் உரிமையாளர் வீணா வழங்கும் டிப்ஸ்...

கேள்வி: தினசரி பத்து மணி நேரம் ஏ.சி-யில் வேலை செய்வதால் சருமம் வறண்டுபோகிறது. இதை எப்படித் தவிர்ப்பது ?

பதில்: அதிகமாக தண்ணீர் குடியுங்கள். குளித்து முடித்ததும் மாய்ஸ்ச் சரைஸர் அப்ளை செய்யவும். மிகவும் வறண்ட சருமம் எனில், கால் மற்றும் கைகளுக்கு திக்கான மாய்ஸ்ச்சரைஸரை யூஸ் செய்யவும்.

கேள்வி: என்னை எப்போதும் புத்துணர்வுடன் வைத்துக்கொள்ள, என்னுடைய ஹேண்ட்பேக்கில் முக்கியமாக இருக்க வேண்டிய பொருட்கள் என்ன ?

பதில்: சீப்பு, கண் மை, ஐ லைனர், லிப்ஸ்டிக், ஈரப்பதம் நிறைந்த ‘வெட் டிஷ்யு’ மற்றும் சாதாரண உலர்ந்த டிஷ்யு பேப்பர், டியோடரண்ட், காம்பாக்ட் பவுடர், சிறிய கண்ணாடி.

கேள்வி: அதிக நேரம் கம்ப்யூட்டரில் வேலை பார்ப்பதால், கண்களைச் சுற்றி கருவளையம் வந்துள்ளது. இதை எப்படித் தவிர்ப்பது?

பதில்: தொடர்ந்து கம்ப்யூட்டரை பார்க்காமல், அரை மணி நேரத்துக்கு ஒருமுறை கண்களுக்கு 2 நிமிடங்கள் ஓய்வு கொடுங்கள். தினசரி கண்களுக்கு சில பயிற்சிகளை செய்யுங்கள். உதாரணத்துக்கு, அருகிலும் தொலைவிலும் மாற்றி மாற்றி 5 நிமிட இடைவெளிவிட்டு பாருங்கள். கண்விழிகளால் இடம் வலம் என வட்டமிட்டு (Rotate) பாருங்கள். நல்ல மருத்துவரை அணுகி ‘அண்டர் ஐ ஜெல் அல்லது க்ரீம்' வாங்கி மருத்துவரின் பரிந்துரைப்படி கண்களுக்கு கீழ் தினசரி அப்ளை செய்யவும்.

ந்த இதழில் வெளிவந்திருக் கும் `பேஸிக் மேக்கப்’  பகுதியை வீடியோவாக http://bitly.com/avalmakeup3 - ல் காணலாம் அல்லது இந்த க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்யுங்கள்.

பேஸிக் மேக்கப் முதல் பிரைடல் மேக்கப் வரை! - 4

குறிப்பு: கேள்விகளை aval@vikatan.com என்ற மெயில் ஐடி அல்லது அவள்விகடன், 757, அண்ணா சாலை, சென்னை - 600 002 என்ற முகவரிக்கு அனுப்பவும்.