Published:Updated:

ஒரு கோடி பேருக்கு வேலை கொடுக்கும் பெண்கள்! - முன்னணியில் தமிழகம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஒரு கோடி பேருக்கு வேலை கொடுக்கும் பெண்கள்! - முன்னணியில் தமிழகம்
ஒரு கோடி பேருக்கு வேலை கொடுக்கும் பெண்கள்! - முன்னணியில் தமிழகம்

டானிக் ஸ்டோரிகு.ஆனந்தராஜ் - படங்கள்: என்.ஜி.மணிகண்டன், மீ.நிவேதன், ரா.வருண் பிரசாத்

பிரீமியம் ஸ்டோரி

ம் மாநிலத்தின் உழைக்கும் வளைகரங்களுக்குக் கிடைத்திருக்கிறது அந்தப் பூச்செண்டு! இந்தியாவிலேயே அதிக பெண் தொழில்முனைவோர் கொண்ட மாநிலமாக தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. அடுத்தடுத்த இடங்களில் கேரளா, ஆந்திரப்பிரதேச மாநிலங்கள் இருக்கின்றன. மென்பொருள், உற்பத்தி நிறுவனங்கள், உணவு மற்றும் தங்குமிடம், விவசாயம் தொடங்கி பெட்டிக்கடை, பழக்கடை, பூக்கடை என நம் பெண்கள் எங்கெங்கும் எல்லையற்ற உழைப்பால் இந்தச் சாதனையை வசப்படுத்தியுள்ளனர்.

படித்த பெண்கள், படிக்காத பெண்கள் என யாவரும் ஒரு நிறுவனத்தையோ, முதலாளியையோ சார்ந்து சம்பளம் அல்லது கூலி வேலைக்குச் சென்றுவந்த நிலை இப்போது மாறியிருக்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில்தான் சுயதொழில் செய்யும் பெண்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருக்கிறது. அரை நூற்றாண்டுக்கு முன் வரை வீட்டுக்குள் அடைக்கப்பட்டு அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்ட பெண்கள், இன்று ஏராளமான ஆண்களுக்கும் வேலைவாய்ப்பு அளிக்கும் முதலாளிகளாக வீற்றிருக்கிறார்கள்.

ஒரு கோடி பேருக்கு வேலை கொடுக்கும் பெண்கள்! - முன்னணியில் தமிழகம்
ஒரு கோடி பேருக்கு வேலை கொடுக்கும் பெண்கள்! - முன்னணியில் தமிழகம்

கைகொடுத்த சுய உதவிக்குழு!

படிப்பறிவில்லாத பெண்கள்கூட நம்பிக்கை யுடன் களத்தில் இறங்கி, மகளிர் சுய உதவிக் குழுக்களின் உதவியால் சுய தொழில் தொடங்கி, தங்கள் கடின உழைப்பால் கரை சேர்கிறார்கள். அப்படி வெற்றிகரமான தொழில் முனைவோராக அசத்திக் கொண்டிருப்பவர், திருச்சி ‘ஜெயம் ஸ்நாக்ஸ்’ உரிமையாளர் இன்பவள்ளி.

‘`ஒன்பதாவதுதான் படிச்சிருக்கேன். 14 வருஷத்துக்கு முன்னாடி என் கணவரோட ஹோல்சேல் தொழில் நஷ்டமடைஞ்சதால, ஏதாச்சும் வேலைக்குப் போக நினைச்சேன். அப்போ சுயஉதவிக் குழுவுல சேர்ந்தேன். ‘கூலிக்கு வேலை பார்க்காம, நம்மளால முதலாளி ஆக முடியும்’கிற நம்பிக்கையை அங்கதான் கொடுத்தாங்க. எனக்குத் தெரிஞ்ச சமையல் தொழிலையே தேர்ந்தெடுத்தேன். போட்டிகள், தோல்விகள், சூழ்ச்சிகள் நிறைந்த இந்தத் தொழில்துறையில, ஆண்களைவிட பல மடங்கு பிரச்னைகள், வலிகளைக் கடந்துதான் பெண்கள் காலூன்ற முடியும். அந்தக் கடந்த காலத்தை எல்லாம் தாண்டி, இன்னைக்கு நான் ஜெயிச்சுட்டேன்’’ என்கிற இன்பவள்ளியின் இப்போதைய மாத வருமானம் லட்சத்தைத் தாண்டுகிறது. 57 வயதாகும் இவர், தமிழக மகளிர் தொழில் முனைவோர் சங்கத்தின் திருச்சி மாவட்டத் தலைவியாகவும் செயல்படுகிறார்.

‘`என்னோட பல வருஷ அனுபவத்துல சொல்றேன்... நெளிவு சுழிவு முழுக்கத் தெரிஞ்ச தொழிலைத் தேர்ந்தெடுக்கணும். ஆர்வம் இருக்குனு ஒரு துறையைத் தேர்ந்தெடுத்தால், அந்தத் துறையில் ஏற்கெனவே ஜெயிச்சவங்ககிட்ட போதுமான பயிற்சி எடுத்துக்கிட்டு, அப்புறம்தான் சுயதொழில் தொடங்கணும். குறிப்பா நம் தொழிற்சாலை/கடையை ஆரம்பிக்கிற இடம், அந்த இடத்துல நம்ம பொருளுக்கான தேவை, மக்களின் வாங்கும் திறன், போட்டியாளர்னு எல்லா விஷயங்களையும் யோசிச்சு முடிவெடுத்து, முழு ஈடுபாட்டோட தொழிலை நடத்தினா வெற்றி நிச்சயம்!” என்று வழிகாட்டுகிறார் இன்பவள்ளி.

ஒரு கோடி பேருக்கு வேலை கொடுக்கும் பெண்கள்! - முன்னணியில் தமிழகம்

பொழுதுபோக்காகச் செய்தது பிசினஸ் ஆகிடுச்சு!

சென்னையைச் சேர்ந்த இந்துமதி, இளம் தொழில் முனைவோர். ‘`எனக்குப் பரிசுப் பொருட்கள், கைவேலைப்பாடு பொருட்கள் செய்றதுல ஆர்வம் அதிகம். 2012ல் பி.இ. மூணாவது வருஷம் படிச்சுட்டு இருந்தப்போ, அதையே பிசினஸா செய்ய ஆரம்பிச் சேன். சில ஆயிரங்கள் லாபமா கிடைச்சது, எனக்கே சர்ப்ரைஸ் தான். அப்படியே அதை டெவலப் செஞ்சேன். போன வருஷம் எம்.டெக் முடிச்சேன். இப்போ என் ஃப்ரெண்டோட சேர்ந்து, முழு நேரமா கிஃப்ட், அலங்காரப் பொருட்களைச் சொந்தமா தயாரிச்சு ஆன்லைன்லயும் நேரடியாவும் விற்பனை செய்துட்டு இருக்கேன். வெளிநாடுகள்லயும் நிறைய கஸ்டமர்ஸ் இருக்காங்க. நாங்க உழைக்கிறதோட பலன் நேரடியா எங்களுக்கே கிடைக்கும் என்பதில் ரொம்ப சந்தோஷம்’’ என்கிறார் இந்துமதி.

‘`சுயதொழிலில் மூலப்பொருட்கள் வாங்குவது, கண்காட்சிக்குச் செல்வதுனு அடிக்கடி வெளியூர் செல்ல வேண்டி இருக்கும். பலரையும் சந்திக்க வேண்டியது இருக்கும். எங்க குடும்பத்தாரின் ஒத்துழைப்பு எங்களுக்குக் கிடைச்சதாலதான், இன்னைக்கு நாங்க வெற்றிபெற்றிருக்கோம். அந்த ஒத்துழைப்பு கிடைச்சா, இன்னும் லட்சக்கணக்கான பெண்கள் தொழில் முனை வோர்களா வெற்றிக்கொடி நாட்ட முடியும்!” என்று ஆதரவு திரட்டுகிறார் இந்துமதி.

போராட்டங்களைக் கடந்த வெற்றி!


காஞ்சிபுரம் மாவட்டம், மலையங்குளம் கிராமத்தைச் சேர்ந்த மகாலட்சுமி, சுயதொழில் முனைவோராக வாழ்க்கையைத் தொடங்கி யவர்... இப்போது தொழிலதிபராக முன்னேற்றம் கண்டிருப்பவர்! எம்.எஸ்சி., பிஎட்., படித்து விட்டு ஆசிரியர், பேராசிரியராக சில வருடங்கள் வேலை செய்தவர், கடந்த 25 வருடங்களாக வெளிநாடு களுக்கு ஜவுளி ஏற்றுமதி தொழிலும், 10 வருடங்களாக இயற்கை விவசாயமும் செய்து வருகிறார்.

ஒரு கோடி பேருக்கு வேலை கொடுக்கும் பெண்கள்! - முன்னணியில் தமிழகம்
ஒரு கோடி பேருக்கு வேலை கொடுக்கும் பெண்கள்! - முன்னணியில் தமிழகம்

‘`தொழில்துறை லாப - நஷ்டங்கள் நிறைஞ்சதுதான். இதை அனுபவப்பட்டு அனுபவப்பட்டுதான் கத்துக்கணும். ஒரு தொழிலைத் தொடங்கிய ஆரம்பகாலம் பெண்களுக்குப் ரொம்பப் போராட்டமா இருக்கும். நம்ம சமுதாயத்துல, ‘இவளுக்கு எதுக்குத் தேவையில்லாத வேலை?’, ‘இவளால இதெல்லாம் முடியுமா?’ போன்ற கேள்விகளைச் சந்திக்கிறதே பெரிய பிரச்னையா இருக்கும். ஆனா, அதையெல்லாம் புறந்தள்ளி தொழில்ல காலூன்றின பிறகு, அவங்க முன்னேற்றம் ஆண்களை விட சீரா, அதிகமாகவும் இருக்கும். பெண்களுக்கு இயல்பிலேயே இருக்கும் பொறுப்பு உணர்ச்சிதான் இதுக்குக் காரணம். நான் விவசாயத்துல இறங்கினப்போ, ‘பொம்பள போடுற வெள்ளாமை வீடு போய் சேராது. படிச்சுட்டு வேலைக்குப் போகாம இது தேவையா?’னு நேரடியாவே பல ஆண்கள் கிண்டல் செய்தாங்க. ஆனா, இப்போ நான் வெற்றிகரமா விவசாயம் செஞ்சிட்டு இருக்கேன்’’ என்கிற மகாலட்சுமி, பெண்கள் சுயதொழில் தொடங்க பயிற்சி வகுப்புகள் நடத்துவதுடன், ஆலோசனைகளும் வழங்கிவருகிறார்.

‘`சுயதொழிலுக்கு தரம்தான் அஸ்திவாரம். தொழிலில் நமக்கு எவ்வளவு பிரச்னைகள், சோதனைகள் வந்தாலும், அஸ்தி வாரத்துக்குப் பாதிப்பில்லாம பார்த்துக்கணும். கூடவே தன்னம் பிக்கை, உழைப்பு, தைரியம், விடா முயற்சி அவசியம். ஆரம்பத்தில் நாம் எதிர்பார்க்குற வருமானம் கிடைக்காது. சில நேரங்கள்ல நாம சரியான பாதையிலதான் போயிட்டு இருக்கிறோ மாங்கிற சந்தேகமும் விரக்தியும் வரும். எல்லா பிரச்னைகளையும் கடந்து போனாதான் சக்ஸஸ் பார்க்க முடியும்!’’ என்று அனுபவம் பகிர்கிறார் மகாலட்சுமி.

அடுத்த இதழில்...

* வீட்டில் இருந்தபடியே செய்யலாம் ஆன்லைன் பிசினஸ்!

* சுயதொழிலுக்கு வங்கிக்கடன் வாங்குவது எப்படி?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு