Published:Updated:

“நான் ஒரு ஸ்ப்ளிட் பர்சனாலிட்டியோ?!”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
“நான் ஒரு ஸ்ப்ளிட் பர்சனாலிட்டியோ?!”
“நான் ஒரு ஸ்ப்ளிட் பர்சனாலிட்டியோ?!”

டாக்டர் - டான்ஸர்!அதிதி, படம்: மீ.நிேவதன்

பிரீமியம் ஸ்டோரி

ரபரப்பான மருத்துவராகவும், பிரபலமான நடனக் கலைஞராகவும் பலருக்கும் பரிச்சயமானவர் ஸ்ரீநிதி. மத்திய அரசின் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டு மருமகளான ஸ்ரீநிதி அப்போலோ மருத்துவமனையின் துணைத் தலைவர், நாட்டியக் கலா மாநாட்டின் அவைக்கட்டுநர் என புதிய பொறுப்புகளுடன் இப்போதும் பரபரப்பாக இருக்கிறார்!

“நான் ஒரு ஸ்ப்ளிட் பர்சனாலிட்டியோ?!”

‘`எல்லா வருடங்களும் டிசம்பர் மாசம் ரொம்ப பிஸி. சீசன் வேலைகள், என் மகள் அதிதியோட பிறந்தநாள், அவளோட பரீட்சைனு நிறைய இருக்கும். இந்த வருஷம் கூடுதலா நாட்டியக் கலா மாநாட்டு வேலைகளும் சேர்ந்திருக்கு. கிருஷ்ணகான சபா நடத்தற இந்த நிகழ்ச்சியில மூத்த பரதநாட்டியக் கலைஞர்களுக்கு ‘நிருத்ய சூடாமணி’னு ஒரு விருது கொடுப்பாங்க. அந்த விருதை வாங்கினவங்களை 2 வருஷங்களுக்கு இந்த மாநாட்டை நடத்தித் தரச் சொல்வாங்க. பத்மா சுப்ரமணியம், லட்சுமி விஸ்வநாதன், சுதாராணி ரகுபதி, சித்ரா விஸ்வேஸ்வரன், அனிதா ரத்னம் மாதிரி நிறைய பேர் நடத்தித் தந்திருக்காங்க. இந்த வருஷமும், அடுத்த  வருஷமும் அந்த வாய்ப்பு எனக்கு வந்திருக்கு. நடனத்தை நேசிக்கிற என்னை மாதிரி கலைஞர்களுக்கு இது மிகப்பெரிய பொறுப்பு. டிசம்பர் 26 முதல் 31 வரை நடக்கவிருக்கிற இந்த மாநாடு, நடனத்தைப் பல பரிமாணங்கள்ல பார்க்கவும் பேசவும் வைக்கும். நடன ஆர்வலர்களுக்கும் ரசிகர்களுக்கும் ஒரே இடத்துல அத்தனை பெரிய கலைஞர்களையும் சந்திக்கவும் மிகப்பெரிய வாய்ப்பு!

`ஸ்திதி கதி'ங்கிறது இந்த மாநாட்டோட பேர். `ஸ்திதி'ன்னா சமஸ்கிருதத்துல நிலையானது. `கதி'ன்னா தொடர்வது. பரதமும் காலங்காலமா நிலையாகவும் தொடர்ந்திட்டும் இருக்கிற கலைதானே...’’ என்கிற ஸ்ரீநிதி, இந்த நிகழ்ச்சியில் தனது பாணியில் பழைமை பேச தஞ்சை நால்வரின் படைப்புக்கும், புதுமை பேச வைரமுத்துவின் அவசரத் தாலாட்டு கவிதைக்கும் நடனம் ஆட இருக்கிறார்!

டாக்டர்... டான்ஸர்... அரசியல் பிரமுகர் வீட்டுப் பெண்... மூணு ரோல்களையும் எப்படி சமாளிக்கிறீங்க?

 ‘`ஒவ்வொரு ரோலுக்கும் அதுக்கான அழகு உண்டு. 4 வயசுலேருந்து டான்ஸ் பண்றேன். அதுக்காக நான் ரொம்ப மெனக்கெடுறேன். ஆனாலும், அது ஒரு சுமையா தெரியலை. ‘அப்போ முழு நேர டான்ஸராவே இருந்துடுங்களேன்... ஏன் மெடிசின் படிச்சீங்க’ன்னு சிலர் கேட்பாங்க. மெடிசின் பிடிச்சதாலதான் மேற்கொண்டு எம்.டி முடிச்சேன். சில நேரங்களில் `நான் ஒரு ஸ்ப்ளிட் பர்சனாலிட்டியோ'னு கூட தோணும்!

நான் டான்ஸ் ஆடற டாக்டரும் இல்லை...  மெடிசின் தெரிஞ்ச டான்சரும் இல்லை. ரெண்டுமே எனக்கு முக்கியம்தான்!

எனக்கும் கணவர் கார்த்திக்கும் கூடப் பிறந்தவங்க யாருமில்லை. மாமனார், மாமியார், என் அம்மானு பெரியவங்களைப் பார்த்துக்கணும். வீட்டு நிர்வாகம், என் மகள் அதிதியோட படிப்பு,  கார்த்தியோட வேலைகள்ல உதவியா இருக்கிறதுனு பொறுப்புகள் இருக்கு. எத்தனையோ நடனக் கலைஞர்கள் திருமணம் செய்துக்காம, வாழ்க்கையையே நடனத்துக்காக அர்ப்பணிச்சதைப் பார்க்கறேன். என்னால அது முடியாது. எனக்கு எல்லாமே வேணும். எல்லாத்தையும் ரசனையோடவும் பொறுப் போடவும் பண்றேன்...’’

மாமனாரும் கணவரும் உங்க நடன நிகழ்ச்சிகளுக்கு வருவாங்களா?

‘`கார்த்தி என்னோட எல்லா நிகழ்ச்சிகளுக்கும் வந்து, `ஆல் தி பெஸ்ட்' சொல்லிட்டுத்தான் போவார். கார்த்திக்கு டான்ஸ், மியூசிக் பத்தி ஒண்ணும் தெரியாது. ஆனாலும், அவரோட சப்போர்ட் இல்லாம என்னால எதுவும் பண்ண முடியாது.

மாமியாருக்கு டான்ஸ், மியூசிக் ரொம்பப் பிடிக்கும். மாமனாரால எல்லா நிகழ்ச்சி களுக்கும் வர முடியாது. அதனால டிசம்பர் சீசன்ல முக்கியமான நிகழ்ச்சிக்கு வருவார். தமிழ்க் கவிதைகளை எடுத்துப் பண்ற நடனங்கள் அவருக்கு ரொம்பப் பிடிக்கும். கல்யாணம் நிச்சயமானதும் ஒரு டிசம்பர் சீசன்ல மியூசிக் அகடமியில என் டான்ஸ் ஷோ நடந்தது. அப்பதான் மாமனாரும் மாமியாரும் முதல் முறையா என் டான்ஸ் பார்க்கறாங்க. சிலப்பதிகாரத்திலிருந்து `ஆய்ச்சியர் குரவை' எடுத்துப் பண்ணியிருந்தேன். `இது மாதிரி தமிழ்க் கவிதைகளை எடுத்துக் கூட டான்ஸ் பண்ணுவாங் களா'னு மாமனார் ஆச்சர்யப் பட்டார்!

இந்த இடத்துல நான் எங்கம் மாவைப் பத்திச் சொல்லியே ஆகணும். எப்பவும் என்னோட நடன நிகழ்ச்சிகள்ல முதல் வரிசையில பேப்பரும் பேனாவும் வெச்சுக்கிட்டு உட்கார்ந்துடுவாங்க. `இது சரியில்லை... அது சரியில்லை'னு பயங்கரமா விமர்சனம் பண்ணுவாங்க. ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருப் பாள். ஒவ்வொரு நடனக் கலைஞரின் வெற்றிக்குப் பின் னாலும் அவருடைய அம்மா இருப்பார்னு சொல்வாங்க. என் வாழ்க்கையிலயும் அவங்க ரொம்ப முக்கியமான நபர். `உன்னால முடியும்'னு இப்பவும் நம்பிக்கை கொடுக்கிற மனுஷி!’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு