Published:Updated:

ஏய் வாலு... உனக்கு வாலா இருக்க பிடிச்சிருக்குல்ல... அப்போ அப்படியே இரு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஏய் வாலு... உனக்கு வாலா இருக்க பிடிச்சிருக்குல்ல... அப்போ அப்படியே இரு!
ஏய் வாலு... உனக்கு வாலா இருக்க பிடிச்சிருக்குல்ல... அப்போ அப்படியே இரு!

டான்ஸ்... மேலும் டான்ஸ்!ரா.நிரஞ்சனா, படங்கள் : த.யோகேஸ்வரன்

பிரீமியம் ஸ்டோரி

திருச்சியில் ஒரு சின்ன தெருவோட முனைல இருந்தது அந்த வீடு. நாம உள்ள போனப்போ ஏதோ பசங்க ஹாஸ்டலுக்குள்ளே போன மாதிரி இருந்தது. கொஞ்சம் கூட்டத்த விலக்கிட்டுப் பார்த்தா, `விஜய் டி.வி' புகழ் என்-பீட்டர்ஸ் நடனக் குழுவைச் சேர்ந்த ஐந்து பொண்ணுங்களும் டான்ஸ் ஆடிட்டு இருந்தாங்க. முதல்ல 'நான்தான் பேசுவேன்'னு ஆரம்பிச்சாங்க கீர்த்தனா...

“நீங்க செம்ம வாலுன்னு கேள்விப்பட்டோமே?” எனக் கேட்டதற்கு, “அட அதிலென்ன சந்தேகம்? நான் பயங்கர வாலு. எனக்குப் பிடிச்ச ஒரு விஷயம் சரின்னு படுறப்போ அத பெட்டரா பண்ணணும்னு நினைப்பேன். கல்யாண் மாஸ்டர்கூட `உனக்கு வாலா இருக்க பிடிச்சிருக்குல்ல... நீ யாருக்காகவும் மாறிடாத... அப்படியே இரு'ன்னு சொன்னது எனக்கு ரொம்ப பிடிச்சது!''

``உங்க டான்ஸ் மாஸ்டரை `அப்பா'னு கூப்பிட தோணுது'ன்னு சொன்னீங்களாமே... அது ஏன்?''

``டான்ஸ் கத்துக் கொடுக்கறதோடு எங்களுக்கு எப்பவும் ஆதரவா இருப்பாங்க... எங்க ஆரோக்கியத்தையும் கவனிச்சுப்பாங்க. எங்க அம்மா, அப்பாக்கிட்டே எல்லாத் தகவலும் சொல்லிடுவாங்க. இவ்வளவு பண்ணுற எங்க மாஸ்டரை `அப்பா'னு தாராளமா கூப்பிடலாம்ல? அதான் கூப்பிட்டோம்!''

ஏய் வாலு... உனக்கு வாலா இருக்க பிடிச்சிருக்குல்ல... அப்போ அப்படியே இரு!

யுவராணி: ``சின்ன வயசுல இருந்தே டான்ஸ் ஆட ரொம்பப் பிடிக்கும். அப்போ காஸ்ட்யூம்ஸ் வாங்கக்கூட காசு இல்ல. வீட்லயும் கஷ்டம்தான். எங்க என்-பீட்டர்ஸ் மாஸ்டர்ஸ் காசுக்கு இல்லாம, கலைக்காகவே சொல்லிக் கொடுப்பாங்க.

நாங்க எல்லாருமே ஒரே காலேஜ்தான். நானும் கீர்த்தனாவும் டான்ஸ் மூலமாதான் ஃப்ரெண்ட்ஸ் ஆனோம். காலேஜ் சீனியர்ஸ் மூலமா 7up காம்படிஷனுக்கு திருச்சி ஆடிஷன்ல தேர்வானோம். அடுத்து சென்னைக்குப் போகணும்கறப்போ, நாங்க இருந்த டீம்ல இருந்த அக்காங்க யாரும் வர்றதுக்குத் தயாரா இல்ல. ஆனா, எங்களுக்குக் கிடைச்ச வாய்ப்ப மிஸ் பண்ணக் கூடாதுன்னு தோணுச்சு. நானும், வாலு கீர்த்தனாவும் சேர்ந்து நாமளே ஏன் ஒரு டீம் செட் பண்ணக்கூடாதுன்னு யோசிச்சோம், அந்த டீம்தான் நாங்க!''

ரேஷ்மி: ``நாங்க ஒரே டீமா செட் ஆனதுக்கு அப்புறம் கடைசிவரை மாறிடக் கூடாது, டான்ஸ்ல நல்ல பெயர் வாங்கணும், நிறைய கத்துக்கணும், நமக்கு கிடைக்கிற வாய்ப்புகளை நல்லா பயன்படுத்திக்கணும்னு  நினைச்சோம். டான்ஸ் ஆடுறப்போ செம ஜாலியா, அனுபவிச்சு ஆடுவோம். எங்க அரட்டையையும் அட்டகாசத்தையும்... பாவம் எங்க மாஸ்டர் தினேஷ் அண்ணாதான் தாங்கிப்பாரு. கஷ்டமான ஸ்டெப்ஸ் பண்ணும்போது பயங்கரமா வலிக்கும். பழகப் பழக சரியாகிடுச்சு.

டெய்லி காலேஜ் முடிஞ்சதும் இங்க வந்துடுவோம். ஹோம்வொர்க் கூட இங்கேதான் முடிப்போம், அப்படியே  எட்டு மணி ஆகிடும். கிளாஸ் வந்துட்டா கொஞ்சநேரம்கூட உட்காரணும்னே தோணாது. மாஸ்டர்ஸ் கோரியோ பண்றதுக்கு முன்னாடி, அவங்க டான்ஸ் ஸ்டெப்ஸ் ட்ரை பண்ணுவாங்க... அதை பார்க்கும்போதே எங்களுக்கும் எழுந்திரிச்சு ஆடணும்னு தோணும்!''

ஏய் வாலு... உனக்கு வாலா இருக்க பிடிச்சிருக்குல்ல... அப்போ அப்படியே இரு!

ப்ரியா: ``நாங்க திருச்சில இருந்து சென்னைக்குப் போய் டான்ஸ் ஆடுறப்போ, அங்க இருக்கிற ஆடியன்ஸ்கூட அவங்க வீட்டுப் பிள்ளைங்க மாதிரிதான் எங்களப் பார்ப்பாங்க... சப்போர்ட் பண்ணுவாங்க. அந்த ஆதரவுதான் எங்களை ஃபைனல்ஸ் வரை கொண்டு வந்து ரன்னர் அப் வாங்க வெச்சது.''

ஷீரீன்:
  ``அப்பதான் எங்களுக்குப் புரிஞ்சது... ஜெயிக்கிறது எந்த அளவுக்கு முக்கியமோ,  மத்தவங்களோட சப்போர்ட்டும் அந்த அளவு முக்கியம். டான்ஸ் ஆடுறவங்களப் பார்த்து சிலர் `ஆட்டக்குதிரைங்க ஆடுதுங்க பாரு'ன்னு கிண்டல் பண்ணுவாங்க. அதை நிறுத்தினா எங்களுக்கு இன்னும் உற்சாகமா இருக்கும்.

நான் முஸ்லிம் பொண்ணுங்கறதால வீட்டுல சப்போர்ட் கொஞ்சம் கம்மிதான். அத நினைச்சு கஷ்டமாக்கூட இருக்கும். சில தடவ ஸ்டேஜ்லயே அழுதுருக்கேன். இப்போ எங்க வீட்டுலயும் புரிஞ்சிக்க ஆரம்பிச்சிட்டாங்க.

எங்க ஐந்து பேருக்குமே டான்ஸ்ல சாதிக்கணும்கறதுதான் ஆசை. கடைசி வரை எங்களுக்கான வாழ்க்கைப் பயணத்தில டான்ஸ் இருக்கும். அதுக்கு எங்களுக்குத் தேவை மக்களோட ஆதரவு மட்டும்தான்.

எங்களுடைய வெற்றியின் எல்லையா இதைப் பார்க்கல.  ஏன்னா, இன்னமும் நாங்க காத்துக்கிட்டுதான் இருக்கோம்... அடுத்த மேடைக்காக!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு