Published:Updated:

அவள் கிளாஸிக்ஸ்: சூரியனுக்கு பூரி படைப்போம்!

அவள் கிளாஸிக்ஸ்: சூரியனுக்கு பூரி படைப்போம்!
பிரீமியம் ஸ்டோரி
அவள் கிளாஸிக்ஸ்: சூரியனுக்கு பூரி படைப்போம்!

அவள் கிளாஸிக்ஸ்: சூரியனுக்கு பூரி படைப்போம்!

அவள் கிளாஸிக்ஸ்: சூரியனுக்கு பூரி படைப்போம்!

அவள் கிளாஸிக்ஸ்: சூரியனுக்கு பூரி படைப்போம்!

Published:Updated:
அவள் கிளாஸிக்ஸ்: சூரியனுக்கு பூரி படைப்போம்!
பிரீமியம் ஸ்டோரி
அவள் கிளாஸிக்ஸ்: சூரியனுக்கு பூரி படைப்போம்!
அவள் கிளாஸிக்ஸ்: சூரியனுக்கு பூரி படைப்போம்!

பொங்கல் திருநாள் ஒவ்வொரு தம்பதிக்கும் வெவ்வேறு விதமான அனுபவமாக அமைந்திருக்கும். பொங்கல் நாளில் வீடுதோறும் தவறாமல் ஒலிக்கும் குரல்களில் குறிப்பிடத்தக்கது புஷ்பவனம் குப்புசாமி-அனிதா குப்புசாமி தம்பதியினுடையது. அவர்களின் பொங்கல் அனுபவம் எப்படி?

``நான் வட இந்தியப் பெண்ணாக இருந்தாலும் அங்கேயும் பொங்கல் திருநாள் உண்டு. பெயர்தான் வேறு. சங்கராந்தி என்போம். பொங்கல் கொண்டாடப்படும் அதே தை முதல் நாளில் சங்கராந்தி வரும். நாங்கள் வைக்கிற பொங்கலை பாலரிசி பொங்கல் என்று சொல்வார்கள். தண்ணீருக்குப் பதில் முழுவதும் பாலை வைத்து, அது பொங்கியவுடன் அரிசியைப் போடுவோம். அதில் பொடிப் பொடியாக நறுக்கப்பட்ட தேங்காய், ஏலக்காய், சர்க்கரை, குங்குமப்பூ போட்டு செய்வோம். பொங்கல் வைத்த பிறகு தெருவில் போகிற ஏழு கன்னிப்பெண்களை கூப்பிட்டு சாப்பாடு போட்டு, பணம், டிரெஸ், பூ, பொட்டு, தானியம், காய்கறிகள் தானம் கொடுப்போம். அப்புறம்தான் வீட்டிலிருக்கிற மற்றவர்கள் சாப்பிடுவார்கள். கன்னிப்பெண்கள் சாப்பிட்ட இலையை நாங்களேதான் எடுப்போம். அப்படி செய்தால்தான் புண்ணியம் கிடைக்கும். இது மாங்கல்ய பலனுக்காகச் செய்யப்படுகிறது. கோதுமை, வட இந்தியர்களின் முக்கிய உணவு என்பதால், சங்கராந்தி அன்று சூரியக் கடவுளுக்கு கோதுமை பூரி செய்து படைப்பார்கள். இவரை திருமணம் செய்து கொண்ட பிறகு தமிழ்நாட்டில் எப்படி பொங்கல் வைப்பார்கள் என்று தெரிந்து கொண்டேன். விறகடுப்பு மூட்டி கிராமத்தில் செய்வது மாதிரியே மண்பானையில் பொங்கல் வைக்க ரொம்ப ஆசை. சென்னை ஃப்ளாட்ல அதெல்லாம் நினைச்சுப் பார்க்க முடியலை... வீட்டுக்குள்ளேயே ரங்கோலி போட்டு, பாத்திரத்தில்தான் பொங்கல் வச்சாகணும்'' என்கிறார் அனிதா குப்புசாமி.

அவள் கிளாஸிக்ஸ்: சூரியனுக்கு பூரி படைப்போம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

புஷ்பவனம் குப்புசாமியை கவர்ந்தது பாட்டும் கூத்துமாகவே கழியும் கன்னிப் பொங்கல்தானாம்!

``மணப்பொங்கல், மாட்டுப் பொங்கல் முடிஞ்சு மூணாவது நாள் கன்னிப் பொங்கல் நடக்கும். அதுக்காக கன்னிப் பெண்கள் மார்கழியிலேயே தயாராகி விடுவார்கள். தினத்துக்கு ஒண்ணா அந்த மாசம் முழுவதும் சாணப் பிள்ளையார், மண் பிள்ளையார் பிடிச்சு வீட்டு முற்றத்தில் வைப்பாங்க. பரங்கிப்பூ, பூசணிப்பூ, அல்லி, தாமரை, வள்ளிக்கிழங்கு பூன்னு கிராமத்தில் கிடைக் கும் அத்தனை வண்ணப்பூக்களையும் பிள்ளையாருக்கு வச்சு அழகு பார்ப்பாங்க. பூ வாட வாட கூடையில் எடுத்து பத்திரப்படுத்தி வைப்பாங்க, கன்னிப் பொங்கல் அன்னிக்கு பச்சரிசி, மோதகம், பொரிகடலை எல்லாத் தையும் தாம்பாளத்துல வச்சு எடுத்துப் போவாங்க. பள்ளிக்கூட மைதானம் மாதிரி பொதுவான ஒரு இடத்தில மொத்தமா பிள்ளையாரை வச்சு கும்மி அடிப்பாங்க பாருங்க... `புள்ளையாரே புள்ளையாரே புடிச்சு வச்ச புள்ளையாரே'னு பாடி முடிச்சு அப்புறம் எல்லா பிள்ளையாரையும் மொத்தமா வண்டியில ஏத்தி ஆத்தங்கரை, குளக்கரை, ஏரி, கடல்னு எது பக்கத்தில இருக்கோ... அங்கே எடுத்துட்டு போய் படையல் வச்சுட்டு பிள்ளை யாரைக் கரைப்பாங்க. கரையோரமா பூஜையும் நடக்கும். அங்கேயும் கும்மியடிச்சு பாடுவாங்க...

வேண்டுதலும் வேடிக்கையுமா கழியிற காணும் பொங்கல்தான் பெண்கள் மகிழ்கிற, சுதந்திரம் காண்கின்ற பொங்கலா இருக்கும். அதுவரை வயசுப்பொண்ணு வீட்டை விட்டு வெளியே போகக்கூடாதுன்னு சொல்றவங் களும், `அட விடுப்பா... இன்னைக்கு ஒரு நாளைக்குத்தானே? பிள்ளைங்க சந்தோஷமா இருக்கட்டும்’னு சொல்வாங்க. பெண்கள் அழகா சிங்காரிச்சு இருப்பாங்க... `அட இந்தப் பொண்ணு இவ்வளவு அழகா’ன்னு ஆச்சர்யப்பட்டு போவோம். தனக்குப் பிடிச்ச பொண்ணு, மாப்பிள்ளையையெல்லாம் அடையாளம் கண்டுக்குவாங்க... `கன்னிப் பொங்கலன்னைக்குதான் உன்னை முதல்ல பார்த்தேன்’னு பின்னாளில் நினைவு கொள்வாங்க. மறந்துபோன சிறுபருவ விளையாட்டெல்லாம் தோழிகளோட விளையாடுவாங்க. கன்னிப்பெண்கள் அத்தை பையன், மாமா பையன் மேல மஞ்சள் தண்ணி ஊத்துறதைப் பாத்து பெரியவங்களும் பெண்ணுக்குப் பிடிச்ச மாப்பிள்ளையை தெரிஞ்சுக்குவாங்க...” என்றபோது அனிதா இடைமறித்து, `‘உங்களுக்கு முறைப்பொண்ணு யாரும் இல்லையா’' என்று கண் சிமிட்டினார். ‘நமக்குதான் இல்லையே... `ஏம் பாட்டுக்கு எசப் பாட்டு நீதான்’னு எப்பவோ முடிவாகிப் போன விஷயமா இருந்திருக்கு...” என்று குப்புசாமியும் கலகலப்பூட்டினார்!

அடிப்படையில் கன்னிப் பொங்கல் வயல் வேலை செய்யும் பெண்களுக்கு நன்றி சொல்லும் தினமாகக் கொண்டாடப்படுகிறது...”

- த.சந்திரா

(2002 ஜனவரி 18)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism