Published:Updated:

30 வகை கிராமத்து விருந்து

30 வகை கிராமத்து விருந்து
பிரீமியம் ஸ்டோரி
30 வகை கிராமத்து விருந்து

30 வகை கிராமத்து விருந்து

30 வகை கிராமத்து விருந்து

30 வகை கிராமத்து விருந்து

Published:Updated:
30 வகை கிராமத்து விருந்து
பிரீமியம் ஸ்டோரி
30 வகை கிராமத்து விருந்து
30 வகை கிராமத்து விருந்து

ந்தப் பொங்கலுக்குக் கூடுதல் சுவை சேர்க்கும் வகையில் மண் வாசனையோடு கூடிய கிராமத்து உணவுகளை வழங்குகிறார் சமையல் கலைஞர் ஹேமலதா. சத்து உருண்டை, கொழுக்கட்டை, அடை, வடை, பணியாரம், கஞ்சி, குழம்பு, ரசம், பொரியல், புட்டு, மசாலா, பச்சடி, தொக்கு வகைகள் என இது தலைவாழை விருந்து!

30 வகை கிராமத்து விருந்து

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பொங்கலோ பொங்கல்!

அட்டையில்... ஓவியம்: எஸ்.இளையராஜா

கேழ்வரகு உருண்டை

தேவையானவை:  கேழ் வரகு மாவு - ஒரு கப், பொடித்த வெல்லம் - அரை கப், வேர்க்கடலை - கால் கப், ஏலக்காய்த் தூள் - அரை டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

30 வகை கிராமத்து விருந்து

செய்முறை: கேழ்வரகு மாவில் சிறிது உப்பு சேர்த்து, தண்ணீர் சேர்த்துப் பிசறி, ஆவியில் புட்டுபோல வேக வைக்கவும். வேர்க்கடலை, பொடித்த வெல்லம், ஏலக் காய்த்தூள் மூன்றையும் ஒன் றாகச் சேர்த்து மிக்ஸியில் கொர கொரப்பாக அரைத்து, அவித்த மாவில் சேர்த்துக் கலந்து, சிறு உருண்டைகளாகப் பிடிக்கவும்.

எள் உருண்டை

தேவையானவை:  வெல்லம் - 100 கிராம், கறுப்பு எள் - 100 கிராம், நெய் - தேவையான அளவு.

30 வகை கிராமத்து விருந்து

செய்முறை: எள்ளை வெறும் வாணலியில் வறுத்து எடுக்கவும். மற்றொரு பாத்திரத்தில் வெல்லத்துடன் சிறிது தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சவும். அதில் வறுத்த எள்ளைச் சேர்த்துக் கிளறி, உருண்டை பிடிக்கும் பதத்தில் இறக்கவும். சூடாக இருக்கும்போதே கையில் நெய் தடவிக்கொண்டு, உருண்டைகளைப் பிடித்து வைக்கவும்.

பொரி விளங்காய் உருண்டை

தேவையானவை:  பச்சரிசி - அரை கிலோ, வேர்க்கடலை, பொட்டுக்கடலை - தலா 100 கிராம், எள், பாசிப்பருப்பு - தலா 50 கிராம், ஏலக்காய் - 4, தேங்காய்த்துருவல் - ஒரு கப்.

30 வகை கிராமத்து விருந்து

செய்முறை:  தேங்காய்த்துருவலை வெறும் வாணலியில் வறுக்கவும். ஏலக்காயைப் பொடிக்கவும். பச்சரிசியை வெறும் சட்டியில் வறுத்து கொரகொரப்பாக அரைக்கவும். மற்ற பொருட்கள் அனைத்தையும் வெறும் வாணலியில் ஒன்றன்பின் ஒன்றாக வறுத்து எடுத்து ஆறவைக்கவும். அதனுடன் வறுத்து அரைத்த பச்சரிசி மாவு, தேங்காய்த்துருவலைச் சேர்த்துக் கலக்கவும்.

வெல்லத்தைப் பாகு காய்ச்சி, வெதுவெதுப்பாக இருக்கும்போது மாவுக்கலவையில் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து, சூடாக இருக்கும்போதே உருண்டை பிடிக்கவும். ஆறினால் உருண்டை பிடிக்க வராது.

குறிப்பு: இது பொருள் விளங்கா உருண்டை என்றும் அழைக்கப்படும்.

உப்பு உருண்டை கொழுக்கட்டை

தேவையானவை:  புழுங்கல் அரிசி - ஒரு கப், பச்சை மிளகாய், பெரிய வெங் காயம், துருவிய இஞ்சி - தேவைக்கேற்ப, கறிவேப்பிலை, கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, எண்ணெய் - தாளிக்க, உப்பு - தேவைக்கேற்ப.

30 வகை கிராமத்து விருந்து

செய்முறை: பெரிய வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கவும். புழுங்கல் அரிசியை ஊற வைத்து, உப்பு சேர்த்துக் கெட்டியாக அரைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்துத் தாளிக்கவும். அதில் துருவிய இஞ்சி, நறுக்கிய பச்சை மிளகாய், பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கி, அரைத்த மாவைச் சேர்த்துக் கிளறி இறக்கவும். மாவைச் சிறுசிறு உருண்டைகளாகப் பிடித்து ஆவியில் வேகவைக்கவும்.

வாழை இலை கொழுக்கட்டை

தேவையானவை: பச்சரிசி மாவு - 2 கப், உப்பு - தேவைக் கேற்ப.

பூரணத்துக்கு: தேங்காய்த் துருவல், பொடித்த வெல்லம் - தலா அரை கப், ஏலக்காய்  - சிறிதளவு (மூன்றையும் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்).

30 வகை கிராமத்து விருந்து

செய்முறை:  பச்சரிசி மாவில் உப்பு, வெந்நீர் சேர்த்துக் கலந்து நன்கு பிசைந்து கொள்ளவும். வாழை இலையைச் சிறிதாக நறுக்கி, அதில் மாவை வைத்து வட்டமாகத் தட்டி, நடுவில் பூரணம் வைத்து மூடி, இட்லி சட்டியில் வேகவைத்து எடுத்து ருசிக்கவும்.

தவலை அடை

தேவையானவை: புழுங்கல் அரிசி - ஒரு கப், கடலைப்பருப்பு - அரை கப், துவரம்பருப்பு, பாசிப்பருப்பு, உளுத்தம்பருப்பு சேர்த்து - அரை கப், காய்ந்த மிளகாய் - 2, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், மிளகு, சீரகம் - தாளிக்க, தேங்காய்த்துருவல் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

30 வகை கிராமத்து விருந்து

செய்முறை: அரிசி, பருப்பு வகைகளை ஒன்றாகச் சேர்த்து, ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். பின்னர் தண்ணீர் வடித்து, அதனுடன் காய்ந்த மிளகாய், பெருங்காயத் தூள் சேர்த்து கிரைண்டரில் அரைத்து எடுக்கவும். மாவில் உப்பு, தேங்காய்த்துருவல் சேர்க்கவும். மிளகு, சீரகம் தாளித்து அடை மாவில் சேர்க்கவும். தோசைக்கல் காய்ந்ததும் எண்ணெய் சேர்த்து, அடையாகச் சுட்டு, இருபுறமும் திருப்பிவிட்டு வேகவைத்து எடுத்துப் பரிமாறவும்.

கேழ்வரகு அடை

தேவையானவை: கேழ்வரகு மாவு - ஒரு கப், பெரிய வெங் காயம் - ஒன்று, பச்சை மிளகாய் - 2, முருங்கைக்கீரை - ஒரு கைப்பிடி, எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப.

30 வகை கிராமத்து விருந்து

செய்முறை: பெரிய வெங் காயம், பச்சை மிளகாயை நறுக்கவும். கேழ்வரகு மாவில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், முருங்கைக்கீரை, உப்பு சேர்த்துக் கலந்து, தண்ணீர் சேர்த்துச் சப்பாத்தி மாவு பதத்தில் கெட்டியாகப் பிசையவும். மாவை, தோசைக்கல் சூடானதும் அடையாகத் தட்டி, சுற்றி எண்ணெய் சேர்த்து, மூடி போட்டு எடுத்து, திருப்பிவிட்டு, இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.

குழிப் பணியாரம்

தேவையானவை:  இட்லி மாவு - ஒரு கப், பெரிய வெங்காயம் - ஒன்று, பச்சை மிளகாய் - ஒன்று, புதினா -அரை கப், பல்லாக நறுக்கிய தேங்காய் - அரை கப், எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப.

30 வகை கிராமத்து விருந்து

செய்முறை: பெரிய வெங் காயம், பச்சை மிளகாயை நறுக்கி, இட்லி மாவில் சேர்க்கவும். அதனுடன், புதினா, நறுக்கிய தேங்காய், உப்பு சேர்த்துக் கலக்கவும். பணியா ரக்கல் குழிகளில் எண்ணெய் சேர்த்து, மாவை ஊற்றி, இருபுறமும் திருப்பிவிட்டு வேகவைத்துச் சுட்டெடுக்கவும்.

தவலை இட்லி

தேவையானவை: பச்சரிசி, புழுங்கல் அரிசி - தலா ஒரு கப், துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, பாசிப் பருப்பு, உளுத்தம்பருப்பு (அனைத் தும் சேர்த்து) - கால் கிலோ, கடுகு, தோல் நீக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், எண்ணெய் - தாளிக்க, உப்பு - தேவைக்கேற்ப.

30 வகை கிராமத்து விருந்து

செய்முறை: அரிசி, பருப்பு வகைகளை ஒன்றாக ஒரு மணி நேரம் ஊறவைத்து, தண்ணீர் வடிகட்டி, அரைத்து, உப்பு சேர்த்துப் புளிக்க வைக்கவும். மறுநாள், பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், கடுகு தாளித்து, புளித்த மாவில் சேர்த்துக் கலக்கவும். இட்லி சட்டியில் இட்லிகளாக வார்த்து, அவித்து எடுத்து, விரும்பிய வடிவில் துண்டு போடவும்.

வடகறி

தேவையானவை:  கடலைப்பருப்பு - ஒரு கப், பெரிய வெங்காயம் - ஒன்று, தக்காளி - 2, மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன், இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிது, சோம்பு, எண்ணெய் - தாளிக்க, வெண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப. 

30 வகை கிராமத்து விருந்து

செய்முறை:  பெரிய வெங்காயம், தக்காளியை நறுக்கவும். கடலைப்பருப்பை ஊறவைத்து அரைக்கவும். வாணலியில் எண்ணெய் காய்ந்ததும், அதை வடை போல சுட்டு எடுத்துக்கொள்ளவும். மற்றொரு வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் சோம்பு தாளித்து, நறுக்கிய வெங்காயம், தக்காளியை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து வதக்கவும். மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வதக்கி, தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். சுட்டு வைத்திருக்கும் வடையைத் தூளாக்கி அதில் சேர்க்கவும். இஞ்சி, பூண்டு விழுது சேர்க்கவும். கறிவேப்பிலை, நறுக்கிய கொத்தமல்லித்தழை சேர்க்கவும். கடைசியில் ஒரு டீஸ்பூன் வெண்ணெய் சேர்த்து இறக்கிப் பரிமாறவும்.

கோதுமை கஞ்சி

தேவையானவை:  கோதுமை மாவு - 2 டீஸ்பூன், வெல்லம் - 2 டீஸ்பூன், ஏலக்காய் - ஒன்று, தண்ணீர் - ஒரு கப்.

30 வகை கிராமத்து விருந்து

செய்முறை:  வெல்லம், ஏலக்காயைப் பொடிக்கவும். தண்ணீரைக் கொதிக்க வைத்து, கோதுமை மாவைச் சிறிது தண்ணீரில் கரைத்துச் சேர்க்கவும். மாவு நன்கு வெந்தவுடன், பொடித்த வெல்லம், ஏலக் காய் சேர்த்து நன்கு கரையவிட்டு இறக்கிப் பரிமாறவும்.

சுக்கு காபி

தேவையானவை: தனியா, சுக்கு - தலா ஒரு டீஸ்பூன், மிளகு - கால் டீஸ்பூன், ஏலக்காய் - ஒன்று (பொடிக்கவும்), பால், வெல்லம் - தேவைக்கேற்ப.

30 வகை கிராமத்து விருந்து

செய்முறை: தனியா, சுக்கு, மிளகு மூன்றையும் வெறும் வாணலியில் வறுத்து ஒன்றாகப் பொடிக்கவும். ஒரு கப் தண்ணீரில் 2 டீஸ்பூன் பொடியைச் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். இறக்கி பால், வெல்லம் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

மசால் வடை

தேவையானவை:  கடலைப்பருப்பு - கால் கிலோ, பெரிய வெங்காயம் - 2, பச்சை மிளகாய் - ஒன்று, இஞ்சி, பூண்டு, சோம்பு பேஸ்ட் - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது, எண்ணெய் - பொரிக்க, உப்பு - தேவைக்கேற்ப.

30 வகை கிராமத்து விருந்து

செய்முறை: பெரிய வெங்காயம், பச்சை மிளகாயை நறுக்கவும். கடலைப்பருப்பை தண்ணீரில் ஊற வைத்து, கைப்பிடி அளவு எடுத்து வைத்து விட்டு, மற்றதைக் கொரகொரப்பாக அரைக்கவும். அரைத்த மாவில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, உப்பு, இஞ்சி, பூண்டு, சோம்பு பேஸ்ட் சேர்த்துப் பிசையவும். கைப்பிடி அளவு எடுத்து வைத்த ஊறிய கடலைப்பருப்பைச் சேர்த்துப் பிசிறவும். வாணலியில் எண்ணெய் காய்ந்ததும், மாவை வடைகளாகத் தட்டிச் சேர்த்து, இருபுறமும் திருப்பிவிட்டு வேகவைத்து எடுக்கவும்.

மோர்க்குழம்பு வடை

தேவையானவை: குழம்புக்கு: தயிர் - ஒரு கப், துவரம்பருப்பு, பச்சரிசி - தலா 2 டீஸ்பூன், தேங்காய்த்துருவல் - அரை கப், பச்சை மிளகாய் - ஒன்று, தோல் நீக்கிய இஞ்சி - சிறு துண்டு, மஞ்சள்தூள் - தேவைக்கேற்ப, கடுகு, காய்ந்த மிளகாய், எண்ணெய் - தாளிக்க, உப்பு - தேவைக்கேற்ப.

வடைக்கு: உளுத்தம்பருப்பு - ஒரு கப்.

30 வகை கிராமத்து விருந்து

செய்முறை: உளுத்தம்பருப்பை ஊறவைத்து, உப்பு சேர்த்து அரைத்து, அந்த மாவைக் காய்ந்த எண்ணெயில் வடைகளாகச் சுட்டெடுத்து வைக்கவும். துவரம்பருப்பு, பச்சரிசி, தேங்காய்த்துருவல், பச்சை மிளகாய், இஞ்சி, மஞ்சள்தூள் அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து அரைத்து, அரை டம்ளர் தண்ணீர் விட்டுக் கலந்து, அடுப்பில் வைத்து, ஒரு கொதி வந்ததும் தயிர், உப்பு சேர்க்கவும். மறு கொதி வந்ததும் இறக்கவும். மற்றொரு வாணலியில் கடுகு, காய்ந்த மிளகாய் தாளித்து, குழம்பில் சேர்க்கவும். பின் வடைகளை மோர்க்குழம்பில் சேர்த்து, ஊறவிட்டுப் பரிமாறவும்.

வடை குழம்பு

தேவையானவை:  பெரிய வெங்காயம் - 2, பூண்டு - 12 பல், தக்காளி - 2, புளி - எலுமிச்சை அளவு, மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், கடுகு, வெந்தயம் - ஒரு டீஸ்பூன், சின்ன வெங்காயம் - ஒன்று, பச்சை மிளகாய் - 2, இஞ்சி - பூண்டு - சோம்பு விழுது - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது, எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப. (மசால் வடைக்குத் தேவையான பொருட்கள் மற்றும் செய்முறை: பக்கம் 115-ல் உள்ளது போல).

30 வகை கிராமத்து விருந்து

செய்முறை: பெரிய வெங்காயம், தக்காளி, தோல் நீக்கிய பூண்டை நறுக்கவும். புளியைத் தண்ணீரில் கரைத்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் சூடானதும் கடுகு, வெந்தயம் தாளித்து, நறுக்கிய இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு, தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். அதில் புளிக்கரைசல் சேர்க்கவும். நன்கு கொதித்தவுடன், சுட்டு வைத்திருக்கும் வடைகளைச் சேர்க்கவும். கறிவேப்பிலை தூவி இறக்கவும்.

அப்பளம் பொரித்த குழம்பு

தேவையானவை: பாசிப்பயறு - 50 கிராம், முருங்கைக்காய் - ஒன்று, கத்திரிக்காய் - 3, மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன், பெரிய வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, அப்பளம் - 10, சிறிது தேங்காய், சோம்பு சேர்த்து அரைத்த விழுது - 2 டீஸ்பூன், கடுகு - சிறிதளவு, எண்ணெய் - பொரிக்க, உப்பு - தேவையான அளவு.

30 வகை கிராமத்து விருந்து

செய்முறை: அப்பளத்தைப் பொரிக்கவும். முருங்கைக்காய், கத்திரிக்காயை நறுக்கவும். பாசிப்பயறுடன் வெங்காயம், தக்காளி சேர்த்து வேகவைக்கவும்.

இன்னொரு பாத்திரத்தில் நறுக்கிய முருங் கைக்காய், கத்திரிக்காய், தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும். மிளகாய்த்தூள், தேங்காய் - சோம்பு விழுது, உப்பு சேர்க்கவும்.

இதோடு, வேகவைத்த பயறுக்கலவையைச் சேர்த்து, கடுகு, தாளித்துக் கொட்டி, பொரித்த அப்பளத்தை உடைத்து அதில் சேர்த்து மூடவும். சாதத்துடன் சூடாகப் பரிமாறவும்.

பச்சை மிளகாய் குழம்பு

தேவையானவை:  பச்சை மிளகாய் - 10, தோல் நீக்கிய இஞ்சி - ஓர் அங்குலத் துண்டு, புளிக்கரைசல் - தேவைக்கேற்ப, பொட்டுக்கடலை - 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், பொடித்த வெல்லம் - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்,  பெருங்காயம் - ஒரு சிட்டிகை, எண்ணெய் - தாளிக்க, உப்பு - தேவைக்கேற்ப.

தாளிக்க:
கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம் - தலா கால் டீஸ்பூன், நறுக்கிய பச்சை மிளகாய் - அரை டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன்.

30 வகை கிராமத்து விருந்து

செய்முறை: பச்சை மிளகாய், இஞ்சி, பொட்டுக் கடலை மூன்றையும் தண்ணீர் சேர்க்காமல் அரைக்கவும். வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்துத் தாளிக்கவும். புளிக்கரைசலுடன்  பொடித்த வெல்லம், குழம்புக்குத் தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கலக்கி, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், பெருங்காயம், உப்பு, அரைத்த கலவையையும் சேர்த்துக் கலக்கி, தாளித்த கலவையில் அதைச் சேர்த்துக் கொதிக்கவிடவும். ஒரு கொதி வந்தவுடன் இறக்கவும்.

மிளகு - பூண்டு குழம்பு

தேவையானவை:  மிளகு - ஒரு டீஸ்பூன், பூண்டு - 5 பல், சின்ன வெங்காயம், தக்காளி - தலா 2, புளி - எலுமிச்சை அளவு, மிளகுத்தூள் - இரண்டு டீஸ்பூன்,  கறிவேப்பிலை - சிறிது, கடுகு, எண்ணெய் - தாளிக்க, உப்பு - தேவைக்கேற்ப.

30 வகை கிராமத்து விருந்து

செய்முறை: புளியைத் தண்ணீர்விட்டுக் கரைத்துக் கொள்ளவும். அதில் தக்காளி, மிளகாய்த்தூள், உப்பு சேர்க்கவும். சின்ன வெங்காயம், மிளகு, பூண்டு போட்டு அரைத்துக் கலவையுடன் சேர்க்கவும். வாணலியில் கடுகு, வெந்தயம் தாளித்துக் குழம்பை ஊற்றவும்.

நன்கு, கெட்டியாக வரும் நிலையில் கறிவேப்பிலை சேர்த்து இறக்கிப் பரிமாறவும்.

கலப்புக்காய் குழம்பு

தேவையானவை: வாழைக்காய், கத்திரிக்காய், உருளைக்கிழங்கு, பச்சை மொச்சை, கருணைக்கிழங்கு, அவரைக் காய் (அல்லது விருப்பமான காய்கள்), வெங்காயம், தக்காளி - தேவைக்கேற்ப, மஞ்சள்தூள் - தேவையான அளவு, மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், புளி - எலுமிச்சை அளவு, கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை, எண்ணெய் - தாளிக்க, உப்பு - தேவைக் கேற்ப.

30 வகை கிராமத்து விருந்து

செய்முறை: புளியைத் தண்ணீரில் கரைக்கவும். வெங்காயம், தக்காளி உட்பட காய் வகைகள் அனைத்தையும் பொடியாக நறுக்கவும். இத்துடன் உப்பு, தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து வேகவிடவும். வெந்ததும் புளிக்கரைசலைச் சேர்க்கவும். மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் சேர்க்கவும். கொதி வந்தவுடன் கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை தாளித்துக் குழம்பில் சேர்த்து இறக்கவும்.

மருந்து குழம்பு

தேவையானவை: சுக்கு, திப்பிலி, வால்மிளகு, சீரகம் அனைத்தும் சம அளவு எடுத்துப் பொடியாக அரைத்தது (மருந்துப்பொடி) - ஒரு டீஸ்பூன், புளி - எலுமிச்சை அளவு, மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன், பூண்டு - 5 பல், பெரிய வெங்காயம் - ஒன்று, தக்காளி - 2, கறிவேப்பிலை, கடுகு, வெந்தயம், எண்ணெய் - தாளிக்க, உப்பு - தேவைக்கேற்ப.

30 வகை கிராமத்து விருந்து

செய்முறை: பூண்டைத் தோல் உரிக்கவும்; வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கவும். புளியைத் தண்ணீரில் கரைத்து, அதில் மிளகாய்த்தூள், உப்பு சேர்த்துக் கலக்கவும். வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு, வெந்தயம் தாளித்து, பூண்டு, நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.

கறிவேப்பிலை சேர்த்து, பின்னர் புளிக்கலவையைச் சேர்க்கவும். நன்கு கொதிக்க விட்டு, கடைசியில் ஒரு டீஸ்பூன் மருந்துப் பொடி சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.

மிளகாய்கிள்ளி சாம்பார்

தேவையானவை: துவரம்பருப்பு - ஒரு கப், பெரிய வெங்காயம், தக்காளி - தலா 2, காய்ந்த மிளகாய் - 4, புளி - தேவைக்கேற்ப, பச்சை மிளகாய் - ஒன்று, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், கடுகு, எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப.

30 வகை கிராமத்து விருந்து

செய்முறை: குக்கரில் துவரம்பருப்பு, பச்சை மிளகாய், உப்பு, மஞ்சள்தூள், பெருங் காயத்தூள், ஒரு வெங்காயம், ஒரு தக்காளி சேர்த்து வேகவைக்கவும். மற்றொரு தக்காளி, வெங்காயத்தை நறுக்கவும். காய்ந்த மிளகாயைக் கிள்ளி வைக்கவும். வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு, கிள்ளிய காய்ந்த மிளகாய், நறுக்கிய தக்காளி, வெங்காயம் சேர்த்து வதக்கி, தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிட்டு வெந்ததும், அதில் புளியைக் கரைத்துவிடவும். ஒரு கொதி வந்ததும் வேகவைத்த பருப்பு, தக்காளி, வெங்காயம் ஆகியவற்றை நன்றாக மசித்துச் சேர்த்து, சாம்பார் கூடி வந்ததும் இறக்கவும்.

புடலங்காய் கூட்டு

தேவையானவை:  புடலங்காய் பெரியது - ஒன்று, பெரிய வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, கடலைப்பருப்பு - கால் கப், துருவிய இஞ்சி, நறுக்கிய பூண்டு, தேங்காய்த்துருவல் - விருப்பத்துக்கேற்ப, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், கடுகு, கறிவேப்பிலை, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, எண்ணெய் - தாளிக்க, உப்பு - தேவைக்கேற்ப.

30 வகை கிராமத்து விருந்து

செய்முறை:  வெங்காயம், தக்காளி, புடலங்காயை நறுக்கவும். கடலைப்பருப்பை அரை மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயம், தக்காளி, ஊறவைத்த கடலைப்பருப்பு சேர்த்து வேகவிடவும். அதில் நறுக்கிய புடலங்காயைச் சேர்த்து, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்துக் கலக்கவும். வேகும் நிலையில் இஞ்சித்துருவல், நறுக்கிய பூண்டு, தேங்காய்த்துருவல் சேர்க்கவும். மற்றொரு வாணலியில் எண்ணெய் காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு சேர்த்துத் தாளித்து, புடலங்காய் கூட்டில் சேர்த்து இறக்கவும்.


தேங்காய்ப்பால் ரசம் (அ) கட்டு ரசம்

தேவையானவை:  தேங்காய்ப்பால் - அரை டம்ளர், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, துவரம் பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், சின்ன வெங்காயம் - சிறிதளவு, தக்காளி - 2, பச்சை மிளகாய் - 2, பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் - சிறிதளவு, புளி - ஒரு நெல்லிக்காய் அளவு, கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு, எண்ணெய் - 3 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

30 வகை கிராமத்து விருந்து

செய்முறை:  சின்ன வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழையை நறுக்கவும். புளியைத் தண்ணீரில் கரைக்கவும். வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, பெருங்காயத்தூள் சேர்த்துத் தாளித்து, மஞ்சள்தூள், நறுக்கிய சின்ன வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, புளிக்கரைசல் சேர்த்து, கொதி வந்ததும் தேங்காய்ப்பால் சேர்த்து உடனே இறக்கி, நறுக்கிய கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

கோஸ் பொரியல்

தேவையானவை:  கோஸ் - கால் கிலோ, பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் - தலா ஒன்று, இஞ்சி - ஒரு துண்டு, பூண்டு - 3 பல், பொட்டுக்கடலைப்பொடி - 3 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது, கடுகு, எண்ணெய் - தாளிக்க, உப்பு - தேவைக்கேற்ப.

30 வகை கிராமத்து விருந்து

செய்முறை:  கோஸ், பெரிய வெங் காயம், பச்சை மிளகாய், தோல் நீக்கிய இஞ்சி, பூண்டு ஆகியவற்றைப் பொடியாக நறுக்கவும்.

வாணலியில் எண்ணெய் சூடானதும் கடுகு தாளித்து, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும்.

பிறகு நறுக்கிய கோஸ் சேர்த்து, லேசாகத் தண்ணீர் தெளித்து, உப்பு சேர்த்துக் கிளறி, மூடிபோட்டு வேகவிடவும்.

வெந்தவுடன் பொட்டுக்கடலைப் பொடி, கறிவேப்பிலை தூவி இறக்கவும்.

காராமணி கத்திரிக்காய் மசாலா

தேவையானவை: காராமணி - 50 கிராம் (ஊற விட்டுப் பின் வேகவைத்துக் கொள்ளவும்), கத்திரிக்காய் - 4, பெரிய வெங்காயம் - ஒன்று, தக்காளி - 2, மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், புளி - சின்ன எலுமிச்சை அளவு, இஞ்சி, பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது, கடுகு, எண்ணெய் - தாளிக்க, உப்பு - தேவைக்கேற்ப.

30 வகை கிராமத்து விருந்து

செய்முறை: பெரிய வெங்காயம், தக்காளியை நறுக்கவும். கத்திரிக்காயை நீளவாக்கில் நறுக்கவும். காராமணியை ஊறவைத்து வேகவைக்கவும். புளியைத் தண்ணீரில் கரைத்து வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் சூடானதும் கடுகு தாளித்து, நறுக்கிய வெங்காயம், தக்காளியை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து வதக்கவும். கத்திரிக்காய், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வதக்கி, வேகவைத்த காராமணி, புளிக்கரைசல் சேர்த்து வேகவிடவும். இஞ்சி, பூண்டு விழுது சேர்த்துக் கிளறவும். நன்கு சுருள வெந்தவுடன் கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.

வாழைக்காய் புட்டு

தேவையானவை: வாழைக்காய், பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் - தலா 2, தேங்காய்த்துருவல் - அரை கப், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, எண்ணெய் - தாளிக்க, உப்பு - தேவைக்கேற்ப.

30 வகை கிராமத்து விருந்து

செய்முறை: பெரிய வெங்காயம், பச்சை மிளகாயை நறுக்கவும். முழு வாழைக்காயைக் குக்கரில் வேகவைத்து, தோல் உரித்து, உதிர்த்துக்கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
பின்பு உதிர்த்த வாழைக்காய், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கி, நன்கு கிளறவும். தேங்காய்த்துருவல் சேர்த்து இறக்கவும்.

வாழைக்காய் எண்ணெய் பத்தை

தேவையானவை:  வாழைக்காய் - ஒன்று, புளி - எலுமிச்சை அளவு, மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப.

30 வகை கிராமத்து விருந்து

செய்முறை: வாழைக்காயைத் தோல் சீவி வட்டமாக நறுக்கவும். அதை தண்ணீரில் அரைவேக்காடாக வேகவிட்டு எடுக்கவும். புளியுடன் சிறிது தண்ணீர் சேர்த்துக் கெட்டியாகக் கரைக்கவும். அதனுடன் மிளகாய்த்தூள், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கலந்து, அதில் பாதி வெந்த வாழைக்காயைச் சேர்த்துப் புரட்டி எடுக்கவும். தோசைக் கல் காய்ந்ததும் எண்ணெய் சேர்த்து, வாழைக்காயை இருபுறமும் திருப்பி விட்டு, வேகவைத்துச் சுட்டு எடுக்கவும்.

வாழைத்தண்டு தயிர்ப் பச்சடி

தேவையானவை: பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு - ஒரு கப், தயிர் - தேவைக்கேற்ப, பொடி யாக நறுக்கிய பச்சை மிளகாய் - ஒரு டீஸ்பூன், கடுகு, எண்ணெய் - தாளிக்க, உப்பு - தேவைக்கேற்ப.

30 வகை கிராமத்து விருந்து

செய்முறை: ஒரு பாத்திரத் தில் பொடியாக நறுக்கிய வாழைத் தண்டுடன் தயிர், உப்பு சேர்த்துக் கலக்கவும். வாணலியில் எண்ணெய் சூடானதும் கடுகு, பச்சை மிளகாய் சேர்த்துத் தாளித்து, வாழைத்தண்டு தயிர்ப் பச்சடியில் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

மாங்காய்ப் பச்சடி

தேவையானவை: மாங்காய் - ஒன்று, பொடித்த வெல்லம் - அரை கப், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், கடுகு, எண்ணெய் - தாளிக்க, உப்பு - ஒரு சிட்டிகை.

30 வகை கிராமத்து விருந்து

செய்முறை: மாங்காயைச் சிறு துண்டுகளாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் சூடானதும் கடுகு தாளித்து, அதில் நறுக்கிய மாங்காயைச் சேர்த்து வதக்கவும். மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து வேகவைக் கவும். நன்கு வெந்தவுடன் பொடித்த வெல்லம் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

தக்காளித் தொக்கு

தேவையானவை: தக்காளி - 2, பெரிய வெங்காயம் - ஒன்று, மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், இஞ்சி - பூண்டு விழுது, புளி விழுது - தலா ஒரு டீஸ்பூன், கடுகு, நறுக்கிய கொத்தமல்லித்தழை - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது, எண்ணெய் - தாளிக்க, உப்பு - தேவைக்கேற்ப.

30 வகை கிராமத்து விருந்து

செய்முறை: பெரிய வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் சூடானதும் கடுகு தாளித்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின் தக்காளியைச் சேர்த்து வதக்கவும். இஞ்சி - பூண்டு விழுது மற்றும் புளிவிழுது சேர்க்கவும். சிறிது தண்ணீர் சேர்த்து, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். கறிவேப்பிலை, நறுக்கிய கொத்த மல்லித்தழை சேர்த்து இறக்கவும்.

படங்கள்: ப.சரவணகுமார், தே.அசோக்குமார், வீ.சதீஷ்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism