Published:Updated:

மண் வாசனை மனசு! - கவிஞர் இளம்பிறை

மண் வாசனை மனசு! - கவிஞர் இளம்பிறை
பிரீமியம் ஸ்டோரி
மண் வாசனை மனசு! - கவிஞர் இளம்பிறை

வாழ்வை மாற்றிய புத்தகம்ஆர்.வைதேகி

மண் வாசனை மனசு! - கவிஞர் இளம்பிறை

வாழ்வை மாற்றிய புத்தகம்ஆர்.வைதேகி

Published:Updated:
மண் வாசனை மனசு! - கவிஞர் இளம்பிறை
பிரீமியம் ஸ்டோரி
மண் வாசனை மனசு! - கவிஞர் இளம்பிறை
மண் வாசனை மனசு! - கவிஞர் இளம்பிறை

``ஒவ்வொரு கறுப்பு நிலவும் ஒரு வெள்ளி நிற விளிம்பு கட்டியிருக்கும் என்று சொல்வார்கள். அதுபோலத்தான் என் வாழ்வில் நான் பள்ளிக் கூடம் போவதும் தொடங்கியது... - இப்படித்தான் அல்தினாய் ஆரம்பிக்கிறார். அவர்தான் ‘முதல் ஆசிரியர்’ நாவலின் நாயகி.

சிங்கிஸ் ஐத்மாத்தவ் எழுதிய ‘முதல் ஆசிரியர்’ என்கிற ரஷ்ய நாவலை தா.பாண்டியன் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். சின்னஞ்சிறு புத்தகம். நிமிடங்களில் வாசித்துவிடலாம். வருடங்கள் கடந்தாலும் மறக்க முடியாத அளவுக்கு என்னுள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய புத்தகம்.

மண் வாசனை மனசு! - கவிஞர் இளம்பிறை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!கதையின் நாயகன் துய்ஷேன், கம்யூனிஸ்ட் இளைஞர். மிகக் குறைவாகப் படித்தவர். ஒரு கிராமத்துக்குச் சென்று, பெண்களையும் குழந்தைகளையும் சேர்த்து ஒரு குழு அமைப்பார். குன்றின் மீதிருந்த குதிரைக் கொட்டகையில் அவரே ஒரு பள்ளிக்கூடத்தை உருவாக்கி, அவருக்குத் தெரிந்த கல்வியைக் கற்றுக்கொடுப்பார். அங்கே லெனின் போட்டோ ஒன்றை மாட்டி வைத்திருப்பார். அவரிடம் பயின்ற சில மாணவர்கள் பெரியாட்களாகி விடுவார்கள்.

துய்ஷேனிடம் பயின்றவர்களில் அல்தினாய் என்கிற ஏழைச் சிறுமியும் ஒருவர். வளர்ப்புத் தாயின் சித்ரவதைகளுக்கு உள்ளாகி, முதியவருக்கு இரண்டாம்தாரமாகத் திருமணம் செய்து வைக்கப்பட இருக்கும்நிலையில் அல்தினாயை மீட்டுப் படிக்க வைப்பார் துய்ஷேன். பின்னாளில் அந்தச் சிறுமி ஒரு பல்கலைக்கழகத்தின் துறைத் தலைவர் அளவுக்கு உயர்ந்திருப்பார்.

கால மாற்றத்தால் அந்தப் பெண், தான் பிறந்த, படித்த அதே குர்கூரெவு என்கிற ஊரில் புதிதாகக் கட்டப்பட்ட பள்ளித்திறப்பு விழாவுக்குச் சிறப்பு விருந்தினராக வருவார். அப்போது அந்த ஊரின் முதல் ஆசிரியரான துய்ஷேன், வயோதிக வயதிலும் எந்தச் சலனமும் இல்லாமல் தபால்களைக் கொண்டு சேர்க்கிற பணியில் ஈடுபட்டிருப்பார். அதே பள்ளிக்குக்கூட ஒரு தபால் வரும். அதையும் கொடுத்துவிட்டு நிற்காமல் உடனே விரைவார். அல்தினாய்க்கு அப்போது அவரைப் பற்றிய நினைவுகள் மலரும். உடனே தன் ஊருக்குப் புறப்பட்டுச் சென்று தனது உணர்வுகளை அந்த நூலா சிரியருக் குக் கடிதமாக எழுதுகிறார்.

அந்தக் கடிதமே இந்த நாவ லின் கருவாக அமைகிறது.

மண் வாசனை மனசு! - கவிஞர் இளம்பிறை

இந்தப் புத்தகம் என் வாழ்க்கைக்கு மிக நெருக் கமாகத் தோன்றியதற்குப் பல காரணங்களைச் சொல்லலாம். கதையின் நாயகி அல்தினாய், தனது சிறு வயதில் அடுப்பெரிக்க ராட்டி பொறுக்குவார். நானும் என் சிறு வயதில் அதே மாதிரி செய்திருக் கிறேன். ‘ராட்டியெல்லாம் பொறுக்குகிறோமே... வெளியில் சொன்னால் அவமானம்’ என நினைத்துக் கொண் டிருந்தேன். ரஷ்யாவில் கூட ராட்டி பொறுக்கும் பெண்கள் இருந்திருக்கி றார்கள் என்கிற தகவல் எனக்குப் புதிதாகவும் ஆறுதலாகவும் இருந்தது.

இதை ஒரு பெண் ணியப் புத்தகமாகவும் நான் பார்க்கிறேன். கஷ்டப்பட்டு படித்து விட்டால்போதும்... கல்வி என்றும் நம் மைக் கைவிடாது... காப் பாற்றிவிடும் என்கிற தன்னம்பிக் கையையும் இந்தப் புத்தகம்தான் எனக்குக் கொடுத்தது.

‘காட்டில் நடந்து போகும்போது ரொம்ப தாகமாக இருக்கும். ஏதோ ஓர் இடத்தில் நீர்ச் சுனை இருக்கும். அதை விலக்கிப் பார்த்தால் சூரியனும் வானமும் தெரியும். அந்த இடத்தை எல்லோருக்கும் அறி முகப்படுத்த வேண்டும் என்று நினைப்போம். ஆனால், அந்த இடத்தை விட்டுக் கடந்த சில நாட்களில் அதை மறந்து விடுவோம். வாழ்க்கை யில் நடக்கும் சம்பவங்களும் அதே போன்றவைதான்’ என்று ஓர் இடத்தில் குறிப்பிட்டிருப்பார். அது நம் எல்லோர் வாழ்க்கைக்கும் பொருந்தும்.

கதை முழுவதும் நாவலாசிரியரின் வர்ணனையில் பாப்புலார் மரங்கள் முக்கிய இடம் பிடிக்கும். நம்மூர் நெட்டிலிங்க மரங்களைப் போன்று மலைக்குன்றுகளில் உயர்ந்து நிற்குமாம் அவை. நாவலைப் படித்து முடிக்கிறபோது எழுத்தை இதயத்தால் நகர்த்தும் ரஷ்ய எழுத்தாளர் சிங்கிஸ் ஐத்மாத்தவும் அவரால் வாழ்க்கையில் உயர்நிலையை அடைகிற அல்தினாயும் இந்த நாவல் முழுக்க நம் கூடவே பயணிக்கிற பாப்புலார் மரங்களைப் போல நம் மனதில் உயர்ந்து நிற்பார்கள்.

நேர்மை என்பது தனிமனித ஒழுக்கம் என்பதையும் இந்தப் புத்தகம் எனக்கு உணர்த்தியது. கடின உழைப்பும் நேர்மையும் இருந்தாலே லட்சியங்களை வென்றெடுக்க முடியும் என்பதை இந்த நாவல் சொல்லும். ரஷ்யாவிலும் கிராமங்கள் இப்படித்தான் இருக்கும்... அங்கேயும் மனிதர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்று அந்நிய நாட்டைப் பற்றிய ஒரு தெளிவையும் இது அளிக்கிறது.

எனக்கு நிறைய பணம் கிடைத்தால் எப்படியாவது ரஷ்யாவுக்கு மட்டும் போய் வந்துவிட வேண்டும்... எப்படியாவது அந்த பாப்புலார் மரங்களைப் பார்த்து விட வேண்டும் என்கிற ஆசையை ஏற்படுத்திய நாவல் இது. எத்தனையோ நாவல்கள் படித்திருக்கிறேன். இந்த நாவல் மட்டுமே அந்த இயற்கையையும் மண் வாசனையையும் அப்படியே உணரச் செய்தது. அனை வரும் அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம் இது!’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism