Published:Updated:

இவர் இந்தியாவின் சோலார் பெண்மணி!

இவர் இந்தியாவின் சோலார் பெண்மணி!
பிரீமியம் ஸ்டோரி
இவர் இந்தியாவின் சோலார் பெண்மணி!

புதுமைஸ்ரீ லோபாமுத்ரா

இவர் இந்தியாவின் சோலார் பெண்மணி!

புதுமைஸ்ரீ லோபாமுத்ரா

Published:Updated:
இவர் இந்தியாவின் சோலார் பெண்மணி!
பிரீமியம் ஸ்டோரி
இவர் இந்தியாவின் சோலார் பெண்மணி!
இவர் இந்தியாவின் சோலார் பெண்மணி!

ம் மக்கள் இப்போதுதான் வீடுகளில் சோலார் பேனல்கள் அமைக்கும் பணிகளை முன்னெடுத்து வருகிறார்கள். ஆனால், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு கிராமத்துப் பெண், தொழில்முறையில் சோலார் பேனல்கள் அமைத்திருக்கிறார். அத்துடன், அருகில் உள்ள கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு, மாத வாடகைக்கு சார்ஜ் செய்யப்பட்ட விளக்குகள் கொடுத்து, புதிய சாதனை படைத்து வருகிறார். பிரதமர் நரேந்திர மோடி, அகில இந்திய வானொலி மூலம் மக்களிடம் பேசும் ‘மனதின் குரல் (மன் கி பாத்)’ நிகழ்ச்சியில் இந்தப் பெண்ணைக் குறிப்பிட்டுப் பேச, ‘இந்தியாவின் சோலார் பெண்மணி’ என்று நாடே கொண்டாடுகிறது அவரை. நூர்ஜஹான் என்பது அந்தப் பெருமைக்குரிய பெயர்! 

உத்தரப்பிரதேசத்தின் கான்பூர் நகருக்கு அருகில் உள்ள பைரி டாரியான் கிராமத்தில் வசிக்கிறார் நூர்ஜஹான். 25 வயதில் அவர் தன் கணவரை இழந்தபோது, ஏழு குழந்தைகளுக்குத் தாயாக, நிராதரவுடன் நின்றார். கூலி வேலை செய்து கிடைத்த வருமானத்தில் குழந்தைகளை வளர்த்தார். ஒரு புதுமையான தொழிலைக் கையில் எடுத்தது, அவரே எதிர்பாராதது!

‘`எங்கள் சுற்றுவட்டாரத்தில் பல கிராமங்களுக்கு இன்றுவரை மின்சார வசதி எட்டிப் பார்க்கவில்லை. ஒரு சில கிராமங்களில் ஒரு நாளைக்கு மூன்று மணி நேரம் மட்டுமே மின்சாரம் கிடைக்கும். இதனால் பள்ளிக்குழந்தைகள் படிக்க முடியாமல் அவதிப்பட்டனர். கூலி வேலை செய்யும் பெண்களுக்கு மாலையில் வீடு திரும்பி இருட்டுவதற்குள் சமைத்து, வீட்டு வேலைகள் அனைத்தையும் முடிப்பது மிகச் சிரமமாக இருந்தது.

இந்நிலையில், 10 ஆண்டுகளுக்கு முன் கான்பூரில் உள்ள தன்னார்வத் தொண்டு நிறுவனம், சோலார் பேனல்கள் அமைப்பது குறித்த பயிற்சியைப் பெண்களுக்கு வழங்கியது. நானும் கலந்துகொண்டேன். `மண்ணெண்ணெய் விளக்குகளுக்குப் பதிலாக, சூரியசக்தியில் எரியக்கூடிய சோலார் விளக்குகளைப் பயன்படுத்தலாம், அதைத் தொழிலாகவும் எடுத்துச் செய்யலாம்’ என்று அங்கே கற்றுக்கொண்டேன். மற்ற பெண்களுக்கு அதைத் தொழிலாக முன்னெடுக்கும் தெளிவோ, தன்னம்பிக்கையோ, தைரியமோ இல்லாத சூழலில், ‘இதை நானே செய்கிறேன்’ என்று முன்வந்தேன்’’ என்கிற நூர்ஜஹான், தொண்டு நிறுவனம் வழங்கிய பொருளாதார உதவியுடன் களத்தில் இறங்கியிருக்கிறார்.

இவர் இந்தியாவின் சோலார் பெண்மணி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘`எங்கள் கிராம மக்களுக்கு, சோலார் விளக்குகள் பாதுகாப்பானவை மற்றும் செலவும் குறைவானது என்பதைப் புரியவைக்கவே பல மாதங்கள் ஆனது. பின்னர் மகளிர் குழுக்களை ஒருங்கிணைத்து, சோலார் பேனல்கள் அமைத்து, சூரியசக்தியில் மின்சாரம் தயாரிக்கும் தொழில்கூடத்தை நிறுவினேன். அந்த மின்சாரத்தை, கருவிகளின் துணைகொண்டு விளக்குகளில் சார்ஜ் செய்தேன். அதை மக்களுக்கு வாடகைக்குக் கொடுக்க ஆரம்பித்தேன்.

தினமும் மாலையில் கிராமத்தினர் என்னிடம் வந்து, சார்ஜ் செய்யப்பட்ட சோலார் விளக்குகளைப் பெற்றுச் சென்று, அடுத்த நாள் காலையில் மீண்டும் ஒப்படைப்பார்கள். நான் மீண்டும் ரீசார்ஜ் செய்து வைத்திருக்க, மீண்டும் மாலை வந்து பெற்றுச் செல்வார்கள். ஒரு விளக்குக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.100 கட்டணம். 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இப்போது இந்த விளக்குகளைப் பயன்படுத்துகின்றனர். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தத் தொழில் என் வாழ்வின் அங்கமாகிப் போனது’’ என்று சொல்லும் நூர்ஜஹானின் முகம், பிரதமரால்தான் குறிப்பிட்டுப் பேசப்பட்டதைச் சொல்லும்போது பிரகாசமாகிறது.

‘`பிரதமர் என்னைக் குறிப்பிட்டுப் பாராட்டிப் பேசியது, மிகவும் சந்தோஷமாக இருந்தது. அது எனக்கு மிகப்பெரிய ஊக்குவிப்பு. அதற்குப் பின்னர், பலரும் என்னைத் தேடிவந்து தொழிலுக்கான உதவிகளைச் செய்தனர். இப்போது மேலும் பல கிராமங்களுக்கு விளக்குகள் அளிக்கும்விதமாக, என் தொழிலை விரிவுபடுத்தி உள்ளேன். இதனால் பல பெண்கள் வேலைவாய்ப்பில் பயனடைந்துள்ளனர். மேலும் பல பெண்களுக்கு இதற்கான பயிற்சி அளித்தும் வருகிறேன். இனி எங்கள் கிராமத்துப் பிள்ளைகளும் மின்விளக்கொளியில் படிப்பார்கள்” எனும்போது, அந்த படிப்பறிவற்ற கிராமத்துப் பெண்ணின் கண்களில் நாம் கண்ட ஒளி, பல வீடுகளின் இருள் அகற்றிய பெருவெளிச்சம்!

உலகின் வெளிச்சம்!

நூர்ஜஹான் பற்றி பிரதமர் நரேந்திர மோடி ‘மக்களின் குரல்’ நிகழ்ச்சியில் பேசிய வார்த்தைகள்...

‘`கான்பூரில் வசிக்கும் நூர்ஜஹான் என்ற பெண்மணி, நினைத்தும் பார்த்திடாத அதிச யத்தை நிகழ்த்திக்கொண்டிருக்கிறார். அவர் ஏழை மக்களுக்கு சூரிய மின்சக்தியின் மூலம் எரியக்கூடிய விளக்குகளை, குறைந்த விலை யில் வழங்கி வருகிறார். நம் அனைவருக்கும் நம்பிக்கை அளிக்கும்விதமாகச் செயலாற்று கிறார். அவர் பெயருக்குக்கூட ‘உலகின் வெளிச்சம்’ என்பதே பொருள்!”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism