‘தை’ பொறந்தாச்சு... ஒரே கல்யாண சீசன்தான். அதுவும் க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ், கஸின்ஸுக்குக் கல்யாணம்னா ப்ரீ வெடிங் பார்ட்டி, போஸ்ட் வெடிங் பார்ட்டின்னு ஒரே பார்ட்டி ஃபீவர் அடிக்க ஆரம்பிச்சுடும். உங்களுக்கு கை கொடுக்கறதுக்காகத்தான் இந்த இதழில் பார்ட்டி மேக்கப் எப்படி செய்யலாம்னு பார்க்கப்போறோம்.

என்ன வாசகிகளே, மேக்கப் கிட் எடுத்துட்டு ரெடியாகிட்டீங்களா?

இதோ ‘பார்ட்டி மேக்கப்’ ஆரம்பம்...

பேஸிக் மேக்கப் முதல் பிரைடல் மேக்கப் வரை! - 5

மேக்கப் செய்ய தேவையானவை:

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பேஸிக் மேக்கப் முதல் பிரைடல் மேக்கப் வரை! - 5

1. க்ளென்சர்
2. பிரைமர்
3. கன்சீலர்
4. க்ரீம் ஃபவுண்டேஷன்
5. ட்ரான்ஸ்லுசன்ட் பவுடர்
6. ஐ ஷேடோ
7. ஷிம்மர் பவுடர்
8. ஐ லைனர்
9. காஜல்
10. மஸ்காரா
11. ஐப்ரோ க்ரீம்
12. பிளஷர்
13. ஹைலைட்டர்
14. லிப் லைனர் பென்சில்
15. லிப்ஸ்டிக்
16. லிப் க்ளாஸ்

பேஸிக் மேக்கப் முதல் பிரைடல் மேக்கப் வரை! - 5

1. டிஷ்யூ பேப்பரில் சிறிதளவு க்ளென்சரை எடுத்துக்கொள்ளவும்.

2. முகம் முழுக்க துடைத்தெடுக்கவும்.

3. சிறிதளவு பிரைமரை எடுத்துக்கொள்ளவும்.

4. பிரஷ்ஷினால் எடுத்து முகம் முழுக்க அப்ளை செய்யவும்.

5. சருமத்துக்கு பொருத்தமான கன்சீலரை எடுத்துக்கொள்ளவும்.

6. பிரஷ்ஷினால் எடுத்து... தழும்புகள், கரும்புள்ளிகளின் மீது பூசி மறைக்கவும்.

பேஸிக் மேக்கப் முதல் பிரைடல் மேக்கப் வரை! - 5

7. சருமத்துக்குப் பொருத்தமான ஃபவுண் டேஷன் க்ரீமை எடுத்துக்கொள்ளவும்.

8. பிரஷ்ஷினால் எடுத்து முகம், காது மற்றும் கழுத்து என அனைத்துப் பகுதிகளிலும் ஒரே சீராக அப்ளை செய்யவும்.

9. ட்ரான்ஸ்லுசன்ட் பவுடரை எடுத்துக் கொள்ளவும்.

10. பிரஷ்ஷினால் பவுடரை எடுத்து முகம், காது மற்றும் கழுத்து என அனைத்துப் பகுதி களிலும் ஒரே சீராக அப்ளை செய்யவும்.

11. உடைக்குத் தகுந்த நிறத்தில் ஐ ஷேடோவை எடுத்துக்கொள்ளவும்.

12. பிரஷ்ஷினால் எடுத்து கண் இமைகளின் மேற்பகுதியில் அப்ளை செய்யவும்.

13. ஷிம்மரிங் ஐ ஷேடோ பவுடரை எடுத்துக் கொள்ளவும்.

14. ஷிம்மரிங் பவுடரைச் சிறிதளவு பிரஷ்ஷி னால் தொட்டு எடுத்து, கண் இமைகளின் மேற்பகுதியில் அப்ளை செய்யவும்.

15.
க்ரீம் ஐ லைனரை  எடுத்துக்கொள்ளவும்.

16. ஐ லைனரை பிரஷ்ஷினால்  அளவாக எடுத்து கண் இமைகளின் மேற்பகுதி இமை முடிகளையொட்டி விருப்பத்துக்கு ஏற்ற வடிவில் வரைந்து கொள்ளவும்.

பேஸிக் மேக்கப் முதல் பிரைடல் மேக்கப் வரை! - 5

17. காஜல் பென்சிலை எடுத்துக்கொள்ளவும்.

18.
கண்களுக்கு மை இடவும்.

19. மஸ்காரா எடுத்துக்கொள்ளவும்.

20.
மஸ்காராவை கண்களின் மேல் பகுதி இமை முடிகள் மற்றும் கீழ் பகுதி இமை முடிகளுக்கு அப்ளை செய்யவும்.

21. ஐப்ரோ க்ரீமை எடுத்துக்கொள்ளவும்.

22. ஐப்ரோ க்ரீமை பிரஷ்ஷினால் தொட்டு புருவங்களுக்கு அப்ளை செய்யவும்.

23. ஆடைக்குப் பொருந்தும் நிறத்தில் பிளஷரை எடுத்துக்கொள்ளவும்.

பேஸிக் மேக்கப் முதல் பிரைடல் மேக்கப் வரை! - 5

24. பிரஷ்ஷினால் பிளஷரை தொட்டு கன்னங்களுக்கு அப்ளை செய்யவும்.

25. ஹைலைட்டரை எடுத்துக்கொள்ளவும்.

26. பிரஷ்ஷினால் ஹைலைட்டரை தொட்டு கன்ன மேடுகள், மூக்கின் மேல்பகுதி, நெற்றி, தாடை ஆகிய இடங்களில் அளவாக அப்ளை செய்துகொள்ளவும். இது சருமத்தை வழுவழுப் பாகவும், மினுமினுப்பாகவும் காட்டும்.

27.
லிப் லைனர் பென்சிலை எடுத்துக் கொள்ளவும்.

28.
உதட்டு வடிவத்துக்கு ஏற்ப, உதட்டு ஓரங் களில் வரைந்துகொள்ளவும்.

29. லிப்ஸ்டிக்கை எடுத்துக்கொள்ளவும். 

பேஸிக் மேக்கப் முதல் பிரைடல் மேக்கப் வரை! - 5

30. பிரஷ்ஷினால் எடுத்து, உதடுகளில் வரைந்த கோட்டுக்குள் அப்ளை செய்யவும்.

31. ஷிம்மரிங் லிப் க்ளாஸை எடுத்துக் கொள்ளவும். 

32. லிப் க்ளாஸை உதடுகளுக்கு அப்ளை செய்யவும்.

பளிச் தோற்றத்தில் பார்ட்டிக்குத் தயார்.

உதவி: நேச்சுரல்ஸ்

மாடல்: பவித்ரா

எக்ஸ்பர்ட் டிப்ஸ்...

பார்ட்டி மேக்கப் குறித்து நேச்சுரல்ஸ் உரிமையாளர் வீணா வழங்கும் டிப்ஸ்...

பேஸிக் மேக்கப் முதல் பிரைடல் மேக்கப் வரை! - 5

கேள்வி: பகல் மற்றும் இரவு நேர நிகழ்ச்சி களுக்கு என்ன மாதிரியான ஐ ஷேடோக்கள் உபயோகிக்கலாம்?

பதில்:

பகல்: மிதமான நிறங்களில் உள்ள ஐ ஷேடோக்கள் உபயோகிக்கவும். க்ளிட்டர் ஐலைனர் உபயோகித்தால் ஐ ஷேடோவை தவிர்க்கவும். பளிச் நிறங்களை முற்றிலுமாக தவிர்க்கவும்.

இரவு: ஷிம்மர் மற்றும் க்ளிட்டர் ஐ ஷேடோக் களை உபயோகிக்கவும். அதே போன்று பளிச் பளிச் நிறங்கள் இரவு நேர நிகழ்ச்சிகளுக்குப் பொருத்தமாக இருக்கும். உங்களுடைய மொத்த மேக்கப்பில் கண்களுக்கான மேக்கப் கூடுதலாக இருப்பது இரவு நேர நிகழ்ச்சிகளில் உங்களை ஸ்டைலிஷ்ஷாக காட்டும்.

குறிப்பு: பார்ட்டி மேக்கப்பில் கண்களுக்கு அதிக மேக்கப் இருந்தால் உதடுகளுக்கு குறைவாகவும், உதடுகளுக்கு அதிக மேக்கப் இருந்தால் கண்களுக்கு குறைவாகவும் இருக் கும்படி பார்த்துக்கொள்ளவும். இரண்டுமே அதிகமாக இருந்தால் மிக கோமாளித்தனமாக இருக்கும்.

கேள்வி: பார்ட்டிகளுக்கு ஆயில் மேக்கப் அல்லது மேட் ஃபினிஷ் லுக் எது சிறந்தது?


பதில்:  மேட் ஃபினிஷ் மேக்கப் பகல் நேர நிகழ்ச்சிகளுக்குத்தான் பொருந்தும். இரவு நேரத்துக்கு ஆயில் மேக்கப்தான் சிறந்தது. இது உங்கள் சருமத்துக்கு ஒருவித பளபளப்பைக் கொடுத்து, உங்கள் அழகைக் கூடுதலாக மிளிர வைக்கும்.

கேள்வி: ட்ரெண்டி மற்றும் ட்ரெடிஷனல் பார்ட்டிகளுக்கு எந்த மாதிரியான ஹேர் ஸ்டைல் செய்யலாம்?

பதில்: 

ட்ரெண்டி பார்ட்டி: ஃப்ரீ ஹேர் ஸ்டைல் அல்லது அலை போன்ற வேவி கர்ள்ஸ் பொருத்தமாக இருக்கும். ஹெவியான ஹேர் ஸ்டைல் களைத் தவிர்க்கவும்.

ட்ரெடிஷனல் பார்ட்டி:
ஃபிஷ் ப்ளைய்ட்ஸ் இப்போதைய ட்ரெண்டாக இருக்கிறது. மெர்மய்டு ப்ளைய்ட்ஸ், லாங் ஃபிஷ் டெய்ல் ஹேர் ஸ்டைலில் கலர் கலர் ஸ்ட்ரீக்ஸ் மிகவும் அழகாக இருக்கும்.

பேஸிக் மேக்கப் முதல் பிரைடல் மேக்கப் வரை! - 5

ந்த இதழில் வெளிவந்திருக்கும் `பேஸிக் மேக்கப்’ பகுதியை வீடியோவாக http://bit.ly/avalmakeup4 - ல் காணலாம் அல்லது இந்த க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்யுங்கள்.

குறிப்பு: கேள்விகளை aval@vikatan.com என்ற மெயில் ஐடி அல்லது அவள் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை - 600 002 என்ற முகவரிக்கு அனுப்பவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism