Published:Updated:

என் டைரி - 398 - மூச்சுக்காற்றுக்கு ஏன் தடை?!

என் டைரி - 398 - மூச்சுக்காற்றுக்கு ஏன் தடை?!
பிரீமியம் ஸ்டோரி

ன் கணவரின் எண்ணமே எனக்கு எதிரியாக இருக்கிறது என்பதுதான் என் பிரச்னை.

பெற்றோர் பார்த்து வைத்த திருமணம். மாமி யாருக்கு நான் வேலைக்குச் செல்வது பிடித்திருந்தது. அந்தக் காரணமே திருமணத்துக்கு வழிவகுத்தது. ஆனால், பெண்கள் வேலைக்குச் செல்வதுதான் அவர்களை அதிகமாக எதிர்த்துப்பேச வைக்கிறது என்பது என் கணவரின் எண்ணம். திருமணத்துக்கு முன், இந்த விஷயத்தை என்னால் அறிய முடியவில்லை.

என் டைரி - 398 - மூச்சுக்காற்றுக்கு ஏன் தடை?!

திருமணமான சில நாட்களிலேயே, கணவர் ‘நீ வேலைக்குப் போக வேண்டாம்பா. அதான் நான் நல்லா சம்பாதிக்கிறேனே’ என்றதும் எனக்கு தூக்கிவாரிப் போட்டது. `சரி... நம் மீதான பாசமோ’ என்று மெடிக்கல் லீவில் ஆறு மாதங்கள் வீட்டில் இருந்தேன். அப்போதெல்லாம் என் மீது பாசத்தைக் கொட்டியவர், நான் மீண்டும் வேலைக்குச் செல்ல ஆரம்பித்ததும், சின்ன சின்னச் செய்கைகளுக்குக்கூட, என் மீது எரிந்துவிழ ஆரம்பித்தார்.

என்னால் வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே 24 மணி நேரத்தைக் கழிப்பதும் சிரமமாக இருக்கிறது. வீட்டில் இருந்துகொண்டு என்னதான் செய்வது? வேலை என்பது என்னுடைய சுதந்திரமாக, என்னுடைய மூச்சுக்காற்றாக நினைக்கிறேன். திருமணமாகி ஒன்றரை வருடம்தான் ஆகிறது. அதற்குள் எனக்கு மூச்சுமுட்டுவது போன்ற உணர்வு ஏற்படுகிறது.

வழி சொல்லுங்கள் தோழிகளே...

- பெயர் சொல்ல விரும்பாத வாசகி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

என் டைரி 397-ன் சுருக்கம்

என் டைரி - 398 - மூச்சுக்காற்றுக்கு ஏன் தடை?!

திருமணமாகி ஐந்து வருட வாழ்க்கை நொடியில் கழிந்தது போன்ற மகிழ்வோடு, ஆறாவது ஆண்டு திருமண நாளை சிறப்பாகக் கொண்டாட நினைத்தோம். திருமண நாளுக்காக எனக்குப் பரிசு வாங்கச் சென்றபோது, சாலை விபத்தில் கணவரைப் பறிகொடுத்தேன். கண்ணெதிரே நடந்த அந்த நிகழ்வு, என்னை நிலைகுலையச் செய்தது. குழந்தையும் இல்லாததால், என் கணவரின் இழப்பை நிதம்நிதம் சிந்தனையில் தனியாகத் தாங்கவேண்டிய சக்தி இல்லாமல் போனது எனக்கு. முடிந்த அளவு வேலையில் கவனம் திருப்பினேன். மீதம் உள்ள வாழ்க்கையில், என் கணவரின் கனவை நிறைவேற்றும்விதமாக அவரது இரண்டு தம்பிகளுக்குத் தாயாக இருந்து, அவர்களின் திருமணத்தை நடத்திவைக்க விரும்பினேன். தன் மகனின் இழப்பால் மனமுடைந்த என் மாமனாரும் சில நாளில் இறந்தது, என் துக்கத்தை அதிகரித்தது. பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் கொழுந்தனார்களை நான் கவனிக்க, ‘கணவர் இறந்த பிறகு உனக்கு அந்த வீட்டில் என்ன வேலை?’ என்கிறார்கள் என் பெற்றோர். உறவினரும் அதையே சொல்வதோடு, எனக்கு மறுமணம் செய்வது பற்றிக் கூறி, வார்த்தைகளால் தினமும் வதைக்கிறார்கள். ஆனால், எனக்கு மறுமணம் பற்றிய எண்ணம் இப்போது இல்லை. காலச்சூழல் எப்படி என்னை மாற்றும் என்பது எனக்குத் தெரியாது. நான் உயிர் வாழும்வரை அண்ணியாக அல்லாமல், அன்னையாகவே வாழ்ந்துவிட்டுப் போக நினைக்கிறேன். இதுதான் அவர்மீது நான் வைத்திருக்கும் அன்புக்கு நன்றிக்கடனாக இருக்கும் என நினைக்கிறேன். தினம்தினம் இதை யோசிக்கும்போதும், வசவுகளை வாங்கும்போதும் நொறுங்கிப் போகிறேன். என்ன செய்வது தோழிகளே?

சிநேகிதிக்கு... சிநேகிதி...

வாசகிகள் ரியாக்‌ஷன்

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ. 100

உனக்கென்று ஒரு வாழ்க்கை!

கணவர் இல்லையென்றாலும் உன் புகுந்த வீட்டில் நீ வைத்துள்ள பற்றுதலும், கடமை உணர்வும் பெண்குலத்துக்குப் பெருமை தேடித்தருகிறது. ஒரு அன்னையாக இருந்து உன் கடமையைச் செய்ய நினைப்பது சரியே. உன் கணவரின் கனவை நிறைவேற்றுவதிலும் தவறில்லை. அவர்களுக்கு நல்ல விதமாக வாழ்க்கையை அமைத்துக் கொடுத்துவிட்டு உன் பெற்றோர் எண்ணப்படி உன் எதிர்காலம் குறித்து உனக்கொரு வாழ்க்கையைக் காலத்தோடு அமைத்துக்கொள்வதில் தவறில்லையே!
 
- எம்.பானுமதி, திருச்சி

அண்ணி அல்ல... அம்மா!

தூற்றுபவர்கள் தூற்றட்டும்... போற்றுபவர்கள் போற்றட்டும். கணவரின் தம்பிகள் உங்களையே நம்பி இருக்கும்போது மறுமணம் செய்வது நல்லதல்ல. அவர்களது கல்யாணம் முடிந்து மறுமணம் செய்ய நினைத்தால், அப்போது வயது முதிர்ந்துவிடும். எனவே, அண்ணி என்பதை மறந்து ஓர் அம்மாவாக வாழ்வீர்கள். அப்படியே போகட்டும் காலம்... நற்செயல்கள் உங்களை வாழவைக்கும்.

- ச.லட்சுமி, ராயனூர்

புதுவாழ்வைத் தொடங்கு!

உன் பெற்றோரும் சுற்றத்தாரும் மறுமணம் பற்றி யோசிப்பதை வதைப்பதாக எண்ணாதே. அது உன் வாழ்க்கை மீதான தொலைநோக்கு அக்கறை. மறுமணம் செய்துவைக்கும் வழக்கம் அதிகரித்துவரும் இக்காலத்தில், தனித்திருக்கும் நீ, இறந்த கணவரின் தம்பிகளுக்காக அன்னையாகவே வாழ்கிறேன் என்பதை ஏற்க முடியாது. பெற்றோரின் விருப்பப்படி செயல்படு. நம்பிக்கையோடு புதுவாழ்வைத் தொடங்கு.

- ரா.கீதாஞ்சலி, திருக்கோவிலூர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism