Published:Updated:

நான் ரஜினி சார் மாதிரி - ப்ரியங்கா

நான் ரஜினி சார் மாதிரி - ப்ரியங்கா
பிரீமியம் ஸ்டோரி
நான் ரஜினி சார் மாதிரி - ப்ரியங்கா

சந்திப்புஆர்.வைதேகி, படங்கள்: சு.குமரேசன்

நான் ரஜினி சார் மாதிரி - ப்ரியங்கா

சந்திப்புஆர்.வைதேகி, படங்கள்: சு.குமரேசன்

Published:Updated:
நான் ரஜினி சார் மாதிரி - ப்ரியங்கா
பிரீமியம் ஸ்டோரி
நான் ரஜினி சார் மாதிரி - ப்ரியங்கா

ப்ரியங்காவுடன் பத்து நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தால் போதும்... எனர்ஜி லெவல் எக்குத்தப்பாக எகிறுகிறது. சிரித்துச் சிரித்து வாய் வலிக்கிறது... வயிறு புண்ணாகிறது... மொத்தத்தில் அவருடன் இருக்கும் நிமிடங்களில் உலகம் மறக்கிறது. ‘விஜய் டி.வி’ வி.ஜே ப்ரியங்கா தேஷ்பாண்டே அத்தனை பப்ளி!

அவள் விகடன் வாசகிகள் பூஜா, சாய் ஸ்வேதா, சுதீப்தி, கவிதா கோபிநாத் ஆகியோர் ப்ரியங்காவைச் சந்தித்துப்பேச விருப்பம் தெரிவித்திருந்தனர்.

‘`பிரசாத் ஸ்டுடியோவுல ‘ஜோடி’ ஷூட்...

அங்கேயே வச்சுக்கலாமா? மேக்கப் பண்ணிக் கிட்டே பேசினா ஓகேதானே... மக்கள் பயந்துட மாட்டாங்கல்ல!’’ - வார்னிங் கொடுத்துவிட்டே வரச் சொன்னார்.

ப்ரியங்காவின் கிரீன் ரூமில் அரங்கேறியது ஜாலி ஜமா!

நான் ரஜினி சார் மாதிரி - ப்ரியங்கா

பூஜா: உங்கப் பெயருக்குப் பின்னால உள்ள தேஷ்பாண்டே, நீங்க தமிழச்சி இல்லைன்னு சொல்லுது... ஆனா, அழகா தமிழ் பேசறீங் களே... உங்க பின்னணி?

‘`ஆமாம்... நான் தமிழச்சி இல்லை. நாங்க மகாராஷ்டிரியன்ஸ். கர்நாடகாவுல செட்டிலா கிட்டோம். அப்பாவுக்குச் சென்னையில வேலை கிடைச்சதால, நான் இங்கேதான் வளர்ந்தேன். சுருக்கமா சொல்லணும்னா, நான் ரஜினி சார் மாதிரி. ரஜினி சார் மகாராஷ்டிரியன். கர்நாடகாவுல செட்டிலாகி, தமிழ்நாட்டுல பிரபலமானவர். அதே மாதிரிதான் நானும்!’’

சாய் ஸ்வேதா: எப்படி வி.ஜே ஆனீங்க?

‘`எனக்கு ஏர் ஹோஸ்டஸ் ஆகணும்கிறதுதான் கனவு. பிளஸ் டூ முடிச்சிட்டு ஏர் ஹோஸ்டஸா ஜாயின் பண்ணலாம்னு நினைச்சபோது `டிகிரி இருக்கணும்’னு சொல்லிட்டாங்க. பி.பி.ஏ படிக்கலாம்னு நினைச்சு, காலேஜ் அப்ளிகேஷன்ல தவறுதலா விஸ்காம்னு நிரப்பிட்டேன். சரி... ஏதோ ஒரு டிகிரி பண்ணணும். விஸ்காமே பண்ணுவோமேன்னு நினைச்சபோது என் சீனியர் ‘ஜீ டி.வி’ல ஒரு ஷோ பண்ணிட்டிருந்தாங்க. ‘ஒரு மாசம் ஊருக்குப் போறேன்... நீ பண்றியா?  5 ஆயிரம் ரூபாய் தருவாங்க’னு கேட்டாங்க. செம காசா இருக்கேனு பண்ணினேன். அவங்க ஊர்லேருந்து வந்ததும் புரடியூசரா மாறிட்டாங்க. நான் அந்த ஷோவை காம்பியர் பண்றதைத் தொடர்ந்தேன். அந்த ஷோ பண்ண ஆரம்பிச்சதும், `அடுத்து ஏதாவது பண்ணிட்டே இருக்கணுமேன்னு ஒரு ஏக்கம் வந்தது. அதுக்குள்ள டிகிரியும் முடிஞ்சிருச்சு. இப்ப நான் ஹேப்பி. ஆனாலும், ஏர் ஹோஸ்டஸ் ஆசை மனசுக்குள்ள ஒரு ஓரத்துல இன்னும் கொஞ்சம் இருக்கு!’’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நான் ரஜினி சார் மாதிரி - ப்ரியங்கா

சுதீப்தி: கூட ஷோ பண்றவங்கக் கிட்ட செமயா பல்பு வாங்கறீங்களே... அதெல்லாம் உள்ளுக்குள்ள கடுப்பா இருக்குமா?

‘`இது ரீல் லைஃப்னு தெரியும். ரியல் லைஃப்ல எல்லாரும் ரொம்ப மரியாதை யோட நடந்துப்போம். க்ளோஸா இருக்கிறவங்களுக்குள்ள இதெல்லாம் சகஜமா நடக்கும். எனக்குக் கிடைக்கிற அந்தச் சில நிமிஷங்களை வேடிக்கையா மாத்தணும். சில நேரம் ஜூனியர்ஸ் கலாய்க்கும்போது கொஞ்சம் கஷ்டமா இருக்கும். அதுக்கு தனியா ரூம் போட்டு அழுதுப்பேன். ஷோ முடிஞ்சதும் ‘அக்கா கோவிச் சுக்கீட்டீங்களா’னு வந்து கேட்பாங்க!’’

பூஜா: மறக்க முடியாத பாராட்டு?

‘`ஒரு ஷோவுல தனுஷ் சார் ‘Damn humorous girl you are’னு சொல்லி, என் தோள்ல தட்டிக் கொடுத்தார். தனுஷை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவரோட பாராட்டும் ரொம்ப ஸ்பெஷல். எந்தப் பிரபலம் என் ஷோவுக்கு வந்தாலும் ‘You are a funny girl’னு சொல்வாங்க. `பொண்ணுங்கன்னா அழகா இருக்காங்க... கிளாமரா இருக்காங்க... அடக்கமா பேசறாங்க’ங்கற மாதிரி விஷயங்கள்தான் பெண்களுக்கானதா பார்க்கவும் பேசவும் படுது. பொண்ணுங்க ஃபன்னாகவும் இருக் கலாம், இல்லையா? அது என்கிட்ட இருக்கிறதையும், மக்கள் ரசிக்கிற தையும் பெருமையா நினைக்கிறேன்.’’

சாய் ஸ்வேதா: உங்க சாய்ஸ் தலயா... தளபதியா?

‘`தல செம அழகு. ஆனாலும், நான் தளபதி ரசிகை! ‘கலக்கப்போவது யாரு ஷோ’வுல யாராவது தளபதி கெட்டப்புல வந்தாலே குஷியாகி கத்துவேன். அவங்க மொக்கையா பண்ணினாலும் தளபதி கெட்டப்புக் காகவே சப்போர்ட் பண்ணுவேன்.’’

பூஜா: இவ்ளோ அழகா இருக்கீங்க... சினிமாவுல நடிக்கக் கூப்பிட்டிருப்பாங்கல்ல...

(‘`தம்பி... இவங்களுக்கு ஒரு ஸ்பெஷல் டீ சொல்லுப்பா...’’ என்கிறார். அழகாக இருப்பதாகச் சொன்னதற்காம்!) ‘`எனக்கு நடிக்கணும்னு ஆர்வமெல்லாம் கிடையாது. சில வாய்ப்புகள் வந்திருக்கு. யாராவது நடிக்கக் கேட்கிறபோதும், ‘எனக்கு நடிக்க வராது... வேற யார் நம்பராவது கொடுக்கவா’னு கேட்பேன். எனக்கு ஒரே ஓர் ஆசைதான். தனுஷ் சார் படத்துல அவர் இருக்கிற ஃப்ரேம்ல பின்னாடி சும்மா நடந்துபோகச் சொன்னா கூட ஓகே. அல்பத்தனமான ஆசையா இருந்தாலும், அது நடந்தா போதும் எனக்கு!’’

கவிதா கோபிநாத்:
கல்யாண வாழ்க்கை?

‘`சூப்பரா போயிட்டிருக்கு. எங்க சேனல்லயே எக்ஸிகியூட்டிவ் புரடியூசரா இருந்தவர் பிரவீண். லவ் பண்ணினோம். வீட்ல சொல்லிப் பார்த்தோம். சின்னச் சின்னப் பிரச்னைகள் இருந்தது. சரியா னதும் அவங்கச் சம்மதத்தோட அரேன்ஜ்டு மேரேஜா முடிஞ்சது. ரெண்டு பேரும் ஒரே துறையில இருக்கிறதால புதுசா எங்களுக்குள்ள பேச எதுவும் இருக்காது. ரெண்டு பேரும் ரெண்டு பேர் விஷயங்கள்லயும் தலையிட மாட்டோம். ரொம்பப் புரிஞ்சு நடந்துப்பார். சிலநேரம் அதிகாலையிலேயே ஷூட்டிங் கிளம்பிடுவேன். அடுத்த நாள் காலையில பால் பாக்கெட் வாங்கிட்டு வீட்டுக்குப் போற டைம் ஆயிடும். ‘காபி குடிச்சிட்டு தூங்கு’னு மாமியார் சொல்வாங்க. ‘என்ன இவ்ளோ நேரம்’னு ஒருநாளும் என் கணவரும் கேட்டதில்லை.’’

கவிதா கோபிநாத்: அதுக்குள்ள உங்களுக்கு டைவர்ஸ் ஆயிடுச்சுன்னு ஒரு செய்தி...

‘`செம காமெடி மேட்டர் அது... என் பெயர்ல உள்ள ஃபேக் ஐடியிலேருந்து `ப்ரியங்கா, ரமேஷை டைவர்ஸ் பண்ணிட்டாங்க’னு ஒரு நியூஸ். என் புருஷன் பெயர் பிரவீண். எனக்குச் சிரிப்பு தாங்கலை. இப்பகூட பிரவீண்கூட சண்டை வரும்போது ‘இதோ பாருங்க ரமேஷ்... ரொம்பப் பண்ணீங்கன்னா அந்த மெசேஜை உண்மைன்னு சொல்லிட்டுப்போயிடுவேன்’னு கலாய்ப்பேன். மக்களுக்கு வேலை வெட்டியே இல்லை. சரி, கிசுகிசுதான் போடறாங்க... அதை கரெக்டா போட்டா என்ன?

ப்ரியங்கா ரெண்டாவது கல்யாணம் பண்ணிட்டாங்கன்னும் கிளப்பிவிட்டாங்க. எனக்கு ரெண்டு முறை கல்யாணம் நடந்தது. ஆனா, ஒரே கல்யாணம்தான். பிரவீண் கிறிஸ்டியன். அதனால இந்து முறைப்படி ஒரு முறையும் கிறிஸ்டியன் முறைப்படி ஒரு முறையும் கல்யாணம் நடந்தது. அதை வச்சு இப்படிக் கிளப்பிவிட்டாங்க. என்னைப் பத்தியும் கிசுகிசு வருதுன்னா ப்ரியங்கா பிரபலமா இருக்கான்னு சந்தோஷமா இருக்கும்!’’

நான் ரஜினி சார் மாதிரி - ப்ரியங்கா

சாய் ஸ்வேதா: உங்கச் சிரிப்பு செம பாப் புலர்.... ப்ரியங்கா மாதிரி சிரிக்காதேன்னு சொல்ற அளவுக்கு ட்ரெண்ட் ஆயிடுச்சே...

‘`ஷூட்டிங் ஸ்பாட்ல என்ன காமெடி நடந்தாலும் நான் அப்படித்தான் சிரிச் சிட்டிருப் பேன். எங்காவது ஊருக்குப் போகும்போது ஏர்போர்ட்ல ‘மேடம் ஒருவாட்டி அதுமாதிரி சிரிச்சுக்காட்டுங்க’னு கேட்பாங்க. `யோவ்... எப்படியா சிரிச்சுக்காட்ட முடியும்... அதெல்லாம் தானா வரணும்’னு சொல்வேன். சிலர் நான் அதை வேணும்னே செய்யறேன்னு நினைக்கிறாங்க. எங்க வீட்ல என் தம்பி, நான், அம்மான்னு எல்லாரும் சத்தமாதான் சிரிப்போம். என் புருஷன்தான் பாவம்!’’

சுதீப்தி:
யாரைப் பார்த்தாலும் ஐ லவ் யூ சொல்றீங்க... குடும்பத்துல குழப்பம் வராதா?

‘`தனுஷ் சார்கிட்ட சொல்லியிருப்பேன். இளைய தளபதிகிட்ட சொல்லியிருப்பேன். டி.ஆர்கிட்ட சொன்னேன். எனக்கு கூச்சம், மண்ணாங்கட்டியெல்லாம் கிடையாது. டி.ஆர் சார் பத்தி நமக்குத் தெரிஞ்சது கொஞ்சம்தான். அதையெல்லாம் தாண்டி அவரோட திறமை என்னைப் பிரமிக்க வெச்சது. முதன்முறை அவர்கிட்ட ஐ லவ் யூ சொன்னபோது அவர் ரியாக்ட் பண்ணினார். அப்புறம்தான் அவரைக் கடுப்பேத்தியே ஆகணும்னு அடிக்கடி சொல்லிட்டிருக்கேன். ‘உன் பொண்டாட்டி என்னப்பா இப்படிப் பண்றா’னு டி.ஆர் சார், என் புருஷன்கிட்டயே சொல்லிட்டார்.  ‘எனக்கும் உன்னைப் பிடிக்கும் ப்ரியங்கா’னு டி.ஆர் சார் சொல்றவரைக்கும் சொல்லிட்டே இருப்பேன். லவ்னா இது வேற லவ். அவர் எனக்கு அப்பா மாதிரி.’’

பூஜா: ப்ரியங்காவுக்கு தலைப் பொங்கலா?

‘`தலைப் பொங்கல் இல்லை. தலை சங்கராந்தின்னு வேணா வச்சுக்கலாம். மகாராஷ்டிரா மக்கள் பொங்கலுக்குப் பதில்  சங்கராந்தி கொண்டாடுவோம். சங்கராந்தியில எனக்குப் பிடிச்ச விஷயம் கரும்பு. ஆனா, சூடான பொருள் ஏதாவது சாப்பிட்டாலே எனக்கு முகமெல்லாம் கொப்புளமா வந்துடும். ஒரு சீசன்ல என் முகம் முழுக்க அப்படி கொப்புளத்தோட பார்த்திருப்பீங்க. காரணம் அதிகமா கரும்பு சாப்பிட்டதுதான். அதுக்காக கரும்பு சாப்பிடறதை நிறுத்த மாட்டேன். இது கல்யாணத்துக்குப் பிறகு வர்ற முதல் சங்கராந்தி இது. ஸோ... கொஞ்சம் ஸ்பெஷல்தான்!’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism