Published:Updated:

அன்று ஐ.டி வேலை... இன்று கருப்பட்டி பால்கோவா தயாரிப்பு!

அன்று ஐ.டி வேலை... இன்று கருப்பட்டி பால்கோவா தயாரிப்பு!
பிரீமியம் ஸ்டோரி
அன்று ஐ.டி வேலை... இன்று கருப்பட்டி பால்கோவா தயாரிப்பு!

மாத்தி யோசி!சாஹா, படங்கள்: கே.ரமேஷ்

அன்று ஐ.டி வேலை... இன்று கருப்பட்டி பால்கோவா தயாரிப்பு!

மாத்தி யோசி!சாஹா, படங்கள்: கே.ரமேஷ்

Published:Updated:
அன்று ஐ.டி வேலை... இன்று கருப்பட்டி பால்கோவா தயாரிப்பு!
பிரீமியம் ஸ்டோரி
அன்று ஐ.டி வேலை... இன்று கருப்பட்டி பால்கோவா தயாரிப்பு!

.டி வேலையில் இருந்து விவசாயத்துக்குத் திரும்புவது இன்று ஒரு டிரெண்டாகவே இருக்கிறது. ஐந்திலக்க சம்பளத்தையும் ஆடம்பர வாழ்க்கையையும் `வேண்டாம்' என உதறிவிட்டு திடீரென ஒரு நல்ல நாளில் விவசாயி அவதாரம் எடுக்கும் இளம் தம்பதிகள் ஏராளம். சென்னையைச் சேர்ந்த கலைமகளும் அப்படித்தான். 9 வருட ஐ.டி வேலையை விட்டுவிட்டு இன்று இயற்கை விவசாயம் மற்றும் இயற்கை உணவுப்பொருள் தயாரிப்பு பக்கம் திரும்பியிருக்கிறார். தனது மனமாற்றத்துக்கான காரணம் வேறு என்கிற விளக்கத்துடன் பேச ஆரம்பிக்கிறார் கலைமகள்.

‘`படிப்பை முடிச்சிட்டு 9 வருடங்கள் ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்த்துக்கிட்டிருந்தேன். இயற்கை விவசாயத்துலயும் இயற்கை உணவுகள்லயும் எப்போதுமே எனக்கு ஈடுபாடு உண்டு. ஆனாலும், ஐ.டி வேலையும் வாழ்க்கை முறையும் அதுக்கெல்லாம் இடம் கொடுக்கலை. அந்த வேலையில இருந்தபோது எதிர்ப்பு சக்தி இல்லாதது, கழுத்து வலி, வைட்டமின் டி குறைபாடு, டஸ்ட் அலர்ஜினு ஏகப்பட்ட பிரச்னைகள். முதல் கட்டமா என்னோட உணவுமுறையை மாத்திக்க நினைச்சேன். செயற்கை உரங்களோ, பூச்சிக்கொல்லிகளோ இல்லாத இயற்கை உணவுகள் எடுத்துக்கத் தொடங்கினதும் கொஞ்ச நாட்களிலேயே மாற்றம் தெரிஞ்சது.

அன்று ஐ.டி வேலை... இன்று கருப்பட்டி பால்கோவா தயாரிப்பு!

கல்யாணமாகி குழந்தை பிறந்த தும், என் குழந்தைக்கு அடிக்கடி உடம்புக்கு முடியாமப் போனது.  கொடுக்காத மருந்துகளே இல்லை. அவனுக்கும் இயற்கை உணவுகளைப் பழக்கினதும் பிரச்னைகள் சரியானது. இப்படி நான் அனுபவ ரீதியா கண்ட பலனை மத்தவங் களுக்கும் சொல்ல நினைச் சேன். வெள்ளை சர்க்கரை, மைதா, பேக்கரி உணவுகள் ஆபத்தானவை என்ற விழிப்பு உணர்வு பிரசாரம் செய்ய ஆரம்பிச்சேன். அதை இன்னும் தீவிரமாக்க, நானே இயற்கையான முறையில ஆரோக்கிய உணவுத் தயாரிப்புல இறங்கினேன்’’ என்பவர், ஐ.டி டு விவசாயத்தாவல் பற்றிய தனது கருத்துகளையும் முன்வைக்கிறார்.

‘`ஆத்ம திருப்திக்காகவும் ஆரோக்கியத் தேடலுக்காகவும் மாறினா நல்லது. மத்தபடி உபரி வருமானத்துக்காக இயற்கை அங்காடி நடத்தறவங்களும் இருக்காங்க. அது ரொம்பவே தவறு. அங்காடி ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி இயற்கை விவசாயத்தைப் பத்தி முழுமையா தெரிஞ்சுக்கணும். இயற்கை விவசாயிகளோட சவால் களைப் புரிஞ்சுக்க ணும். லாபம் இல்லாம யாரும் எதையும் செய்யற தில்லை. அதையும் தாண்டி சின்னதா ஒரு சேவை நோக்கம் இருந்தா யார் வேணாலும் இயற்கை விவசாயத்துக்கு வரலாம்...’’ - அழைக்கிறவர், விவசாயக் குடும்பப் பின்னணி உள்ளவராம்.

‘`பால்கோவாங்கிறது குழந்தைகள் முதல் பெரியவங்க வரைக்கும் எல்லாருக்கும் பிடிக்கும். ஆனா,  அதுல சேர்க்கப்படற வெள்ளை சர்க்கரையோ, சோடியம் பென்சோயட் என்ற கெமிக்கலோ ஆரோக் கியத்துக்குக் கேடானவை. அதனால கருப்பட்டி வச்சு முயற்சி செய்து பார்த்தேன். எப்போதும் சாக்லேட் கேட்கற குழந்தைங்களுக்கு அதுக்கு மாற்றா, இந்த கருப்பட்டி பால்கோவாவை அறிமுகப்படுத்தினா, சின்ன வயசுலேருந்தே ஆரோக்கியத்துக்கான அஸ்திவாரத்தைப் பலப் படுத்தலாம்னு தோணினது. என் கணவரும் ஐ.டி வேலையிலதான் இருந்தார். ஒரு கட்டத்துல அவரும் அந்த வேலையை விட்டுட்டு, எனக்கு உதவியா முழுநேரமும் இந்த பிசினஸ்ல இறங்கிட்டார்.

காலையில அரக்கப்பரக்க எழுப்பி, குழந்தைகளை பள்ளிக்கூடத்துக்கு விரட்ட றோம். பல குழந்தைங்க காலை உணவே சாப்பிடறதில்லை. அப்படியே சாப்பிட்டாலும் ஒரு வாரத்துக்கு முன்னாடியே அரைச்சு ஃப்ரிட்ஜ்ல வெச்ச மாவுல செய்த அரை இட்லியோ, அரை தோசையோ சாப்பிட்டு ஓடுவாங்க. இந்த மாதிரியான உணவுப்பழக்கங்களை அறிமுகப்படுத்தி, அவங்களோட செரிமான இயக்கத்தையே கெடுத்துக்கிட்டிருக்காங்க பல பெற்றோர். நோய் எதிர்ப்பு சக்தியின்மைங்கிறது ரொம்ப சின்ன வயசுலயே அவங்களுக்கு வந்துடுது. அடிக்கடி உடம்புக்கு முடியாம போறதும், மருந்து, மாத்திரைகளை எடுத்துக்கிறதும் சாதாரணமாகிடுச்சு.

என் குழந்தைக்கும் இதே பிரச்னை இருந்ததால, அவனுக்குக் கொடுக்கிறதுக்காக சத்துமாவு தயாரிச்சேன். ஒரு டம்ளர் கஞ்சி, அந்த நாளைக்குத் தேவையான எனர்ஜியைக் கொடுத்ததையும் பார்த்தேன். வெளியிலயும் கொடுத்துப் பார்த்ததுல நல்ல வரவேற்பு இருந்தது.  அடுத்தகட்டமா குழந்தைகளுக்கான நொறுக்குத்தீனிகளுக்கு மாற்று என்ன செய்ய முடியும்னு யோசிச்சேன். 11 மணிக்கு பள்ளிக்கூட இடைவேளையில சிப்ஸையோ, பிஸ்கட்டையோ வெச்சுக் கொடுக்கறோம். அதையும் ஆரோக்கியமா மாத்த முடியுமான்னு யோசிச்சபோதுதான் கருப்பட்டி பால்கோவா ஐடியா வந்தது’’ - சுவைபடச் சொல்பவர், கருப்பட்டி பால்கோவாவை அழகான மண் குடுவைகளில் நிரப்பிக்கொடுத்து அதற்கு இன்னும் ஆரோக்கியம் சேர்த்திருக்கிறார்!

‘`இன்னிக்கு என்னோட கண்டுபிடிப்பான கருப்பட்டி பால்கோவாவுக்கு அத்தனை வரவேற்பு இருக்கு. ஆனா, அதை சரியான பக்குவத்துக்குக் கொண்டுவர நான் சந்திச்ச சவால்கள் கொஞ்சமில்லை. பாலையும் கருப்பட்டியையும் சேர்க்கிறதுங்கிறது வடக்கையும் தெற்கையும் இணைக்கிற மாதிரி! கள்ளுல சுண்ணாம்பு கலந்ததுதான் பதநீர். அந்தப் பதநீரைக் காய்ச்சினாதான் பனைவெல்லம் வரும். அதுல சுண்ணாம்பு இருக்கும்.  அதை சூடான பாலில் சேர்க்கும்போது திரிஞ்சு, தயிராயிடும். பலமுறை இப்படி திரிஞ்சு போயிருக்கு. ஒரு வருஷப் போராட்டத்துக்குப் பிறகு விறகடுப்புல இரும்புச்சட்டி வச்சு செய்து பார்த்தேன். ரொம்ப நல்லா வந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அன்று ஐ.டி வேலை... இன்று கருப்பட்டி பால்கோவா தயாரிப்பு!

வரவேற்பு எப்படி இருக்கும்னு தெரிஞ்சுக்க முதல்ல பள்ளிக்கூடங்களுக்குக் கொடுத்தோம். அதுக்கடுத்து பிறந்தநாள் பார்ட்டிகளுக்கு கேக், மத்த இனிப்புகளுக்குப் பதிலா கொடுத்தோம். இதுல எந்த ரசாயனங்களும் சேர்க்கிறதில்லை. இன்னிக்கு இயற்கை உணவுங்கிற பேர்ல விற்பனை செய்யப்படற பலதுலயும் அவை கெட்டுப் போகாம இருக்க ப்ரிசர்வேட்டிவ் சேர்த்துக் கொடுக்கறாங்க. உணவு இயற்கையானதுன்னாலும் ப்ரிசர்வேட்டிவ் சேரும்போது இயற்கை உணவோட பலனே காணாமப் போயிடுது. எந்த உணவையும் ஃப்ரெஷ்ஷா சாப்பிடறதுதானே ஆரோக்கியத்துக்கு அடிப்படை...’’ - நியாயமாகக் கேட்கிறார்.

கருப்பட்டி பால்கோவாவுக்குப் பொருத்த மாக, இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட உருளைக்கிழங்கு மற்றும் மிளகாய் கொண்டு செக்கு எண்ணெயில் பொரித்த சிப்ஸும் அவ்வப்போது தயாரிக்கிறார் கலைமகள். அடுத்து நாட்டுப் பசு மாடுகளிடம் இருந்து பெறப்படும் பாலில் கருப்பட்டி பால்கோவா வையும், ஹார்மோன் ஊசிகளோ, மருந்தோ செலுத்தப்படாத மாடுகளின் பாலில் இருந்து தயாரிக்கிற தயிர், மோரையும் அறிமுகப்படுத்தும் திட்டத்தில் இருக்கிறாராம்.

‘`கருப்பட்டி பால்கோவா தயாரிக்கும்போது எங்க ஏரியாவே மணக்கும். குழந்தைங்க தேடி வந்து கையை நீட்டி பால்கோவா கேட்பாங்க.  கருப்பட்டியோட மணத்தையும் பாலோட சுவையையும் ரசிச்சு, அவங்க சாப்பிடறதைப் பார்க்கிறபோது ஏற்படற மகிழ்ச்சி எனக்கு லட்சங்கள்ல சம்பளம் கொடுத்த ஐ.டி வேலை யில கிடைக்கலைங்கிறதுதான் உண்மை. ஆரோக்கியமா வாழறதுங்கிறது எல்லாருக் குமான உரிமையில்லையா? அதுக்கு ஏதோ என்னால முடிஞ்ச சின்ன பங்களிப்பு...’’  - கலப் படமில்லாத கருப்பட்டி போலவே இனிக்கிறது கலைமகளின் பேச்சு!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism