Published:Updated:

“எனக்கும் நிறைய ரோல்மாடல் இருக்காங்க!”

“எனக்கும் நிறைய ரோல்மாடல் இருக்காங்க!”
பிரீமியம் ஸ்டோரி
“எனக்கும் நிறைய ரோல்மாடல் இருக்காங்க!”

ஸ்டார்வே. கிருஷ்ணவேணி

“எனக்கும் நிறைய ரோல்மாடல் இருக்காங்க!”

ஸ்டார்வே. கிருஷ்ணவேணி

Published:Updated:
“எனக்கும் நிறைய ரோல்மாடல் இருக்காங்க!”
பிரீமியம் ஸ்டோரி
“எனக்கும் நிறைய ரோல்மாடல் இருக்காங்க!”

பாந்தமான அம்மாவாகவே ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் சரண்யா பொன் வண்ணன். இப்போது வெளியாகியிருக்கும் ‘அச்சமின்றி’ படத்திலோ நெகட்டிவ் ரோலில் அசத்தியிருக்கிறார்!

‘`எப்படி, இப்படி ஒரு கதாபாத்திரத்தை தயக்கம் இல்லாமல் ஏத்துக்கிட்டீங்க?’’

‘`தயக்கம் இல்லாமலா..? நீங்க வேற! ஷூட்டிங் தொடங்க இரண்டு நாள் இருக்கும் போதுகூட, டைரக்டருக்கு போன் பண்ணி, `என்னால இந்த ரோல்ல நடிக்க முடியும்னே தோணலை. நிச்சயமா ஃபெயிலியர் ஆகிடும். வேற யாரையாவது நடிக்க வச்சிடுங்க’ன்னு சொன்னேன். அவரோ, `உங்களுக்கான சரியான கேரக்டரைத்தான் தேர்வு செய்திருக் கேன். உங்களால நிச்சயமா முடியும். உங்களைத் தவிர வேற யாருக்கும் இந்த ரோல் சூட் ஆகாது’ன்னு சொல்லிச்சொல்லி, இந்தப் படத்தில் நடிக்க வெச்சார். ஒவ்வொரு நாளுமே பயத்துடன்தான் நடிச்சேன். பிரிவியூ பார்த்தப்போகூட, கவலையாத்தான் இருந்தது. என்னால இயக்குநரோ, தயாரிப்பாளரோ எந்த விதத்திலும் கஷ்டப்படக்கூடாது, இழப்பை சந்திக்கக்கூடாது. ஆனால், இந்தப் படம் வெளி யான பிறகு கிடைக்கிற எதிர்பாரா வரவேற்பு சந்தோஷமா இருக்கு!’’

“எனக்கும் நிறைய ரோல்மாடல் இருக்காங்க!”

‘`ஒட்டுமொத்தமா சரண்யா மாறின மாதிரி இருந்ததே?’’

‘` என் படங்களுக்கு எப்போதும் நான்தான் காஸ்டியூம் செலக்ட் பண்ணுவேன். தைப்பதற்கு மட்டும் கம்பெனி டைலர்கிட்ட கொடுத்துடு வேன். இதுவரை நம்ம வீட்டு அம்மாக்களைப் போல சாதாரணச் சேலையோடுதான் பல படங்களில் நடிச்சிருக்கேன். முதன்முறையா, இந்தப் படத்தில்தான் டிசைனர் காஸ்டியூம், வித்தியாசமான ஹேர் ஸ்டைல், மேக்கப்போடு நடைஉடை பாவனைகளை மாற்ற வேண்டியிருந் தது. முக்கியமா, 80-களில் பாப்புலராக இருந்த ரெட்ரோ ஃபேஷன் ஹேர்ஸ்டைலில் ஸ்டைலிஷா வர்றேன்!

80-களில் பார்த்தீங்கன்னா, பொதுவா சினிமாவுல அணிகிற பிளவுஸ் 2/2. இது ரொம்ப ஸ்டைலிஷ்ஷா இருக்கும். 'தவமாய் தவமிருந்து' படத்துக்குப் பிறகு வந்த படங்களில், சாதாரண காட்டன் பிளவுஸ் போட ஆரம்பிச்சேன். சொல்லப்போனால் தமிழ் சினிமாவுக்கு காட்டன் பிளவுஸ் கொண்டு வந்ததே நான்தான்னு சொல்லலாம்! `உங்களைப் பார்த்துதான் நிறைய பேருக்கு இது மாதிரி பிளவுஸ் தைத்துக் கொடுக்கிறோம்'னு நிறைய காஸ்டியூம் டிசைனர்ஸ் சொல்லியிருக்காங்க. அதுபோல, `அச்சமின்றி' படத்திலும் காஸ்டி யூமுக்காக மெனக்கெட்டேன். ஆனாலும், இத்தனை நாள் ஹோம்லியா நடிச்சிட்டு, திடீர்னு வேற மாதிரி பண்ணும்போது மக்கள் ஏத்துப்பாங்களா'ன்னு எவ்வளவு பயந்தேன் தெரியுமா? அப்ப்ப்ப்பா!''

‘`இந்த மாற்றத்துக்கு உங்க இரண்டு பொண்ணுங்களும் என்ன சொன்னாங்க?’’

‘`என்னுடைய கேரக்டர்கள்ல இத்தனை வருஷங்களில் பெருசா எந்த வித்தியாசமும் காட்டினது இல்லை. இது முழுக்க முழுக்க மாறுபட்டதால, ஷூட்டிங்  போட்டோக்களை என் பொண்ணுங்கக்கிட்ட காண்பிச்சேன். அவங்க சொன்ன சின்னச்சின்ன மாற்றங்களை யும் ஃபாலோ பண்ணேன். அவங்களுக்குத் தானே ட்ரெண்ட் தெரியும்!''

‘`நீங்க பயந்தாங்கொள்ளியாமே?!’’

‘`ஆமா... அப்படியாகுமா, இப்படி ஆகு மான்னு எதுக்கெடுத்தாலும் பயப்படுவேன்.  ஆனால், இதை எல்லாம் ஓரம்கட்டி எனக்கு பாசிட்டிவ் எனர்ஜியைத் தந்தவர் என் கணவர்தான். சினிமாவுக்காக என்னை இளைக்கச் சொல்லி யூனிஃபார்ம் போடச் சொன்னாக்கூட,  `பண்ணலாமே... உன்னால முடியும்'ன்னுதான் சொல்வார். புடவை எடுக்கப்போனாக்கூட, நாலு கலர்களை வச்சுக்கிட்டு எதை எடுக்கிறதுன்னு குழம்பிப் போய், அவருக்குப் போன் பண்ணி, `யெல்லோ, கிரீன், வொய்ட், ரெட் எதுங்க'ன்னு மொட்டையாக் கேட்பேன். அவர் என்ன எதுக்குன்னுக்கூட கேட்க மாட்டார். `கிரீன்'னு சொன்னா, அந்தச் சேலையை எடுத்துட்டு, கார்ல ஏறினதுக்குப் பிறகுதான் ‘சேலை எடுத்தேங்க’ன்னு சொல்லுவேன். அப்படி அவர்தான் எனக்கு எல்லாமே. நம்மை நேசிக்கிறவங்களை நாம காயப்படுத்தினா, நமக்கு வளர்ச்சியிருக்காது என்பதை ரெண்டு பேரும் புரிஞ்சு வெச்சிருக்கிறோம். என் அம்மாவுக்குப்பிறகு என் கணவர்தான் எனக்கு எல்லாமே.  அதேபோல  ஆணுக்கு மிகப்பெரிய ஆறுதலா இருக்கிறது அம்மா, அடுத்து மனைவி!''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“எனக்கும் நிறைய ரோல்மாடல் இருக்காங்க!”

‘`நீங்க எந்த பிரபலத்தையாவது காப்பி  அடிச்சிருக்கீங்களா?’’

‘`பெண்களை பெண்கள்தான் காப்பி பண்ணணும்கிறது இல்லே. நான் காப்பி பண்றவங்க எல்லோருமே ஆண்கள்தான். திலகன், மோகன்லால் இரண்டு பேருடைய ஸ்டைல், பாவனைகளைப் பெரும்பாலும் பிரதிபலிப்பேன். ‘தென்மேற்குப் பருவக்காற்று’ படத்தில் திலகன் சாரை அப்படியே காப்பி பண்ணியிருப்பேன். ரஜினி சார்... காமெடி, ஸ்டைல், ஆக்‌ஷன், வில்லன் என எவ்வளவோ பண்ணுவார். அதேநேரம் அவரைப்போல அழவைக்கிறவங்களும் யாருமே இருக்க முடியாது. என்னோட நகைச்சுவை உணர்வு அத்தனைக்கும் காரணம் வடிவேல் சார்தான். அவரைப் பார்த்துதான் நிறைய காமெடி ஆக்‌ஷன்களை கத்துக்கிட்டேன்!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism