Published:Updated:

பொங்கலோ பொங்கல்!

பொங்கலோ பொங்கல்!
பிரீமியம் ஸ்டோரி
பொங்கலோ பொங்கல்!

பொங்கலோ பொங்கல்!

பொங்கலோ பொங்கல்!

பொங்கலோ பொங்கல்!

Published:Updated:
பொங்கலோ பொங்கல்!
பிரீமியம் ஸ்டோரி
பொங்கலோ பொங்கல்!

பொங்கலோ பொங்கல்!

பொங்கலோ பொங்கல்!

“சின்ன வயசுல இருந்து பல பொங்கல் பண்டிகைகள் கொண்டாட்டமா இருந்திருக்கு. அந்த பசுமையான நினைவுகள் பொங்கலைப் போலவே இனிக்கும். அப்படி எவ்வளவோ பொங்கல்களைக் கடந்து வந்திருந்தாலும், போன வருஷ பொங்கல் என்னையே எனக்குப் புதுசா காட்டுச்சு. அப்போ, கோயம்புத்தூர் பக்கம் பொங்கல் கச்சேரிக்காக போயிருந்தேன். அங்கே வந்திருந்த ஒரு அம்மா என்கிட்ட வந்து, ‘உங்க பாட்டு போட்டாதான் என் குழந்தை அடம்பிடிக்காம சாப்பிடுது’ன்னு சொன்னாங்க. இன்னொரு பெரியவர் வந்து, ‘இந்த நிகழ்ச்சிக்காக ரொம்ப தொலைவில் இருந்து ஆட்டோலேயே வந்தேன்மா... அவ்வளவு மகிழ்ச்சி’ன்னு சொன்னார். இது ஞாபகம் வரும்போதெல்லாம்  இமான் சாருக்கு மனசுக்குள்ள ஒரு நன்றி சொல்லிக்குவேன்!''

- பாடகி மகிழினி மணிமாறன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பொங்கலோ பொங்கல்!

ந்தக் காலத்து சின்னப் பசங்கள்லாம்     டி.வி-க்கு முன்னாடி உட்கார்ந்து ஒவ்வொரு நடிகரும் கொண்டாடுகிற பொங்கலைப் பார்த்துக்கிட்டிருக்காங்க! எங்க சின்ன வயசுல இப்படியெல்லாம் இருக்காது. பொங்கல் படைச்சு, மாடுகளைச் சாமியா மதிச்சுக் கொண்டாடுவோம். வழிபாடு முடியறதுக்கே இரவு 7 மணி ஆகிடும். 6 மணியில இருந்தே ‘உங்க வீட்டுல படையல் முடிஞ்சுருச்சா’ன்னு அக்கம்பக்கம் கேட்க ஆரம்பிச்சுடுவோம்! சீக்கிரம் படையலை முடிச்சாத்தானே புதுத்துணி போட்டுகிட்டு என்ஜாய் பண்ண முடியும்! அதான் அத்தனை பரபரப்பு எங்களுக்கு! அவ்ளோ ஆர்வமா இருக்கும்போது தான், மாடுகளை குளிப்பாட்டுறது, அதுகளுடைய கொம்புகளையெல்லாம் அழகுபடுத்துறது, வடை செய்றது, கொழுக்கட்டை பிடிக்கிறதுன்னு எக்கச்சக்க வேலை செய்வாங்க ஆளாளுக்கு! அந்த புதுத்துணியை எப்பப்பா கண்ணில காட்டுவீங்கன்னு தவிச்சுப்போயிடுவோம் நாங்களெல்லாம்! அந்த புதுத்துணியை போட்டவுடனே நேரே தெருவிலே வந்து தோழிங்கக்கிட்ட காண்பிக்கிற அந்த கணங்கள் எம்மனசுல இன்னமும்கூட அவ்ளோ இனிமையா இருக்கு! அதோட, பக்கத்து வீடுகள்ல இருக்கிற பெரியவங்ககிட்ட ஆசீர்வாதம் வாங்க தோழிமார்கள் கூட போறது வழக்கம். பெரியவங்க ஆசீர்வாதத்தோட பணமும் தருவாங்க. ராத்திரியெல்லாம் தூங்காம விளையாடுவோம். அதனாலதானோ என்னவோ, பண்டிகைன்னு சொன்னாலே எனக்கு பொங்கல்தான் ஞாபகத்துக்கு வருது!

- கவிஞர் வெண்ணிலா

பொங்கலோ பொங்கல்!

ந்தவாசி பக்கத்துல அத்திவாக்கம்னு ஒரு கிராமம்தான் சொந்த ஊர். என்னோட 4, 5 வயசுல எல்லாம் சின்ன ஓலை வீட்லதான் இருந் தோம். எங்க ஊர்ப்பக்கம் மாடுகளை வழிபடுகிற மாட்டுப்பொங்கலைத்தான் பொங்கல் விழாவா கொண்டாடுவோம். எல்லோர் வீட்டு மாடுகளும் அழகுப்படுத்தப்பட்டு தெரு வழியே போகும். பொழுது சாயும் நேரத்துல சின்னப் பசங்களை சில மாட்டு வண்டிகளை ஏற்றி 3, 4 மைல் தூரம் ஊர் சுத்தி காண்பிப்பாங்க. புதுத்துணி போட்டுக்கிட்டு, மாட்டு வண்டியில இருந்தபடியே ஊரோட அழகை ரசிப்போம் நாங்க!

அப்போ வருஷத்துல ஒரு தடவைதான் புதுத்துணி கிடைக்கும், அதுவும் தமிழர் திரு நாளுக்குத்தான்! அந்தப் பாவாடை, சட்டை ஞாபகம் இன்னும் பசுமையா இருக்கு!

- கவிஞர் உமாதேவி

பொங்கலோ பொங்கல்!

ரு தடவை பொள்ளாச்சிக்கு மலையாளப் பட வேலையாப் போயிருந்தேன். அப்போதான் பாரம்பர்ய முறையில் அந்தக் கிராமமே பொங்கல் கொண்டாடி யதைப் பார்த்தேன். அவ்ளோ அழகு! அங்கே எல்லா வீட்டிலுமே சூரியனுக்கு முன்னாடி அடுப்பு வெச்சு பொங்கல் வெச்சாங்க! அப்போதான், முறைப்படி பொங்கல் வைக்கவே கத்துக்கிட்டேன். இப்போ, வீட்டு மொட்டை மாடியில் சூரியனுக்குக் கீழே அழகாப் படைச்சு பொங்கல் வைக்கிறோம்.

போகி வேலைகளை எல்லாம் என் கணவரே முன்னின்று செய்துடுவார். அன்னிக்கு இருந்தே எங்களுக்கு ஒரே கொண்டாட்டம்தான்!

- டான்ஸ் மாஸ்டர் கலா

பொங்கலோ பொங்கல்!

``பொங்கல் வந்துட்டா போதும்... முளைப்பாரி கட்டிக் கிட்டு பொம்பளைங்க போறதும், கோயிலுக்கு முன்ன மானாட்டம், ஒயிலாட்டம்னு தூள் கிளப்புறதும், வீட்டுக்கு வீடு விருந்தாளிங்க மசமசனு குவியறதும்னு ஊரே `ஜேஜே'னு இருக்கும். மாட்டுப் பொங்கல் அன்னிக்கு ஊருக்குள்ளாற இருக்குற அம்புட்டு மாடு, கன்னுகளையும் மந்தைக்கு கொண்டு போவாய்ங்க. காளைய அடக்க, வேடிக்கை பார்க்க, அத்தை, மாமா பொண்ணுங்கள சைட் அடிக்கன்னு மந்தையில எல்லாப் பயலுகளும் கூடுவாய்ங்க. நானும் வயசு வித்தியாசமில்லாம லுக்கு விட்டுப் பார்ப்பேன். எதுவும் கண்டுக்காது. 'இந்த மொகரக்கட்டைக்கு இது வேற யாக்கும்...’னு மேக்கொண்டு திட்டிட்டுப் போகுங்க.

மந்தையில மைக் அனவுன்ஸுமென்ட்டு பறக்கும். 'உசுருக்கு உத்திரவாதம் இல்லய்யா... அம்புட்டுப் பொடிப் பயலுகளும் ஓடி ஒளிஞ்சிக்கிருங்க...’னு காட்டுக் கத்து கத்துவாய்ங்க. இருக்குறதுலயே சின்ன காளையாகூட பார்த்து நான்... அடக்க மாட்டேன். மத்தவங்க அடக்கும்போது நானும் போயி சேர்ந்துருவேன். அப்புறம் அது கொம்புல கட்டியிருந்த ரெண்டு கிராம் மோதிரத்தை அதை அடக்குன (!) 15 பயலுகளும் பிரிச்சுக்கறதுக்கு மோதுவோம். அந்தக் கன்னுக்குட்டிய அடக்குனதுக்கே(!), 'ஏ ராசாவுக்கு கண்ணு பட்டுப்போச்சு’னு சொல்லி வாசல்லயே நிக்க வெச்சு ஆத்தா திருஷ்டி சுத்திப்போடும்... பாருங்க, அட அட!''

- நடிகர் சூரி

பொங்கலோ பொங்கல்!


“நான் குற்றாலம் பக்கத்துல இலஞ்சி கிராமத்தைச் சேர்ந்த பொண்ணு. 13-14 வயசுல ஊர்பக்கம் கொண்டாடின பொங்கல்தான் இன்னிக்கும் மனசுக்கு நெருக்கமா இருக்கு! அதிகாலை 3 மணிக்கே பரபரப்பு ஆரம்பிச்சுடும். தெரு சின்னதா இருந்தா, இரண்டு வீட்டுக்கும் சேர்த்து பெரிய கோலமா போடுவாங்க. அது அவ்வளவு தத்ரூபமா இருக்கும்.

அப்படி இப்படி ஒருவழியா பொங்கல் வழிபாடுகள் முடிஞ்சப் பிறகு, `யாரு டிரெஸ் அழகா இருக்கு’ன்னு சண்டை பிடிப்போம்!

அந்தச் சந்தோஷமான தருணங்களை எல்லாம் இப்போ நினைக்க மட்டும்தான் முடியுது. எப்படியாச்சும் பழைய மாதிரி ஒரு தடவை பொங்கல் கொண்டாடணும்ங்கறது என் ஆசை!”

- நடிகை ரம்யா பாண்டியன்

பொங்கலோ பொங்கல்!

னுப்பொங்கல் அன்னைக்கு, சர்க்கரைப் பொங்கல், வெண்பொங்கல், சாத வகைகளோடு மஞ்சள்கிழங்கையும் இலையில் வெச்சு காக்கை களுக்குப் படைப்போம். சகோதரர்களின் நன்மைக் காகப் பிரார்த்தனை செய்வதுதான் இந்தப் படையல். சின்ன வயசில என் கஸின் பிரதர்ஸுக்காக மொட்டை மாடில படையல் போட்ட உடனே, ‘உனக்காக வேண்டிக்கிட்டேன், காசு கொடு’ன்னு நச்சரிப்பேன்! இப்போவும் அண்ணனுக்கு போன் பண்ணி, `உனக்காக வேண்டிக்கிட்டேன்'னு சொல்லும்போது, `என்ன காசு வேணுமா?'ன்னு கேட்பான்!

ரொம்ப சின்ன வயசுல ஒரே ஒரு தடவை மாட்டுப் பொங்கல் பார்த்திருக்கேன். அப்போ பூம்பூம் மாட்டை பார்த்து அது பின்னாடியே போயிட்டேன்… ரொம்ப நேரமாகியும் வீட்டுக்கு திரும்பவேயில்லை. வீட்டில் எல்லாரும் என்னை காணாமல் கதறிட்டாங்க!''

- பேச்சாளர் பாரதி பாஸ்கர்

தொகுப்பு: ஜெ.நிவேதா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism