Published:Updated:

தன்னம்பிக்கையை அதிகரிக்கிற கலை இது!

தன்னம்பிக்கையை அதிகரிக்கிற கலை இது!
பிரீமியம் ஸ்டோரி
தன்னம்பிக்கையை அதிகரிக்கிற கலை இது!

மண்ணிலே கலைவண்ணம்சாஹா

தன்னம்பிக்கையை அதிகரிக்கிற கலை இது!

மண்ணிலே கலைவண்ணம்சாஹா

Published:Updated:
தன்னம்பிக்கையை அதிகரிக்கிற கலை இது!
பிரீமியம் ஸ்டோரி
தன்னம்பிக்கையை அதிகரிக்கிற கலை இது!

‘மண்ணாங்கட்டி’ என்கிற பெயருடன் வரவேற்கிறது சென்னை, சைதாப்பேட்டையில் உள்ள காவேரி பரத்தின் ஸ்டுடியோ. பெயருக்கேற்றபடி உள்ளேயும் வெளியிலும் மண் வாசனை! களிமண்ணை வைத்துக் கைவினைப் பொருட்களும் பானைகளும் பாண்டங்களும் செய்யக் கற்றுக்கொடுக்கும் காவேரியின் முயற்சிகள் வித்தியாசமாக இருக்கின்றன. குழந்தைகளுக்கு மட்டுமின்றி, பெரியவர்களுக்கும் இந்தக் கலையைக் கற்றுத்தருகிறார் காவேரி!

தன்னம்பிக்கையை அதிகரிக்கிற கலை இது!

‘`எங்க தாத்தா இன்ஜினீயரிங் பேராசிரியரா இருந்தவர். அவருக்குச் சிற்பங்கள் வடிக் கிறதுலயும் கைவினைக் கலைகள்லயும் விருப்பம் அதிகம். வீட்லயே களிமண் வச்சு சிற்பங்கள் செய்வார். தாத்தா செய்யறதைப் பார்த்துட்டு நானும் ஏதாவது முயற்சி செய்வேன். அதுல ஆர்வம் அதிகமாகி, அரசு கவின் கலைக்கல்லூரியில் சேர நினைச்சு அப்ளை பண்ணி னேன். இடம் கிடைக்கலை. அப்புறம் பரோடாவுல ஒரு காலேஜ்ல முயற்சி பண்ணி னேன். அங்கேயும் கிடைக்கலை. மூணாவதா சாந்திநிகேதன் (கொல்கத்தா) போனேன். ‘அந்த வருஷம் தமிழ்நாடு கோட்டா கிடையாது, அடுத்த வருஷம் பார்க்கலாம்’னு சொல்லிட்டாங்க. `ஒரு டிகிரிக்காகவும் சான்றிதழுக் காகவும் இவ்வளவு கஷ்டப் படணுமா’னு கவலையா இருந்தது.

ஒரு ஃப்ரெண்ட் மூலமா மைசூர்ல இருந்த களிமண் கலைஞர் பத்மா ராஜகோபால் அறிமுகமானாங்க. அவங்க நகரத்து வாழ்க்கை பிடிக்காம விவசாயம் பண்ணிக்கிட்டிருந்தாங்க. அவங்ககூட இருந்து விவசாயத்துல உதவிகள் செய்தா, அதுக்கான சம்பளத்துக்குப் பதிலா களிமண் கைவினைக் கலை சொல்லித் தரேன்னாங்க. சம்மதிச்சேன். அப்புறம் பாண்டிச்சேரியில ஒரு இடத்துலயும் கத்துக்கிட்டேன். இப்படிப் பல கலைஞர்கள்கிட்டயும் கத்துக்கிட்டு, கடந்த 16 வருஷங்களா சென்னையிலே நான் பயிற்சிகள் கொடுக்கறேன். என் ஸ்டுடியோலயும், செம்மஞ்சேரியில நண்பர்கள் நடத்தற இயற்கையான ரெஸ்டாரண்ட்டுலயும் வகுப்பு எடுக்கறேன்.

செங்கல்சூளை எல்லாம் வச்சு, பாரம்பர்ய முறைப்படி களிமண் வேலைகளைச் செய்யறதுக்கான அமைப்புக்கு லட்சக்கணக்குல செலவாகும். எனக்கு அந்த அளவுக்கு வசதி இல்லைங்கிறதால, ஆன்லைன்ல கிரவுட் ஃபண்டிங் மூலமா நிதி திரட்டினேன். தெரிஞ்சவங்க, தெரியாதவங்கன்னு யாரெல்லாமோ என் கனவு பிடிச்சுப்போய், உதவி செய்தாங்க. அப்படி 110 பேர் கொடுத்த நிதி உதவியில அந்த அமைப்பை உருவாக்கினேன்...’’ என்கிற காவேரி, களிமண் கலையை அதன் பாரம்பர்யம் கெடாமல், நவீன முலாம் பூசாமல் அதே ரசனையுடன் கற்றுத் தருகிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தன்னம்பிக்கையை அதிகரிக்கிற கலை இது!

‘`கத்துக்கிறதுல இருந்தது போலவே கத்துக்கொடுக்கிறதுலயும் எனக்கு ஆர்வம் அதிகம். சில பள்ளிக்கூடங்கள்லேயும் இந்தக் கலையைக் கத்துத்தரேன். பள்ளிக் கூடங்கள்ல ஒரே ஒரு சக்கரம்தான் இருக்கும். அத்தனை குழந்தைங்களுக்கும் சொல்லிக் கொடுக்கிறது சிரமம். அதனால சக்கரம் இல்லாம கைகளால பண்ற மாதிரியான வேலைகளைச் சொல்லித் தரேன். அங்கேயே சின்னதா ஒரு செங்கல் சூளை கட்டி, பிள்ளைங்க செய்த களிமண் பொருட்களைச் சுட்டெடுத்து வீட்டுக்கும் கொண்டு போவாங்க...’’ என்பவர், மொபைல் உலகில் மூழ்கிக்கிடக்கிற பிள்ளை களை மீட்டெடுக்க மண்பாண்டக் கலையானது பெரிய அளவில் உதவுவதாகச் சொல்கிறார்.

‘`தன்னம்பிக்கையை அதிகரிக்கிற கலை இது. படிப்புல சுமாரா உள்ள குழந்தைங்களுக்கு களிமண் கைவேலையைக் கத்துக்கொடுக்கிறது மூலமா அவங்க தன்னம்பிக்கை அதிகரிக் கிறதைப் பார்க்கறேன். தன் கையால ஏதோ ஒரு பொருளைப் பண்ண முடியற அந்த சந்தோஷமும், அதை அடுத்தவங்கக்கிட்ட காட்டும்போது ஏற்படுற மனநிறைவும் அவங் களுக்குப் பெரிய ஊக்கத்தைக் கொடுக்கும்.

பணத்தைத் தாண்டி, தான் செய்யற வேலையில ஓர் ஆத்ம திருப்தி கிடைக்கணும்னு எதிர்பார்க்கிறவங்களுக்கும் கற்பனைவளம் நிறைஞ்சவங்களுக்கும், மண்வாசனை பிடிச்சவங்களுக்கும் இந்தக் கலை நிச்சயம் பொருத்தமா இருக்கும்’’ என்கிற காவேரி, ‘மண்ணாங்கட்டி’ என்கிற தன் ஸ்டுடியோவின் பெயரின் பின்னணியில்கூட ஒரு சுவாரஸ்ய கதை வைத்திருக்கிறார்!

தன்னம்பிக்கையை அதிகரிக்கிற கலை இது!

‘`தேவையில்லாத பொருட்களை `மண்ணாங்கட்டி'னு சொல்லித் திட்டுவோம். தேவையில்லைன்னு நாம நினைக்கிற மண், ராக்கெட் கட்டமைப்புக்குக்கூட பயன்படுது. எலும்பு மருத்துவத்துல மெட்டல் வச்சு பண்ற ஆபரேஷன் அலர்ஜியை ஏற்படுத்தும்னு  ஒருவித மண்ணை எலும்பு மாற்று அறுவைசிகிச்சையில பயன்படுத்தறாங்க. உபயோகமே இல்லைன்னு சொல்ற ஒரு பொருளை உபயோகமா மாத்தற நோக்கத்துல ஆரம்பிக்கப்பட்டதுதான் மண்ணாங்கட்டி...’’ - காவேரி சொல்லும் தகவல்கள் பலருக்கும் புதிது!

‘`மனநலம் பாதிக்கப்பட்டவங்களுக்கான பள்ளிகள்லயும் களிமண் கலை வகுப்புகள் எடுக்கறேன். பொதுவா மனநலப் பாதிப்புள்ள குழந்தைங்கக்கிட்ட வன்முறை உணர்வு அதிகமிருக்கும். அதைக் கட்டுப்படுத்த அவங்க கைகள்ல கொஞ்சம் களிமண்ணைக் கொடுத்துப் பிசையச் செய்தா, உடனடியா அமைதியாகிடுவாங்க. மண்ணைப் பிசையறது, உருட்டறது, கையாள்றதுன்னு எல்லா வேலைகளும் இதுல அடக்கம். நாம என்ன அழுத்தம் கொடுத்தாலும் களிமண் ஏத்துக்கும்.  இருபது வருஷங்களா இந்த வேலைகளைச் செய்துட்டிருக்கேன். ஒருவேளை எனக்கு இது அறிமுகமாகாம இருந்திருந்தா நானே கூட ரொம்ப வன்முறை நிறைஞ்சவளா இருந்திருப்பேனோ என்னவோ...’’ - பெரிதாகச் சிரிக்கிறார் காவேரி. வன்முறையில்லா வசீகரச் சிரிப்பு அது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism