Published:Updated:

வீடு Vs வேலை - இரட்டைக் குதிரை சவாரியும் எளிதே!

வீடு Vs வேலை - இரட்டைக் குதிரை சவாரியும் எளிதே!
பிரீமியம் ஸ்டோரி
வீடு Vs வேலை - இரட்டைக் குதிரை சவாரியும் எளிதே!

புதிய பகுதியாழ் ஸ்ரீதேவி

வீடு Vs வேலை - இரட்டைக் குதிரை சவாரியும் எளிதே!

புதிய பகுதியாழ் ஸ்ரீதேவி

Published:Updated:
வீடு Vs வேலை - இரட்டைக் குதிரை சவாரியும் எளிதே!
பிரீமியம் ஸ்டோரி
வீடு Vs வேலை - இரட்டைக் குதிரை சவாரியும் எளிதே!

கரமயமாதலில் கூட்டுக்குடும்பங்கள் குறைந்து, அதன் சகல பலன்களையும் இழந்து, `நீ, நான், நம் குழந்தை’ என்கிற அளவுக்கு சுருங்கிய நிலையே இன்று. இருப்பினும், ஒரே நேரத்தில் பல காரியங்களைச் சிறப்பாகச் செயல்படுத்திக்காட்டி `கெட்டிக்காரி' என்று பெயர் வாங்குகிற மல்ட்டி டாஸ்க்கிங் திறமையில் பெண்கள் சற்றும் குறைந்துவிடவில்லை. அப்படி வேலைக்குச் செல்வதோடு, வீட்டையும் திறமையாக நிர்வகிக்கும் பெண்களின் அனுபவ டிப்ஸ் பகுதி இது. இந்த இதழில் பல நிறுவனங்களுக்கு மனிதவள ஆலோசனைகள் வழங்கிவரும் சுஜாதா, வீடு மற்றும் வேலைகளைச் சிறப்பாகச் சமாளிக்க டிப்ஸ் தருகிறார்.

வீடு Vs வேலை - இரட்டைக் குதிரை சவாரியும் எளிதே!

•  நாம் இரட்டைக் குதிரையில் சவாரி செய்யப் போகிறோம், அதற்கான சாதகபாதகங்களை மனதளவில் ஏற்றுக்கொள்வது மன அழுத்தத்தைக் குறைக்கும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

• உடனடியாக முடிக்க வேண்டியது, கூடிய விரைவில் முடிக்க வேண்டியது, தாமதமாக செய்தாலும் பரவாயில்லை என வீட்டு, அலுவலக வேலைகளைப் பிரித்து அதற்கேற்ப நேரம் ஒதுக்கலாம்.

• நான் முந்தைய நாள் இரவே மறுநாளுக்கான சமையலுக்குத் தேவையானதை வாங்கி வைத்துவிடுவேன்.

• என் குழந்தைகளுக்கும் கணவருக்கும் எடுத்த பொருளை எடுத்த இடத்தில் வைக்கப் பழக்கியிருக்கிறேன். இதிலேயே பாதி டென்ஷன் குறைந்துவிடும். என்னை வெகுவாக சார்ந்திராமல் இருக்க, அவர்களுடைய வேலைகளை அவர்களே பார்க்கவும் பழக்கப்படுத்தியிருக்கிறேன்.

• மாதாந்திரக் கட்டணங்களுக்கான கடைசி தேதிகளை ஒரு சார்ட் ஆக ரெடி செய்துவிட்டு, ஆன்லைன் அல்லது ஆப் மூலமாகவே அவற்றைச் செலுத்தி விடுகிறேன். அதற்கான தேதிகள் மொபைல்போன் ரீமைண்டரில் உள்ளன.

வீடு Vs வேலை - இரட்டைக் குதிரை சவாரியும் எளிதே!

• உடைகளை அவ்வப்போது துவைத்து விடுவதும், வார இறுதியில் அயர்ன் செய்து வாங்குவதும் என் பழக்கம். இதனால் திங்கள் அன்று காலையில் பரபரப்பாக உடை தேடி அயர்ன் செய்யும் டென்ஷன் இல்லை.

• மளிகை மற்றும் அத்தியாவசியத் தேவைகளை மாதம் ஒருமுறை பட்டியலிட்டு, மொத்தமாக வாங்கி வைத்துக்கொள்வேன்.

• ரெடிமிக்ஸ் பொடிகளை வீட்டிலேயே தயாரித்து வைத்திருப்பேன். `மின்சாரம் இல்லை’, `வீட்டுக்கு வர லேட் ஆகிவிட்டது’ போன்ற அவசர தருணங்களில் இந்தப் பொடிகள் கைகொடுக்கும்.

• அலுவலகத்துக்குக் கிளம்பும் வழியில் டூவீலர் அல்லது காரில் பெட்ரோல்/டீசல் போடுவது டென்ஷனைக் கூட்டும். அதனால், முதல் நாள் மாலையே செக் செய்துவிடுவேன்.

• முடிந்தவரை குழந்தைகளின் பள்ளி நிகழ்ச்சிகள், உறவினர் நிகழ்ச்சிகளுக்கு தலைகாட்டிவிட்டு வருவேன். அல்லது கண வரையும் குழந்தைகளையும் அனுப்பிவிடுவேன். இதனால் தேவையில்லாத குற்ற உணர்ச்சி, அவப்பெயர் ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

• மனதை எப்போதும் புத்துணர்வுடன் வைத்திருக்கும் பெண்களால் இரட்டைக் குதிரைச்சவாரியை எளிதாக செய்ய முடியும். ஹேப்பி ஹோம்... ஹேப்பி ஆபீஸ்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism