Published:Updated:

ஆர்வமும் முயற்சியும் இருந்தால் தடையொன்றுமில்லை!

ஆர்வமும் முயற்சியும் இருந்தால் தடையொன்றுமில்லை!
பிரீமியம் ஸ்டோரி
ஆர்வமும் முயற்சியும் இருந்தால் தடையொன்றுமில்லை!

முதல் பெண்கள், ஆர்.வைதேகி

ஆர்வமும் முயற்சியும் இருந்தால் தடையொன்றுமில்லை!

முதல் பெண்கள், ஆர்.வைதேகி

Published:Updated:
ஆர்வமும் முயற்சியும் இருந்தால் தடையொன்றுமில்லை!
பிரீமியம் ஸ்டோரி
ஆர்வமும் முயற்சியும் இருந்தால் தடையொன்றுமில்லை!

ற்றைச் சக்கரத்தில் செங்குத் தாகச் சீறுகிறது. செம ஸ்பீடாகப் போய்க் கொண்டிருக்கிற பைக்கில், திடீரென இரண்டு ஹேண்டில்பார்களுக்கு இடையிலும் கால்களை நுழைத்து பெட்ரோல் டேங்க்கின் மீது அமர்ந்தபடி ஓட்டுகிறார் ஓட்டுநர். அதே வேகத்தில் தாவிக்குதித்து பில்லியனில் குத்திட்டு உட்கார்ந்து வண்டியை இயக்குகிறார். நொடிப்பொழுது இடைவெளிகளில் காட்சிகள் மாறிக்கொண்டே இருக்கின்றன. இப்படியாக அந்த டூ-வீலர் ஸ்டன்ட் காட்சிகளைப் பார்க்கும்போது பி.பி எகிறுகிறது. அடிவயிற்றில் பயம் பரவுகிறது. இதயம் அதிக வேகமாகத் துடிக்கிறது. வியர்க்கவைக்கிற அந்த வீடியோ காட்சியின் முடிவில், ஹெல்மெட்டைக் கழற்றிவிட்டு ‘ஹலோ’ சொல்லி இறங்குபவர் வியக்கவும் வைக்கிறார். காரணம், அத்தனை நேரம் அட்டகாச சாகசங்கள் செய்தவர் ஒரு பெண்!

ஆர்வமும் முயற்சியும் இருந்தால் தடையொன்றுமில்லை!

இந்தியாவின் முதல் பெண் ஸ்டன்ட் ரைடர். ஜம்மு முதல் ‘Khardung La’ வரை தனது டூ-வீலரிலேயே வலம்வந்து `இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்’ஸில் இடம்பெற்ற சாதனையாளர் என்கிற பெருமைகளுக்குரிய அனம் ஹஷீமிடம் பேசினோம்.

நடைபழகும் வயதிலேயே அப்பாவுடன் டூ-வீலர் பயணத்துக்குப் பழகியதுதான் எல்லாவற்றுக்குமான ஆரம்பம் என்கிறார் அனம்.
 
‘`லக்னோவுல பிறந்து வளர்ந்தேன். நான் 5 வயசுக் குழந்தையா இருந்தபோதே ஹேண்டில்பார் பிடிக்கிறதுலேருந்து, பிரேக் வரை எல்லாம் சொல்லித் தந்தார் அப்பா. பைக் ஓட்டறதுல என்னோட ஆர்வமும் நாளுக்கு நாள் அதிகமானது. நேபாளத் துல எங்கச் சொந்தக்காரங்க இருக்காங்க. ஹாலிடேஸ்ல பைக்லயே அப்பா அங்கே கூட்டிட்டுப் போவார். பசங்க மட்டுமே ஓட்டற மெகா பைக்கூட ஓட்டப் பழகினேன். பைக் ஓட்டறதுங்கிறது ஒரு கட்டத்துல எனக்குச் சாதாரண விஷய மாயிடுச்சு. அதுல வேற என்ன வித்தியாசமா செய்யலாம் என்ற தேடல் வந்தது.

ஒருநாள் யதேச்சையா பைக் ஸ்டன்ட் பண்ணின பசங்க சிலரைச் சந்திச்சேன். அப்பதான் பைக் ஓட்டறதைத் தவிர இப்படியொரு விஷயம் இருக்கிறதும் எனக்குத் தெரியவந்தது. அதைப் பார்த்ததும் செம த்ரில்... அந்தப் பசங்ககிட்டயே என் விருப்பத்தைச் சொன்னேன். கத்துக்கொடுத்தாங்க. தவிர, பைக் ஸ்டன்ட் பத்தி தெரிஞ்சவங்கக்கிட்ட எல்லாம் கேட்டும், இன்டர்நெட்ல தேடியும் நிறைய கத்துக்கிட்டேன். அப்போ என்கிட்ட ‘ஹோண்டா ஆக்டிவா’தான் இருந்தது. முதன்முதல்ல நான் ஸ்டன்ட் பண்ணிப்பார்த்த பசங்ககிட்டயே பைக் வாங்கிப் பழகினேன்.

ஆர்வமும் முயற்சியும் இருந்தால் தடையொன்றுமில்லை!

அப்பாதான் எனக்கு பைக்கையே அறிமுகப்படுத்தினார். ஆனாலும், `நான் ஸ்டன்ட் ரைடிங் பண்ணப் போறேன்’னு சொன்னதும், அவராலயே அதை ஏத்துக்க முடியலை.  இஸ்லாமியக் குடும்பத்தைச் சேர்ந்த எனக்கு நிறையக் கட்டுப்பாடு இருந்தது. என் தீவிர ஆர்வத்தைப் பார்த்துட்டு அப்பா ஓரளவு சமாதானமானார். ஆனா, அம்மா ரொம்பப் பயந்தாங்க. இப்பவும் அவங்க ரெண்டு பேரும் முழு மனசோட இதை அனுமதிக்கலை...’’ - சாகசக்காரியின் குரலில் சின்ன வருத்தம்.

இந்தியாவிலேயே பைக் ஸ்டன்ட் செய்கிற ஒரே பெண் அனம்!

‘`இது உடலளவுல மட்டுமில்லாம, மனசளவுலயும் சிரமமான ஒரு ஸ்போர்ட். பொழுதுபோக்கா பண்றது வேற. நானோ இதை முழுநேர வேலையா எடுத்துப்பண்ண விரும்பினேன். பொண்ணுங்கதான் தங்களைச் சுத்தி போடப்பட்டிருக்கிற தடை வேலிகளை உடைச்சுக்கிட்டு வெளியில வரணும்தானே?  முடியாதுங்கிறது என் அகராதியிலயே கிடையாது. ஆரம்பிச்ச புதுசுல அடிக்கடி கீழே விழுந்து அடிபடும். விழுந்த பைக்கை என்னால மறுபடி தூக்கி நிறுத்தக்கூட முடியாது. அப்பதான் ஸ்டன்ட் பண்றவங்களுக்கு உடல்பலம் முக்கியம்னே உணர்ந்தேன். ஜிம்முல சேர்ந்தேன். எடை அதிகரிக்கிற மாதிரியான சாப்பாடு எடுத்துக்கிட்டேன். என்னோட பலம் அதிகமானது. இப்ப எத்தனை முறை விழுந்தாலும் என்னால எழுந்து உடனே பைக் ஓட்ட முடியும். எவ்வளவு வெயிட்டான பைக்கையும் தூக்கி நிறுத்த முடியும். திறமையும் ஆர்வமும் முயற்சியும் இருக்கிறவங்களுக்கு எந்த விஷயமும் தடையாகிறதில்லை...’’ என்கிறவருக்கு ‘பொல்லாதவன்’ தனுஷ் மாதிரி டூ-வீலர் சென்ட்டிமென்ட் உண்டாம்!

ஆர்வமும் முயற்சியும் இருந்தால் தடையொன்றுமில்லை!

“ ‘டி.வி.எஸ் அப்பாச்சி 180’ வெச்சிருக்கேன். அது வெறும் பைக் இல்லை. என்னோட அடையாளம். எப்பல்லாம் கொஞ்சம் அப்செட்டா ஃபீல் பண்றேனோ அப்பல்லாம் என் பைக்தான் எனக்கான ஆறுதல். அதுல ஒரு ரைடு போயிட்டு வந்தாலே மனசு உற்சாகமாயிடும். என் மனசை மாத்தற மேஜிஷியன் என் வண்டி...’’ - அசத்தலான பதில்சொல்லும் அனம், பைக் சாசகங்களில் சாதனைகளைக் குவித்துக்கொண்டிருக்கிறார்.

``2015-ல 110 சிசி பைக்ல தனியா ‘Khardung La’ போயிட்டு வந்து உலகச் சாதனை செய்தேன். 2106-ல மறுபடி பத்து பெண்கள் கொண்ட குழுவோட அதே இடத்துக்கு  டூ-வீலர் ரைடு போனோம். ‘ட்ரீம் மோட்டார் ஸ்போர்ட்ஸ்’ என்ற பெயர்ல கம்பெனி ஆரம்பிச்சிருக்கேன். மத்தவங்களோட கனவுகளையும் என் கனவையும் நிறைவேத்தற இடமா இருக்கணும்னுதான் இப்படியொரு பெயர்.  நிறையப் பெண்களுக்குப் பயிற்சி கொடுத்து ஸ்டன்ட் ரைடிங் பண்ண வைக்கணும். என் லட்சியங்களோட லெவலே வேற... ஃபிரான்ஸை சேர்ந்த சாரா லெஸிட்டோதான் பைக் ஸ்டன்ட்டுல என்னோட ரோல் மாடல்.  இன்டர்நேஷனல் பைக் ஸ்டன்ட் போட்டியில பசங்களோட மோதி ஜெயிச்சவங்க. அவங்களைச் சந்திக்கணும். உலகம் முழுக்க சுத்தணும். நிறைய சம்பாதிக்கணும். சர்வதேச ஸ்டன்ட் போட்டியில கலந்துக்கணும். 600 சிசி பைக் ஓட்டணும்...’’ - அனம் மனதில் ஆயிரம் கனவுகள்!