Published:Updated:

மனுஷி - 9 - கோலங்கள்

மனுஷி - 9 - கோலங்கள்
பிரீமியம் ஸ்டோரி
மனுஷி - 9 - கோலங்கள்

சுபா கண்ணன் - ஓவியம்: ஸ்யாம்

மனுஷி - 9 - கோலங்கள்

சுபா கண்ணன் - ஓவியம்: ஸ்யாம்

Published:Updated:
மனுஷி - 9 - கோலங்கள்
பிரீமியம் ஸ்டோரி
மனுஷி - 9 - கோலங்கள்

The best thermometer to the progress of a nation is its treatment of its women.

- Swamy Vivekananda

முன்னிரவு
நேரத்தில் ஹாலில் அமர்ந்து சுமித்ராவும் மாமியாரும் பேசிக்கொண்டு இருந்தனர். சுமித்ராவின் கணவரும், இளைய மகள் ப்ரியாவும் இன்னும் வரவில்லை. சுமித்ரா மாமி யாருடன் பேசிக்கொண்டே இருந் தாலும், அவளுடைய கவனம் முழுவதும் டீபாய் மேல் இருந்த ஐ-போனில்தான் இருந்தது. காரணம், லண்டனுக்குப் படிக்கச் சென்றிருக் கும் மூத்த மகள் சுபாஷிணி ஆன் லைன் சாட்டில் கூப்பிடுவாள் என்ற எதிர்பார்ப்புதான். எதிர் பார்த்ததுபோலவே சாட்டில் வந்தாள் சுபாஷிணி. அவள் பேசு வதையே உற்றுப் பார்த்துக்கொண்டு இருந்தாள் பாட்டி. பத்து நிமிடம் சுபாஷிணியிடம் பேசிய சுமித்ரா, “இங்க நாமல்லாம் சொன்னா எடுபடுதா? அவங்கவங்களுக்குச் சொல்றவங்கச் சொன்னாதான் எடுபடுது’’ என்று அலுத்துக் கொண்டாள்.

மனுஷி - 9 - கோலங்கள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மாமியார் அவளையே உற்றுப் பார்த்தார். சுமித்ரா மாமியாரிடம், “இங்க நாம சொன்னப்பல்லாம் கேட்கலை. லண்டன்ல உங்க பேத்தி சேக்ரட் ஜியோமெட்ரி (Sacred Geometry) வகுப்புக்குப் போறாளாம்’’ என்று சொல்ல, மாமியாரும் அதைக் கேட்டுக்கொண்டே வந்த ப்ரியாவும் ஒன்றும் புரியாமல் ஒருவரையொருவர் குழப்பத்துடன் பார்த்துக்கொண்டனர்.

“நாம பாரம்பர்யமா போடும் படிக்கோலங்கள்தான் சேக்ரட் ஜியோமெட்ரி. இங்க கோலம்போட வளையாத உம்ம பெரிய பேத்திக்கு இந்த நெளிவுசுளிவுகளை அங்க கத்துக்கொடுக்கறாங்களாம். அதப்பத்தித்தான் இவ்ளோ நேரம் சொன்னா... நாம பாரம்பர்யமாக போடும் கோலங்களில் வளைவுகள், விட்டங்கள், ஆரங்கள் எல்லாமே டிகிரி சுத்தமாகவும் இயல்பாகவும் இருக்கிறதாம். அதுமட்டுமல்ல, ஹ்ருதயகமலம், ஐஸ்வர்ய லக்ஷ்மி கோலம், நவக்கிரகக் கோலம்னு நாம் போடற கோலங்கள்ல  ஜியோமெட்ரி சரியா தெரியாத பாமரப் பெண்கள்கூட அநாயாசமா கோலங்கள்ல இருக்கற வளைவுகளைக் கச்சிதமா வரையறாங்களாம். இப்பத்தான் உம்ம பேத்திக்கு நம்மோட கோலங்களோட மகத்துவம் புரிஞ்சிருக்கு’’ என்று சுமித்ரா கூறிவிட்டு, காய்ந்த துணிகளை மடிக்க ஆரம்பித்தாள்.

ப்ரியாவுக்குக் கோலங்களைப் பற்றி தெரிந்து கொள்வதில் ஆர்வம் ஏற்பட்டதால், “பாட்டி, அப்படி என்னதான் இருக்கு கோலங்கள்ல? விசேஷ நாள்ல கோலங்கள் போடறாங்களே, எதுக்கு பாட்டி?’’ என்று கேட்டாள்.

“நாம மட்டுமல்ல... கேரளாவுல பூவிடல், ஆந்திராவில் முக்குலு, வடக்கே ரங்கோலின்னு கோலம் போடறது வழக்கம்.

கோலம் போடறதுனால லக்ஷ்மி கடாக்ஷம் கிடைக்கும். வீட்டையோ, வாசலையோ சுத்தப் படுத்தியபின் கோலம் போடறது வழக்கம். கோலத்தை சுத்தத்தின் - அழகின் குறியீடுன்னு சொல்லுவாங்க. பாண்டிச்சேரி அன்னை, தன் தள்ளாத வயதிலும் எங்கேயேனும் குப்பையிருந்தால் ஓடிப்போய் எடுத்து தானே குப்பைத்தொட்டியில் போடுவாராம். பக்தர்களோ, அலுவலர்களோ, `நாங்கள் செய்யமாட்டோமா' என்றால், `அது என்னை வா, வா, வந்து எடுத்துத் தொட்டியில் போடு என்று சொல்கிறதே' என்று சிரிப்பாராம் அன்னை.

நம் மக்களின் மனங்களில் நன்கு கலந்த விஷயம் சுத்தம். அதற்கு அடுத்த நிலையின் கலைவடிவமே கோலம். 64 கலைகள்ல கோலமும் ஒண்ணு. விடியற்காலையில் கோலம் போடறதால, ஓசோன் கிடைக்கும், உடற்பயிற்சின்னு சொல்றதையெல்லாம் தாண்டி, கோலம் போட்டவுடன் கிடைக்கிற மனநிறைவைப் பத்தி சொல்ல வார்த்தைகளே இல்லை’’ என்றாள் பாட்டி.

“ப்ரியா, வாசலில் தண்ணீர் தெளித்துக் கோலம் போட்டால், அங்கே கடவுள் வந்துடறதா ஐதீகம். காலைலயும் சாயந்திரத்துலயும் வாசலில் தண்ணீர் தெளித்துக் கோலம் போடறது கடவுளை நம்ம வீட்டுக்கு அழைப்பதாகும். அவ்வளவு ஏன், உன் சித்தி உஷா பிளாட்டில் இருக்கறதால, மனைப் பலகையிலாவது கோலம் போட்டு வாசலில் வைத்துவிடுவாள்’’ என்றாள், அப்போது குறுக்கிட்ட சுமித்ரா.

பாட்டி தொடர்ந்தாள்... “ஆரம்பத்துல நம்மோட கோலங்கள் கோடுகளாத்தான் இருந்தது. பிறகு கை பழகப்பழக வளைவுகளோடு கூடி அழகழகாகக் கோலமிடறது வசமாகிடுத்து... இரட்டை இழைகளில் கோலமிடல் நல்ல காரியத்துக்கும், ஒற்றை இழைக் கோலங்கள் அசுபகாரியத்துக்கும் பயன்படுத்துவார்கள்.  அதே போல பச்சரிசி மாவுல கோலம் போட்டு, சுத்தி காவி பார்டர்  போடறதால... அந்த வீட்டுல சண்டை சச்சரவுகள் இல்லாம இருக்கறதுடன், தம்பதி இடையில் அந்நியோன்யம் அதிகமாகும்கறது நம்பிக்கை மட்டுமல்ல... அனுபவத்துல நடக்கற உண்மையும்கூட’’ என்று பாட்டி முடிக்க,

தொடர்ந்த சுமித்ரா, “ஹ்ருதய கமலம், நவக்கிரகக் கோலங்கள், ஐஸ்வர்ய லக்ஷ்மி கோலம், ஸ்ரீசக்கரக் கோலம் போன்றவற்றை மஞ்சள் பொடியினாலும், அரிசி மாவினாலும் மட்டுமே போடுவது குடும்பத்துக்கு நற்பலனைத் தரும்’’ என்றாள்.

“ஓ, கோலத்துல இவ்வளவு விஷயம் இருக்கா!’’ என்று ஆச்சர்யப்பட்ட ப்ரியா, “அம்மா, நாளையில இருந்து எனக்கும் கோலம் போட கத்துக்கணும்போல இருக்கு’’ என்று கொஞ்சலாகக் கேட்டாள். கல்லூரி பெண்ணாக இருந்தும் ஒரு குழந்தையைப்போல் அவள் கொஞ்சியதை அம்மாவும் பாட்டியும் ரொம்பவே ரசித்தனர்.

சேக்ரட் ஜியோமெட்ரி

கச்சிதமான அளவுகளில் இணையும் இருகோடு களுக்குப் புனிதத்தன்மை வந்துவிடுகிறது. அதேபோல சில வடிவங்கள்... உதாரணமாக முக்கோணம், சதுரம், செவ்வகம், (நான்கு கோணங்கள்), ஐங்கோணம், அறுகோணம் முதலியவை சிறப்பு வாய்ந்தவை. சிருஷ்டியின் ரகசியம் இதில் அடங்கியுள்ளது. சொல்லப்போனால் இறைவனின் பிரபஞ்சப் படைப்புக்கே இந்த குறிப்பிட்ட கோணங்கள்தான் அடிப்படையானவை. உதாரணமாக, தேனீக்களின் கூடு அறுகோணத்தில் அமைந்தவை. தேன் கீழே சிந்தாமல் இருக்கும்வண்ணம் அமையப்பெற்ற வடிவம் அது. இதன் அடிப்படையில்தான் வாஸ்து முதலியவை தோன்றின. சிலைகளுக்குக்கூட நீள, அகலங்களைக்கொண்டே அதன் சக்தி வெளிப்படும்.

தமிழ் இலக்கியங்களில் கோலங்கள்

கோலங்கள் பற்றிய குறிப்புகள் காணப்படும் இலக்கி யங்கள் நான்கு: நாச்சியார் திருமொழி, கம்பராமாயணம், மீனாட்சியம்மை குறம் மற்றும் குற்றாலக்குறவஞ்சி. சான்றுக்கு சில வரிகள்...

“வெள்ளை நுண்மணல் கொண்டு
சிற்றில் விசித்திரப்பட வீதிவாய்த்
தெள்ளி நாங்கள் இழைத்த கோலம்
அழித்தியாகிலும் உன்றன் மேல்''

- நாச்சியார் திருமொழி

“தலைமெழுகு கோலமிடு முறை பெறவே
கணபதிவை அம்மே''

- திருக்குற்றாலக்குறவஞ்சி