Published:Updated:

பயப்படவே கூடாது! - தன்யா மேனன்

பயப்படவே கூடாது! - தன்யா மேனன்
பிரீமியம் ஸ்டோரி
பயப்படவே கூடாது! - தன்யா மேனன்

முதல் பெண்கள்சாஹா - படங்கள்: பா.காளிமுத்து

பயப்படவே கூடாது! - தன்யா மேனன்

முதல் பெண்கள்சாஹா - படங்கள்: பா.காளிமுத்து

Published:Updated:
பயப்படவே கூடாது! - தன்யா மேனன்
பிரீமியம் ஸ்டோரி
பயப்படவே கூடாது! - தன்யா மேனன்

“குழந்தைக்குக் காய்ச்சல் அடிக்கிறபோது ஐஸ்க்ரீம் கேட்டு அடம்பிடிச்சா வாங்கிக் கொடுத்துடுவோமா? எப்படி அழுதாலும் நமக்குக் குழந்தையோட ஆரோக்கியம்தானே அப்போது முக்கியமானதாக இருக்கும்? அதே மாதிரிதான் செல்போன், இன்டர்நெட் உள்ளிட்ட டெக்னாலஜியும்! அதெல்லாம் ஆபத்தானவைன்னு தெரிஞ்சும் குழந்தைங்களுக்கு அறிமுகப்படுத்திட்டு, அப்புறம் பிள்ளைங்கப் பொறுப்போட இருக்கணும்னு எதிர்பார்க்கிறது எந்த வகையில நியாயம்? தவறுகளையெல்லாம் பெற்றோர் பழக்கப்படுத்திட்டு, விளைவுகளுக்கு மட்டும் பிள்ளைகளைக் குறை சொல்லலாமா?’’

பயப்படவே கூடாது! - தன்யா மேனன்

கடும்கோபத்துடன் கேட்கிறார் தன்யா மேனன். இந்தியாவின் முதல் பெண் சைபர் க்ரைம் இன்வெஸ்ட்டிகேட்டர். ஆண்களின் ஆதிக்கம் நிறைந்த துறையில் அரிதாகக் கவனம் ஈர்க்கும் பெண்!

நாட்டில் நடக்கும் பெரும்பாலான குற்றங்கள் சைபர் க்ரைம் வகையறாவைச் சேர்ந்தவையே... மொபைல்போனில் நடக்கிற அத்துமீறல்கள் தொடங்கி, போலி முகமூடியுடன் முகநூலில் விரட்டுகிற வக்கிரங்கள் வரை இணையம் மூலம் அரங்கேறும் வன்முறைகள் அனைத்தும் இதில் அடக்கம். இந்தக் குற்றங்களை ஆராய்வது முதல் தொடராமல் தடுக்கும் விழிப்பு உணர்வு பிரசாரங்களையும் செய்கிறார் கேரளாவைச் சேர்ந்த தன்யா.

‘`நான் படிச்சது கம்ப்யூட்டர் இன்ஜினீய ரிங். என்னோட தாத்தா பி.பி.மேனன் சுப்ரீம் கோர்ட்டுல வழக்கறிஞரா இருந்தவர். அவருக்கு என்னைப்பத்தி நிறைய கனவுகள் இருந்தன. ஒருநாள் சைபர் க்ரைம் பத்தின ஒரு ஒர்க் ஷாப்புக்கு என்னைக் கட்டாயப்படுத்தி அனுப்பி வெச்சார். விருப்பமே இல்லாமல்தான் கலந்துக் கிட்டேன்.  அந்த  ஒர்க் ஷாப் எனக்கு ஏதோ ஜேம்ஸ்பாண்ட் படம் பார்க்கிற மாதிரி இருந்தது. அந்த அனுபவத்துக்குப் பிறகு சைபர் லா அண்ட் இன்டலெக்சுவல் பிராபர்ட்டி ரைட்ஸ் பத்தி பிஜி டிப்ளமோ படிப்பை முடிச்சேன். பூனாவுல உள்ள ஏஷியன் ஸ்கூல் ஆஃப் சைபர் லாவுல ஃபேகல்ட்டியா இருந்தேன். 2005-ல் கார்ப்பரேட் ஊழியர் களுக்கும், போலீஸ்காரங் களுக்கும், அரசுத் துறையைச் சேர்ந்த வங்களுக்கும் சைபர் க்ரைம் பயிற்சிகளைக் கொடுத்துட்டு இருந்தேன். அப்பதான் மக்கள் தங்களோட தனிப்பட்ட பிரச்னைகளுக்காகவும் என்னை அணுக ஆரம்பிச்சாங்க. மற்ற குற்றங்கள்னா எங்கே, எப்படி புகார் பண்ணணும்னு தெரிஞ்ச மக்களுக்கு, சைபர் குற்றங்களை எப்படிக் கையாளணும்... யார் கிட்ட புகார் செய்யணும்னு தெரியறதில்லை. நாம எல்லாரும் இன்னிக்கு சைபர் உலகத்துலதான் வாழ்ந்துகிட்டிருக்கோம். மொபைல்போன், கம்ப்யூட்டர், இன்டர்நெட், சோஷியல் நெட்வொர்க்... இப்படி எது தொடர்பான குற்றங்களும் சைபர் க்ரைமுக்கு கீழேதான் வரும்...’’ - விளக்கம் சொல்கிற தன்யாவின் முதல் வழக்கு அனுபவம் பயங்கரமானதாக இருக்கிறது.

‘`போலீஸ் மூலமா என்கிட்ட வந்த அந்த வழக்கு, ஒரு குழந்தை சம்பந்தப்பட்டது. இப்ப இருக்கிற அளவுக்கு சோஷியல் நெட்வொர்க் பயன்பாடு அதிக மில்லாத காலம் அது.

ரெண்டு சின்னப் பசங்களுக்குள்ள சண்டை... அது பெரிசாகி ரெண்டு குடும்பங்களுக்கு இடையிலயும் சண்டையைக் கிளப்பிடுச்சு. தப்பு செய்த பையனோட அம்மா அவனை எல்லார் முன்னிலையிலயும் கடுமையா திட்டியிருக்காங்க. அந்த அவமானத்துல அந்த சின்னப் பையன் தன் சொந்த அம்மாவைப் பத்தியே அவங்க போட்டோவோட அவங்க ‘அவைலபிள்’னு சோஷியல் நெட்வொர்க்ல போட்டுட்டான். இது எதுவும் அவங்கம்மாவுக்குத் தெரியலை. வரிசையா அவங்களுக்குப் போன் வருது... அத்துமீறி பேசறவங்களை அவங்கப் பதிலுக்குத் திட்டறாங்க.  அப்போ ஒருத்தர், ‘நீங்கதானே அவைலபிள்னு போட்டிருக்கீங்க... அப்புறம் சத்தம் போட்டா எப்படி?’ன்னு கேட்ட பிறகுதான் அவங்களுக்கு விஷயமே தெரிய வந்திருக்கு. அப்பவும் அவங்களுக்கு தன் மகன் மேல சந்தேகம் வரலை. அப்புறம் அந்த வழக்கு என்கிட்ட வந்தது. விசாரிச்சதுல அவங்க வீட்டு இன்டர்நெட் கனெக்ஷன்லேருந்துதான் எல்லாம் நடந்திருக்குன்னு தெரிஞ்சது. கடைசியில அந்தப் பையன் தன் தவறை ஏத்துக்கிட்டான். ஒரு சைபர் க்ரைம் இன்வெஸ்ட்டிகேட்டரா என்னோட முதல் வழக்கை வெற்றிகரமா கண்டுபிடிச்சு, முடிச்சதுக்காக என்னால  சந்தோஷப்பட முடியலை. காரணம், நானும் ஒரு அம்மா. எனக்கும் ஒரு
மகன் இருக்கான்.  ஒரு அம்மாவா அவனைச் சரியான முறையிலதான் வளர்த்துக் கிட்டிருக்கேனா என்ற கவலைதான் பெரிசா இருந்தது...

பயப்படவே கூடாது! - தன்யா மேனன்

இன்னொரு சம்பவம்...

2006-ல் கேரளாவுல ஒரு பள்ளிக்கூடத்துல மூன்று மாணவிகள் தற்கொலை பண்ணிக் கிட்டாங்க. இன்னொரு பள்ளிக்கூடத்தைச் சேர்ந்த மாணவர்கள், இந்தப் பெண்களை மொபைல்ல போட்டோ எடுத்து வச்சுக்கிட்டு மிரட்டினதுதான் காரணம்.
 
சின்னத்திருட்டு, கொலை, கொள்ளை, பாலியல் வன்முறை, போலியான ஐடியை உருவாக்கி, அதன் மூலமா பெண்களை அநாகரி கமா சித்தரிச்சு மிரட்டற வக்கிரம்னு பெரும்பாலான குற்றங்களுக்குத் தகவல் தொழில்நுட்பங்கள் முக்கியக் காரணமா இருக்கு... 5 வயசுலேருந்து 72 வயசு வரைக்குமான மக்கள் இதுல ஈடுபடறாங்க. பாதிக்கப்படறாங்க. ஆண்களும் பெண்களும் சம எண்ணிக்கையில இருக்கிறதையும் பார்க்கறேன். அதே மாதிரி பொருளாதார ரீதியில பின்தங்கின மக்களும் சரி, வசதியா வாழறவங்களும் சரி... சம அளவுல இந்தக் குற்றங்கள்ல ஈடுபடறாங்க...’’ - தன்யாவின் குரலில் வருடங்கள் தாண்டியும் வருத்தம்.

சவால்களும் சங்கடங்களும் நிறைந்த வேலை யில் இருக்கும் தன்யாவுக்கு மிரட்டல்களுக்கும் குறைவில்லை.

‘`அதுக்கெல்லாம் பயந்தா வேலையே பார்க்க முடியாது. நாலஞ்சு கம்ப்யூட்டர்களையும் லேப்டாப், மொபைல்களையும் வச்சுக்கிட்டு நான் பார்க்கிற வேலை என்னன்னே ஆரம்பத்துல எங்க வீட்ல யாருக்கும் புரியாது. அப்புறம் தெரிஞ்சதும்  புரிஞ்சுக்கிட்டாங்க. ஒரு குற்றம் நடந்ததுன்னா... அது எங்கே, எப்படி, ஏன் நடந்ததுங்கிற காரணத்தைக் கண்டுபிடிக்கணும். அந்த சைபர் குற்றவாளியிடமிருந்து பாதிக்கப் பட்டவங்களைப் பாதுகாக்கணும். ஆதாரங்களைப் பத்திரமா வெச்சுக்கச் சொல்லி அவங்களை வழிநடத்தணும். அந்தக் குற்ற வாளியைச் சட்டத்தின் கீழ் ஒப்படைக்கணும்... இதுதான் என் வேலை. ஆனா, ஒவ்வொரு வழக்கும் ஒவ்வொரு ரகம்...’’ என்கிற தன்யா, குச்சுப்புடியும் மோகினியாட்டமும் கற்ற பிரபலமான நடனக்கலைஞரும்கூட.

‘அவன்ஸோ சைபர் செக்யூரிட்டி சொல்யூஷன்ஸ்’ என்கிற தன்னுடைய நிறுவனத் தின் மூலம் சைபர் க்ரைம் பற்றிய விழிப்பு உணர்வு பிரசாரம் மேற்கொள்கிறார் தன்யா. ‘‘இந்தியாவின் பல மூலைகள்லேருந்தும் தினமும் குறைஞ்சது 200 புகார்களாவது வருது. அத்தனையும் சைபர் குற்றங்கள்...  இப்போ 400 பள்ளிகள்ல ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் விழிப்பு உணர்வு பிரசாரம்  பண்ணிட்டி ருக்கேன்...’’ என்பவர், ‘`டெக்னா லஜிங்கிற  விஷயம் குழந்தைகளுக் கானதா இருக்கலாம். குழந்தைகளைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு பெற்றோருக்கு இருக்கிறதால அந்தத் தொழில் நுட்பங்களைப் பெற்றோரும் தெரிஞ்சுக்க வேண்டியது அவசி யம். விலகி ஓடக்கூடாது’’ என பெற்றோருக்கு அவசிய அறிவுரை சொல்கிறார்.