Published:Updated:

யூடியூபில் கலக்கும் நம்மூர் கணக்கு டீச்சர்!

யூடியூபில் கலக்கும் நம்மூர் கணக்கு டீச்சர்!
பிரீமியம் ஸ்டோரி
யூடியூபில் கலக்கும் நம்மூர் கணக்கு டீச்சர்!

கற்பது கற்கண்டே!ஞா.சக்திவேல் முருகன் - படம்: க.தனசேகரன்

யூடியூபில் கலக்கும் நம்மூர் கணக்கு டீச்சர்!

கற்பது கற்கண்டே!ஞா.சக்திவேல் முருகன் - படம்: க.தனசேகரன்

Published:Updated:
யூடியூபில் கலக்கும் நம்மூர் கணக்கு டீச்சர்!
பிரீமியம் ஸ்டோரி
யூடியூபில் கலக்கும் நம்மூர் கணக்கு டீச்சர்!

அரசுப்பள்ளி என்றாலே வித்தியாச மாகப் பார்க்கும் காலத்தில், கணிதத்தை வெகு எளிமையாகக் கற்றுக்கொடுப்பதோடு, அதை தன் செல்போனில் பதிவுசெய்து ஃபேஸ்புக், வாட்ஸ்அப், யூடியூபில் பதிவேற்றமும் செய்து அசத்தி வருகிறார் திருச்செங்கோடு அரசினர் மகளிர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி  ஆசிரியை ரூபி கேத்தரின் தெரசா. இவர் பதிவேற்றம் செய் யும் வீடியோக்களை (Rubi Theresa - YouTube) ஒன்றரை கோடி பேர் பார்க்கிறார்கள் என்பது ‘வாவ்’ தகவல்!

யூடியூபில் கலக்கும் நம்மூர் கணக்கு டீச்சர்!
யூடியூபில் கலக்கும் நம்மூர் கணக்கு டீச்சர்!
யூடியூபில் கலக்கும் நம்மூர் கணக்கு டீச்சர்!

“1986-லிருந்து 20 ஆண்டுகள் தனியார்பள்ளி ஆசிரியையாகப் பணிபுரிந்தேன். அதன்பிறகு  2007-ம் ஆண்டில் சேலம் அருகிலுள்ள சின்னச்சீரகங்கப்பாடி அரசுப்பள்ளியில் சேர்ந்தேன். அங்குள்ள குழந்தைகள் படிக்க சிரமப்படுவது தெரிந்தது. பிள்ளைகளுக்கு வித்தியாசமாகச் சொல்லிக்கொடுப்பது எப்படி என்று இணையத்தில் தேடினேன். அதோடு,  எனக்கிருந்த அனுபவத்தையும் சேர்த்து எளிமையாகச் சொல்லிக்கொடுக்க ஆரம்பித் தேன். பிள்ளைகள் 98, 99 மதிப்பெண் வாங்க ஆரம்பித்தார்கள். இப்படி ஆரம்பித்ததுதான் என் கற்பித்தலின் உற்சாகப் பயணம்” என்ற வரின் வார்த்தைகளில் அத்தனை வாஞ்சை, அவரது வீடியோவைப் போலவே!

‘‘பொதுவாக நான் வகுப்புக்குள் நுழைந்த வுடன் பிள்ளைகளிடம், `என்னை ஆசிரியரா நினைக்காதேம்மா... உனக்கு யாரைப் பிடிக்குமோ அவங்களா நினைச்சுக்கோடா கண்ணு. அப்பதான் நீ நல்லா படிப்பே' என்பேன். பொதுவாக அரசுப்பள்ளிகளில் பெற்றோர் இல்லாமலோ, பெற்றோரில் ஒருவர் இல்லாமலோ படிக்க வருகிற குழந்தைகள் ஏராளம். அவர்கள் ஒவ்வொருவரின் கதையும் கண்ணீரில் கரையவைக்கும். அதனாலேயே `பாப்பு, செல்லம்' என்பது போன்ற வார்த்தை களை உபயோகித்துப் பாடங்கள் சொல்லிக் கொடுப்பேன். கண்டிக்கும்போதுகூட ‘பாப்பு’ என்கிற சொல்லைத் தவறவிடமாட்டேன்” என்கிறவர், தான் வாட்ஸ்அப்பில் வந்த கதையைச் சொன்னார்.

‘‘ஆரம்பத்தில் இணையதளத்தில் வீடியோ போடுவதற்குத் தயக்கமாகத்தான் இருந்தது. பிறகு, எளிய வகையில் வாய்பாடு கற்றுக் கொள்வதற்கு உதவியாகவும், காதுகேட்காத குழந்தைகளும் புரிவதுபோலவும் அனிமேஷன் செய்திருந்த அந்த வீடியோ அதிக வரவேற்பைப் பெற்றது” என்கிற ரூபி, இதுவரை 200 வீடியோக்களுக்கு மேல் அப்லோட் செய்திருக் கிறார். 

‘‘என்னோட வீடியோவைப் பார்த்துட்டு, `டீச்சர் இதைப்பத்தி போடுங்க, அந்தக் கணக்கு கஷ்டமா இருக்கு, சொல்லிக்கொடுங்க’ன்னு பசங்களும் அம்மாக்களும் ஆர்வமாக கேட்க ஆரம்பிச்சாங்க’’ என்கிறவர், பத்தாம் வகுப்பு குழந்தைகளுக்காக வலைதளம் (rubitheresa.blogspot.in) ஒன்றும் நடத்தி வருகிறார். குரூப்-4 தேர்வு எழுதுபவர்களுக்குக்கூட இவருடைய வீடியோக்கள் உதவியாக இருக்கின்றனவாம்!

“நான் வீடியோவில் பாடம் நடத்தும் போதுகூட, `சொல்லுடா கண்ணு, பாருடா கண்ணு’ என்று குழந்தையை அழைக்கும் விதத்தை நிறையபேர் வித்தியாசமாகப் பார்க்கிறார்கள். படிப்பு என்பது பண்பையும் வளர்க்க வேண்டும். எந்த வசதியும் இல்லாமல், அதேநேரம் படிக்கவும் சிரமப்படுகிற குழந்தைங்களுக்குத்தான் நான் தேவை’’ என்கிற  டீச்சரிடம் குடும்பம் பற்றியும் கேட்டோம்.

“என் அப்பாதான் எங்களுக்கு எல்லாமுமாக இருந்தார். அம்மாவின் மனநிலை பாதிக்கப்பட, மிகுந்த சிரமத்துக்கு இடையில் அப்பாவின் உதவியோடு படித்து முன்னேறினேன். எனக்கு ஏற்பட்ட சிரமம், மற்றவர்களுக்கு ஏற்படக் கூடாது என்பதை உணர்ந்திருக்கிறேன். மாரடைப்பு ஏற்பட்டு என் கணவரும் பிரிந்து விட, என் மகன், மகள் துணையால் நான் இன்று நடமாடிக்கொண்டிருக்கிறேன்.

மகன் பொறியியல் படித்துவிட்டுத் தனியார் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்திருக்கிறான். என் மகளுக்குச் சென்னையில் படிக்க வாய்ப்பு கிடைத்தது. இருந்தாலும், எனக்காக இங்கேயே கல்லூரியில் படிக்கிறாள். இப்படிப்பட்ட தங்கமான பிள்ளைகள் இருப்பதாலேயே என் பள்ளி வாழ்க்கை நிறைவாகச் சென்று கொண்டிருக்கிறது” என்றபடி வகுப்பறைக்குச் செல்கிறார் ரூபி டீச்சர்.

இந்த டீச்சர் பணிபுரியும் அரசுப்பள்ளியில் கற்றுக்கொள்ளும் வாய்ப்பைப் பெற்றவர்கள் கொடுத்துவைத்தவர்கள்தான்!