‘`இன்று நடுத்தரக் குடும்பங்களிலும் பிரபலமாக இருக்கிறது மாடுலர் கிச்சன். அந்த வீச்சுக்கான பயணத்தில் நான் ஒரு முன்னோடியாக இருப்பதன் பெருமையும் மகிழ்வும் எப்போதும் எனக்குண்டு!”

- கம்பீரமான குரலில் சொல்கிறார், 42 வயதாகும் நீதி மக்கர். மாடுலர் கிச்சன் கான்செப்ட்டை இந்தியாவில் அறிமுகப்படுத்தியவர். 18 ஆண்டுகளுக்கு முன் இந்தத் துறையில் கால்பதித்து, இன்று பல கோடி ரூபாய் வணிகம்செய்யும் முன்னணி நிறுவனத்தை நிர்வகித்து வருபவரை, டெல்லியில் சந்தித்தோம்.

‘`என் அப்பா டெல்லியில் புகழ்பெற்ற கல்லூரியில் முதல்வராகப் பணிபுரிந்தார். அம்மா வங்கி ஊழியர். என் சகோதரர்கள் பிரபல கார்ப்பரேட் நிறுவனங்களில் பணிபுரி கின்றனர். நான் பிசினஸ் மேனேஜ்மென்ட்டில் முதுகலைப்பட்டம் பெற்ற பின், சிறிதுகாலம் ஒரு பிசினஸ் ஸ்கூலில் விரிவுரையாளராகப் பணிபுரிந்தேன்.

தொழிலதிபரான என் கணவரும் நானும் திருமணத்துக்கு முன்பிருந்தே நல்ல நண்பர்கள். பெற்றோர் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்துகொண்டோம். கட்டுமானம் தொடர்பான என் கணவரின் தொழிலில், அவரது வாடிக்கையாளர்கள், தங்கள் வீட்டுச் சமையலறைக்குத் தேவையான ஷெல்ஃப்களை வடிவமைத்துத் தருமாறு கேட்டனர். அவர்களின் தேவையை நிறைவேற்றவேண்டி ஆசிய, ஐரோப்பிய நாடுகளில் நான் சுற்றுப்பயணம் மேற்கொண்டேன். அப்போதுதான், ஐரோப்பிய நாடுகளில் பிரபலமடைந்திருந்த மாடுலர் கிச்சன் கான்செப்ட் பற்றி ஆராய்ந்தேன். அதில் நம்நாட்டுப் பயன்பாட்டுக்கு ஏற்ப மாற்றங்களைச் செய்து, கிச்சனைச் சுவாரஸ்யமான இடமாக்கும் முயற்சியில் ஈடுபட்டேன்’’ என்று சொல்லும் நீதி மக்கர், புதுமையான அந்தத் துறையில் காலூன்ற பல சவால்களைச் சந்தித்திருக்கிறார்.

‘`நம் இந்தியப் பெண்கள் தங்கள் வாழ்நாளில் பெரும்பகுதியைச் சமையலறையில் செலவிடுபவர்களாகவே இருக்கிறார்கள். பல தலைமுறைகளாக அவர்கள் புகையில் கண்கள் கசக்கி, சமைத்துப் பழகிய வழக்கத்தை மாற்றி, புதுமையைப் புகுத்தி, சுகாதாரமான முறையில் கிச்சனை வடிவமைக்க உத்தேசித்துக் களம் இறங்கினேன். கணவரின் உதவியுடன் ‘The Home Makers’ நிறுவனத்தை 1998-ல் தொடங்கினேன்.

மாடுலர் கிச்சனை மல்டி பர்ப்பஸ் வகையில் பயன்படுத்த முடியும் என்பதையும், சாதாரண போர்டு முதல் பிளைவுட் வரை எந்த மூலப்பொருளையும் பயன்படுத்தி ஒவ்வொரு குடும்பத்தின் பட்ஜெட்டுக்கு ஏற்ப நாகரிக முறையில் கிச்சனை வடிவமைக்க முடியும் என்பதையும் மக்கள் மனதில் பதியவைக்க ஆரம்பத்தில் மிகவும் சிரமப்பட்டோம். சமையல் அறைக்குள் கதவுகளுடன்கூடிய சிறு அறைகளை ஏற்படுத்தி நீண்டநாள் உழைக்கும்வகையில் வடிவமைப்பது நடைமுறைச் சாத்தியம் எனப் புரியவைப்பதற்காக, வணிகப் பொருட் காட்சிகளை நடத்தினோம். டிசைனர் களையும் ஆர்க்கிடெக்ட்களையும் எங்கள் தொழிற்சாலைக்கு அழைத்துவந்து செயல்முறை விளக்கப் பயிற்சி அளித்தோம்.

பிரபல ஐரோப்பிய நிறுவனங்களில் பயிற்சி பெற்ற எங்கள் பணியாளர்களை, வாடிக்கையாளர் வீடுகளுக்கு அனுப்பி மாடுலர் கிச்சன்களை வடிவமைத்துப் பொருத்தினோம். வீடு மாறும்போது மாடுலர் கிச்சனை எளிதாக இடம்மாற்றிக்கொள்ளவும், பராமரிக்கவும், சுத்தம் செய்யவும் வாடிக்கையாளர்களுக்குப் பயிற்சி அளிக்கவும் ஏற்பாடுகள் செய்தோம்.

மூலப்பொருட்களை ஐரோப்பிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து, கரப்பான்பூச்சி மற்றும் வண்டுகள் புகமுடியாத கேபினட் மற்றும் ஷட்டர்களைப் புழக்கத்துக்குக் கொண்டுவந்தோம். விற்பனைக்குப் பிறகான சேவையை அறிமுகப்படுத்தினோம். தொழில் நுட்ப உதவி உடனடியாகக் கிடைக்கச் செய் தோம்’’ என்கிற இந்த பிசினஸ் பெண்மணி இரண்டு ஆண் குழந்தைகளின் தாய்.

புதுமையான துறைகளில் கால்பதிக்கத் தயங்காமல், பலவிதமான போராட்டங்கள், அனுபவங்களோடு 18 வருடங்கள் கடந்த நிலை யில், இப்போது சமையலறையை வடிவமைக்கத் தேவையான எல்லா பொருட்களையும் ரெடிமேடாகவே கிடைக்கச் செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளார் நீதி மக்கர்!