Published:Updated:

கேபிள் கலாட்டா - ``சமைக்கத் தெரியுமானு என்னைப் பார்த்து கேட்டுட்டீங்களே?!”

கேபிள் கலாட்டா - ``சமைக்கத் தெரியுமானு என்னைப் பார்த்து கேட்டுட்டீங்களே?!”
பிரீமியம் ஸ்டோரி
கேபிள் கலாட்டா - ``சமைக்கத் தெரியுமானு என்னைப் பார்த்து கேட்டுட்டீங்களே?!”

ரிமோட் ரீட்டா, படங்கள்: பா.கார்த்திக்

கேபிள் கலாட்டா - ``சமைக்கத் தெரியுமானு என்னைப் பார்த்து கேட்டுட்டீங்களே?!”

ரிமோட் ரீட்டா, படங்கள்: பா.கார்த்திக்

Published:Updated:
கேபிள் கலாட்டா - ``சமைக்கத் தெரியுமானு என்னைப் பார்த்து கேட்டுட்டீங்களே?!”
பிரீமியம் ஸ்டோரி
கேபிள் கலாட்டா - ``சமைக்கத் தெரியுமானு என்னைப் பார்த்து கேட்டுட்டீங்களே?!”

சன் டி.வி ‘கிச்சன் கலாட்டா’ ஷோவில் கலக்கும் ஃபரீனாவை, அவர் வீட்டில் தன் அம்மா சமையலைச் சுவைத்துச் சாப்பிடும் ஒரு மதியநேரத்தில் சந்தித்தோம். `பேரு ஃபரீனா ஆசாத்... பக்கா லோக்கல் சென்னைப் பொண்ணு... இப்டியே எழுதிக்கோங்க’ - இன்ட்ரோவே மாஸாக வருகிறது இந்தப் பெண்ணிடம்!

கேபிள் கலாட்டா - ``சமைக்கத் தெரியுமானு என்னைப் பார்த்து கேட்டுட்டீங்களே?!”

``உங்க மீடியா என்ட்ரி எப்படி?’’

``சின்ன வயசில் இருந்து எனக்கு டி.வி ஆசை அதிகம். என்னோட ரோல்மாடல் பெப்சி உமாதான். அவங்களை மாதிரியே நடிச்சுப் பார்க்கறதைப் பார்த்துட்டு, அப்பா அடிக்கடி ‘நீ பெரிய ஸ்டார் ஆவ பாரு’ன்னு சொல்லியிருக்கார். படிச்சு முடிச்சதும் ஒரு லோக்கல் டி.வி சேனலில் புரோகிராம் பண்ற வாய்ப்பு கிடைச்சது. தொடர்ந்து ‘ராஜ்’, ‘ஜீ தமிழ்’, ‘புதிய தலைமுறை’ன்னு நீண்ட மீடியா கரியர்ல இப்போ கிச்சன் கலாட்டா!”

``முதன்முதலில் யார்கூட கிச்சன் கலாட்டா ஷூட்? ஃபர்ஸ்ட் சுவைச்ச டிஷ் என்ன?’’

``கிச்சன் கலாட்டா ஆரம்பிச்சு 2 வருஷம் ஓடிடுச்சு. ஆனாலும், இன்னும் என்னோட ஃபர்ஸ்ட் செலிப்ரிட்டி எபிசோட் ஞாபகம் இருக்கு. நான் முதன்முதலில் சேர்ந்து சமைச்ச பிரபலம், `சப்போஸ் என்னைக் காதலிச்சு’ பாடல் புகழ் சிங்கர் வினயா. அவங்க செஞ்சு கொடுத்த பீட்ரூட் அல்வா இருக்கே... சான்ஸே இல்லை! சப்புக்கொட்டி நானே நாலு கரண்டி எக்ஸ்ட்ரா சாப்பிட்டேன்!”

``செட்ல நடந்த சுவாரஸ்யமான விஷயம் ஏதாவது சொல்லுங்களேன்...’’

``கிச்சன் கலாட்டா செட்லயே சுவாரஸ் யமான மனுஷன் ஒருத்தர் இருக்கார். அவர்தான் செஃப் பழனி முருகன். பார்க்க சீரியஸ் மனிதரா தெரிஞ்சாலும், அவர் மத்தவங்களைக் கலாய்க்கறதில் மன்னன். ஒருதடவை சப்பாத்தி ரோல் செய்யற ஷூட். எல்லாம் ரெடி பண்ணிட்டு என்கிட்ட சப்பாத்தியை தவால போட்டு எடுக்கச் சொன்னார். நான் அவர் கூட பேசிக்கிட்டே சப்பாத்தியைக் கவனிக்காததால, ரோல் கருகி, தீஞ்சுருச்சு. அவர் கேமரா ரன் ஆகறப்போவே, `மக்களே, இவ்ளோ நாளா புரோகிராம் பண்ணியும் சப்பாத்திகூட போடத் தெரியலை பாருங்க, இந்தப்பொண்ணுக்கு'ன்னு கலாய்ச்சுட்டார். நல்லவேளை, என் எடிட்டிங் நண்பர்கள் அதைத் தூக்கிட்டதால இந்த ரகசியம் வெளில தெரியலை!”

``கிச்சன் கலாட்டா குயினுக்குச் சமைக்கத் தெரியுமா?’’

``சமைக்கத் தெரியுமானு என்னைப் பார்த்துக் கேட்டுட்டீங்களே? ஆனா... காதைக் கொடுங்க எனக்குச் சத்தியமா சமைக்கத் தெரியாதுங்க. ஆனா,  இதுவரை எனக்குக் கிடைச்ச எல்லா ஷோவுமே `குக்கரி ஷோ’தான். ஒருவேளை நான் சாப்பிட்டுக்கிட்டே இருக்கேன்கறதால கூட `குக்கரி ஷோ’ பண்ற வாய்ப்புகள் எனக்கு கிடைச்சிருக்கலாம்.

மொத்தமாவே இதுவரை நான் 10 முதல் 15 டிஷ் ட்ரை பண்ணியிருக்கேன். ஆனா, அவை எல்லாமே பர்ஃபெக்ட்டா வந்திருக்குங்கறதுதான் அதிசயம்... ஆச்சர்யம்! சாப்பிட்டுப் பார்த்தவங்க எல்லாருமே `வாவ்’னு பாராட்டியிருக்காங்க. நான் சமைச்ச சமையல் நல்லாருக்கும்னு நான் சொல்லலைங்க. ஊரே சொல்லுது... நம்புங்க!”

``மேடமுக்குப் பிடிச்ச டிஷ் எது?’’


``கிச்சன் கலாட்டாவில் ஆயிரம் ரெசிப்பிஸுக்கு மேல டேஸ்ட் பண்ணியிருந்தாலும், எனக்கு எங்கம்மா செய்யற `தக்காளிச் சோறு - சிக்கன்'தான் ரொம்பப் பிடிச்ச டிஷ். அதுக்காக எங்க அம்மாவுக்கு நான் தங்கவளையலே செஞ்சுப் போடணும்... அவ்ளோ டேஸ்ட்டியா இருக்கும்!”

``புடவையில ரொம்ப க்யூட்டா இருக்கீங்களே... ஃபரீனாவோட காஸ்ட்யூம் சீக்ரெட் என்ன?’’

``சீக்ரெட்லாம் எதுவுமே இல்லைங்க. என்னோட ஷோவுக்கு தனி ஸ்டைலிஸ்ட் இருக்காங்க. இருந்தாலும் என்னோட லுக்குக்கு ஏத்த மாதிரி அவங்ககூட நானும் கலந்துபேசி உருவாக்கறதுதான் ஒவ்வொரு புடவைக்கான ஸ்டைலும். அது ரசிகைகளைக் கவர்ந்ததில் எனக்கும் கொள்ளை மகிழ்ச்சி.”

``எப்படி தங்குதடையில்லாமல் தமிழ் பேசறீங்க?’’

``சின்ன வயசிலிருந்து நான் படிச்சதெல்லாம் ஹிந்தி மீடியம்தான். அப்பாதான் அ, ஆ, இ, ஈ-யே சொல்லிக்கொடுத்தார். இருந்தாலும், கொஞ்சம் கொஞ்சமா தமிழ் கத்துக்கிட்டு, இன்னிக்கு ‘தங்கு தடையில்லாம தமிழ் பேசறீங்க’ன்னு, நீங்க சொல்ற அளவுக்கு வளர்ந்திருக்கேனா அது கடவுளோட கிஃப்ட்.”

``இந்த காம்பியரிங் கரியரில் எதெல்லாம் உங்ககிட்ட இம்ப்ரூவ் ஆகியிருக்கு?’’


``என்கிட்டயா இம்ப்ரூப்மென்ட் பத்தி கேட்கறீங்க? ஹி... ஹி... ஸ்டார்ட்டிங்க்ல ரொம்ப ஓவர் ஆக்ட் பண்ணிக்கிட்டு இருந்தேன். இப்போ கொஞ்சூண்டா ஓவர் ஆக்ட் பண்றேன்னு நினைக்கறேன்.”

``உங்க ஃபேமிலி பத்தி அறிமுகம் ப்ளீஸ்...’’

``அப்பா... அம்மா... தம்பிங்க... என்னோட ஃபேமிலிதான் என்னோட பில்லர்ஸ். அதுவும் கடுமையான சட்டதிட்டங்கள் நிறைஞ்ச ஒரு மதத்தில் இருந்து, சின்னத்திரையில் நான் இந்தளவுக்கு ஜொலிக்க என் அப்பா, அம்மாதான் காரணம். அவங்களைப் பொறுத்தவரை நாம பார்க்கற வேலை கடவுளுக்குச் சமம். ஐயாம் பிரவுட் ஆஃப் மை பேரன்ட்ஸ்.”

கேபிள் கலாட்டா - ``சமைக்கத் தெரியுமானு என்னைப் பார்த்து கேட்டுட்டீங்களே?!”

``ஃபரீனாவுக்கு உலகத்திலேயே பிடிச்ச இடம் எது?’’

``எனக்கு ட்ராவல் பிடிக்கும். ஆனா, அதைவிட நான் பிறந்து வளர்ந்த சென்னைதான் எனக்கு ரொம்பப் பிடிக்கும். என்னோட வீட்டுலே, என்னோட ரூம்ல இயல்பா உட்கார்ந்துகிட்டு டி.வி பார்க்கறதோ, மொபைல் யூஸ் பண்றதோதான் என்னோட ஆல்டைம் ஃபேவரைட்.”

``இந்த டைட் வொர்க்கில் நண்பர்கள் எப்படி?’’


``லாஸ்ட் இயர் என்னோட பர்த்டே அன்னிக்கு முழுக்க ஷூட். என் ஆபீஸ் உள்ளே அனுமதி இல்லாட்டியும்கூட, என் ஃப்ரெண்ட்ஸ் எனக்காக வந்து வெளிலயே நின்னு கேக் கட் பண்ணி என்னோட பர்த்டேவை செலிபிரேட் பண்ணினாங்க. என் வேலை புரிஞ்சு என்னை அப்படியே ஏத்துக்கிட்ட அற்புதமான நண்பர்கள்! அவர்கள் விஷயத்தில் நான் ரொம்பவே கொடுத்து வெச்சவ!” - கன்னம் குழிய சிரிக்கிறார் ஃபரீனா.

`நான் ரொம்ப சாஃப்ட்!'

கேபிள் கலாட்டா - ``சமைக்கத் தெரியுமானு என்னைப் பார்த்து கேட்டுட்டீங்களே?!”

``என்னைப் பார்த்தா வில்லன் மாதிரியா தெரியுது?’' என்று வில்லத்தனமான குரலிலேயே சிரிக்கிறார் கார்த்திக்.  `கல்யாணம் முதல் காதல் வரை’ சீரியலில் ப்ரியா, அர்ஜுன் தம்பதியைக் கலங்கடித்துக்கொண்டிருக்கும் வில்லன் களில் இவரும் ஒருவர். ``பிறந்தது, படிச்சதெல்லாமே சென்னை. அப்பா, அம்மா ரெண்டு பேருமே ஜோதிடர்கள். எல்லாரும் சொல்ற டயலாக் மாதிரிதான், எனக்கும் சின்ன வயசிலிருந்தே நடிப்பு மேல ஒரு ஈர்ப்பு. அதுக்காக ட்ரை பண்ணிட்டு இருக்கறப்போதான் ‘கனா காணும் காலங்கள்’ ரெண்டாவது பகுதிக்கான ஆடிஷன் நடந்தது. அதுல கலந்துகிட்டப்போ இந்த வாய்ப்பெல்லாம் நமக்கு கிடைக்குமானு ஒரு டவுட். ஆனா, என்னோட அதிர்ஷ்டம் `செலெக்ட் ஆய்ட்டீங்க'னு சொல்லிட்டாங்க. அதில்தான் முதன்முதலில் வில்லனா அட்ராசிட்டி செய்யற வாய்ப்பு கிடைச்சது. அதுக்கப்புறம் நிறைய வில்லன் கேரக்டர்ஸ். என்னோட குரலே எனக்கு பெரிய ப்ளஸ். இப்போ `கல்யாணம் முதல் காதல் வரை' சீரியலில் ப்ரியா, அர்ஜுன், வந்தனான்னு எல்லார் கண்ணுலையும் விரலை விட்டு ஆட்டிட்டு இருக்கேன். உண்மையிலேயே நான் ரொம்ப சாஃப்ட்டான பையன்ங்க.நம்புங்க...” என்று கலகலக்கிறார் கார்த்திக்!