Published:Updated:

டயட் டூர் - ஜூஸ் வேண்டாம்!

டயட் டூர் - ஜூஸ் வேண்டாம்!
பிரீமியம் ஸ்டோரி
டயட் டூர் - ஜூஸ் வேண்டாம்!

இளங்கோ கிருஷ்ணன்

டயட் டூர் - ஜூஸ் வேண்டாம்!

இளங்கோ கிருஷ்ணன்

Published:Updated:
டயட் டூர் - ஜூஸ் வேண்டாம்!
பிரீமியம் ஸ்டோரி
டயட் டூர் - ஜூஸ் வேண்டாம்!
டயட் டூர் - ஜூஸ் வேண்டாம்!

எடை குறைக்க நினைப்பவர்களுக்கு மட்டுமல்ல... எடையை அதிகரிக்க விரும்புபவர் களுக்கும்கூட வீகன் டயட்டின் உணவு பிரமிடு பொதுவானது. அதனால், எடை குறைக்க விரும்புபவர்கள் அதற்கு ஏற்ப உணவுத் தேர்வை மாற்றி அமைத்தாலே பாதி வெற்றியைப் பெற்றுவிடலாம்!

வீகனில் அசைவம் கிடையாதுதான். அதனால் என்ன? கொழுப்பும் புரதமும் சோடியமும் உள்ள உணவுகள் நிறையவே உள்ளன. கொழுப்பு என்பது எடை குறைப்புக்கு எதிரானது. எல்லோரும் உண்ணும் அளவுக்கு கொழுப்பை, எடை குறைக்க விரும்புபவர்களும் உண்டால் பலன் கிடைக்காது.

சோயாபால், சோயா (மீல் மேக்கர்), நட்ஸ் வகைகள் போன்றவற்றில் கொழுப்புச்சத்து நிறைந்துள்ளது. அதனால், கலோரி அளவைக் கணக்கிட்டு, எடைக்குறைப்புத் திட்டமிடலுக்கு ஏற்ப இவற்றை எடுத்துக்கொள்ளலாம்.

என்னவெல்லாம் சாப்பிடக்கூடாது?

அனைத்து டயட் முறைகளிலுமே சொல்லப்படுவதைப் போலவே சர்க்கரை, எடை குறைப் புக்கு முதல் எதிரி. ஆகவே, அதை முழுமையாகத் தவிர்க்க வேண்டும்.  அதோடு, அளவுக்கு அதிகமாகச் சர்க்கரை எடுத்துக்கொள்வது உடலில் ஈஸ்ட் உற்பத்தியை அதிகரிக்கும். ஈஸ்ட் உற்பத்தி, பருமனை உருவாக்கும். எடை குறைப்புக்காக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு எதிராகச் செயல்படும்.

பாட்டில் மற்றும் கார்பனேட்டட் பானங்களைப் பற்றிச் சொல்லவே வேண்டிய தில்லை. அதே போல பழச்சாறுகளையும் தவிர்க்க வேண்டும். ஜூஸ் என்பதும் உடலில் சர்க்கரையைச் சேர்ப்பதற்கான வழிகளில் ஒன்றுதான். பழங்கள் நம் உடலுக்கு அவசிய மானவை. அவற்றில் உள்ள வைட்டமின்கள், நுண்ணூட்டச்சத்துகள், நார்ச்சத்துகள் அவசியம் தேவையே. ஆனால், பழங்களை ஜூஸாகக் குடிக்கும்போது இந்தச் சத்துகள் சிதைந்துவிடுகின்றன. அவற்றில் உள்ள ஃப்ரக்டோஸ் எனும் சர்க்கரை மட்டுமே உடலுக்குக் கிடைக்கிறது. எனவே, பழங்களை கடித்து, மென்று உண்பதே ஆரோக்கியம்.

சரி... என்னவெல்லாம் சாப்பிடலாம்? அடுத்த இதழில்!

(உங்களால் முடியும்!)