Published:Updated:

அவள் கிளாஸிக்ஸ்: ``இது பசு இல்ல... எங்களை வாழவைக்கும் மூத்த குடி!''

அவள் கிளாஸிக்ஸ்: ``இது பசு இல்ல... எங்களை வாழவைக்கும் மூத்த குடி!''
பிரீமியம் ஸ்டோரி

கிராமங்களில், தங்கள் வீட்டில் ஒரு நபராகவே ஆடு, மாடு, கோழி வளர்க்கும் குடும்பங்கள் பல! `வீட்டின் ரேஷன் கார்டில் பேரைச் சேர்க்கச் சொல்லும்' அளவுக்கு அன்பு பாராட்டும் இப்படி சில குடும்பங்களைச் சந்தித்தோம்!

‘‘லட்சுமிக்கு தண்ணி வெச்சாச்சுல?’’ என விசாரித்துவிட்டு பேச்சைத் தொடங்கிய திருவையாறு அருகேயுள்ள அரசூரில் வசிக்கும் தனலட்சுமி, ‘‘எங்களுக்கு ரெண்டு பொண்ணு, ஒரு பையன். மூணாவது பொண்ணா லட்சுமியை வளர்க்குறோம்! ஒரு பொண்ணு, ஒரு பையனுக்கு கல்யாணத்தை முடிச்சுட்டோம். இரண்டாவது பொண் ணுக்கு முடிக்கறதுக்கு கையில ஒண்ணும் இல்ல. அவருகிட்ட ஒரு மாடு வாங்க யோசனை சொன்னேன். அங்க இங்கனு கடன் வாங்கி இந்த லட்சுமியை வாங்கிட்டு வந்தார். அது கன்னுக்குட்டி போட, எங்க கஷ்டமெல்லாம் குறைய ஆரம்பிச்சது. கையில காசு சேர்த்து, ரெண்டாவது பொண்ணுக்கும் கல்யாணத்தை முடிச்சுட் டோம்!’’ என்று தனலட்சுமி பூரிக்க, தொடர்ந் தார் கணவர் கணேசன்.

அவள் கிளாஸிக்ஸ்: ``இது பசு இல்ல... எங்களை வாழவைக்கும் மூத்த குடி!''

‘‘எங்க வீட்டுக்கு லட்சுமி வந்து 12 வருஷத்துக்கு மேல ஆகுது. ஏழாவது கன்னு போடப் போறா! பிள்ளைங்க, பேரப் பிள்ளைங்க, பேத்திங்க வேற வேற ஊருல சந்தோஷமா இருக்காங்க. இப்போ எங்க சந்தோஷத்துக்கு லட்சுமிதான் துணையா இருக்கா!’’ - இடுங்கிய கண்களில் பாசம் கசியச் சொல்கிறார் கணேசன்.

போடியில், 20 ஆண்டுகளுக்கும் மேலாக கோழி வளர்க்கிறார்கள் லீலாவதி - அருணாச்சலம் தம்பதி. ‘‘எங்களுக்கு ஒரு பையன், ஒரு பொண்ணு. மகன் செந்தில் சின்னப்பையனா இருக்கும்போது, ஒரு கோழி வாங்கிட்டு வந்தாப்ல. அது வந்த நேரம் எங்களுக்கு ராசியா இருந்துச்சு. ரொம்பக் காலமா ஒத்தி வீட்டுல இருந்த நாங்க, ஒரு தகர வீட்டை வாங்கினோம். அந்தக் கோழியோட குஞ்சுகள் வளர வளர, தகர வீட்டை புதுசா மாத்திக் கட்டினோம். திடீர்னு ஒரு நாள் அந்த தாய்க்கோழி சீக்கு வந்து இறந்துடுச்சு. அன்னிக்கு யாருமே சாப்பிடலை. அதைப் புதைச்சுட்டு சாமி கும்பிட்டோம். ராசிக்காக, அந்தக் கோழி யோட குஞ்சுகளைதான் தொடர்ந்து வளர்த்துட்டு இருக்கோம். ஒரு கோழிக்கு பேத்தி வெச்ச பேரு, ‘முள்ளுக்கோழி’. ஒரு தடவை வீட்டுக்குள்ள பாம்பு வந்துருச்சு. அதை யாருமே கவனிக்கல. முள்ளுக்கோழி அதைப் பார்த்து வித்தியாசமா கொக்கரிக்க, என்னனு போய் பார்த்தா, பாம்பு. எங்க உயிரைக் காப்பாத்தின இந்த முள்ளுக்கோழிக்கு காலையில தினமும் அரிசி போட்டாதான், அன்னிய பொழுதே எங்களுக்கு நல்லா இருக்கும். அதுக்கு ஏதாவது ஒடம்புக்கு நோவுனா எங்களுக்கு மனசுக்கு நோவு பிடிச்சிரும்!’’ என்று நெக்குருகினார்கள் லீலாவதியும் அருணாச்சலமும்.

அவள் கிளாஸிக்ஸ்: ``இது பசு இல்ல... எங்களை வாழவைக்கும் மூத்த குடி!''

‘‘கோயில்ல பவானி பேருக்கும் அர்ச்சனை பண்ணுவோம்!’’ என்று தன் பசுமாட்டைக் கொஞ்சுகிறார், ஈரோட்டை அடுத்துள்ள குருவிக்காரன்பாளையம் சத்யா மகேந்திரன். ‘‘கணவரோட அப்பத்தா பொங்கியம்மாள், கல்யாணம் பண்ணி இங்க வரும்போது, பொறந்த வீட்டு சீதனமா நாட்டுப்பசு கொண்டுவந்திருக்காங்க. அதோட கன்னுகள் தான் தலைமுறை தலைமுறையா இங்க வளருது. இந்த பவானி, மூணாவது தலைமுறை. தினமும் மாட்டைக் குளிப்பாட்டி, சாம்பிராணி புகை காட்டி, பசும்புல் வெட்டிக் கொடுத்து, தாகம் தீர தவிடு தண்ணீர் காட்டி, ராத்திரி தொழுவத்துல கட்டி வேப்பிலை, நொச்சி இலை புகை போட்டு கொசுக்களை விரட்டினு... குழந்தை போலதான் பார்த்துக்குவோம். இது பசு மட்டுமில்ல, எங்களை வாழ வைக்கும் மூத்த குடி!’’ என்று சொல்லும் சத்யா, தங்களின் 4 ஏக்கர் நிலத்தில் இயற்கை விவசாயம் செய்கிறார். இயற்கை விவசாயத்தில் விளையும் பசுந்தீவனம் மட்டுமே கொடுத்து வளர்க்கும் இந்த மாட்டின் `ஆர்கானிக்' பாலுக்கு ஏரியாவில் நல்ல மவுசாம்!

- கோவிந்த் பழனிச்சாமி, கே.குணசீலன், ம.மாரிமுத்து
படங்கள்: ரமேஷ் கந்தசாமி, வீ.சக்தி அருணகிரி

(2015 ஜனவரி 13)