Published:Updated:

ரசித்து ருசிக்கும் வேலை!

ரசித்து ருசிக்கும் வேலை!
பிரீமியம் ஸ்டோரி
ரசித்து ருசிக்கும் வேலை!

வித்தியாசம்சாஹா

ரசித்து ருசிக்கும் வேலை!

வித்தியாசம்சாஹா

Published:Updated:
ரசித்து ருசிக்கும் வேலை!
பிரீமியம் ஸ்டோரி
ரசித்து ருசிக்கும் வேலை!

இந்தியாவின் அத்தனை நட்சத்திர ரெஸ்டாரன்ட்டுகளிலும் சோவ்னா பூரியின் பெயர் பிரபலம். வி.ஐ.பி-க்கள் முதல் சாமானியர் வரை பலருக்கும் பரிச்சயமான முகம். ‘சோமேலியர்’ என்றழைக்கப்படுகிற ஒயின் டேஸ்ட்டர்களில் சோவ்னா பூரி முக்கியமானவர். இந்தத் துறையில் தேடினாலும் கிடைப்பதில்லை பெண்கள். விதிவிலக்காக வியப்பளிக்கிறார் சோவ்னா பூரி.

ரசித்து ருசிக்கும் வேலை!

‘இந்தத் துறைக்கு வந்தது விபத்து’ என்கிற வழக்கமான வசனம் பேசாமல், விரும்பி ஏற்றுக்கொண்டதாகச் சொல்கிற வீர வசனத்திலேயே வித்தியாசப்படுகிறார் சோவ்னா.

‘`சின்ன வயசுலேருந்தே ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிக்கிற ஆசை இருந்தது. ஹாஸ்பிட்டாலிட்டி மேனேஜ்மென்ட் படிக்கிறதுக்காக ஃபிரான்ஸ் போனேன். படிக்கும்போதே அதுல ஒயின் பத்தின பாடங்கள் என்னை ரொம்பக் கவர்ந்தன. ஆனா, அவைதான் என் வாழ்க்கையிலயும் வரப்போகுதுன்னு அப்போ நினைக்கலை. படிப்பை முடிச்சதும், ரெஸ்டாரன்ட் சூப்பர்வைசராத்தான் என் கரியர் ஆரம்பமானது. ஃபிரான்ஸ்ல ஒரு ரெஸ்டாரன்ட்டுல இன்டர்ன்ஷிப் பண்ணிட்டிருந்தபோது முதன் முதலா  ஒயின் டேஸ்ட்டர் ஒருத்தரைச் சந்திச்சேன். ஒரு ரெஸ்டாரன்ட்டுல ஒயின் டேஸ்டரோட தேவை எவ்வளவு முக்கியம்னு சொன்னாங்க. அந்தச் சந்திப்பு, எனக்குள்ளேயும் ஒயின் இ்ண்டஸ்ட்ரியைப் பத்திக் கத்துக்கற ஆர்வத்தை ஏற்படுத்தியது. லண்டனுக்குப் போய், பெனாரஸ்னு ஒரு ரெஸ்டாரன்ட்டுல ரெண்டு வருஷம் உதவி சோமேலியரா வேலை பார்த்தேன். கூடவே ஒயின் அண்ட் ஸ்பிரிட்ஸ் எஜுகேஷன் ட்ரஸ்ட்டுல அதுக்கான முறையான படிப்பையும் முடிச்சேன்.  அதே துறையில டீச்சர்ஸ் ட்ரெயினிங்கையும் முடிச்சிட்டு முழுநேர ஒயின் டேஸ்ட்டராகவும் பயிற்சியாளராகவும் என் வேலையைச் சந்தோஷமா தொடர்ந்துட்டிருக்கேன்...’’

- ஷார்ட் அண்ட் ஸ்வீட் அறிமுகம் சொல்கிறார் சோவ்னா.

வேலையில் முதல் நாள் அனுபவம் என்பது யாருக்கும் மறக்க முடியாதது. சோவ்னாவுக்கும் அதைப்பற்றிச் சொல்வதற்கு நிறைய இருக்கிறது.

‘`ஒயின் டேஸ்ட்டரா என்னோட முதல் நாள் எனக்கு ரொம்ப ஸ்பெஷலும்கூட.  பத்து வருஷங்களுக்கு முன்னாடி என் கனவு நனவான நாள் அது. பயமும் பதற்றமுமாகக் கைகள் நடுங்க நின்னுகிட்டிருந்தேன். 20 பேர் கொண்ட டீம்ல என்னை ஒயின் டேஸ்ட்டரா செலக்ட் பண்ணினாங்க.  ஒயின் டேஸ்ட்டரோட வேலைங்கிறது ரெஸ்டாரன்ட்டுக்கு வரும் கெஸ்ட்டுகளுக்கு வெறுமனே ஒயினைப் பரிந்துரைக்கிறது மட்டுமில்லை. யார் என்ன ஒயின் கேட்கறாங்களோ, அதை அவங்களுக்குப் பரிமாறும்முன் நான் டேஸ்ட் பண்ணணும். குறைகள் ஏதுமில்லைங்கிறதையும், சரியான டெம்பரேச்சர்ல பரிமாறப்படுகிறது என்பதை யும் உறுதிபடுத்தணும். அதையெல்லாம் நான் செய்யறதைப் பார்த்த கெஸ்ட்டுகளுக்குப் பயங்கர அதிர்ச்சி. இந்தியாவைச் சேர்ந்த ஒரு பெண், ஒயின் டேஸ்ட்டரா இருக்கிறதை ஆச்சர்யமா பார்த்தாங்க. ‘கலாசாரம், கட்டுப்பாடுன்னு பெண்களுக்கு ஏகப்பட்ட விதிமுறைகள் இருக்கிற இந்தியாவுல பெண்கள் தொடவோ, பேசவோ கூடாத விஷயங்கள்ல மதுவும் ஒன்றா இருக்கு. அப்படியொரு பின்னணியிலேருந்து வந்த நீங்க தைரியமா இந்தத் துறையைத் தேர்ந்தெடுத்தது நல்ல விஷயம்’னு பாராட்டினாங்க...’’ - சோவ்னா வின் முகத்தில் மலர்ச்சி; வார்த்தைகளில் மகிழ்ச்சி.

ரசித்து ருசிக்கும் வேலை!

வெறுமனே ஒயினை ருசிப்பதும் விருந்தாளிகளுக்குப் பரிந்துரைப்பதும் மட்டுமல்ல இவர்களது வேலை. அதைத்தாண்டி ‘ஃபுட் பேரிங்’ என்றொரு விஷயமும் மிக முக்கியம் என்கிறார் சோவ்னா.

‘`ரெஸ்டாரன்ட்டுக்கு சாப்பிட வர்றவங்களுக்கு ஒயினோடு சேர்த்து அவங்க விரும்பற சாப்பாடும் பரிமாறப் படும். ஒயினோட ருசியோ, சாப்பாட்டோட ருசியோ ஒன்றை ஒன்று மிஞ்சிடக்கூடாது. இந்த ரெண்டையும் ருசித்த படியே மூணாவதா ஒரு ருசியை அவங்க ஃபீல் பண்ணி னாத்தான் நாங்க சரியா ஃபுட் பேரிங் செய்திருக்கோம்னு அர்த்தம். அது தனிக்கலை. லேசான இனிப்புச் சுவையுள்ள ஒயிட் ஒயினுடன் இந்திய உணவுகளை எடுத்துக்கலாம். இனிப்பான ஒயினுடன் காரமான உணவுகள், இனிப்பு சாப்பிடும்போது அதைவிடவும் இனிப்பான ஒயின் எடுத்துக்கலாம். இதெல்லாம் அடிப்படையான விதிகள். ஒயின் பரிமாறப்படற கிரிஸ்டல் தொடங்கி, அதோட விளிம்பு வரை எல்லாமே அதோட சுவைக்குப் பொறுப்பு. இதையெல்லாம் தாண்டி, மனிதர்களோட சுவை, நபருக்கு நபர் வேறுபடும். எல்லாத்தையும் சாமர்த்தியமா சமாளிச்சு, விருந் தாளிகளோட முகம் கோணாம பார்த்துக்கிறதுலதான் இருக்கு எங்களோட வெற்றியே...’’ அந்த வெற்றியைத் தினம்தினம் ருசித்துக் கொண்டிருக்கிற சோவ்னா, சொல்கிற ஒயின் டேட்டா ரியலி டேஸ்ட்டி!

‘`கடந்த சில வருஷங்களுக்கு முன்பு வரைக்கும் இந்தியாவுல விஸ்கிதான் பிரபலமான டிரிங்க்கா இருந்திருக்கு. சமீபகாலமா ஒயினும் அதுக்கு இணையா பிரபலமாயிட்டு வருது. விஸ்கியோட ஒப்பிடும்போது ஒயின் ஆரோக்கியமானதுங்கிறதும் இன்னொரு காரணம். ஆன்ட்டிஆக்சிடன்ட்ஸ் இருக்கிறதால குடிக்கலாம்...’’

அட..!

ஆண்களின் ஆதிக்கமே நிறைந்திருக்கிற இந்தத் துறையில் ஒரே பெண்ணாக இருப்பது சவாலாக இருந்தாலும் சந்தோஷமானது என்கிறார் சோவ்னா.

‘`வேலை செய்யறது ஆணா, பெண்ணாங்கிற கேள்வியே தேவையில்லை. அவங்களோட தனிப்பட்ட திறமைகள்தான் கடைசியில பேசும். எனக்கான பிரத்யேகத் திறமைகளை நான் வளர்த்துக்கிட்டேன். ஆரம்பத்துல நானும் நிறையத் தடுமாறியிருக்கேன். சில கெஸ்ட்டுகளுக்கு எந்த ஒயின் கொடுத்தாலும் பிடிக்காது. ஆனா, அதுக்காக அவங்ககிட்ட கோபப்பட முடியாது. விருப்பும் வெறுப்பும் தனிநபர் சம்பந்தப்பட்டவை. ஒவ்வொரு ஒயினுக்கும் ஒரு பிரத்யேகக் குணமும் சுவை யும் இருக்கு. ஒயினுக்கே இருக்கிறபோது மனிதர்களுக்கு இருக்காதா என்ன?’’

- தத்துவமாகப் பேசுபவர், இப்போது ஒயின் டேஸ்ட்டிங் துறையில் அடுத்த நிலைக்கான மேற்படிப்பையும் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.