Published:Updated:

தமிழ் படிப்பது தனி இன்பம்!

தமிழ் படிப்பது தனி இன்பம்!
பிரீமியம் ஸ்டோரி
தமிழ் படிப்பது தனி இன்பம்!

வாசிப்பை நேசிப்போம்கே.ஆர்.ராஜமாணிக்கம் - படங்கள்: ப.சரவணகுமார்

தமிழ் படிப்பது தனி இன்பம்!

வாசிப்பை நேசிப்போம்கே.ஆர்.ராஜமாணிக்கம் - படங்கள்: ப.சரவணகுமார்

Published:Updated:
தமிழ் படிப்பது தனி இன்பம்!
பிரீமியம் ஸ்டோரி
தமிழ் படிப்பது தனி இன்பம்!
தமிழ் படிப்பது தனி இன்பம்!

நாற்பதாவது ஆண்டை எட்டியிருக் கிறது, வாசிப்பாளர்களின்  திருவிழாவாகவே களைகட்டும் சென்னை புத்தகக் காட்சி. இந்த ஆண்டு, இங்கு பெண்களும் குழந்தைகளும் எந்த வகை புத்தகங்களை விரும்பி வாங்குகிறார்கள்? அறிந்து கொள்வதற்காக ஒரு மாலை நேரத்தில் விசிட் அடித்தோம்.

புத்தகங்களின் புதுமணமும் கண்களின் தேடுதலுமாக புத்தகக் காட்சி நிறைந்திருக்க, தனக்கான புத்தகங்களைத் தேடுவதில் கவனமாக இருந்தார்கள் இலக்கியா மற்றும் பிரியங்கா.

‘`நாங்க சத்தியபாமா யுனிவர்சிட்டியில விஸ்காம் செகண்ட் இயர் படிக்கிறோம். எங்களுக்கு நாவல்கள் ரொம்பப் பிடிக்கும். பிரச்னையை அழுத்தமா சொல்ற கட்டுரை களும் கதைகளும் எங்க ஃபேவரைட். இப்போ கல்கியின் ‘சிவகாமியின் சபதம்’ நாவலும், ராபின் ஷர்மா எழுதிய `Who Will Cry When You Die?' புத்தகமும் வாங்கியிருக்கோம். கிண்டில் மாதிரி எலெக்ட்ரானிக்ஸ் ஐட்டங்கள் வந்தாலும், பெட்ல சாய்ஞ்சு உக்காந்து புக் படிக்கிற சுகமே தனி” என்று ஃபீல் ஆனார்கள் இலக்கியாவும் பிரியங்காவும்.

தமிழ் படிப்பது தனி இன்பம்!

75 வயதாகும் லக்ஷ்மி ராகவன், பேத்தி காவ்யா, மகள் பிரேமலதாவுடன் வந்திருந்தார்.

‘`எப்பப்படிச்சாலும் திருக்குறள் தருகிற திருப்தி வேற எதுலேயும் வர்றதில்லை. ஓலைச் சுவடி வடிவில இருக்கிற இந்த திருக்குறள் புத்தகம் எனக்கு ரொம்பப் பிடிச்சுப்போச்சு. திருக்கச்சி நம்பிகளோட வாழ்க்கை வரலாறும் தாயுமானவர் பாடல்களும் வாங்கியிருக்கேன்” என்றவர், பேத்தி காவ்யாவுக்காக ஆங்கிலத்தில் ‘உலகப் பொன்மொழிகள்’, ஆக்ஸ்ஃபோர்டு டிக்‌ஷனரி ஆகியவற்றைத் தேர்ந்தெடுக்கிறார்.

``என்னோட மகள் துபாய்ல இருக்கா. அவ வீட்டுலதான் நான் இருக்கேன். ஆனா, ஒவ்வொரு வருஷமும் சென்னைக்கு புத்தகக் காட்சிக்காகவே மறக்காம வந்திடுவேன்” என்கிற லக்ஷ்மியின் குரலில் அத்தனை சந்தோஷம்! அதே ஆர்வத்தோடு ஜெயகாந்தன், நா.முத்துக்குமார் புத்தகங்களைத் தேடிச் சென்றார்.

ஸ்டால்கள் பல தேடி, பிடித்த புத்தகங்கள் கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில் வந்து கொண்டிருந்த நிஷாவின் கையில், ‘உலக நாகரிகம்’, ‘விண்வெளி ரகசியம்’, ‘போதிதர்மா’ ஆகிய புத்தகங்கள் இருந்தன.

தமிழ் படிப்பது தனி இன்பம்!

‘`தனியார் கம்பெனியில வேலை பாக்கிறேன். 1500-க்கும் அதிகமான புக்ஸ் வெச்சிருக் கேன். வித்தியாசமா இருக்கிற புத்தகங்கள் ரொம்பப் பிடிக்கும். எனக்கு ஐந்து மொழிகள் தெரியும்னாலும், தமிழ்ப் புத்தகங்களைப் படிக்கிறதுல கிடைக்கற இன்பமே தனி. அதனால புக் ஃபேர் வந்துட்டா புகுந்து விளையாடிடுவேன்” என்கிற நிஷா, தொடர்ந்து 10 ஆண்டுகளாக புத்தகக் காட்சிக்கு வருகிறாராம்!

சிநேக தர்ஷினி, கிருத்திகா தர்ஷினி, ஹரிஷ் தர்ஷன்  என வசீகரப் பெயர்களோடு ஜாலியாக வலம்வந்த சகோதர, சகோதரிகள் கைகளில், ‘சீக்ரெட்-7', ‘விம்பி கிட்’, மேஜிக் மற்றும் சயின்ஸ்  புத்தகங்கள், சான் கதைகள், பாட்டி கதைகள் இருந்தன. ‘`பாடத்தைத்தாண்டியுள்ள விஷயங்களைப் படிக்கப் பிடிக்கும், சயின்ஸ் புராஜெக்ட்டுக்குப் பயன்படும் புத்தகங்களும் இன்ட்ர ஸ்டிங்கா இருக்கும்’’ என்கிறார் சிநேக தர்ஷினி.

 ‘`என் ஃப்ரெண்ட்ஸுக்கு நான்தான் தினமும் விதவிதமா கதை சொல்வேன். கிளாஸ்ல எனக்கு பட்டப்பெயரே ‘கதை சொல்லும் ஹரிஷ்’தான்” என்று சிரிப்பு அள்ளப் பேசுகிறார் சுட்டி ஹரிஷ் தர்ஷன்.

2016: பெண் சார்ந்த நூல்களில் குறிப்பிடத்தக்கவை

* 'மகளிர் தினம்: உண்மை வரலாறு (இரா.ஜவஹர்)

* ‘இந்த நதி நனைவதற்கல்ல’ (தமயந்தி)