Published:Updated:

ஐ!

ஐ!
பிரீமியம் ஸ்டோரி
News
ஐ!

மொழிதீபா ராம்

ஐ!

I என்னும் ஆங்கில எழுத்தை எதற்காக கேப்பிடல் (capital) லெட்டரில் எழுதுகிறோம்?

ஊரின் பெயர் அல்லது ஒருவரின் பெயரின் முதல் எழுத்தை கேப்பிடல் லெட்டரில் எழுதுவோம். இது தெரிந்த ஒன்றுதான். அதோடு, I, We போன்றவற்றையும் capitalise செய்கிறோமே... அது எதற்காக? ஆராய்ச்சி செய்து பார்த்ததில் பின்புலம் அறிய முடிந்தது!

ஐ!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

I கேப்பிடல் லெட்டருக்கு மாறியதே ஒரு விபத்துதான். `i'என்பது German வார்த்தையான `ich'-ல் இருந்து தோன்றியது. உச்சரிக்கும் போது இதை  `ic'  என்று சொல்வார்களாம். இது இப்படி இருக்க, காலப்போக்கில் உச்சரிப்பு மாறி c எழுத்து மறைந்து போனது. மிச்சமான `i' எழுத்து குட்டியாக lowercase எனப்படும் ஸ்மால் லெட்டரில் தனியாக உருமாறியது.

தட்டச்சு செய்யும்போது இப்படி தனியாக இருந்த i மற்ற எழுத்துகளைவிடக் குட்டியாகவும் அழகற்றும் இருப்பதாக நினைத்த பதிப்பாளர்கள் இந்த குட்டி `i'-யைப் பெரிதாக காட்ட கேபிடல் எழுத்தில் `I' என்று அச்சிட்டனர். பின்னர் நிரந்தரமாகவே i எனும் எழுத்து கேப்பிடல் எழுத்தாகவே அச்சில் வரத் தொடங்கியது.

இப்படிச் சிறியதாக இருந்து பெரிதான i எழுத்து இன்று ஈமெயில், மெசேஜ், வாட்ஸ்அப் மூலமாக மறுபடியும் i என்னும் குட்டி எழுத்தாவே மாறி பழைய நிலைக்கு வந்துகொண்டும் இருக்கிறது.
 
மாற்றம் மட்டும்தானே மாறாதது!