Published:Updated:

மனுஷி - 10 - சண்டைக்கோழி வயசு!

மனுஷி - 10 - சண்டைக்கோழி வயசு!
பிரீமியம் ஸ்டோரி
மனுஷி - 10 - சண்டைக்கோழி வயசு!

சுபா கண்ணன் - ஓவியம்: ஸ்யாம்

மனுஷி - 10 - சண்டைக்கோழி வயசு!

சுபா கண்ணன் - ஓவியம்: ஸ்யாம்

Published:Updated:
மனுஷி - 10 - சண்டைக்கோழி வயசு!
பிரீமியம் ஸ்டோரி
மனுஷி - 10 - சண்டைக்கோழி வயசு!
மனுஷி - 10 - சண்டைக்கோழி வயசு!

மேன்மக்கள் அனைவரும் பெண்மையை மதிப்பவர்கள். பெண்மையை மதிப்பவர்கள்தான் மேன்மக்கள். அவர்கள் பெண்களை அடிமைப்படுத்தமாட்டார்கள். பெண்களுக்குச் சுதந்திரம் கொடுத்து, அவர்கள் முன்னேறுவதையே மேன்மக்கள் விரும்புவார்கள்.

- சுவாமி விவேகானந்தர்

மீபத்தில் வெளியான `தங்கல்' திரைப் படத்தில் ஒரு காட்சி. அமீர்கான் பிள்ளைகளின் கால்களைப் பிடித்தபடி மனைவியிடம் சொல்லுவார்... `நான் ஒரு தந்தையாக இருந்தால் குருவாக இருக்க முடியாது. குருவாக இருப்பதால் தந்தையாக முடியாது.'

தியேட்டரில் கைதட்டலும் விசில் சத்தமுமாக ஒரே ஆரவாரம். ஆனால், நம்முடைய அம்மாக்கள் ரொம்ப யதார்த்தமாகவே இந்தச் சூழலைக் கடக்கிறார்கள். பிள்ளைகளின் அடலசன்ஸ் ஏஜ் (வளர் இளம் பருவம்) என்பதை Storm and stress என்றே மனநல மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள். நிறைய மூட் ஸ்விங்ஸ் ஏற்படும் பருவம் இது. பெண்கள் பூப்பெய்திய பிறகு ஹார்மோன்களின் அட்டகாசங்கள் நிறைந்திருக்கும் பருவமும்கூட.

பியர் ப்ரஷர் எனப்படும் சக தோழர்களால், பள்ளியில், குடும்பத் தில் சமுதாயத்தில் தனக்கென அடையாளம் கண்டெடுக்க வேண்டிய கட்டாயம் வேறு வந்து சேர்கிறது.

அப்படியான ஒரு கட்டத்தில் தான் ஆனந்தியின் மகள் மாயாவும் இருந்தாள். அந்த நிலையில் ஆனந்திக்கு மகள் மாயாவைச் சமாளிப்பது கடினமாகவே இருந்தது. காலையில் பள்ளிக்குப் போகும்போதே சிடுசிடுத்துக் கொண்டுதான் போனாள். ‘போன வருடம் வரை ‘என் மம்மி போல யாரு மச்சி?’ என்று தன்னையே கொஞ்சிக்கொண்டு இருந்த மாயா, இப்போது எதற்கெடுத்தாலும் சண்டைக் கோழியாக வாக்கு வாதம் செய்கிறாளே?  என்னதான் ஆயிற்று இவளுக்கு?’ என்ற சிந்தனையில் இருந்தவள், காலிங்பெல் சத்தம் கேட்டு சகஜமாகி கதவைத் திறந்தாள். அடுத்த கணம், சந்தோஷத்தில் உறைந்து நின்றாள்.

வாசலில் பூங்கொத்துடன் நின்று கொண்டிருந்த வாஸந்தி மேனன், ‘ஹேப்பி பர்த்டே டூ யூ’ என்று வாழ்த்தியபடி பூங்கொத்தை ஆனந்தியின் கைகளில் கொடுத்தாள். அவளை உள்ளே வரவேற்று சோபாவில் அமரவைத்து, ‘`எப்படி வீட்டைக் கண்டுபிடித்தாய்? என்னு டைய பிறந்த நாள் ஞாபகம் இருக் கிறதா?’’ என்று குழந்தையின் குதூ கலத்துடன் கேட்டாள்.

இருவரும் கோயம்புத்தூர் சின்மயா மிஷன் பள்ளியில் படிக்கும் போது ஹாஸ்டல் ரூம் மேட்ஸ். பிறகு, ஆனந்தி ஹோம் சயின்ஸ் முடித்து, இன்டீரியர் டெகரேஷன் செய்துகொண்டிருந்தாள். திருமணமாகி, குழந்தை மாயா பிறந்ததும், இன்ஜினீயரான கணவரின் கட்டடங்களுக்கு மட்டும் தொடர்ந்து செய்து கொண்டிருந்தாள்.

வாஸந்திமேனன் மனநலம் சார்ந்த படிப்பில் டாக்டராகி பிஸியானதால், அப்படியே இருவருக்குமான தொடர்பு விட்டுப்போனது.

இந்நிலையில்தான், மாயாவின் பள்ளியில் ஒரு  கவுன் சலிங் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதற்கான ஒரு மீட்டிங்கில் கலந்துகொள்ள வந்திருந்தாள் வாஸந்திமேனன். மீட்டிங் முடிந்ததும் வாஸந்திமேனனை சந்தித்த மாயா, ‘`மேடம், நீங்க கோயம்புத்தூர் சின்மயா மிஷனில் இரண்டு வருடம் படித்தீர்களா?’’ என்று குழந்தையின் குறுகுறுப்புடன் கேட்டாள்.

மாயாவின் அந்தக் குறுகுறு பார்வையை ரசித்தபடி, ‘`அட, ஆமாம். உனக்கு எப்படித் தெரியும்?’’ என்று மெல்லிய புன்முறுவலுடன் கேட்டாள்.

‘`என் அம்மா பேர் ஆனந்தி. உங்க ரூம் மேட். உங்களைப் பத்தி நிறைய சொல்லி இருக்காங்க. உங்களை போட்டோ ஆல்பத்தில் பார்த்திருக்கிறேன்’’ என்றவள் தொடர்ந்து, ‘`என் அம்மாவின் பிறந்த நாளுக்கு சஸ்பென்ஸாக வர முடியுமா?’’ என்று ஆவலுடன் கேட்டாள்.

அப்படித்தான் வாஸந்திமேனன் ஆனந்தி யின் வீட்டுக்கு வந்தாள். வாஸந்திமேனன் தன்னு டைய வீட்டுக்கு வந்த பின்னணியைத் தெரிந்து கொண்ட ஆனந்தி, “இதை யெல்லாம் விவரமாத்தான் செய்வா மாயா” எனப் பெருமைப்பட்டுக்கொண்டாள். ஆனால், அதில் உள்ள மென்சோகத்தை உணர்ந்தாள் வாஸந்தி. மனவியல் படித்தவள் அல்லவா?

ஆனந்தி கொடுத்த லஸ்ஸியைப் பருகியபடி, ‘`ஏன் இப்படி விரக்தியா பேசறே? மாயா மாதிரி ஒரு சமத்துப் பெண் இருக்கறப்போ, உனக்கு என்னதான் பிரச்னை?’’ என்று மென்மையாகக் கேட்டாள்.

‘`அதை ஏன் கேட்கிறே? மாயா முன்னைப்போல இல்லை. எதுக்கெடுத்தாலும் எடுத்தெறிஞ்சு பேசறா. அடிக்கடி வாக்குவாதம் செய்யறா. சட்சட்டென்று அழுறா. அவளையே என்னோட உலகமா நெனைச்சிண்டிருக்கேன். ஆனா, அவளோட இந்தப் போக்கு எனக்கு ரொம்பவே வருத்தம் தருது’’ என்றாள்.

“அட அசடே, நீ இன்னும் 80-கள்ல இருந்த அம்மாக்கள் மாதிரியே இருக்கியே... மாயா இந்த வயசுல தான் ஒரு இளம்பெண் என்று நினைத்துக்கொண்டிருப்பாள். ஆனால், நீ அவளை இன்னும் குட்டிப் பாப்பா மாதிரியே ட்ரீட் பண்ணுவ. அதே நேரத்துல அவ ஸ்லீவ்லெஸ் போட்டா, ‘நீ வளர்ந்துட்டே, கவர் பண்ண டாப்ஸ் போட்டுக்கோ'ன்னு சொல்லுவ. சரிதானே?’’ என்று வாஸந்திமேனன் கேட்கக் கேட்க, ‘என்ன இது, நேர்ல இருந்து பார்த்த மாதிரி சொல்றாளே’ என்று வியப்புடன் பார்த்தாள் ஆனந்தி.

வாஸந்திமேனன் தொடர்ந்தாள். ‘`இந்த வயதில் யாரும் லாஜிக்கலாக நிரூபிக்கப்பட்ட விஷயங்களையே உள்வாங்கிக்கொள்வார்கள், தர்க்கரீதியான பார்வைகள் விரியும். யார் என்ன சொன்னாலும், ‘ஏன், எதற்கு?’ எனக் கேள்வி கேட்கும் வயசு. பழைமை பிடிக்காது, சுதந்திரமாக இருக்க நினைப்பார்கள். சடங்குகள், சம்பிரதாயங்களைப் பற்றிக் கேள்வி கேட்பார்கள். குருட்டாம்போக்கில் அப்படியே ஃபாலோ பண்ண இவர்கள் நம் தலைமுறை இல்லை. நாமும்கூட அந்த வயதில் இப்படித்தான் இருந்திருப்போம்.

இன்னும் புரியவில்லையா? சரி, விளக்க மாகவே சொல்கிறேன். நம் கதைகள், விளை யாட்டுகள், பெண்குழந்தைக்குச் செய்யும் அலங்காரங்கள்... உதாரணமாக பூவைத்து ஜடை தைத்தல், மருதாணி வைப்பது போன்றவை எல்லாமே, ‘உனக்காக நான் தனித்துவமான கவனத்தைத் தருகிறேன்’ என்கிற நம்பிக்கையை அவர்கள் மனதில் விதைப்பதற்குத்தான்.

குழந்தைகள் மனம் விட்டுப் பேச, சிரிக்க, சந்தோஷப்பட, நமது உறவைப் பிணைக்க இந்த மாதிரியான பாடல்கள், கிண்டலும் கேலியுமான பழமொழிகள், வீட்டிலேயே உட்கார்ந்து விளையாடும் விளையாட்டுகள், நம் மூலம் கேட்கப்படும் கதைகள், அதன்மூலம் பெறப்படும் விழுமியங்கள் எல்லாம் குழந்தை களின் மனதில் அழுத்தமாகப் பதிந்து நிலைத்து இருக்கும்.

முதல் சட்டைபட்டனை சரியாகப் போட்டு விட்டால், மற்றவை சரியாகவே அமையும். அதாவது குழந்தைப் பருவத்தில் சரியான கேர் (care) கொடுத்துட்டோமானால், பின்னாளில் பிரச்னை இருக்காது. இந்த வயதில் அவள் மேல் நம்பிக்கை வைப்பது மட்டுமே உன் வேலையாக இருக்கட்டும்... அவளே அவளைப் பார்த்துகொள்வாள். நல்ல பெண் அவள்’’ என்று நீண்ட சொற்பொழிவே செய்துவிட்ட வாஸந்திமேனன், மாயாவுக்கு நற்சான்றிதழும் கொடுத்துவிட்டாள். ஆனாலும், ஆனந்திக்குச் சமாதானம் ஏற்படவில்லை. ‘`மாயா இப்படியெல்லாம் பேசமாட்டாளே...’’ என இழுத்தாள்.

“பத்து மாதத்தில் குழந்தை பேசத் தொடங்கும் தப்புத் தப்பாகத்தான் பேசும். அதை நீ ரசிச்சதில்லையா? அதைப்போன்ற ஒரு டிரான்ஸெஷன் பீரீயட் இது. இதுவரை வீட்டைத் தாண்டி யாரிடமும் பேசாத, பழகாத குழந்தைகள், வெளியில் பழகப் பழக புதிய வார்த்தைகளைக் கற்றுக்கொள்வார்கள். தாங்கள் கற்றுக்கொண்டதை தங்களுக்குப் பாதுகாப்பான இடமாக நினைக்கும் வீடு, நண்பர்களிடம்தான் பிரயோகிப்பார்கள். நாம அதைக் கண்டுக்காம விட்டுட்டாலே போதும். அடுத்தது அடுத்ததுன்னு போய்டுவாங்க. ரொம் பவுமே கட்டுப்படுத்தினா, இந்த வயசுக்கே உரிய உந்துதலால் நாம் வேண்டாம்னு சொல்றதையே இன்னும் தீவிரமா தொடர்வார்கள்.

கவலைப்படாதே... மாயா உன்னை மிகவும் நேசிக்கிறாள். உன்மேல் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறாள். எவ்வளவு அக்கறையிருந்தால் உன்னிடம்கூடத் தெரிவிக்காமல் உனக்கு கவுன்சலிங் கொடுக்கச் சாமர்த்தியமாக என்னையே இங்கே வரவைத்திருப்பாள்’’ என்ற படி சிரிக்க, ஆனந்தியும் சேர்ந்து சிரித்தாள்.

பள்ளி வேன் சத்தம் கேட்க கதவைத் திறந்து வைத்தாள் ஆனந்தி. உள்ளே வந்த மாயா, ‘`என்னம்மா இந்த சர்ப்ரைஸ் பிடிச்சிருந்ததா?’’ என்று கேட்டபடியே வாஸந்திமேனன் பக்கம் திரும்பி, ‘`வீட்டுக்கு வந்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ் ஆன்ட்டி’’ என்று சொல்லியபடி ஒரு தேங்க்ஸ் கிவ்விங் கார்டை வாஸந்திமேனனிடம் நீட்டினாள். மாயாவின் தலையில் கை வைத்து, ‘`நீ நல்லா வருவம்மா’’ என்று வாழ்த்தியபடி அதை மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டாள் வாஸந்திமேனன்.

(இன்னும் உணர்வோம்!)