Published:Updated:

சிறுதானிய பிஸ்கட்... மாத வருமானம் லட்சங்களில்!

சிறுதானிய பிஸ்கட்... மாத வருமானம் லட்சங்களில்!
பிரீமியம் ஸ்டோரி
News
சிறுதானிய பிஸ்கட்... மாத வருமானம் லட்சங்களில்!

தொழில் வழிகாட்டிம.சுமன் - படங்கள்: ச.வெங்கடேசன்

சிறுதானிய பிஸ்கட்... மாத வருமானம் லட்சங்களில்!

சிறுதானியங்கள் மற்றும் மூலிகைகளில் பிஸ்கட் தயாரித்து விற்பனை செய்து அசத்தி வருகிறார், வேலூர் விருதம்பட்டுக்கு அடுத்த காந்திநகரைச் சேர்ந்த கௌரி தாமோதரன். தன் மகனின் நோவுக்கு மருந்து கொடுக்கத் தவித்த ஒரு தாயின் தேடல்தான், இந்தத் தொழிலுக்கு அடிப்படையாக அமைந்திருக்கிறது.

‘`நாங்க பெரிய கூட்டுக் குடும்பம்’’ என்று ஆரம்பித்த கௌரியின் பேச்சில் மிளிர்கிறது, கிராமத்து எளிமை.

‘`எனக்கு ரெண்டு பையன். மூத்தவனுக்கு எப்பவும் சளிப் பிரச்னை இருந்துட்டே இருக்கும். எப்படித்தான் சரிப்படுத்துறதுனு யோசிச்சு, நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க அவனுக்கு மூலிகை மருந்து, சிறுதானிய உணவுனு கொடுக்க ஆரம்பிச்சேன். சளித் தொந்தரவு அவனை விட்டு விலகி ஓடிருச்சு. இப்போ அவன் நியூரோ சர்ஜனா இருக்கான்’’ என்று சொல்லும்போது பூரிக்கிறது அந்தத் தாயின் குரல்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
சிறுதானிய பிஸ்கட்... மாத வருமானம் லட்சங்களில்!

‘`வீட்டில் இருந்தே ஏதாச்சும் தொழில் செய்யலாம்னு தோணினப்போ, `சிறுதானிய பிஸ்கட்'னு ஒரு புது ஐடியா தோணுச்சு. சிறுதானியங்கள் சாப்பிட்டுத்தான் நம் முன்னோர் ஆரோக்கியமா வாழ்ந்தாங்க. ஆனா, இந்தத் தலைமுறை, பாக்கெட்ல அடைச்ச உணவுகளை எல்லாம் சாப்பிட்டு நாக்குத் தடிச்சுப் போனதால, நம்ம பாரம்பர்ய உணவுகள் அவங்களுக்கு ருசிக்கிறதில்லை.  சிறுதானியங்களை யும் மூலிகைகளையும் பிஸ்கட் வடி வத்துல அவங்களுக்குக் கொடுத்தா நிச்சயம் பிடிக்கும்னு ஒரு நம்பிக்கை வந்துச்சு. பெற்றோர்கிட்ட, குறிப்பா அம்மாக்கள்கிட்ட இதுக்கு வர வேற்பு இருக்கும்னு தெரியும். அவங்களை நம்பித்தான் தொழிலில் இறங்கினேன்’’ என்கிறவருக்கு தொழில் தொடங்கிய முதல் ஐந்து ஆண்டுகளும் போராட்டமாகத்தான் இருந்திருக்கின்றன.

‘`ஆரம்பத்துல செஞ்சு முடிக்கும் போது பிஸ்கட் வடிவமா வராது. அல்லது, கசப்பு மேலோங்கி இருக்கும். இப்படி ஒவ்வொரு குறையையும் அனுபவப்பட்டு அனுபவப்பட்டு சரிசெஞ்சேன். ஒரு கட்டத்துல கலை கைவசப்பட, அப்புறம் எல்லாம் சுபம். சிறுதானியங்களோட பிரம்மி, நாவற்பழக் கொட்டை, சிறுகுறிஞ்சான், ஆடாதொடை இலை, தூதுவளை, கீழாநெல்லி, துளசினு இன்னும் சில மூலிகைகள் சேர்த்தும் பிஸ்கட் செய்றேன்.

சிறுதானிய பிஸ்கட்... மாத வருமானம் லட்சங்களில்!

தினை, சாமை, வரகு, குதிரைவாலி, கம்பு, சோளம், பாசிப்பயறு, ஓட்ஸ், கொள்ளு எல்லாத்தையும் சேர்த்துச் செய்ற ரஸ்க்; பாதாம், பிஸ்தா, பேரீச்சைனு மூளை வளர்ச்சியைத் தூண்டக்கூடிய பொருட்கள் சேர்த்துச் செய்ற குழந்தைகளுக்கான பிஸ்கட்; உளுந்து, கொள்ளு, ஆளிவிதை, அத்திப்பழம், மாதுளைனு சேர்த்துச் செய்ற, பெண்களின் சருமம், கேசத்துக்கு ஆரோக்கியம் தரக்கூடிய பிஸ்கட்னு மொத்தம் ஆறு வகை பிஸ்கட்கள் செய்றேன்’’ என்கிற கௌரி, சிறுதானிய மற்றும் மூலிகை பிஸ்கட்களை பெரும்பாலும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார். வேலூர் மற்றும் சென்னைப் பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் பலரும் ஆர்வத்தோடு வாங்குகிறார்கள்.

கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக இந்தத் தொழிலைச்  செய்து வரும் கௌரியின் மற்றொரு முகம், யோகா ஆசிரியர்.

‘`உணவே மருந்து. அப்படியான ஓர் உணவுத் தொழிலைச் செய்வதில் எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி” என்று மனநிறைவுடன் சொல்லும் கௌரியின் மாத வருமானம், இரண்டு லட்சம் ரூபாய்.