Published:Updated:

பல ஊர் பாட்டிகளிடம் கற்ற பாடங்கள்

பல ஊர் பாட்டிகளிடம் கற்ற பாடங்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
பல ஊர் பாட்டிகளிடம் கற்ற பாடங்கள்

வித்தியாசம்யாழ் ஸ்ரீதேவி - படங்கள்: மீ.நிவேதன்

பல ஊர் பாட்டிகளிடம் கற்ற பாடங்கள்

தேடல் இருக்கும் வரை வாழ்க்கையில் ருசி இருக்கும் என்பதைத் தன் வாழ்க்கையில் நிறைவேற்றிக் காட்டியிருக்கிறார் தீபா. சாஃப்ட்வேர் இன்ஜினீயர் என்ற பரபரப்பிலிருந்து விடுபட்டு தனது வாழ்வின் அதிகபட்ச பயன்பாடுகளை மெள்ளக் குறைத்து எளிய வாழ்வுக்கு நகர்ந்து வரும் அவரது முகத்திலும் வார்த்தைகளிலும் அத்தனை தெளிவு. இயற்கையியலாளராக, பிசினஸ் வுமனாக அவதாரம் எடுத்திருக்கும் தீபா, `ஜீவ விருக்ஷா' என்ற பெயரில் உச்சி முதல் உள்ளங்கால் வரை அழகையும் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும் பொடிகளை அறிமுகம் செய்திருக்கிறார். இயற்கைப் பொருள் விற்பனை என்று முடிவு செய்த தீபா, அதைத் தன்னோடு நிறுத்திக் கொள்ளவில்லை. தமிழக அளவில் வெவ்வேறு கிராமங்களில் சிறிய அளவில் இயற்கைப் பொருட்களை உற்பத்தி செய்யும் பெண்களிடம் இருந்து பெற்று, அவர்களுக்கான விற்பனை வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.

பல ஊர் பாட்டிகளிடம் கற்ற பாடங்கள்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

‘`சொந்த ஊர் திண்டுக்கல். அம்மா பாரதி, மகப்பேறு மருத்துவர், தந்தை முருகேசன், அறுவைசிகிச்சை மருத்துவர். இரண்டு சகோதரர்களின் செல்லத் தங்கையாக நான் என சலிக்காத வாழ்க்கை. இன்ஜினீயரிங் முடித்து சென்னையில் மென்பொருள் நிறுவனங்களில் பணியாற்றும்போதுதான் பாக்கியநாத்தைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இருவர் மனமும் ஒன்றாக, காதலித்துக் கரம்பிடித்து அமெரிக்கா போனோம். அங்குதான் அவருக்கு வேலை. எங்கள் காதலுக்கு சாட்சியாக சஞ்சுக்தா, இரண்டாவது பிரசவத்தில் ட்வின்ஸ் ஆர்யா-தியா பொறந்தாங்க. என் பையன் ஆர்யாவுக்கு வீஸிங் பிரச்னை இருந்தது. அதைச் சரிசெய்வதற்கான மருத்துவ ஆலோசனைகளோடு, என் வீட்டு சமையலையும் மாத்தினேன். உணவையே மருந்தாக்கினேன். இயற்கையாகக் கிடைத்த காய்கறிகளை வாங்கிப் பயன்படுத்தினேன். அப்போதுதான் அதன் மகத்துவம்  புரிந்தது. 

பல ஊர் பாட்டிகளிடம் கற்ற பாடங்கள்

என் நண்பர் புருஷோத்தமன், `சென்னையில நாம ஏன் இயற்கை அங்காடி தொடங்கக்கூடாது' என்று கேட்டார். அமெரிக்காவில் இருந்து சென்னை வந்து செட்டில் ஆனதும் போரூர் சபரி நகர் ஏரியாவுல ‘ஜீவ விருக்ஷா’ இயற்கை அங்காடியைத் திறந்தோம். அதை ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே தமிழகத்தில் உள்ள பல இடங்களுக்கு விசிட் செய்தோம்.  பல ஊர் பாட்டிகளைச் சந்தித்து, அவர்களிடம் மறைந்து கிடந்த ரகசியங்களைக் கேட்டு அறிந்துகொண்டோம். இப்படிச் சேகரித்த விவரங்களை வைத்தே ஜீவ விருக்ஷாவுக்கான பொருட்களை உருவாக்கினோம்.

நாம் பாரம்பர்யமாக உபயோகித்து வந்த பச்சைப் பயறு, நன்னாரி வேர், சீயக்காய், நெல்லிக்காய், வேம்பு, அரப்பு, சோற்றுக் கற்றாழை போன்ற பொருட்களை உபயோகித்துப் பொடிகள் தயாரிக் கிறோம். கிராமப்புறப் பெண்களிடம் இருந்தே எங்களுக்குத் தேவையான மூலப் பொருட்களைச் சேகரிக்கிறோம். எண்ணெய், பருப்பு, புளி, காய்கறிகள் எனப் பலவகை இயற்கை மற்றும்  ஆர்கானிக் பொருட்கள் எங்கள் கடையில் கிடைக்கும்.

பல ஊர் பாட்டிகளிடம் கற்ற பாடங்கள்

பெரும்பாலோர் செயற்கையில் இருந்து இயற்கைக்கு மாற ரொம்பவே யோசிப்பார்கள். `ஏதாவது உடம்புக்குக் கெடுதல் ஆகிருமா, நமக்கு ஏத்துக்குமா' எனப் பல கேள்விகளோடுதான் எங்கள் கடைக்கே வருவார்கள். அவர்களுக்கு எல்லாம் என் வாழ்க்கையைத்தான் உதாரணமாகச் சொல்வேன். முதலில் நல்ல உணவுக்கு மாறினேன். பிறகு காஸ்ட்லி உடை, கார் என  அனைத்திலிருந்தும் விடுபட்டு, என் வாழ்க்கையில் இயற்கையை ஊடுருவச் செய்தேன். என்னைப் பார்த்துப் பல பேர் இயற்கை முறைக்கு மாறியிருக்கிறார்கள். அதுதான் நான் ஜீவ விருக்ஷா மூலமாகச் சம்பாதித்த பெரிய சொத்து!

இப்போது மறுசுழற்சி காகிதத்தைப் பயன்படுத்தி புதுவகை ஹேண்ட்மேட் பேப்பர் தயாரிக்கிறோம். அதோடு, நோட்டு, பென்சில் என அலுவலகத்துக்குத் தேவையான பலவற்றையும் தயாரிக்கிறோம். என் அடுத்தகட்டக் கனவு, `வீண்' எனத் தூக்கிப் போடுகிற பொருள்களைப் பயனுள்ள பொருள்களாக மாற்றுவதுதான்...'' என்கிறவர், மற்ற பெண்களையும்  இயற்கையோடு இணைய அழைக்கிறார்.

``பெண்கள் தங்கள் வீட்டுக்கு அருகில் கிடைக்கும் இயற்கை சார்ந்தவற்றை பொருட்களாக மாற்றி, அவற்றை எங்கள் பிஸினஸோடு இணைக்கிற  வகையில் செயல்படலாம். இயற்கையைக் காக்க நம்மாலான ஒரு முயற்சியாக இது அமைவதோடு, பெண்களின் வாழ்க்கை மேம்படவும் உதவும்” என்று நம்பிக்கை அளிக்கிறார் தீபா.

இயற்கை அளிக்கட்டும் இனிமை!