Published:Updated:

பெற்றோர் கவனத்துக்கு... - குழந்தையைப் பள்ளியில் சேர்க்கும் முன்...

பெற்றோர் கவனத்துக்கு... - குழந்தையைப் பள்ளியில் சேர்க்கும் முன்...
பிரீமியம் ஸ்டோரி
News
பெற்றோர் கவனத்துக்கு... - குழந்தையைப் பள்ளியில் சேர்க்கும் முன்...

வி.எஸ்.சரவணன்

பெற்றோர் கவனத்துக்கு... - குழந்தையைப் பள்ளியில் சேர்க்கும் முன்...

``குழந்தையைப் பள்ளியில் கொண்டு் சேர்ப்பது என்பது, விவசாயி விதையை மண்ணில் விதைப்பது போன்றது. விதைப்பதற்கு முன், அந்த மண் சரியாகப் பதப்படுத்தப்பட்டிருக்கிறதா, மண்ணில் சத்துகள் உள்ளனவா, நீர்ப்பிடிப்பு உள்ளதா என்பன போன்ற பல விஷயங்களை உறுதிப்படுத்திக் கொள்கிறார் அந்த விவசாயி. அதே போன்ற விழிப்பு உணர்வோடு பிள்ளைகளைச் சேர்க்கும் பள்ளி பற்றியும் தெரிந்துகொள்வது அவசியம்'' என்கிற கல்வியாளர்ஆயிஷா இரா.நடராசன், அது பற்றி விளக்குகிறார்.

பெற்றோர் கவனத்துக்கு... - குழந்தையைப் பள்ளியில் சேர்க்கும் முன்...

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பாதுகாப்பு: முதலில் கவனிக்க வேண்டியது இதுதான். வீடு அல்லது அடுக்குமாடிக் கட்டடத்தின் ஒரு பகுதி யையே பள்ளிக்கூடமாக மாற்றாமல், முறையாகக் கட்டியிருக்கிறார்களா? குழந்தைகள் சிரமம் இல்லாமல் வகுப்புக்குச் சென்று வர முடியுமா? விபத்து ஏற்படாமல் தடுக்கும் வகை யில் பாதுகாப்பு விஷயங்கள் சரியாக உள்ளனவா? இவற்றைச் சோதிக்கவும்.

பெற்றோர் கவனத்துக்கு... - குழந்தையைப் பள்ளியில் சேர்க்கும் முன்...

சூழல்: பள்ளி உங்கள் குழந்தை விரும்பும் சூழலில் உள்ளதா என்பதைக் கேளுங்கள். வீட்டின் மையப்புள்ளியே குழந்தைதான். திடீரென்று குழந்தையை வேறெங்கோ ஒட்டாத ஓர் இடத்தில் உட்கார வைத்துவிடக்கூடாது அல்லவா?

பெற்றோர் கவனத்துக்கு... - குழந்தையைப் பள்ளியில் சேர்க்கும் முன்...

தரம்: இந்த ஆண்டு 10 மற்றும் 12-ம் வகுப்புகளில் எத்தனை மாணவர்கள் டாப் ஸ்கோர் என ஆராயத் தொடங்க வேண்டாம். அது உங்களின் இப்போதைய பிரச்னை அல்ல. ஏனெனில், இப்போது எல்.கே.ஜியில் குழந்தையைச் சேர்க்கிறீர்கள் என்றால் அவன்/அவள் 10-ம் வகுப்பு தேர்வு எழுத, இன்னும் 12 வருடங்கள் இருக்கின்றன. அப்போது எந்தப் பாடமுறைக் கல்வி, எந்தக் கல்லூரி, என்னவிதமான வேலை வாய்ப்பு என்பனவற்றையெல்லாம் இப்போதே கணிக்க முடியாது. அதனால், தொடக்க வகுப்புகளில் குழந்தையை வதைக்காமல் கல்வி தரப்படுகிறதா எனப் பாருங்கள்.

பெற்றோர் கவனத்துக்கு... - குழந்தையைப் பள்ளியில் சேர்க்கும் முன்...

பெற்றோருக்கான இடம்: குழந்தை பற்றியோ, பள்ளி பற்றியோ பெற்றோரின் கருத்துகளுக்கு எந்த அளவு முக்கியத்து வம் தருகிறார்கள் எனப் பாருங் கள். அதை யாரிடம் கூறுவது என்றும் விசாரியுங்கள்.

வரலாறு: அந்தப் பள்ளியில் குறைந்தபட்சமாக கடந்த ஐந்து ஆண்டுகளில் என்னென்ன நடந்திருக்கின்றன? மாணவர்களை அடித்துத் துன்புறுத்தி யிருக்கிறார்களா? மோசமான தண்டனை கள் தரப்பட்டிருக்கின்றனவா? இதுபோன்ற விஷயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள். குழந்தைக்கு ஏதேனும் பிரச்னை என்றால், பள்ளியில் யாரிடம் சென்று சொல்வது, அதன்பின் என்ன செய்வார்கள் என்பதையும் விசாரியுங்கள்.

வகுப்பறையில் இரண்டு விதங்கள்:

அ) கண்காணிப்பு வகுப்பறை: குழந்தைகளை அசையாமல், சத்தம் போடாமல் அமரச் செய்து, பாடங் களை உரக்கக் கத்த வைத்து, பள்ளி விதிகளுக்கு மாறாக ஏதேனும் செய்கிறார்களா எனத் தொடர்ந்து கண்காணிப்பது. இதில் பாடங்களைக் கற்றாலும், குழந்தைகளின் குண நலன்களில் ஓர் இயந்திரத் தன்மை வந்துவிடும்.

ஆ) கற்றுக்கொள்ளும் வகுப்பறை: மாணவர்கள் கற்றுக்கொள்ளும் நேரத்தில்/ முறையில் வித்தியாசப்படுவர். அதை ஆசிரியர் இனம்கண்டு, அவர்களுக்கேற்ப வகுப்புச் சூழலை மாற்றி, பாடத்தை மெள்ள அவர்களுக்குள் இறங்க வைப்பார்.

பெற்றோர் கவனத்துக்கு... - குழந்தையைப் பள்ளியில் சேர்க்கும் முன்...

வீடா... பள்ளியா?: எல்லா விதங்களிலும் திருப்தி தரும் பள்ளி, உங்கள் வீட்டிலிருந்து வெகுதொலைவில் இருந்தால், குழந்தையை வேனில்/ஆட்டோவில் அலைய விடாமல், பள்ளிக்கு அருகில் வீட்டை மாற்றுவதே நல்லது.

விளம்பரங்களால் ஏமாற வேண்டாம்: எங்கள் பள்ளியில் குதிரை ஏற்றம், விமானம் ஓட்டுதல் என ஏராளமான பயிற்சிகள் என மயக்கும் விதங்களில் விளம்பரங்கள் கூறுவார் கள். அவற்றை வைத்து மட்டும் பள்ளியைத் தேர்வு செய்ய வேண்டாம்.

பெற்றோர் கவனத்துக்கு... - குழந்தையைப் பள்ளியில் சேர்க்கும் முன்...

மூன்று இடங்கள்: அட்மிஷனுக்கு முன் பள்ளியில் சென்று பார்க்க வேண்டிய மூன்று இடங்கள் உள்ளன.

அ) கழிவறை: கழிவறை இல்லா விட்டாலோ, சரியாகப் பராமரிக்க வில்லை என்றாலோ, அந்தப் பள்ளி யைத் தவிர்த்துவிடுங்கள். ஏனெனில், நீர்த்தொட்டி மூடப்படாமல் இருந்தால் குழந்தைகளின் பாதுகாப்பே கேள்விக் குறியாகும்.

ஆ) வகுப்பறை: நாளின் பெரும் பகுதியைக் குழந்தை கழிக்கப்போகும் இடத்தை நிச்சயம் சென்று பார்க்க வேண்டும். காற்றோட்டமாக, வெளிச்சமாக இருக்கிறதா என்பன போன்ற விஷயங்களைக் கவனியுங்கள். சுவரில் குழந்தைகளின் ஓவியங்கள் ஒட்டி யிருப்பது, கிறுக்கல்கள் போன்றவை இருந்தால் அந்த வகுப்பறை மகிழ்ச்சி யோடு இருப்பதாகப் புரிந்து கொள்ளலாம்.

இ) மைதானம்: `ஆளும் வளரணும் அறிவும் வளரணும்’ என்று சொல்வார்கள்.அறிவை வளர்க்க வகுப்பறை என்றால், உடல் ஆரோக்கியமாக வளர, விளையாட்டு மைதானங்கள் அவசியம்.

பெற்றோர் கவனத்துக்கு... - குழந்தையைப் பள்ளியில் சேர்க்கும் முன்...

விருந்தினர்: பள்ளி விழாக்களுக்கு சிறப்பு விருந்தினராக யார் வருகிறார்கள் என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள். சமூக அக்கறை கொண்டவர்கள் அழைக்கப்படுகின்றனர் என்றால், அந்த விஷயங்கள் நம் குழந்தை களையும் வந்தடையும் அல்லவா?