Published:Updated:

கருக்கலைப்பை அனுமதிக்கலாமா?

கருக்கலைப்பை அனுமதிக்கலாமா?
பிரீமியம் ஸ்டோரி
News
கருக்கலைப்பை அனுமதிக்கலாமா?

விவாதம்யாழ் ஸ்ரீதேவி

கருக்கலைப்பை அனுமதிக்கலாமா?

ருவறையில் மிதக்கும் அந்தச் சின்னஞ்சிறிய உயிரை எந்தக் காரணத்துக்காகவும் கொல்ல முடியாது. ஆணா, பெண்ணா என்று அடையாளம் பார்த்து தெரிந்தோ, தெரியாமலோ நடக்கும் கருக்கலைப்புகள் பெண்ணை உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் பாதிக்கின்றன. உயிர்பெற்ற சிசுவின் உரிமையைப் பறிப்பது கருக்கலைப்பு. ஆனால், தவிர்க்கமுடியாத சந்தர்ப்பங்களில் மட்டுமே கருக்கலைப்பு அனுமதிக்கப்படுகிறது.

சமீபத்தில் உச்ச நீதிமன்றம், இப்படியொரு சிக்கலான சூழலில் கருக்கலைப்பை அனுமதித்துள்ளது. மும்பையைச் சேர்ந்த பெண் கருத்தரித்து 24 வாரங்கள் ஆகிவிட்டன. கரு உருவாகி மூன்று மாதத்தில் இருந்து பிரசவம் வரை குறிப்பிட்ட இடைவெளியில் ஸ்கேன் பரிசோதனை வழியாக குழந்தையின் வளர்ச்சி மருத்துவர்களால் கண்காணிக் கப்படும்தானே? அப்படி அந்த மும்பைப் பெண்ணுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவரது வயிற்றில் வளர்ந்த குழந்தைக்கு மண்டை ஓடு போதிய வளர்ச்சி இன்றி இருப்பது கண்டறியப்பட்டது. அந்தக் கருவைக் கலைத்துவிட வேண்டும் என மும்பை கிங் எட்வர்ட் மெமோரியல் மருத்துவமனை மருத்துவர்கள் அறிக்கை அளித்தனர். சட்டப்படி 21 வாரத்துக்கு மேற்பட்ட கருவைக் கலைக்க நீதிமன்றத்தின் அனுமதி பெற வேண்டும். எனவே, தனது வயிற்றில் மண்டை ஓடு இன்றி வளரும் கருவைக் கலைப்பதற்கு அனுமதி கேட்டு அந்தப் பெண் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டி, எல்.நாகேஸ்வரராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘மனுதாரரின் உயிரைப் பாதுகாக்கும்பொருட்டு மருத்துவக் கருக்கலைப்புச் சட்டங்களுக்கு உட்பட்டு கருக்கலைப்புக்கு அனுமதி வழங்கப்படுகிறது’’ என்று தீர்ப்பளித்துள்ளனர்.

கருக்கலைப்பை அனுமதிக்கலாமா?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quizஉச்ச நீதிமன்றம் அனுமதித்திருக்கும் கருக்கலைப்பு, பெண்கள் மனதில் பல்வேறு கேள்விகளை ஏற்படுத்தி யுள்ளது. இந்தக் கரு ஆறு மாதங்களை எட்டியுள்ள நிலையில் கருவில் வளரும் குழந்தை பெரும்பகுதி வளர்ந்திருக்கும். இந்தச் சூழலில் கருக்கலைப்புச் செய்வது பாதுகாப்பானதா?

மதுரை மகப்பேறு மருத்து வரும் மருத்துவக் கல்லூரி பேராசிரியருமான ஜோதி சுந்தரத்திடம் கேட்டோம். ‘‘கருக்கலைப்பு என்பது அதற்கான காரணங்களில் உள்ள நியாயத்தின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப் படுகிறது. மும்பை பெண் விஷயத்தில் வழங்கப்பட்டிருக்கும் தீர்ப்பு நியாயமானதே.

கருக்கலைப்புக்குப் பாதுகாப்பற்ற முறைகளை முயற்சிப்பதால், ஆண்டுக்கு சுமார் 85 ஆயிரம் பெண்கள் உயிரிழப்பதாக உலக வங்கியின் ஆய்வு தெரிவிக்கிறது. பெண்கள் இந்த விஷயத்தில் தனது உடல் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

இரண்டு குழந்தைகளுக்குப் பிறகு தாமதமாகக் கருத்தரிக்கும் பெண்களுக்குக் கருவில் வளர்ச்சிக் குறைபாடுகள் தென்படலாம். நம் ஊரிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடப்ப துண்டு. வழக்கமாக நடத்தப்படும் ஸ்கேன் பரிசோதனையில் குழந்தையின் உறுப்பு வளர்ச்சியில் உள்ள உடல் குறைபாடுகள் கண்டுபிடிக்கப்படும். குறையுள்ள கரு, குழந்தையாகப் பிறந்த பின் சிகிச்சை அளித்துப் பாதுகாக்க முடியும் எனில், அந்தக் கரு கலைக்கப்படுவதில்லை. பிறந்த பின்னும் எல்லா சிகிச்சையும் செய்து குழந்தையைக் காப்பாற்ற வழியில்லை எனும்போது இதுபோன்ற முடிவு எடுக்க வேண்டியுள்ளது.

கருவுற்ற பெண்களுக்கு முதல் மூன்று மாதத்தில் ஒரு முறை ஸ்கேன் பரிசோதனை செய்யப்படுகிறது. அதன்பின் 16 முதல் 28 வாரங்களுக்குள் குழந்தையின் வளர்ச்சியைக் கண்காணிக்க ஸ்கேன் பரிசோதனை செய்யப்படும். குறையுள்ள குழந்தையைப் பெற்று எடுக்கும் பெண் சந்திக்கும் சமூக முரண்பாடுகள் மிகப்பெரிய அளவில் மன உளைச்சலை அளிக்கும். அன்னப்பிளவுடன் பிறக்கும் குழந்தைகளை இந்தச் சமுதாயம் நடத்தும்விதம் சகிக்க முடியாதது. அந்தக் குழந்தையைப் பெற்ற தாய் அடையும் மனவேதனை அதைவிடக் கொடுமையானது. கருவுற்ற தொடக்க காலத்தில் இருந்தே ஃபோலிக் ஆசிட் மாத்திரைகளை முறையாக எடுத்துக்கொண்டால், கருவில் வளரும் சிசுவுக்குப் பெரிய குறைகள் ஏற்பட வாய்ப்பில்லை. ஒரு சில சந்தர்ப்பங்களில் தாய்மை அடைந்த பெண் வலிப்பு அல்லது நீரிழிவுக்கு மருந்து எடுத்துக் கொள்ளும்போது குழந்தை குறையுடன் பிறக்க வாய்ப்புள்ளது. இரண்டு கிட்னியும் முழுமையாக வளர்ச்சி அடையாமல் பிறக்கலாம். இது போன்ற சிக்கலான நேரங்களில் பெண்ணுக்கு கருக்கலைப்புக்கான உரிமை வழங்கப்பட வேண்டும். பிறந்த பின் குழந்தையும் வாழ முடியாது; குறையுள்ள குழந்தையைப் பெற்ற தாயும் நிம்மதியாக இருக்க முடியாது.

இரண்டு குழந்தைகளுக்கு மேல் மூன்றாவதாகத் தவிர்க்க முடியாமல் குழந்தை உருவாகும்போது கருக்கலைப்புக்குச் செல்கின்றனர். கருக்கலைப்பை ரகசியமாகச் செய்து கொள்ளவே பலர் விரும்புகின்றனர். பெண் ணின் உடல்நலம் கவனத்தில் கொள்ளப்படு வதில்லை. அனுபவம் இல்லாத வர்களிடம் பாதுகாப்பற்ற நிலையில் கருக்கலைப்பு செய்யப்படும்போது அது அவளது உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும். அங்கீகரிக்கப்பட்ட மருத்து வரிடம்தான் பாதுகாப்பான முறையில் கருக் கலைப்பு செய்துகொள்ள வேண்டும். முறையற்ற கருக்கலைப்பினால் பெண்ணின் கருப்பையில் தொற்று ஏற்பட்டு உயிரை இழக்கும் அபாயம் உள்ளது. ஆகவே, கருக்கலைப்புக்கு முன்னர் பல விஷயங்களை யோசித்தே முடிவெடுக்க வேண்டும்’’ என்கிறார் மகப்பேறு மருத்துவர் ஜோதி சுந்தரம்.