Published:Updated:

30 வகை உடுப்பி சமையல்!

30 வகை உடுப்பி சமையல்!
பிரீமியம் ஸ்டோரி
News
30 வகை உடுப்பி சமையல்!

30 வகை உடுப்பி சமையல்!

30 வகை உடுப்பி சமையல்!

ங்களூர் மற்றும் சுற்றுவட்டாரங்களில் மிகவும் புகழ்பெற்றவை உடுப்பி உணவுகள். இச்சமையல் முறையில் கர்நாடக மலைப்பகுதிகளில் விளைகிற byadagi என்கிற சிவப்பு நீட்டு மிளகாய், தேங்காய், வெல்லம் மற்றும் தேங்காய் எண்ணெய்  ஆகியவை அதிகம் பயன் படுத்தப் படுகின்றன. சமையல் கலைஞர் ரூபா ராகவ் அளித்திருக்கிற உடுப்பி ரெசிப்பிகள் மிகவும் வித்தியாசமானவை... ருசியானவை!

30 வகை உடுப்பி சமையல்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உடுப்பி ரசப் பொடி

தேவையானவை: சீரகம், வெந்தயம், உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், தனியா - 100 கிராம், காய்ந்த மிளகாய் (நீளம்) - 100 கிராம், தேங்காய் எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்.

30 வகை உடுப்பி சமையல்!

செய்முறை: வாணலியில் எண்ணெய் ஊற்றி, சீரகம், வெந்தயம், உளுத்தம்பருப்பு, தனியா, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை தனித்தனியாக வறுக்கவும். ஆறிய பின் மிக்ஸி யில் பொடிக்கவும்.

குறிப்பு: பொரியல், அரைத்துவிட்ட குழம்பு உள்பட பலவற்றுக் கும் பயன்படுத்தப்படும் மல்ட்டி பர்ப்பஸ் பொடி இது. உடுப்பி மற்றும் சுற்றுவட்டாரக் கோயில்களில் பரிமாறப்படும் ரசத்துக்கான பொடியும் இதுவே. 

பிஸிபேளாபாத் 

தேவையானவை: சாதம் - 1 கப், துவரம் பருப்பு - அரை கப், புளி - எலுமிச்சை அளவு, வெல்லம் - சிறிதளவு, மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன், பிஸிபேளாபாத் பொடி (125-ம் பக்கம் பார்க்க) - 2 டீஸ்பூன், சின்ன வெங்காயம் - அரை கப், கேரட், பீன்ஸ், உருளை - தேவையான அளவு, தக்காளி - 1, நெய் - 2 டீஸ்பூன், கடுகு - கால் டீஸ்பூன், பெருங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

30 வகை உடுப்பி சமையல்!

செய்முறை:  துவரம்பருப்பை மலர வேகவிடவும். புளியைத் தண்ணீரில் ஊறவைக்கவும். சின்ன வெங் காயத்தைத் தோலுரிக்கவும். கேரட், பீன்ஸ், உருளை ஆகியவற்றைச் சிறிய துண்டுகளாக நறுக்கவும். ஓர் அகலமான பாத்திரத்தில் புளித்தண்ணீர், மஞ்சள் தூள், வெல்லம் சேர்த்து நன்றாகக் கொதிக்கவிடவும். பச்சை வாசனை போன பிறகு உப்பு, வெங்காயம், காய்கறிகள் சேர்த்து வேகவிடவும். காய்கறிகள் வெந்ததும் பருப்பு, பிஸிபேளாபாத் பொடி சேர்த்து, நன்றாகக் கொதிக்க விடவும். பிறகு சாதத்தைச் சேர்த்து, கட்டி இல்லாமல் கிளறவும். வாணலியில் நெய் விட்டு கடுகு, பெருங்காயம் தாளித்து பிஸிபேளாபாத்தில் கொட்டவும். கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லித்தழைச் சேர்த்துப் பரிமாறவும்.

சித்தரான்னம் 

தேவையானவை: சாதம் - ஒரு கப், தேங்காய்த் துருவல் - ஒரு கப், புளிக்கரைசல் – 5 டீஸ்பூன், வெல்லம் - ஒரு டீஸ்பூன், தேங்காய் எண்ணெய், உப்பு – தேவையான அளவு, கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு - தலா கால் டீஸ்பூன், உடுப்பி ரசப்பொடி (103-ம் பக்கம் பார்க்க) - 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 1 (அ) 2, கறிவேப்பிலை - சிறிது.

30 வகை உடுப்பி சமையல்!

செய்முறை: ஒரு வாணலியில் தேங்காய் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும். பிறகு தேங்காய்த் துருவல், புளிக்கரைசல் சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு வெல்லம், உடுப்பி ரசப்பொடி, சாதம், உப்புச் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

கோலி பஜ்ஜி

தேவையானவை: மைதா மாவு  - ஒரு கப், புளித்தத் தயிர் - முக்கால் கப், சமையல் சோடா - சிட்டிகை, பச்சை மிளகாய் - 2, இஞ்சித் துருவல், பெருங்காயம், கறிவேப்பிலை, மல்லித்தழை – சிறிதளவு, சர்க்கரை - ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய், தண்ணீர் - தேவையான அளவு.

30 வகை உடுப்பி சமையல்!

செய்முறை: பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கவும். ஒரு பாத்திரத்தில் மைதா, புளித்தத் தயிர், சமையல் சோடா உப்பு, தண்ணீர் சேர்த்து கெட்டி யாகக் கரைக்கவும். இரண்டு மணி நேரம் ஊறவிடவும். பிறகு பச்சை மிளகாய், இஞ்சி, பெருங்காயம், கறி வேப்பிலை, கொத்தமல்லித்தழைச் சேர்த்து கரைத்த மாவைக் கையால் நன்றாகக் கலக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு மாவைச் சிறிய போண்டாகளாகக் கிள்ளிப் போடவும். பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.

ஹால்பாய்

தேவையானவை: பச்சரிசி, துருவிய தேங்காய், வெல்லத்தூள் - தலா ஒரு கப், உப்பு - ஒரு சிட்டிகை, ஏலக்காய்த்தூள், நெய் – தேவையான அளவு.

30 வகை உடுப்பி சமையல்!

செய்முறை: பச்சரிசியை இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு களைந்து தேங்காய்த் துருவல் சேர்த்து நைசாக அரைக்கவும். வெல்லத் துடன் ஒரு கப் தண்ணீர்விட்டு ஒரு கொதி விட்டு இறக்கி வடிகட்டவும். அடி கனமான வாணலியில் அரைத்த மாவு, வெல்லக் கரைசல், உப்பு சேர்த்துக் கிளறவும். வாணலியில் ஒட்டாமல், சுருண்டு வரும்போது இறக்கவும். நெய் தடவிய தட்டில் கொட்டவும். சிறிது ஆறியதும் துண்டுகள் போடவும்.

கற்பூரவல்லி சட்னி

தேவையானவை: கற்பூரவல்லி இலைகள் - 20, புளி - நெல்லி அளவு, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய் – தலா 2, தேங்காய் எண்ணெய், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, வெல்லம், உப்பு - சிறிதளவு.

30 வகை உடுப்பி சமையல்!

செய்முறை: சுத்தம் செய்த கற்பூரவல்லி  இலைகள், புளி, பச்சை மிளகாய், வெல்லம் சேர்த்து அரைக்கவும். காய்ந்த வாணலியில் தேங்காய் எண்ணெய் விட்டு கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப் பிலைச் சேர்த்து தாளிக்கவும். பிறகு அரைத்த விழுது, உப்புச் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

மாங்காய்  தயிர் பச்சடி

தேவையானவை: மாங்காய் - 1, தயிர் - ஒரு கப், பச்சை மிளகாய் - 3, பெருங்காயம், உப்பு - தேவைக்கு,  தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன், மோர் மிளகாய் - 1.

30 வகை உடுப்பி சமையல்!

செய்முறை: மாங்காய், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கவும். பிறகு குக்கரில் வேக விடவும்.

ஆறியபின் மசிக்கவும். இதனுடன் தயிர், உப்பு, பெருங் காயம் சேர்த்து கலக்கவும்.

காய்ந்த வாணலியில் தேங்காய் எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, மோர் மிளகாய் சேர்த்துத் தாளித்து பச்சடியுடன் கலந்து பரிமாறவும்.

கொஜ்ஜு 

தேவையானவை: பைனாப்பிள் துண்டுகள் - ஒரு கப், புளி - எலுமிச்சை அளவு, வெல்லம் – சிறிதளவு, உப்பு - தேவையான அளவு, மஞ்சள் தூள் - சிட்டிகை, தேங்காய் எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை - தாளிக்க.

வறுத்து அரைக்க:
உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்,  கடலைப்பருப்பு - கால் டீஸ்பூன், வெந்தயம், சீரகம் - தலா  அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 6, கறுப்பு எள் - 2 டீஸ்பூன், தேங்காய்த் துருவல் - ஒரு கப், தேங்காய் எண் ணெய் - 2 டீஸ்பூன்.

30 வகை உடுப்பி சமையல்!

செய்முறை: பைனாப்பிளைப் பொடியாக நறுக்கவும். புளியைத் தண்ணீரில் ஊறவைக்கவும். வெறும் வாணலியில் எள்ளை வெடிக்கும்வரை வறுக்கவும். பிறகு வாணலியில் தேங்காய் எண்ணெய்விட்டு உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, வெந்தயம், சீரகம், காய்ந்த மிளகாய் சேர்த்து வறுக்கவும். வறுத்தப் பொருட்களுடன் எள், தேங்காய்  சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைக்கவும். புளித்தண்ணீரில் மஞ்சள் தூள், வெல்லம் சேர்த்து நன்றாகக் கொதிக்கவிடவும். பிறகு, பைனாப்பிள் துண்டுகள் சேர்த்துக் கொதிக்கவிடவும். இதனுடன் அரைத்த விழுது, உப்புச் சேர்த்து நன்றாகக் கொதிக்க விட்டு இறக்கவும். தேங்காய் எண்ணெயில், கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்துச் சேர்த்து பரிமாறவும்.

நீர் தோசை

தேவையானவை: பச்சரிசி - ஒரு கப், தேங் காய்த் துருவல் - அரை கப், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், உப்பு – தேவைக்கு.

30 வகை உடுப்பி சமையல்!

செய்முறை: பச்சரிசி, உளுத்தம்பருப்பைச் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு களைந்து தேங்காய்த் துருவல், உப்பு சேர்த்து நைசாக அரைக்கவும். தோசைக் கல்லில் மாவை மெல்லிய தோசைகளாக ஊற்றி, வேகவிட்டு எடுக்கவும். மாவை அரைத்த உடன் நீர் தோசை ஊற்றலாம். 

ஓமம் பலத்யா

தேவையானவை:  அரைக்க:   தேங்காய்த் துருவல், ஓமம் - தலா 2 டீஸ்பூன், வெல்லம், தனியா, மிளகு – தலா ஒரு டீஸ்பூன், சீரகம், வெந்தயம் - தலா அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 6, சாம்பார் வெங்காயம் - 2, புளி - ஒரு நெல்லி அளவு, உப்பு - தேவையான அளவு.

30 வகை உடுப்பி சமையல்!

தாளிக்க: நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், பூண்டு பல் – 1.

செய்முறை: அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களைச்  சிறிதளவு தண்ணீர்விட்டு, சற்று கரகரப்பாக அரைக்கவும். வாணலியில், நல்லெண்ணெய் விட்டு கடுகு, பூண்டு சேர்த்து தாளித்து, அரைத்த விழுது,  உப்புச் சேர்த்து வதக்கி இறக்கவும்.

பாகற்காய் பொரியல்

தேவையானவை: பாகற்காய் - ஒரு கப், புளிக்கரைசல் - சிறிதளவு, வெல்லம் - 2  டீஸ்பூன், மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை, உப்பு - தேவையான அளவு, உடுப்பி ரசப்பொடி (103-ம் பக்கம் பார்க்க) - 2 டீஸ்பூன், தேங்காய் எண்ணெய் - 3 டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு – தலா கால் டீஸ்பூன்.

30 வகை உடுப்பி சமையல்!

செய்முறை: பாகற்காயைப் பொடி யாக நறுக்கவும். ஒரு வாணலியில், தேங்காய் எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, பாகற்காய், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். பிறகு, புளிக்கரைசல் சேர்த்து பாகற் காயை வேகவைக்கவும். இதனுடன் வெல்லம், உப்பு, ரசப்பொடிச் சேர்த்து சுருள வதக்கி இறக்கவும்.

அப்பி பாயசம்

தேவையானவை: மைதா - முக்கால் கப், பால் - ஒன்றரை லிட்டர், சர்க்கரை - அரை கப், குங்குமப்பூ - 5  இழைகள், ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன், நெய்யில் பொரித்த முந்திரி, உலர் திராட்சை - 2 டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை, ரீஃபைண்ட் ஆயில் - பொரிக்க.

30 வகை உடுப்பி சமையல்!

செய்முறை: மைதாவோடு உப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி பூரி செய்ய பிசைவதுபோல் பிசைந்து கொள்ளவும். 15 நிமிடங் களுக்குப் பிறகு, மெல்லிய பூரிகளாக தேய்க்கவும். இந்தப் பூரியை, துக்கடாவுக்குப் போல, சிறுசிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். இந்தத் துண்டுகளை, எண்ணெயில் பொரித்து தனியே வைக்கவும். இன்னொரு கடாயில் பால் ஊற்றி, மிதமான தணலில் கொதிக்கவிட்டு, கிளறிக்கொண்டே  இருக்கவும். பால் சுண்ட ஆரம்பித்தவுடன், சர்க்கரை, குங்குமப்பூ, ஏலக்காய்த்தூள் சேர்த்து, 5 நிமிடங்கள் கொதிக்க விடவும். பிறகு, பொரித்து வைத்த பூரிகளைச் சேர்த்து, 5 நிமிடம் கொதிக்கவிடவும். அவை பாலில் ஊறிய உடன், முந்திரி, திராட்சை சேர்த்துப் பரிமாறவும்.

புளி பஜ்ஜி

தேவையானவை: புளி - எலுமிச்சை அளவு, பச்சை மிளகாய் - 4, இஞ்சித்துருவல் - ஒரு டீஸ்பூன், வெல்லம் - 2 டீஸ்பூன், உப்பு – தேவைக்கு, மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன், பெருங்காயம் - ஒரு சிட்டிகை, காய்ந்த மிளகாய் – 2, தேங்காய் எண்ணெய், கறிவேப்பிலை, கடுகு - தாளிக்க.

30 வகை உடுப்பி சமையல்!

செய்முறை: பச்சை மிள காயைப் பொடியாக நறுக்கவும். புளியைக் கரைத்துக் கொள்ளவும். வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி, கடுகு, பெருங் காயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து தாளிக்கவும். பிறகு புளிக்கரைசல், வெல்லம், உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விட்டு, சுருள வதக்கி இறக்கவும்.

ரவா பாத்

தேவையானவை: வறுத்த ரவை - ஒரு கப், வெங்காயம், தக்காளி – தலா 1, கேரட், பீன்ஸ், பட்டாணிக் கலவை - ஒரு கப், வெல்லம், மஞ்சள் தூள், கறிவேப்பிலை - சிறிதளவு, நெய், உப்பு - தேவையான அளவு, உடுப்பி ரசப்பொடி (103-ம் பக்கம் பார்க்க) அல்லது பிஸிபேளாபாத் பொடி (125-ம் பக்கம் பார்க்க) - 2 டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா - கால் டீஸ்பூன்.

30 வகை உடுப்பி சமையல்!

செய்முறை: வெங் காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கவும். ஒரு வாணலியில் நெய் விட்டு  கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு போட்டுத் தாளிக்கவும். வெங்காயம், தக்காளி, காய்கறிகள் சேர்த்து நன்றாக வதக்க வும். பிறகு பிஸிபேளாபாத் பொடி அல்லது ரசப்பொடி, வெல்லம், உப்பு, இரண்டு கப் தண்ணீர் சேர்த்து நன்றாகக் கொதிக்க விடவும். இத்துடன் ரவை சேர்த்துக் கிளறி இறக்கி, பரிமாறவும்.

சாகு

தேவையானவை: உருளைக்கிழங்கு - 4, வெங்காயம், தக்காளி - 2, கேரட், பீன்ஸ், பட்டாணி கலவை - அரை கப், பிஸிபேளாபாத் பொடி (125-ம் பக்கம் பார்க்க) - 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் - 1,  மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன், வெல்லம் - 1 டீஸ்பூன், தேங்காய் எண்ணெய் - ஒரு டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன், பட்டை - சிறிதளவு, லவங்கம் - 2, உப்பு - தேவை யான அளவு. 

30 வகை உடுப்பி சமையல்!

செய்முறை: உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து மசிக்கவும். பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி பட்டை, லவங்கம், கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, வெங்காயம், தக்காளி, மஞ்சள் தூள், காய்கறிகள் சேர்த்து வதக்கி,  உருளைக்கிழங்கு, பிஸிபேளாபாத் பொடி, வெல்லம், உப்பு, தண்ணீர்விட்டு  நன்றாகக் கொதிக்கவிட்டு இறக்கவும்.

உப்பு - புளி தோசை

தேவையானவை: பச்சரிசி - ஒரு கப், உளுத்தம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கு.

30 வகை உடுப்பி சமையல்!

மசாலா செய்ய: தேங்காய் துருவல் - ஒரு கப், உளுத்தம் பருப்பு, தனியா, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், வெந்தயம் - ஒரு சிட்டிகை, புளி - நெல்லி அளவு, வெல்லத்தூள் - அரை கப், காய்ந்த மிளகாய்் – 10.

செய்முறை: அரிசியுடன் உளுத்தம் பருப்பு சேர்த்து ஊறவைக்கவும். மசாலா செய்ய கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் கரகர வெனப் பொடிக்கவும். பிறகு அத்துடன்  அரிசி – உளுந்து சேர்த்து தோசை மாவு பதமாக அரைக்கவும். உப்புச் சேர்த்துக் கரைத்து உடனடி தோசையாக வார்க்கலாம்.

உருளைக்கிழங்கு அரைத்துவிட்ட சாம்பார்

தேவையானவை: உருளைக்கிழங்குத் துண்டுகள் - ஒரு கப், வெங்காயம் - 1, புளி - சிறிய எலுமிச்சை அளவு, வெல்லம் – சிறிதளவு, மஞ்சள் பொடி - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

மசாலா அரைக்க: உளுத்தம்பருப்பு, தனியா, சீரகம் – தலா  ஒரு டீஸ்பூன், வெந்தயம் - கால்  டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 7, தேங்காய்த் துருவல் – சிறிதளவு.

30 வகை உடுப்பி சமையல்!

செய்முறை: வாணலியில்  எண்ணெய் விட்டு, மசாலா அரைக்க தேவையான  பொருட்களைத் தனித்தனியாக  வறுக்கவும். ஆறியபின் விழுதாக அரைக்கவும். புளியைத் தண்ணீரில் ஊறவைக்கவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். ஒரு பாத்திரத்தில், புளிக்கரைசல், மஞ்சள் பொடி, வெல்லம் சேர்த்துக் கொதிக்க விடவும். பச்சை வாசனை போன பின்  உருளை, வெங்காயம், அரைத்த மசாலா, உப்பு, தண்ணீர் சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும்.

குறிப்பு: தாளிக்கவேண்டிய அவசியமில்லை. விரும்பினால், கடுகு மற்றும் கறிவேப்பிலை கொண்டு தாளிக்கலாம்.

வாழைப்பழம் - தேங்காய்ப்பால் பாயசம்

தேவையானவை: வாழைப் பழத் துண்டுகள் - 2 கப், தேங்காய்ப் பால் (முதல் பால், இரண்டாம் பால்) - தலா ஒன்றரை கப், வெல்லத்தூள் - ஒரு கப், ஏலக்காய்த்தூள், உப்பு - ஒரு சிட்டிகை.

30 வகை உடுப்பி சமையல்!

செய்முறை: வெல்லத்தை அரை கப் தண்ணீர் சேர்த்து ஒரு கொதி விட்டு வடிகட்டவும். இதனுடன் இரண்டாம் தேங்காய் பால், ஏலக்காய்த்தூள், உப்பு சேர்த்துக் கலக்கவும். இதை அடிகனமான பாத்திரத்தில் விட்டு ஒரு கொதி வந்தபின் முதல் தேங்காய்ப் பால், வாழைப்பழத் துண்டுகள் சேர்த்துக் கலந்து இறக்கவும்.

உடுப்பி தக்காளி ரசம்

தேவையானவை: துவரம்பருப்பு - ஒரு கப், தக்காளி - 2, புளி - எலுமிச்சம் பழ அளவு, வெல்லம் - ஒரு டீஸ்பூன், மஞ்சள் தூள், நெய், கடுகு, பெருங்காயம், உப்பு - தேவையான அளவு, ரசப்பொடி - 2 டீஸ்பூன், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு.

30 வகை உடுப்பி சமையல்!

செய்முறை: துவரம்பருப்பை வேக விடவும். தக்காளியைப் பொடியாக நறுக்கவும். புளியைத் தண்ணீரில் ஊற விடவும். ஒரு பாத்திரத்தில், புளிக்கரை சல், தக்காளி, வெல்லம், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை கொதிக்கவிடவும். பிறகு பருப்பு, ரசப்பொடி, கொத்தமல்லித்தழை, கறி வேப்பிலை சேர்த்து, ஒரு கொதி விட்டு இறக்கவும். நெய்யில் கடுகு, பெருங் காயம் தாளித்து ரசத்துடன் சேர்த்துப் பரிமாறவும்.

அவல் உப்புக்கரி

தேவையானவை: பேப்பர் அவல் - 2 கப், தேங்காய்த் துரு வல் - ஒரு கப், பச்சை மிளகாய் - 2, சர்க்கரை - ஒரு டீஸ்பூன், தேங்காய் எண்ணெய், கடுகு, உளுத்தம்பருப்பு - தாளிக்க, உப்பு - தேவையான அளவு.

30 வகை உடுப்பி சமையல்!

செய்முறை: பச்சை மிள காயைப் பொடியாக நறுக்கவும். ஒரு பாத்திரத்தில், தேங்காய்த் துருவல், பச்சை மிளகாய், உப்பு, சர்க்கரை, அவல் சேர்த்து கலக்கவும். தேங்காய் எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து அவலுடன் கலக்கவும்.

குறிப்பு: அவலை ஊற வைக்க வேண்டியதில்லை.

தேங்காய் போளி

தேவையானவை: மைதா மாவு - ஒரு கப், நெய் - 2 டீஸ்பூன், தேங்காய்த் துருவல் - 2 கப், வெல்லம்- 2 கப் ஏலக்காய்த்தூள், மஞ்சள் தூள் - சிறிதளவு, உப்பு - கால் டீஸ்பூன்.

30 வகை உடுப்பி சமையல்!

செய்முறை: ஒரு பாத்திரத்தில் மைதாவுடன் மஞ்சள் தூள் சேர்த்து, சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசைந்து கொள்ளவும். பிறகு சிறிதளவு நெய்விட்டு பிசைந்து, அரை மணி நேரம் மூடி வைக்கவும். வெல்லத்துடன் கால் கப் தண்ணீர்விட்டு ஒரு கொதிவிட்டு இறக்கி வடிகட்டவும். வாணலியில், சிறிதளவு நெய்விட்டு, தேங்காய், வெல்லக்கரைசல் சேர்த்துக் கிளறவும். இதுவே பூரணம் (தளர்வாக இருக்கும்போது இறக்கவும்). மைதா மாவை சிறிய உருண்டைகளாக்கி வாழை இலையில் தட்டி, நடுவே பூரணம்வைத்து மூடித் தட்டவும். தோசைக்கல்லில் போளிகளைப் போட்டு இருபுறமும், நன்றாக வேகவிட்டு எடுக்கவும்.

ஷேங்காய் பொடி

தேவையானவை: வேர்க்கடலை - ஒரு கப், பொட்டுக் கடலை - கால் கப், எள் - ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 12, புளி – சிறிதளவு, சீரகம் - ஒரு டீஸ்பூன், பூண்டு – 3 பல், பெருங்காயம் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

30 வகை உடுப்பி சமையல்!

செய்முறை: வெறும் வாணலியில் வேர்க்கடலை, பொட்டுக் கடலை, எள், சீரகம், பூண்டு, புளி, காய்ந்த மிளகாய் ஆகியவற்றைத் தனித்தனியே வறுக்கவும். ஆறியபின் உப்பு சேர்த்து மிக்ஸி யில் பொடிக்கவும்.

குறிப்பு: பருப்புப்பொடி போலவே இதையும் சாதத்துடன் நெய் சேர்த்து பிசைந்து சாப்பிட லாம். இட்லி, தோசைக்கும் தொட்டுக் கொள்ளலாம்.

பிஸிபேளாபாத்  பொடி

தேவையானவை: கொப்ப ரைத் துருவல், கடலைப்பருப்பு - தலா 2 டேபிள்ஸ்பூன், உளுத்தம் பருப்பு, கசகசா, மிளகு - தலா ஒரு டீஸ்பூன், தனியா - 3 டேபிள் ஸ்பூன், பட்டை – 2, லவங்கம் – 2, ஜாதிக்காய்த் தூள் - கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் (நீளம்) - 2, தேங்காய் எண்ணெய் - ஒரு டீஸ்பூன், பெருங்காயம் - அரை டீஸ்பூன்.

30 வகை உடுப்பி சமையல்!

செய்முறை: ஒரு வாணலியில் தேங்காய் எண்ணெய்விட்டு தேவையான பொருட்களைத் தனித்தனியாக வறுக்கவும். ஆறிய பின் மிக்ஸியில் பொடிக்கவும். இதுவே பிஸிபேளாபாத் பொடி.

சாமூரி

தேவையானவை: அரிசிப் பொரி - ஒரு கப், வெங்காயம் - 1, கேரட் துருவல் - அரை கப், பச்சை மிளகாய் - 1, உடுப்பி ரசப்பொடி (103-ம் பக்கம் பார்க்க) - அரை டீஸ்பூன், கொத்தமல்லித்தழை – சிறிதளவு, சர்க்கரை - ஒரு டீஸ்பூன், தேங்காய் எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

30 வகை உடுப்பி சமையல்!

செய்முறை: வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கவும் ஒரு பாத்திரத்தில் வெங்காயம், கேரட் துருவல், பச்சை மிளகாய், உப்பு, கொத்தமல்லித்தழை, சர்க்கரை, தேங்காய் எண்ணெய் சேர்த்து கலக்கவும். பிறகு அரிசி பொரியைச் சேர்த்து, கிளறிப் பரிமாறவும்.

கோவைக்காய் - முந்திரி பொரியல்

தேவையானவை: கோவைக்காய் – கால் கிலோ, முந்திரி – 10, தேங்காய்த் துருவல் - அரை கப், சீரகம் - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் – 2, கடுகு, உளுத்தம்பருப்பு - தாளிக்க, காய்ந்த மிளகாய் - ஒன்று, உப்பு - தேவையான அளவு.

30 வகை உடுப்பி சமையல்!

செய்முறை: கோவைக்காயை நீளமாக நறுக்கவும். முந்திரியைத் தண்ணீரில் சிறிதுநேரம் ஊறவைக்கவும். தேங்காய் துருவலுடன், சீரகம், பச்சை மிளகாய் சேர்த்து மிக்ஸியில் கரகரவென்று தண்ணீர் சேர்க்காமல் அரைக்கவும். ஒரு வாணலியில் கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் தாளித்து, கோவைக்காய் மற்றும் முந்திரி சேர்த்து வதக்கவும். பிறகு சிறிதளவு தண்ணீர் சேர்த்து வேகவிடவும். கோவைக்காய் வெந்ததும் உப்பு, அரைத்த விழுது சேர்த்து வதக்கி இறக்கவும்.

ஹயக்ரவா மட்டி

தேவையானவை: கடலைப் பருப்பு, சர்க்கரை, தேங்காய்த் துருவல் - தலா ஒரு கப், நெய் -  - அரை கப், ஏலக்காய்த் தூள் - சிறிதளவு, முந்திரி, திராட்சை – தலா 10.

30 வகை உடுப்பி சமையல்!

செய்முறை: வாணலியில் சிறிதளவு நெய்விட்டு முந்திரி, திராட்சை சேர்த்து வறுத்து எடுத்துக்கொள்ளவும். கடலைப் பருப்பை மலர வேகவைக்கவும். பிறகு நன்றாக மசிக்கவும். வாணலியில் சிறிதளவு நெய் விட்டு, கடலைப்பருப்பு சேர்த்து வதக்கவும். பிறகு சர்க்கரை, நெய், ஏலக்காய்த்தூள், தேங் காய்த் துருவல் சேர்த்து கிளறி இறக்கவும். நெய்யில் பொரித்த முந்திரி, திராட்சையைச் சேர்க்கவும்.

கறிவேப்பிலை கும்புளி

தேவையானவை: கறி வேப்பிலை - ஒரு கப், சீரகம், தேங்காய்த் துருவல் - தலா ஒரு டேபிள்ஸ்பூன், தயிர் - அரை கப், கடுகு, உளுத்தம்பருப்பு, தேங்காய் எண்ணெய் – தலா ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் – 2, உப்பு – தேவையான அளவு.

30 வகை உடுப்பி சமையல்!

செய்முறை: வாணலியில் தேங்காய் எண்ணெய்விட்டு சீரகத்தையும் பச்சை மிளகாயை யும் நன்றாக வதக்கிக் கொள்ளவும். பிறகு அதே வாணலியில் கறிவேப்பிலை சேர்த்து வதக்க வும். ஆறியவுடன் மிக்ஸியில் தேங்காய், தயிர், உப்பு சேர்த்து நைசாக  அரைக்கவும். தேங்காய் எண்ணெயில் கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து, பரிமாறவும்.

கோஸம்பரி

தேவையானவை: ஊறவைத்த பயத்தம்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன், துருவிய கேரட் - ஒன்று, பச்சை மிளகாய் - (பொடியாக நறுக்கியது) - ஒன்று, இஞ்சித்துருவல் - ஒரு டீஸ்பூன், பெருங்காயம் - 1 சிட்டிகை, எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், தேங்காய்த் துருவல் - 2 டீஸ்பூன், மல்லித்தழை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

தாளிக்க: தேங்காய் எண்ணெய் - கால் டீஸ்பூன், கடுகு, உளுத்தம் பருப்பு - சிறிதளவு.

30 வகை உடுப்பி சமையல்!

செய்முறை:அணைத்துப் பொருட்களையும் நன்றாகக் கலந்து கொள்ளவும். தாளிக்க வேண்டிய வற்றைத் தாளித்து, சாலட் போல சாப்பிடலாம்.

குறிப்பு:
கேரட்டுக்குப் பதிலாக வெள்ளரிக்காய் உபயோகிக்கலாம். பயத்தம்பருப்புக்குப் பதில், மாதுளை முத்துகளும் உபயோகிக்கலாம்.

ஸாஸ்மி

தேவையானவை: கடுகு - ஒரு டீஸ்பூன், புளி - சிறிதளவு,  காய்ந்த மிளகாய் – 4, தேங்காய்த் துருவல் - ஒரு கப், வெங்காயம் - 2, உப்பு – தேவையான அளவு.

30 வகை உடுப்பி சமையல்!

செய்முறை: வெங் காயத்தைப் பொடியாக நறுக்கவும். மிக்ஸியில் தேங்காயுடன், கடுகு, காய்ந்த மிளகாய், புளி, உப்பு சேர்த்து நைசாக அரைக்கவும். இதனுடன்  வெங்காயம் சேர்த்துக் கலக்கவும்.

குறிப்பு: இந்த  உடுப்பி சட்னியை சாதத்துடன் கலந்தோ, இட்லி, தோசையுடனோ சேர்த்து ருசிக் கலாம்.

வல்லாரைக் கீரை துவையல்

தேவையானவை: வல்லாரைக்  கீரை - ஒரு கப், உளுத்தம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் (நீளம்) - 4, புளி – சிறிதளவு, தேங்காய்த் துருவல் - அரை கப், தேங்காய் எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

30 வகை உடுப்பி சமையல்!

செய்முறை: வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து வறுக்கவும். அதே வாணலியில் சுத்தம் செய்த வல்லாரைக்கீரையைச் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ளவும். மிக்ஸியில் உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், வல்லாரைக்கீரை, உப்பு, புளி, தேங்காய்த் துருவல் சேர்த்து  கரகரப்பாக அரைத்துப் பரிமாறவும்.

படங்கள்: தே.அசோக்குமார்