Published:Updated:

லெஹங்கா - புயலுக்கு நடுவே பயணமான கதை!

லெஹங்கா - புயலுக்கு நடுவே பயணமான கதை!
பிரீமியம் ஸ்டோரி
லெஹங்கா - புயலுக்கு நடுவே பயணமான கதை!

நேற்று இல்லாத மாற்றம்ஆர்.வைதேகி

லெஹங்கா - புயலுக்கு நடுவே பயணமான கதை!

நேற்று இல்லாத மாற்றம்ஆர்.வைதேகி

Published:Updated:
லெஹங்கா - புயலுக்கு நடுவே பயணமான கதை!
பிரீமியம் ஸ்டோரி
லெஹங்கா - புயலுக்கு நடுவே பயணமான கதை!

சின்னத்திரை வட்டாரத்திலும் விளம்பர உலகிலும் செந்தாமரை கோகுலகிருஷ்ணனின் பெயர் பிரபலம். இப்போது பெரிய திரையிலும் கால் பதித்திருக்கிறார் இந்த ஃபேஷன் டிசைனர்.

லெஹங்கா - புயலுக்கு நடுவே பயணமான கதை!

ஃபேஷன் டிசைனிங் துறைக்கு வந்த நோக்கம் முதல் வேலை பார்க்கிற பாணி வரை ஒவ்வொன்றிலும் வித்தியாசப்படுகிறார் செந்தாமரை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

லெஹங்கா - புயலுக்கு நடுவே பயணமான கதை!

``வணிகவியல் படிச்சுட்டு, 12 வருஷங் கள் பேங்கிங் துறையில வேலை பார்த்திருக்கேன். கல்யாணத்துக்குப் பிறகு ஃபினான்ஷியல் ட்ரெயினிங் கோர்ஸ் படிச்சேன். இது பெண்கள் அதிகம் ஈடுபடாத துறை. சவாலான இந்த கோர்ஸ் முடிச்சுட்டு, கெஸ்ட் லெக்சரரா ஃபினான்ஷியல் பிளானிங் வகுப்புகள் எடுத்துக்கிட்டிருந்தேன். ஒரு கட்டத்துல மற்ற பெண்களுக்கும் உதவற மாதிரி ஏதாவது செய்தா என்னன்னு தோணினது. ஃபேஷன் டிசைனிங் துறை மூலமா நிறையப் பெண்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்க முடியும்னும் தோணினது. நிறைய ஊர்களுக்குப் பயணம் செய்து, நிறைய விஷயங்களைத் தெரிஞ்சுக்கிட்டு ஆன்லைன் பொட்டீக் பிசினஸை ஆரம்பிச்சேன்.

வெளிநாடுகள்லேருந்து நிறைய ஆர்டர்கள் வந்தன. அடுத்தகட்டமா, பிரைடல் ஸ்டூடியோ ஆரம்பிச்சேன். ‘அழகு’ என்ற பெயர்கொண்ட என் பிராண்ட், கடந்த அஞ்சு வருஷங்களா நல்லா போயிட்டிருக்கு. டிரெஸ் டிசைன், போர்ட் ஃபோலியோ ஷூட், விளம்பரப்படங்கள்னு ஃபேஷன் தொடர்புடைய மற்ற விஷயங் களையும் பண்ணிக்கிட்டிருக்கேன்...’’ என்கிறவர், விஜய் டி.வி பிரபலம் ப்ரியா பவானிஷங்கருக்கு பெர்சனல் காஸ்ட்யூம் டிசைனரும்கூட. ‘நட்புன்னா என்ன தெரியுமா?’ என்கிற படத்தில், அதே விஜய் டி.வி பிரபலம் கவினுக்கும் காஸ்ட்யூம் டிசைனர்!

லெஹங்கா - புயலுக்கு நடுவே பயணமான கதை!
லெஹங்கா - புயலுக்கு நடுவே பயணமான கதை!

‘`இதுவரை 300-க்கும் அதிகமான திருமணம், ரிசப்ஷன்களுக்கு டிரெஸ் டிசைன் பண்ணிக் கொடுத்திருக்கேன். இதற்காக லட்சக்கணக்குல  பணம் செலவழிச்சு டிசைன் செய்யறது இப்போ டிரெண்ட். ஆனால், ஒருநாள் கூத்து  மாதிரி அடுத்த நாளே அந்த டிரெஸ் வார்ட் ரோப்ல முடங்கும். சென்ட்டிமென்ட் காரணமா பத்திரப்படுத்தறவங்க இருக்காங்க. பலரும் அந்த உடைகளைத் திரும்ப உபயோகிக் கிறதே இல்லை. இந்த உடைகளைக் குறிப் பிட்ட வைபவம் முடிஞ்ச பிறகும் வேற வேற சந்தர்ப்பங்களுக்கு உடுத்திக்கிற மாதிரி மாத்திக்கிற ட்ரெண்ட் இப்போ வர ஆரம் பிச்சிருக்கு. `சங்கீத்' நிகழ்ச்சிக்கு கிராப் டாப்பும் (தொப்புள் வரை நீளமுள்ள டாப்), ஸ்கர்ட்டும் போடறது ஃபேஷன். விசேஷம் முடிஞ்சதும் அதையே ஒரு முழுமையான இண்டோ-வெஸ்டர்ன் உடையா மாத்திக் கொடுத்துடறேன்.

லெஹங்கா - புயலுக்கு நடுவே பயணமான கதை!

ஒரு சிலர் கல்யாணத்துக்கான புடவையை விட, பிளவுஸுக்கு எக்கச்சக்கமா செலவழிக் கிறதையும் பார்க்கிறோம். ஐம்பதாயிரம் ரூபாய் செலவழிச்சு டிசைன் பண்ற பிளவுஸை, அப்புறம் என்ன செய்யறது? அதையே முன்பக்கம் அழகான டிசைனா மாத்தி, `யோக்' வடிவுல வெச்சு, ஒரு டிரெஸ்ஸா பண்ணிக்கொடுத்துடறேன். இந்தத் தலைமுறைப் பெண்கள் பலரும் புடவை கட்டற பழக்கம் இல்லாதவங்களா இருக்காங்க. நிச்சயதார்த்தம் முடிஞ்சதுமே அந்தப் புடவைக் கான ஜாக்கெட்டை கொண்டு வந்து மாடர்ன் டிரெஸ்ஸா மாத்திக்கிறாங்க...’’ - புதுத் தகவல் தருகிறார் இந்தப் புதுமையான டிசைனர்.

லெஹங்கா - புயலுக்கு நடுவே பயணமான கதை!

‘`வர்தா புயல் டைம்ல மங்களூர்ல ஒரு கல்யாணம்... மொத்தக் குடும் பத்துக்கும் டிரெஸ் ரெடி பண்ணி அனுப் பிட்டேன். கல்யாணப் பெண் ணோட முகூர்த்த ஜாக்கெட்டும், ரிசப்ஷனுக்கான லெஹங்காவும் முடியற தறுவாயில் இருந்தப்ப வர்தா புயல் வந்தது. எம்ப்ராய்டரி பண்ணிட்டிருந்த துணி மேல அந்த இடத்தோட மேல்கூரை விழுந்ததுல மொத்தமும் நாசம். கரன்ட்டும் இல்லை. நல்லவேளையா, என் கைவசம் மெட்டீரியல் இருந்தது. மெழுகுவத்தி வெளிச்சத்துல எப்படியோ சமாளிச்சு, மறுபடி ரெடி பண்ணிட்டேன். எல்லாம் முடிச்சு அனுப்பலாம்னா, மங்களூருக்கு அனுப்ப கொரியர் சர்வீஸ் இல்லை. தெரிஞ்சவங்களைப் பிடிச்சு ஒருவழியா அனுப்பி வெச்சேன். அது அவங்க கைகள்ல சேர்கிற வரைக்கும் நிம்மதியே இல்லை. இதே மாதிரி, 2015-ம் வருஷ வெள்ளத் துல நீந்திக்கிட்டுப் போய் கல்யாண டிரெஸ்ஸை கொடுத்த அனுபவத்தையும் மறக்க முடியாது. இத்தனை கஷ்டங்களுக்குப் பிறகு, சம்பந்தப் பட்டவங்க அந்த உடைகளைப் பாராட்டற போது கிடைக்கிற மகிழ்ச்சி வேற லெவல்!

லெஹங்கா - புயலுக்கு நடுவே பயணமான கதை!

மணமகளுக்கும் மணமகனுக்கும் மேட்ச்சிங்கான கலர்கள்ல டிரெஸ் டிசைன் பண்றது லேட்டஸ்ட் ஃபேஷன். கல்யாணப் பெண் பிங்க் கலர்ல புடவை வாங்கும்போது, மணமகனுக்கு அதை மேட்ச் பண்ணியாகணும். டார்க் நீலம் அல்லது கோல்டு கலர்ல ஷெர்வானி டிசைன் பண்ணிட்டு, காலர்லயோ, கஃப்லயோ பிங்க் கலரை வெச்சு மேட்ச் பண்ணிட்டா உறுத்தாது'' என்கிறவர், இப்போது ஒரு சாஃப்ட் வேர் உருவாக்கும் முயற்சியில் இருக்கிறார்.

லெஹங்கா - புயலுக்கு நடுவே பயணமான கதை!

``சம்பந்தப்பட்டவங்களோட முகத்தை மட்டும் போட்டோ எடுத்துட்டா, அவங்களுக்கு லெஹங்காவோ, இண்டோ-வெஸ்டர்னோ செட் ஆகுமா, அவங்க விரும்பற கலர் பொருந்துமான்னு இந்த சாஃப்ட்வேர் காட்டிடும். கூடிய சீக்கிரம் இது அறிமுகமாகிடும். அடுத்த தலைமுறை மணப்பெண்களுக்கு என்னோட கிஃப்ட்டா இருக்கும் இந்த முயற்சி!'' என்கிறார் செந்தாமரை.

வாவ்... இது ரொம்ப நல்லா இருக்கே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism