Published:Updated:

என் மகள்... என் வாழ்க்கை... என் ரசனை

என் மகள்... என் வாழ்க்கை... என் ரசனை
பிரீமியம் ஸ்டோரி
என் மகள்... என் வாழ்க்கை... என் ரசனை

சந்திப்பு படம்: மீ.நிவேதன் - யாழ் ஸ்ரீதேவி

என் மகள்... என் வாழ்க்கை... என் ரசனை

சந்திப்பு படம்: மீ.நிவேதன் - யாழ் ஸ்ரீதேவி

Published:Updated:
என் மகள்... என் வாழ்க்கை... என் ரசனை
பிரீமியம் ஸ்டோரி
என் மகள்... என் வாழ்க்கை... என் ரசனை
என் மகள்... என் வாழ்க்கை... என் ரசனை

ரு  நடிகை  என்பதைத்தாண்டி, இன்று சமூகத்தில் அரங்கேறிக்கொண்டிருக்கும் அநியாயங்களை எதிர்த்து ஒலிக்கும் குரலாகவும் மாறியிருக்கிறார் கௌதமி. தன்னைக் கவனித்துக்கொண்டிருக்கும் மக்களுக்காக, தனிப்பட்ட விஷயங் களையும் ஒளிவுமறைவின்றி பகிர்ந்து கொள்ளத் தயாராக இருக்கிறார் இந்த மனுஷி. கமலுடனான நட்பின் பிரிவு, தன் மகளின் பொதுத்தேர்வுக் கவனம், சிங்கிள் பேரன்ட்டிங் என்று எதைப் பற்றிப் பேசினாலும், இவரிடம் இருந்து வருகிறது தெளிவான பதில். நீலாங்கரையில் இயங்கும் கெளதமியின் அலுவலகத்தில்  ஒரு மாலை நேர உரையாடல்...

பொண்ணு என்ன பண்றாங்க? அவங்களை ஸ்கிரீன்ல பார்க்கலாமா?

``எனக்கு எல்லாமே என் பொண்ணு சுப்புலட்சுமிதான். 17 வயசுப் பொண்ணுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் தரணுமோ, அந்த அளவுக்கு அவங்களைப் பார்த்துக்கறேன். இது எக்ஸாம் நேரம். மற்ற பெற்றோர் மாதிரியே நானும், பொண்ணு எக்ஸாம் நல்லா எழுத இரவும் பகலுமா சப்போர்ட்டா இருக்கேன். அடுத்து என்ன படிக்கப் போறாங்கன்னு மார்க்ஸ் வந்த பிறகுதான் ரெண்டு பேரும் சேர்ந்து தீர்மானிக்கணும். ஸோ, இப்போதைக்கு லைஃப் ரொம்ப தெளிவா போய்க்கிட்டு இருக்கு.

என் பொண்ணு கிரியேட்டிவான லைஃப் வாழ நினைக்கிறாங்க. புதுமையான விஷயங்கள்ல ஆர்வம் இருக்கு. ஃபிலிம் மேக்கிங், லிட்ரேச்சர், ஹிஸ்ட்ரின்னு அவங்க ஆசைக்கு எல்லையே இல்லை. அதைவிட முக்கியம் அவங்க அடுத்து பண்ணப் போற டிகிரி.

அவங்க இன்னும் குழந்தைதானே..! இப்போதைக்கு நடிப்புங்கற எண்ணம் இல்லை. அவங்க  வாழ்க்கையை அவங்களே தீர்மானிக்கட்டும். ஓர் அம்மாவா நான் அவங்க எடுக்கற முடிவுக்கு சப்போர்ட்டா இருப்பேன்.’’
 
சிங்கிள் பேரன்ட்டிங்ல `தந்தையுமான'வரா இருந்து வளர்க்கும் அனுபவம் எப்படி..?

‘`ஆரம்பத்தில் இருந்தே சிங்கிள் பேரன்ட் தான். தந்தை, தாய்னு பிரிச்சுப் பார்க்க முடியாத சூழல்லதான் என் பொண்ணை வளர்க்கிறேன். குழந்தை வளர்ப்பே சேலஞ் சான விஷயம்தான். குழந்தைகளோட அடிப்படைத் தேவைகளை... மனம், செயல்னு முழுமையா புரிஞ்சுகிட்டு வளர்க்கணும், கொஞ்சம் மிஸ் ஆனால்கூட, நாம நம்ம பொறுப்பை சரியா செய்யலைன்னு பசங்களோட நடவடிக்கைகளே காட்டிக் கொடுத்திடும். `குழந்தைங்க நம்மோட கனவை நனவாக்கப் பிறந்தவங்க இல்லை'னு பெத்தவங்க புரிஞ்சுகிட்டாலே ஆசை, நிராசை எல்லாம் நமக்கு வராது. குழந்தைகள் தனித்தனி மனிதர்கள். அப்படிப் புரிஞ்சுதான் என் பொண்ணை வளர்க்கிறேன். என் பொண்ணுகூட அதிக நேரம் இருக்கணும்கிறதுக்காகவே என் வேலைச்சூழலை மாத்திக்கிட்டேன்.

என் மகள்... என் வாழ்க்கை... என் ரசனை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதேநேரம், அவங்க ஃப்ரெண்ட்ஸோட நேரம் செலவழிக்கவும் அனுமதிக்கணும். சின்ன வயசுல நான் ரொம்ப தனிமை விரும்பி. கூட்டமா இருக்கிற இடத்துல என்ன பண்றதுன்னு தெரியாது. அது எனக்குப் பிடிச்சிருந்தது. என் நாய்க்குட்டி, என் வீடுன்னு இருந்துட்டேன். என் பொண்ணு சோஷியல் டைப். அவங்க எல்லோரோடும் ஸ்மூத்தா பழகறாங்க.

அவங்க டீன்ஏஜ்ல இருக்கிறதுனால நிறைய விஷயங்களை ஷேர் பண்ணிக்கிறேன்.  உடல், மனம், அரசியல் முதற்கொண்டு, ஒரு பிரச்னை வந்தா எப்படிச் சமாளிக்கணும்கிறது வரை எல்லாத்தையும் பேசுறோம். எல்லா நேரத்திலும் யாராவது வந்து நமக்கு உதவி செய்ய மாட்டாங்க. நாமேதான் தயாராகணும். சந்தோஷம் வரும்போது, அதையும் ஹேண்டில் பண்ணத் தெரியணும். இப்படி, பேலன்ஸ்டான மனநிலையில் எதையும் எதிர்கொள்ளும் பக்குவத்தோடு அவங்களை வளர்த்திருக்கேன். எம்பொண்ணு நல்லா எழுதுவாங்க. நிறையப் படிப்பாங்க. ஸ்போர்ட்ஸ் பிடிக்கும், ட்ராவலிங் ரொம்ப பிடிக்கும், ஆர்ட் பிடிக்கும். அவங்க சூழலை நானும் ரசிக்கிறேன்.

எங்களோட புதிய பயணம் அவ்வளவு ரசனையா போய்க்கிட்டு இருக்கு. அதற்காக நான் எதையும் விட்டுக்கொடுத்தேன்னு சொல்ல மாட்டேன். எதையும் தியாகம் பண்ணலை. ஒண்ணைத் தேர்ந்தெடுக்கும்போது ஒண்ணை விடவேண்டி இருக்கும். அது இயல்பு. என் வாழ்க்கையிலும் அதைத்தான் செய்தேன்.
 
வேலைக்குப் போய் சம்பாதிச்சு குடும்பம் நடத்தவேண்டிய சூழல் எனக்குக் கிடையாது. அதனால, என் குழந்தையோடு இருக்கிற மாதிரியான வேலைகளைத் தேர்ந்தெடுத்தேன்.வேலைக்கும் போயிட்டு குழந்தைகளையும் கவனிச்சுக்கிற எல்லா அம்மாக்களையும் நான் தலைவணங்கறேன்” என்பவரிடம், குழந்தை வளர்ப்புக்கான டிப்ஸ் அத்தனை கொட்டிக் கிடக்கிறது!

‘`புதுசா நமக்கு ஒரு ஃப்ரெண்ட் அல்லது வேலை கிடைக்கிறப்ப மெள்ள மெள்ளத்தான் புரிஞ்சுப்போம். அதே மாதிரி குழந்தைகளைப் பத்தின சின்ன சின்ன விஷயங்களையும் தேடித்தேடி புரிஞ்சுக்கணும். நாம அவங்க கிட்ட கத்துக்க நிறைய விஷயங்கள் இருக்கு. `நாமதான் பெரியவங்க, நமக்குதான் எல்லாம் தெரியும்'னு நினைச்சா ஒண்ணுமே கத்துக்க முடியாது.

என் வாழ்க்கையோட அழகை என் மகளோட அன்புலதான் பார்க்கிறேன். அவளுக்காகத் தொடங்கும் எந்த விஷயத்திலும் அந்த அழகு தானாக வந்து ஒட்டிக்கொள்கிறது” என்று சிலாகிக்கிறார் கௌதமி.

தான் சந்திக்கும் சவால்களில் இருந்து எப்படி மீள்கிறார் இந்த ஃபீனிக்ஸ்..?

‘`கடினமான சூழலைக் கடக்க நிச்சயமா ஒரு தன்னம்பிக்கை வேணும். சவாலான நேரங்கள்ல தன்னம்பிக்கையை நாமே ஏற்படுத்திக்கணும். சின்னச்சின்ன விஷயங்கள்தான் பெரிய பிரச்னைகளைத் தாண்ட வைக்கும்...’’ என புதிய நம்பிக்கை அளிக்கிறார்.

கௌதமியின் `லைஃப் எகெய்ன் ஃபவுண் டேஷன்' என்ன செய்யப் போகிறது?

 ‘`லைஃப்ல விதவிதமான பிரச்னைகள் வரும். ஒரு பிரச்னையை சரிபண்ணின உடனே அடுத்தது வரும். `இதை என்னால தாங்கிக்க முடியுமா?'ங்கிற அளவுக்கு, இன்னொரு பிரச்னை வரும். ஆனா, அதையும் தாண்டுறதுதான் வாழ்க்கை. அப்படி கடக்கறப்ப நமக்குள்ள நிச்சயம் ஒரு மாற்றம் வரும்.

எனக்கு கேன்சர் பாதிப்பு ஏற்பட்டப்போ மரணத்தையே ஃபீல் பண்ண முடிஞ்சது. அதுக்குப் பிறகுதான் வாழ்க்கையோட அர்த்தம் புரிஞ்சது. வாழ்க்கையை எப்படி வாழணும்னு கத்துக்கிட்டேன். கேன்சர் எக்ஸ்பீரியன்ஸ் எனக்கு நிறையவே கத்துக்கொடுத்தது.

ஹீமோதெரபி மாதிரியான சிகிச்சைகளை என்னால தாங்க முடிஞ்சதுக்குக் காரணம், அடிப்படையிலேயே நான் பராமரித்து  வந்த என் ஹெல்த், சரியான உணவுமுறை, முறையான வாழ்க்கைமுறை. வாழ்க்கையை பெஸ்ட்டா வாழ ஒரு டூல் தேவை. இந்த யோசனையில் ஆரம்பித்ததுதான் ‘லைஃப் எகெய்ன் ஃபவுண்டேஷன்'.

குழந்தைகள் மற்றும் பெண்கள் மத்தியில் நிறைய வொர்க் பண்ணணும். குழந்தைப் பருவத் திலேயே அவங்க வாழ்க்கை முறையையும், சிந்திக்கிற விதத்தையும் சிறப்பா அமைக்கணும். இதைத்தான் ஃபவுண்டேஷன் மூலமா முதல்ல பண்ணப் போறோம். இன்னும் நிறைய திட்டங் களும் இருக்கு...’’

மீண்டும் சினிமாவில் கௌதமியைப் பார்க் கலாமா?

‘`கடந்த 10  வருஷங்களா கேமரா பின்னாடி வொர்க் பண்ணிட்டுதான் இருந்திருக்கேன். அது தொடரும். ஒரு  ஃபேஷன் டிசைனரா என்னோட பணியை விரும்பி செய்றேன். மறுபடியும் கேமராவுக்கு முன்னாடி வொர்க் பண்றது பற்றி யோசிக்கலை. இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா லைஃப் செட்டில் ஆயிட்டு இருக்கு. அதை ரசிச்சுட்டு இருக்கேன்!” 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism