தினம் ஒரு மரம்!

30 நாள் அவள் சேலஞ்ச் நிகழ்வில், சென்னையைச் சேர்ந்த வாசகி அமிர்த மீனா, அவரின் தோழி ஷைலஜா ராம்ஜியுடன் இணைந்து மரக்கன்றுகள் நடுவதற்குத் திட்டமிட்டு, வெற்றிகரமாகச் செயல்படுத்தி இருக்கிறார். இதற்காகவே நகரின் பல பகுதிகளுக்கும் சைக்கிளிலேயே பயணம் செய்திருக்கிறார்கள் இந்தப் பெண்கள்!

``மரக்கன்றை நடுவது எளிது. ஆனால், ஊன்றிய பின் பலர் அதன் நிலைமை பற்றி எண்ணுவதில்லை. அதனால், நாங்கள் இருவரும் அருகில் வசிப்பவரின் உத்தரவாதத்தைப் பெற்ற பின்னரே அவ்விடத்தில் மரக்கன்றை ஊன்ற வேண்டும் என்பதில் உறுதியுடன் இருந்தோம். அதோடு, மரக்கன்றுகளைத் தேர்வு செய்வதிலும் கவனமாக இருந்தோம். நம் நாட்டு மரவகைகள் மற்றும் அவற்றின் பயன்கள் பற்றியும் தகவல்கள் சேகரித்தோம். வேர், காய், கனி, இலை, மரப்பட்டை என மரத்தின் அனைத்துப் பகுதிகளுமே பயன் தருவதை அறிந்தபோது, ஆச்சர்யத்துக்கு மேல் ஆச்சர்யம்!

சரி... சவாலுக்கு வருவோம். மிகப்பெரிய சிரமம் யாதெனில், சாலையின் இருபுறமும் இருந்த சிமென்ட் நடைபாதையே... இதனால் பல இடங்களில் மரம் வளர்க்கும் வாய்ப்பை இழந்துவிடுகிறோம்.

சில இடங்களில் மரம் என்றதுமே பயம் கொண்டனர். காரணம், வர்தா புயலின் வரவால் அவர்களுக்கு ஏற்பட்ட இழப்பு. சிலர் மரங்களைக் குழந்தையாகவே பாவித்திருந்தனர். அதனால், மீண்டும் ஒரு இழப்பை தாங்கும் வலிமையற்ற மனநிலையில் இருந்த அவர்கள் மரக்கன்று நட வேண்டாம் எனத் தடுத்தனர்.

ஒரு வீட்டிலோ, `இந்த மரம் பூ பூக்குமா? அப்ப அந்தப் பூ, இலை கீழே விழுமே... அதையும் சுத்தம் செய்ய வேண்டுமே’ எனக் கேட்டனர். `தினமும் தண்ணி ஊத்தணுமா?’ என்கிற கேள்வி வேறு. அவர்களுக்கும் அந்த மரத்தின் பலன்களை எடுத்துக் கூறி, ஒருவழியாகச் சம்மதிக்க வைத்து மரக்கன்றை ஊன்றினோம்.

ஆனால், அறிமுகமே இல்லாத பலர் எங்களுக்கு உதவி செய்தனர். நாங்கள் ஊன்றிய மரக்கன்றுக்கு வேலி அமைத்தனர். தினமும் தண்ணீர் ஊற்றி குழந்தையைப்போலப் பாதுகாக்கின்றனர்.

முகநூலில் எங்களது `அவள் விகடன்' சவால் பதிவைப் பார்த்தவர்கள் அவர்களின் பகுதிக்கு வருமாறு அழைப்பும் விடுத்தனர். சிலர் எங்களைப் போலவே மரக்கன்று நட விளக்கங்களும் கேட்டனர். இப்போது எங்களது சவால் நிறைவடைந்துவிட்டது. அதனால் என்ன... நானும் என் தோழியும் குறைந்தது வாரம் ஒருமுறையேனும் மரக்கன்று நட வேண்டும் என்று சூளுரைத்துள்ளோம்’’ என்று பெருமிதத்துடன் கூறுகிறார் அமிர்த மீனா. அவரின் தோழி ஷைலஜாவும் காற்றில் மரம் அசைவது போல மகிழ்ச்சியுடன் ஆமோதிக்கிறார்!

* `அவள் சேலஞ்ச்’ வாசகிகள் தங்கள் செயல்பாடுகளை ‘அவள் விகடன் ஃபேஸ்புக்’ இன்பாக்ஸுக்கு அனுப்பி வையுங்கள். அதோடு, அவரவர் ஃபேஸ்புக் பக்கத்திலும் #avalvikatanchallenge என்கிற ‘ஹேஷ்டேக்’ உடன் பதிவு செய்யுங்கள்.

* ‘அவள் சேலஞ்ச்’சில் பங்கேற்க விருப்பமா? ‘அவள் விகடன் ஃபேஸ்புக் இன்பாக்ஸ்’ அல்லது ‘aval@vikatan.com’ என்கிற மின்னஞ்சலில் அல்லது 044-2854 3300 என்கிற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளுங்கள்.

* `அவள் சேலஞ்ச்’ நிகழ்ச்சியில் பங்கேற்கிற மற்ற வாசகிகள் என்ன செய்கிறார்கள்? அடுத்தடுத்த இதழ்களில் அறிவோம்!