Published:Updated:

தடுப்போம்... குழந்தைகள் மீதான கொடூரம்!

தடுப்போம்... குழந்தைகள் மீதான கொடூரம்!
பிரீமியம் ஸ்டோரி
தடுப்போம்... குழந்தைகள் மீதான கொடூரம்!

அதிர்ச்சிபொன்.விமலா

தடுப்போம்... குழந்தைகள் மீதான கொடூரம்!

அதிர்ச்சிபொன்.விமலா

Published:Updated:
தடுப்போம்... குழந்தைகள் மீதான கொடூரம்!
பிரீமியம் ஸ்டோரி
தடுப்போம்... குழந்தைகள் மீதான கொடூரம்!
தடுப்போம்... குழந்தைகள் மீதான கொடூரம்!

குழந்தைகளிடம் பேசிப் பழகி, அவர்களின் அன்புக்குரியவராக மாறுபவர்களில் சிலர்தான் இத்தகைய செயல்களில் மிகச் சுலபமாக ஈடுபடுவார்கள்.

`குழந்தை விளையாடிக்கொண்டிருக் கிறாள். இது நம் அப்பார்ட்மென்ட்தானே... காம்பவுண்டைத் தாண்டி எங்கே போய்விடப் போகிறாள்? அதற்குள் அருகில் இருக்கும் கடைக்குப் போய் வந்துவிடலாமே’ என நினைத்ததுதான் ஹாசினியின் பெற்றோர் செய்த தவறு.

கடைக்குப் போய்விட்டு வீடு திரும்பி ஹாசினியைத் தேடினால், அவள் எங்குமே கிடைக்கவில்லை. அப்பார்ட்மென்ட்டில் பொறுத்தப்பட்டிருந்த `சிசிடிவி கேமரா'வும் குழந்தை வெளியே எங்கும் போகவில்லை என்பதைத்தான் உறுதி செய்தது. என்னதான் நடந்தது?

கார் பார்க்கிங் அருகில் விளையாடிக் கொண்டிருந்த ஹாசினி, வளர்ப்பு நாயைப் பார்க்கும் ஆர்வத்தில்தான் அந்த இளைஞன் கூப்பிட்டதும் அவன் வீட்டுக்குப் போயிருக்கிறாள். நாயிடம் கொஞ்சி விளையாடியிருக்கிறாள். ஆனால், அவனோ கொடூர நாயாக மாறி ஈவு இரக்கமில்லாமல் ஹாசினியைப் பலவந்தப்படுத்தியிருக்கிறான். குழந்தை என்றும் பாராமல் தன் பாலியல் வக்ரத்துக்கு இரையாக்கிக்கொண்டிருக்கிறான். சாப்பிட்ட பிறகு தூக்கி எறியும் எச்சில் இலையைப் போலவே, ஹாசினியை ஒரு பெட்டிக்குள் அடைத்து, தொலைதூரத்துக்குக் கொண்டுசென்று, குப்பையைப் போல கொட்டி, பெட்ரோல் ஊற்றி எரித்துச் சாம்பலாக்கி இருக்கிறான். நினைத்தாலே பதறச் செய்யும் இந்தக் கொடுமை சென்னை, போரூரை அடுத்த மதனந்தபுரத்தில் நடந்தது.

ஏதுமறியா ஏழு வயதுச் சிறுமியைக் கொன்றது மட்டுமல்ல... அடுத்த நான்கு நாள்களும் எந்தக் குற்ற உணர்வுமே இல்லாமல், குழந்தையைத் தேடுவது போலவே நாடகமாடியிருக்கிறான். செய்தியைக் கேள்விப்படும் நமக்கே இத்தனை கோபமும், சமூகத்தின் மீதான வெறுப்பும் இருக்கிறதென்றால், குழந்தையைப் பெற்றவர்கள் எப்படி துடிதுடித்துப் போயிருப்பார்கள்..?!

இந்திய அளவில் ஓர் ஆண்டுக்கு 10 ஆயிரத்துக்கும் அதிக குழந்தைகள்மீது பாலியல் தாக்குதல்கள் நடந்திருப்பதாக வழக்குகள் பதிவாகியிருக்கின்றன. அதிர்ச்சியாக இருக்கிறதா? அதுதான் உண்மை. குழந்தை களுக்கு எதிரான பெரும்பாலான குற்றங்கள் வெளியில் தெரியாமலேயே புதைக்கப்படு கின்றன என்பது மற்றோர் அதிர்ச்சித் தகவல்.

அறிமுகமானவர்களிடமும் எச்சரிக்கை தேவை!

``பாலியல் தொழில் செய்ய, பிச்சை எடுக்க, குழந்தைத் தொழிலாளர்களாகப் பயன்படுத்திக்கொள்ள,

தடுப்போம்... குழந்தைகள் மீதான கொடூரம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

குழந்தை இல்லாதவர்களுக்கு விற்றுவிட என பல்வேறு காரணங்களுக்காகக் குழந்தைகள் கடத்தப்படுகிறார்கள். இதில் பாலியல் குற்றங்களுக்காகக் குழந்தைகளைக் கடத்துபவர்கள்... குழந்தைகளுக்கோ, பெற்றோருக்கோ அறிமுக மானவர்களாகவே இருப்பார்கள் என அதிர்ச்சி அளிக்கும் தகவல்களுடன் பேசுகிறார் குழந்தை உரிமைகள் அமைப்பின் செயல்பாட்டாளர் நம்பி.

‘`குழந்தைகளில் இருபாலருமே பாலியல்ரீதியாக துன்புறுத்தப்படுகிறார்கள் என்றாலும், பெருமளவில் பாதிக்கப்படுவது பெண்குழந்தைகளே..! குழந்தைகளிடம் பேசிப் பழகி, அவர்களின் அன்புக்குரியவராக மாறுபவர்களில் சிலர்தான் இத்தகைய செயல்களில் மிகச் சுலபமாக ஈடுபடுவார் கள். உறவினர்கள், நண்பர்கள், அக்கம் பக்கத்தினர் என யாராக இருந்தாலும், குழந்தைகள் அவர்களுடன் பழகும்போது எச்சரிக்கையாகவும் கவனத்துடனும் இருப்பது மிகவும் அவசியம்’’ என்கிற நம்பி, குழந்தைகள் கடத்தப்படுவதற்கான காரணங்களையும் பட்டியலிட்டார்.

``முன்பின் தெரியாத நபர்களாலோ, தெரிந்த நபரின் துணையுடனோ குழந்தைகள் கடத்தப்படுவார்கள். அப்படி கடத்தப்படும் குழந்தைகளில் பெரும்பாலும் 13 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளைப் பாலியல் தொழில் செய்யப் பயன்படுத்துகிறார்கள். குறைவான கூலிக்குத் தனியார் தொழிற்சாலைகளிலும், சிறுதொழிற்கூடங்களிலும் கொத்தடிமை களாக மாற்றப்படுகிறார்கள். இந்தியாவின் சில மாநிலங்களில் திருமணத் தேவைக்குப் பெண்கள் கிடைப்பதில்லை. அதுபோன்ற பகுதிகளுக்கும் பெண்குழந்தைகள் கடத்தப்பட்டு விற்கப் படுகிறார்கள். குழந்தைகளைக் கடத்திச் சென்று, குழந்தை இல்லாத பெற்றோருக்கு
விற்பனை செய்கிறார்கள். சில குழந்தை கள் வீட்டுவேலைகள் செய்யவும், விவசாய வேலைகள் செய்யவும் கடத்தப்படு கிறார்கள். பிச்சை எடுக்கவும் கடத்தப் படுகிறார்கள். பிச்சை எடுப்பதற்காகக் கடத்தப்படும் குழந்தைகளை வாட கைக்கு விடுவதுபோன்ற அதிர்ச்சித் தொழில்களும் நடக்கின்றன.

கிராமப்புறங்களில் தத்தெடுப்பதாகக் கூறியும் குழந்தைகளைக் கடத்துகிறார்கள். ஏழைப் பெற்றோரின் வறுமையைப் பயன்படுத்தி, அவர்களை மூளைச் சலவை செய்தும் தத்தெடுப்பு என்கிற பெயரில் குழந்தைகளைக் கடத்துகிறார்கள். ஆகவே பெற்றோர்களே, குழந்தைகளின் பாதுகாப்புக்கு முழு பொறுப்பாவார்கள்’’ என்கிற நம்பி, குழந்தைகளைக் கையாளும் விதம் குறித்தும் பேசினார்.

‘`குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களில் பெரும்பாலானவை நெருங்கிய உறவினர்கள்,

தடுப்போம்... குழந்தைகள் மீதான கொடூரம்!

நண்பர்களால்தான் நிகழ்கின்றன. அதனால், யாரையும் அத்தனை எளிதாக நம்புவது தவறு. ஆண் குழந்தைகளுக்குப் பாலியல் துன்புறுத்தல்கள் நிகழாது எனவும் பெண் குழந்தைகளுக்குத்தான் அத்தகைய பிரச்னைகள் நிகழும் எனவும் பலர் கருதுகிறார்கள். நடைமுறையில் இருபாலருமே பாதிப்புக்குள்ளாகிறார்கள். தோற்றத்தில், மற்றவர்களைவிட மாறுபட்டவர்களையே நாம் அடையாளம் காட்டி, அவர்களோடு பழகக்கூடாது எனக் குழந்தைகளுக்குச் சொல்கிறோம்.  ஆனால், தவறான வழியில் ஈடுபடும் நபரை நிச்சயமாக அவர் தோற்றத்தை வைத்து மட்டுமே கணக்கிட முடியாது. அதனால் குழந்தைகள் நம்மிடம் பேச வரும்போது, அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதைக் காது கொடுத்து கேட்க வேண்டும்.

குழந்தைகளாக இருப்பதாலேயே அவர்கள் பெற்றோருக்கு அடிபணிந்து இருக்க வேண்டும் என நினைப்பதும் தவறு. குழந்தைகளுக்கும் முழுமையான சுதந்திரம் இருக்கிறது. அவர்களை அவர்கள் இடத்தில் இருந்து புரிந்து கொள்வது பெற்றோரின் முக்கியக் கடமை. குழந்தைகளிடம் மனம்விட்டுப் பேசுவதும், அவர்களைப் பேசவிடுவதும் தான் இதுபோன்ற பிரச்னைகளைத் தவிர்க்க உதவும்.

இயல்பாகவே எதிர்பாலினத்தின் மீது ஏற்படும் ஈர்ப்பும் அதைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற எண்ணமும்தான் இதற்கெல்லாம் காரணம். அதனால் சமூகத்தின் பார்வையும் சமூகத்துக்கான மாற்றமும் நிகழாத வரையில் இங்கே எதுவும் மாறப் போவதில்லை. எனவே, வீட்டில், வளர்ப்பில் இருந்தே மாற்றங்களைக் கொண்டுவர வேண்டியது அவசியம்’’ என தன் பார்வையை அழுத்தமாகவே பதிவு செய்தார் நம்பி.

தடுப்போம்... குழந்தைகள் மீதான கொடூரம்!

பாலின ஈர்ப்புதான் குற்றங்களுக்குக் காரணமா?

`பாலின ஈர்ப்புதான் இதுபோன்ற குற்றங் களுக்கு அடிப்படைக் காரணம். அதனால், பாலியல் கல்வி மிக அவசியம்' என பல தரப்பினரும் வலியுறுத்தி வருகிறார்கள். அது போல, பாலியல் தொடர்பான தெளிவு தேவை என்பதையே இப்படியான சம்பவங்கள் நமக்கு தெரிவிக்கின்றனவா?

இதுகுறித்து, பாலியல் மருத்துவர் காமராஜி டம் பேசினோம்.

``ஒரு மனிதனுக்கு உணவு எப்படி அவ சியமோ, அதேபோல அவனுக்குள் இயல்பாக எழும் பாலியல் உணர்வும் தேவை யானதாகவே இருக்கிறது. இந்த உணர்வு ஆண், பெண் என இருபாலருக்குமே ஒரு குறிப்பிட வயதில் நிகழும். இதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால், தனது செக்ஸ் தேவையை யாரிடம் பூர்த்தி செய்துகொள்ள நினைக்கிறார்கள் என்பதில்தான் சிக்கல்.

மூன்று வயது குழந்தைகள்கூட பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகிக் கொண்டிருக்கிறார்கள். வயது வரம் பின்றி பாலியல் துன்புறுத்தல்களைச் செய்பவர்களை `பிரிடேட்டர்' (Predator) என்று சொல்கிறோம். இவர்கள் ஆண்/பெண் என யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். அவர்கள் நம் வீட்டிலேயே இருக்கலாம்’’ என அதிர்ச்சியைக் கூட்டிப் பேசிய டாக்டர்  காமராஜின் கருத்துகள் கவனிக்கத்தக்கவை.

``குழந்தைகளின் அந்தரங்க உறுப்புகளைத் தொடுவது, தவறான நோக்கத்தில் முத்தம் இடுவது உள்ளிட்ட செயல்கள் வெளியில் தெரியாமல் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. ‘இதை நீ யாரிடமாவது சொன்னால் உன் அப்பா, அம்மா இறந்துவிடுவார்கள்’ என்று குழந்தைகள் நம்பும்படி, அந்த ஆசாமிகள் மிரட்டி வைப்பார்கள். இதனால் குழந்தைகள் மந்தமாகவே மாறிவிடுவார்கள். அதுபோல, படிப்பில் கவனம் இல்லாமல், சரியாகச் சாப்பிடாமல், யாரோடும் பழக விருப்பம் இல்லாமல் குழந்தைகள் ஒதுங்கி இருந்தால் உடனடியாக மனநல மருத்துவரை அணுகுங்கள்.

தடுப்போம்... குழந்தைகள் மீதான கொடூரம்!

`குட் டச், பேட் டச்' போன்ற அவசியமான விஷயங்களை பெற்றோரும் ஆசிரியர்களும் குழந்தை களுக்குப் புரியும்படி சொல்லித் தருவது அவசியம்'' என்கிற டாக்டர், பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடு பவர்களின் மனநிலை குறித்தும் விளக்கினார்.

``பாலியல் மாறுபாட்டின் (sexual deviation) காரணமாகவே சிலர் இத்தகைய செயல்களில் ஈடுபடுகிறார்கள். பாலியல் குறித்த புரிதல் இல்லாததுதான் இதுபோன்ற குற்றங்களுக்கு அடிப்படைக் காரணமாகிறது. யாரும் இல்லாத நேரத்தில் ஆணின் உடையை பெண் அணிந்து பார்ப்பது, பெண்ணின் உடையை ஆண் அணிந்து பார்ப்பது... இவையெல்லாம் இதன் ஆரம்ப அறிகுறிகள். இத்தகைய செயல்களில் 60 சதவிகிதம் பேர் ஈடுபடுகிறார்கள் என மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தியானம் போன்ற செயல்களின் மூலம் மனதைப் பக்குவப்படுத்திக் கொள்வது இவர்களுக்கு உதவும். பாலியல் சார்ந்த பிரச்னைகள் எதுவாக இருந்தாலும், மருத்துவரீதியாக தீர்வு இருக்கும்போது, குழந்தைகளிடம் தகாத முறையில் நடப்பது சரியல்ல'' என்று உறுதியாகச் சொன்னார் டாக்டர் காமராஜ்.

குழந்தைகள் மீது தொடரும் வன்மங்கள் குறைய வேண்டுமானால் மனிதனுக்குள் ஒளிந்திருக்கும் மிருகத்தன்மை முற்றிலுமாக ஒழிய வேண்டும். இல்லாவிட்டால் இத்தகைய குற்றங்கள் குறித்து இனி என்ன எழுதினாலும் பேசினாலும் அது கடைசியாக இருந்துவிடப் போவதில்லை.

குழந்தைகள் மென்மையானவர்கள்... அவர்களைப் போற்றிப் பாதுகாக்க பழகுவோம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism