Published:Updated:

நலம் தரும் முளைகட்டிய தானியங்கள்!

நலம் தரும் முளைகட்டிய தானியங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
நலம் தரும் முளைகட்டிய தானியங்கள்!

அறிவோம்கு.ஆனந்தராஜ்

நலம் தரும் முளைகட்டிய தானியங்கள்!

அறிவோம்கு.ஆனந்தராஜ்

Published:Updated:
நலம் தரும் முளைகட்டிய தானியங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
நலம் தரும் முளைகட்டிய தானியங்கள்!

முளைகட்டிய தானி யங்களின் நன்மைகள் குறித்த விழிப்பு உணர்வு இப்போது பெருகிவருகிறது. அதனால், பலரும் இந்த பாரம்பர்ய உணவை நாட ஆரம்பித் திருப்பது ஆரோக்கியமான விஷயம். அதேவேளை,  `முளை கட்டிய தானியங்களை எப் படிச் சாப்பிடலாம், எப்படிச் சாப்பிடக்கூடாது என்கிற தெளிவும் அவசியம்’ என்கிற ஊட்டச்சத்து நிபுணர் உமா ராகவன், அதற்கான வழி முறைகளைக் கூறுகிறார்.

நலம் தரும் முளைகட்டிய தானியங்கள்!

எப்படிச் சாப்பிடலாம்?

காலை, மதியம், மாலை, இரவு என நான்கு வேளை களில் எந்த வேளையிலும் முளைகட்டிய தானியங் களைச் சாப்பிடலாம். ஆனால், ஏதாவது ஒருவேளைதான் சாப்பிட வேண்டும்.

காலை உணவு எனில், 50 - 65 கிராம், மதிய உணவு எனில்  70 - 80 கிராம், இரவு உணவு எனில்  70 - 75 கிராம் என்கிற அளவில் முளைகட்டிய தானியங்களை எடுத்துக் கொள்ளலாம். ஒரு வேளை உணவில் 50-50, அதாவது பாதி அளவு சாப்பாடு, பாதி அளவு முளைகட்டிய தானியம் இருக்குமாறு சாப்பிடலாம். இந்த அளவுகள் குறையலாம்... அதிகமாகக் கூடாது. மதியம், இரவு உணவுகளுடன், வேகவைக்காத முளைகட்டிய தானியங்களைச் சேர்த்துச் சாப்பிடலாம். அல்லது பாதி அளவு வேகவைக்காமலும், பாதி அளவு வேகவைத்தும் சாப்பிடலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நலம் தரும் முளைகட்டிய தானியங்கள்!



எப்படிச் சாப்பிடக்கூடாது?

தானியங்களை தண்ணீரில் ஊறவைத்து முளைகட்டச் செய்வதால் (germination process), அவற்றில் அமிலத்தன்மை அதிகரித்து, வைட்டமின் சி சத்து அதிகமாகி இருக்கும். பொதுவாகவே, காலை நேரத்தில் வெறும் வயிற்றில் அமிலம் அதிகமாகச் சுரக்கும். அப்போது முளைகட்டிய தானியத்தைச் சாப்பிட்டால் அசிடிட்டி, அல்சர் போன்ற பிரச்னைகள் ஏற்படக்கூடும். எனவே, இட்லி, தோசை, சப்பாத்தி என ஏதேனும் ஒரு உணவுடன் வேகவைக்காத முளைகட்டிய தானியங்களைச் சாப்பிடலாம். ஒருவேளை காலையில் முளைகட்டிய தானியங்களை மட்டும் சாப்பிடுவதாக இருந்தால், அவற்றை வேகவைத்துச் சாப்பிடுவதே நல்லது.

முளைகட்டிய தானியங்களை மட்டுமே முழு உணவாகக் கருதக் கூடாது. ஏனெனில், முளைகட்டிய தானியத்தில் புரோட்டீன், வைட்டமின் சத்துகள் கிடைத்தாலும், நம் உடலுக்கு அவை மட்டுமே போதாது. கார்போ ஹைட்ரேட், மினரல் போன்ற சத்துகளும் சமச்சீர் உணவுக்கு அவசியம்.

முளைகட்டிய தானியங்களைச் சாப்பிடும் போது செரிமானக் கோளாறுகள் ஏற்படலாம். அதனால், ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இதைத் தவிர்க்க வேண்டும். முளைகட்டிய பச்சைப்பயறு எளிதில் செரிமானம் ஆகக்கூடியது என்பதால், 5 - 10 வயதுக் குழந்தைகளுக்கு அடிக்கடி தரலாம். 8 வயதுக்கு மேற்பட்டவர்கள் எல்லா வகை முளைகட்டிய தானியங்களையும் சாப்பிடலாம். முளைகட்டிய தானியங்களை வறுத்து ஸ்நாக்ஸாகக் கொடுக்கும்போது குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள்.

தினமும் ஒரே வகை முளைகட்டிய தானியத்தை சாப்பிடுவது தவறு. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தானிய வகை உட்கொள்வதே சிறந்தது. நான்கைந்து தானியங்களை ஒன்றாக முளை கட்டச் செய்து சாப்பிடுவதும் நன்று. குறிப்பாக முளைகட்டிய தானியங்களை இட்லி, தோசை செய்யும்போது மாவில் கலக்கலாம். அதேபோல் சாதத்தில், குழம்பில், பொரியலில் கலந்தும் சாப்பிடலாம். இப்படிச் செய்து கொடுப்பதால் குழந்தைகளும் விரும்பிச் சாப்பிடுவார்கள்.

அசிடிட்டி, அல்சர், நெஞ்சு எரிச்சல் பிரச்னைகள் உள்ளவர்கள், கர்ப்பிணிகள், வயதானவர்கள் ஆகியோர் முளைகட்டிய தானியங்களை வேகவைத்துதான் சாப்பிட வேண்டும்.

ரெடிமேட் தானியங்களைத் தவிர்க்கலாம்!

முளைகட்டிய தானியங்களை வீட்டிலேயே செய்வதற்கு அதிக நேரம் ஆகும் என பலரும் கடைகளில் ரெடிமேடாகக் கிடைக்கும் பாக் கெட்டுகளை வாங்குகிறார்கள். தானியங்கள் 8 - 12 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கப்பட்டு, பிறகு தண்ணீர் சிறிதும் இன்றி வடிக்கப்பட்டு, காற்றுப்புகாத வகையில் 8 - 12 மணிநேரம் பாக்ஸில் அடைக்கப்பட வேண்டும். கடைகளில் விற்கப்படும் ரெடிமேட் தானிய பாக்கெட்டுகள் சுகாதாரமான சூழலில் தயாரிக்கப்படுவதில்லை. அதோடு, மீதமான தானியங்களில் உப்பு சேர்த்துப் பதப்படுத்தி அடுத்த சில நாட்களுக்கு விற்பனை செய்யப்படலாம். முளைகட்டிய தானியங்கள் தயாரித்து ஒரு நாளைக்குப் பின்னர், அவை ஆக்ஸிஜனுடன் வினைபுரிந்து அவற்றில் இருக் கும் ஊட்டச்சத்துகள் குறையத் தொடங்கும். வீட்டிலேயே முளைகட்டிய தானியங்களை தயார் செய்வது எளிது; செலவும் குறைவு.

பலன்கள் பல!

வைட்டமின் சி, வைட்டமின் டி சத்துகள் அதிகமாகக் கிடைக்கும் முளைகட்டிய தானியங்களைச் சாப்பிடுவதால், நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாகும். இரும்பு, கால்சியம், நார்ச்சத்து உள்ளிட்ட பல்வேறு சத்துகளும் கிடைக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism