Published:Updated:

குழந்தைகள் உங்களைப் பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள்!

குழந்தைகள் உங்களைப் பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள்!
பிரீமியம் ஸ்டோரி
குழந்தைகள் உங்களைப் பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள்!

உங்கள் கவனத்துக்கு...வி.எஸ்.சரவணன் - படங்கள்: தி.குமர குருபரன்

குழந்தைகள் உங்களைப் பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள்!

உங்கள் கவனத்துக்கு...வி.எஸ்.சரவணன் - படங்கள்: தி.குமர குருபரன்

Published:Updated:
குழந்தைகள் உங்களைப் பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள்!
பிரீமியம் ஸ்டோரி
குழந்தைகள் உங்களைப் பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள்!

மிகவும் கண்டிப்பான அம்மா, எதைக் கேட்டாலும் வாங்கித் தரும் பாசக்கார அப்பா... இந்த இரு துருவக் குணங்களின் கீழ் வளர்கிறாள் ஒரு செல்ல மகள். அப்பா - அம்மா இடையே அடிக்கடி சண்டை வரும். அது கைகலப்பு வரை நீளும். அதுவும் மகளின் மனதில் பதிகிறது. ஓரிரு ஆண்டுகளில் அவளின் இயல்பில் சிலபல மாற்றங்கள். வீட்டைத்தவிர வேறெங்கும் சாப்பிடவோ, உறங்கவோ, தங்கவோ, ஏன்... சிறுநீர் கழிக்கக்கூட மறுக்கிறாள். இதுவே நாளடைவில், பள்ளி செல்ல மறுப்பதில் வந்து முடிகிறது.

அந்தச் சிறுமியின் சிக்கலுக்கு முதன்மைக் காரணம், சூழல். குழந்தைகள் வளர்வதில் பிரதான பங்கு வகிப்பது, வீட்டுச்சூழலே. அழகான, சுகாதாரமான அறைகளும், கேட்டவுடன் கிடைக்கும் பொருள்களும் மட்டுமே குடும்பச்சூழல் ஆகிவிடாது. பெற்றோர் தங்கள் குழந்தைகளின்முன் நடந்துகொள்ளும் விதமே அவர்களின் இயல்பைத் தீர்மானிக்கிறது.

குழந்தைகளின் போக்கில் தங்களை மாற்றிக்கொள்ளும் பெற்றோரும் உண்டு. தங்கள் இயல்புக்குக் குழந்தைகளை மாற்றுபவர்களும் உண்டு. ஆனால், தங்கள் குழந்தைக்கு முன்னே `இதெல்லாம் செய்யக்கூடாது' எனும் பட்டியல், எல்லா பெற்றோரிடமும் இருக்கும். அந்தப் பட்டியலைச் சிலரிடம் கேட்டு அறிந்தோம்.

விஜய்பாஸ்கர்

குழந்தைகள் உங்களைப் பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

(ஐ.டி ஊழியர், ஆறு வயதுக் குழந்தையின் அப்பா)

1. கோபத்தில் ஒரு பொருளைத் தூக்கி அடிப் பது, எறிவது போன்ற செயல்களைத் தவிர்ப்பேன்.

2. அடுத்தவர் பற்றிப் புறம் பேசுவதைத் தவிர்ப் பேன்.

3. குழந்தையின் குணத்தை, ‘நீ இப்படித் தான்’ என்று வரையறுக்க மாட்டேன்.

4. பாதுகாப்பற்ற செயல்களைக் குழந்தை முன் செய்யமாட்டேன். உதாரணமாக... சாலை விதியை, எந்த அவ சரத்திலும் மீறவே மாட்டேன்.

5. சிறுசிறு விஷயங்களில் கூட ஏமாற்றம் அளிக்க மாட்டேன். இயலாது எனில், ஆரம்பத்திலேயே தெளி வாகச் சொல்லி விடுவேன்.

6. புது விஷயங்களைக் கற்றுக்கொடுக்கும்போது, கோபப்படாமல் மிகவும் பொறுமையாகவே செய்வேன்.

அனுராதா

குழந்தைகள் உங்களைப் பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள்!

(தனியார் நிறுவனப் பணியாளர், ஐந்து வயதுக் குழந்தையின் அம்மா)

1. கணவருடன் எந்தச் சூழலிலும் சண்டை போட மாட்டேன்.

2. சட்டத்துக்கு எதிரான வாதங் களைப் பேச மாட்டேன்.

3. குழந்தைக்கு ஜங்க் ஃபுட் வாங்கித் தராமல் இருப்பதுடன், ஏதேனும் நிகழ்ச்சியில் கொடுக்கப்பட்டாலும் அதை நான் மறுத்து, அவனுக்கு முன்னுதாரணமாக இருப்பேன்.

4. பொருளாதாரச் சிக்கல்களை அவன்முன் விவாதிக்க மாட்டேன்.

வேல் கண்ணன்

குழந்தைகள் உங்களைப் பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள்!

(வங்கிப் பணியாளர், 12 வயதுக் குழந்தையினஅப்பா)

1. யாரை நோக்கியும் கை ஓங்க மாட்டேன்.

2.
ஏதேனும் வாக்குவாதம் என்றாலும் குழந்தைமுன் தகாத வார்த்தைகள் பேச மாட்டேன்.

3. அக்கம்பக்கம் இருப்பவர்கள், பெரியவர்கள் மற்றும் ஆசிரியர் களின் குறைகளைச் சுட்டிக்காட்டிப் பேச மாட்டேன்.

கை.அறிவழகன்

குழந்தைகள் உங்களைப் பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள்!

(தனியார் நிறுவன ஊழியர், எட்டு வயதுக் குழந்தையின் அப்பா)

1. குழந்தைமுன் பேசும் ஒவ்வொரு வார்த்தையிலும் கவனமாக இருப்பேன். எப்போதும், மனிதர்களை - அவர்களின் மதங்களை மையமாக வைத்து விமர்சிக்க மாட்டேன்.

2. சாதிப் பிரிவினைகளை மையமாகவைத்து எந்த மனிதரையும் எடைபோட மாட்டேன்.

3. பெண்களை இழிவுசெய்யும், உடல் குறைபாட்டைக் குறிக்கும் சொற்களைப் பேச மாட்டேன்.

4. உடல்நலத்துக்குத் தீங்கு விளைவிக்கும் எத்தகைய பொருளையும் குழந்தைமுன் பயன் படுத்த மாட்டேன்.

5. உழைப்பை இழிவுசெய்யும் சொற்களை குழந்தைமுன் பேச மாட்டேன்.

கிருத்திகா தரன்

குழந்தைகள் உங்களைப் பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள்!

(தனியார் நிறுவன ஊழியர், எட்டு வயதுக் குழந்தையின் அம்மா)

1. நேரடியாக அல்லது மறைமுகமாக அநாகரிக அர்த்தம் கொடுக்கும் வார்த்தைகளைப் பேச மாட்டேன்.

2. மது மற்றும் புகையை நியாயப்படுத்தும் வாதங்களை யார் பேசவும் அனுமதிக்க மாட்டேன்.

3. குழந்தையுடன் டி.வி பார்க்க நேரிடும்போது, பெரியவர்கள் மட்டுமே பார்க்கக்கூடிய நிகழ்ச்சி களைப் பார்க்க மாட்டேன்.

4. மற்றவர்களைப் பற்றி வீண்வம்பு பேசுவது, காதில் கேட்டதாக நம்பகத்தன்மை இல்லாத விஷயங்களைப் பேசுவது போன்றவற்றைத் தவிர்ப்பேன்.

உமாநாத் செல்வன்

குழந்தைகள் உங்களைப் பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள்!

(எழுத்தாளர், 7, 3 வயதுக் குழந்தைகளின் அப்பா)

1. எவ்வளவு சிக்கலான பிரச்னை என்றாலும், குழந்தைகள் எதிரில் மனைவியுடன் சண்டை போட மாட்டேன். மனைவி, ஏதேனும் சொல்லவந்தாலும் தவிர்த்துவிடச் சொல்வேன்.

2. கெட்ட வார்த்தைகள் பேசுவதில்லை. எப்போதேனும் என்னையும்மீறி வரும் ஒரு சில வார்த்தைகளும்கூட, குழந்தைகள் முன்னிலையில் வந்துவிடாதபடி கட்டுப்பாடுடன் இருப்பேன்.

3. மது மற்றும் புகைப்பழக்கம் எனக்கு இல்லை என்றாலும், வேறு எங்கும் என் குழந்தைகள்முன் இவை நிகழக்கூடாது என்பதில் கவனமாக இருப்பேன்.

மணி ஜெயப்ரகாஷ் வேல்

குழந்தைகள் உங்களைப் பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள்!

(கல்லூரி விரிவுரையாளர், மூன்று வயதுக் குழந்தையின் அப்பா)

1. எவ்வளவு இக்கட்டான சூழலிலும், குழந்தையிடம் கோபத்தை வெளிக்காட்ட மாட்டேன்.

2. அருவருப்பான வார்த்தைகளை ஒருபோதும் பயன்படுத்த மாட்டேன்.

3. குழந்தையிடம் பொய் சொல்ல மாட்டேன்.  சில நேரம் சமாளிப்புக்காகச் சொல்ல நேர்ந்தாலும், காலம் கடத்தாமல் உண்மையைச் சொல்லிவிடுவேன்.

4. குடும்ப உறுப்பினர்கள், நண்பர்களுடனான பிணக்குகளைக் குழந்தை தெரிந்துகொள்ளாத வண்ணம் பார்த்துக்கொள்வேன்.

பெற்றோர் அனைவரும் பொதுவாக, குழந்தைகள்முன் சண்டை போடாதிருத்தல், மது, புகையைத் தவிர்த்தல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அவற்றைப் போல, குழந்தைகள் முன் ‘அழ மாட்டோம்’ என்பதும் மிக முக்கியமான ஒன்று. குழந்தை நலனுக்கான இந்தக் கொள்கைகள் பற்றி, குழந்தைகள் மனநல மருத்துவர் ஜி.கே.கண்ணனிடம் கூறினோம்.

“‘குழந்தைகள்முன் இவற்றையெல்லாம் செய்ய மாட்டோம்’ என இவர்கள் கவனத்துடன் இருப்பதே ஆரோக்கியமானதுதான். இவற்றை இன்னும் சரியாகக் கடைப்பிடிக்க வேண்டியதும் அவசியம். பொதுவாக, இரண்டு விஷயங்கள் முதன்மையானவை.

குழந்தைகள் உங்களைப் பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள்!

கணவன் - மனைவிக்கு இடையில் இருக்கும் கருத்து வேறுபாடுகளைக் குழந்தைகள்முன் விவாதிக்கக்கூடாது. அந்த விவாதமே சண்டையாகி, இறுதியில் வன்முறைக்கு மாறுகிறது. அப்போது, ஒருவருக்கொருவர் சொல்லித் திட்டிக்கொள்ளும் வார்த்தைகளில் எவையெல்லாம் குழந்தைகளுக்குள் ஆழமாகப் பதியும், அந்த வார்த்தைகள் பின்னாளில் அவர்களிடம் எப்படி வெளிப்படும் என்பதை நம்மால் கணிக்க இயலாது.

அடுத்தது, நாம் வாழும் முறை... படித்து, நன்னெறிகள் பயின்று தங்கள் குணங்களை வளர்த்துக்கொள்வதைவிட, தங்கள் குடும்பத்தின் நடைமுறைகளைப் பார்த்துதான் பழக்கமாக்கிக் கொள்கிறார்கள் குழந்தைகள். காலையில் எத்தனை மணிக்கு எழுந்து கொள்கிறோம், சாப்பிடும் நேரம் என்ன, எவ்வளவு நேரம் டி.வி பார்க்கிறோம், எத்தனை மணிக்கு உறங்கச் செல்கிறோம் என்பது வரை பெற்றோரின் தினசரி நடவடிக்கைகளை முறையாக வடிவமைத்துக் கொள்ளவேண்டியது மிக அவசியம். குறிப்பாக, பெற்றோர் ஆரோக்கியமற்ற உணவு முறையைக் கொண்டிருந்தால், அதுதான் குழந்தைக்கும் தொற்றும். அதைச் சரிசெய்யாமல் உடல்நலம் பற்றிக் கவலைகொள்வது நியாயமில்லையே!

பெற்றோர், சமூகத்தில் தங்களுக்குரிய மதிப்பு என்னவாக இருக்க வேண்டும் என்பதில் கொண்டிருக்கும் ஒழுங்கே, குழந்தைகளுக்கும் கடத்தப்படும். விதிகளை மீறுவது, கையூட்டு தந்து காரியம் சாதிப்பது, பொய் ஒரு பொருட்டே அல்ல என நினைப்பது போன்ற சுபாவங்கள் குழந்தையின் மனதிலும் பதிந்தால், அவர்களின் அறம் சார்ந்த மதிப்பீடுகள் சரிந்து விடும்.

குழந்தைகள் வளர வளர, நல்லது கெட்டது குறித்துப் பகுத்தறிந்து கொள்வார்கள் என்று விட்டுவிட முடியாது. சிறுவயதில் அவர்களின் மென் இயல்புக்கு எதிராக, அவர்களின் வீடு அவர்களைச் சந்திக்கவைக்கும் விஷயங்கள், கபடமில்லாத அவர்களின் நேர்மையான மனதைத் தடம் மாறச்செய்யும் சூழல்... இவையெல்லாம் வாழ்வில் பெரிய இழப்பில் அவர்களைக் கொண்டுவந்து விட்டுவிடலாம். அதைச் சரிசெய்ய, அவர்கள் வளர்ந்தபின் நாம் மகனின்/மகளின் குழந்தைப் பருவத்துக்கு மீண்டும் செல்ல முடியாதே?அதனால், குழந்தைகள் முன்பான நம் நடவடிக்கைகளில் எப்போதும் கவனத்துடன் இருப்போம்...” என்கிறார் டாக்டர் கண்ணன்.

குழந்தை வளர்ப்பில் கூடுதல் கவனம் கொள்வோம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism