பழங்கால இந்திய மருத்துவம் நம் உணவுகளை ஆறு வகைகளா கப் பிரிக்கிறது. தசையை வளர்க் கும் இனிப்பு, கொழுப்பை வழங் கும் புளிப்பு, எலும்புகளை வளர்க் கும் கார்ப்பு, உமிழ்நீரைச் சுரக்கச் செய்யும் உவர்ப்பு, ரத்தத் தைப் பெருக்கும் துவர்ப்பு, நரம்புகளைப் பலப்படுத்தும் கசப்பு என அறுசுவைகளின் செயல் திறன்கள் வரையறுக்கப்படுகின்றன.

இந்த அறுசுவைகளிலும் பாரம்பர்யமும் நவீனமும் கலந்த நாவுக்கினிய ரெசிப்பிகளை வழங்குகிறார் சமையல் கலைஞர் வீணா சங்கர். ‘உணவே மருந்து... மருந்தே உணவு’ என உண்டு மகிழ்வோம்!

இனிப்பு

பலாக்கொட்டை இனிப்புக் கஞ்சி

தேவையானவை: பலாக் கொட்டை - 10 (தோல் நீக்கி, மெலிதாக நறுக்கவும்), பால் (காய்ச்சி ஆறவைத்தது) - அரை கப், எண்ணெய் - அரை டீஸ்பூன், சர்க்கரை, தேங்காய்த் துருவல் – தலா 2 டீஸ்பூன், உப்பு – சிறிதளவு.

செய்முறை: வாணலியில் எண் ணெய் விட்டு பலாக்கொட்டை, உப்பு சேர்த்து வதக்கவும். ஆறிய வுடன் மிக்ஸியில் பலாக்கொட்டை, தேங்காய்த் துருவல், தண்ணீர் சேர்த்து நைஸாக அரைக்கவும். அடிகனமான பாத்திரத்தில் அரைத்த விழுது, சர்க்கரை, பால் சேர்த்து சிறு தீயில் கொதிக்கவிட்டு இறக்கவும். சூடாகப் பரிமாறவும்.

கருப்பட்டி பணியாரம்

தேவையானவை: கருப்பட்டி (அ) பனைவெல்லத்தூள் - கால் கப்பைவிட கொஞ்சம் அதிகம், பச்சரிசி, இட்லி அரிசி - தலா ஒரு கப், பாசிப்பருப்பு, துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா 2 டேபிள்ஸ்பூன், வெந்தயம் - கால் டீஸ்பூன், தேங்காய்த் துருவல் - கால் கப், நெய், உப்பு – சிறிதளவு.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் பச்சரிசி, இட்லி அரிசி, பருப்பு வகைகள், வெந்தயம் சேர்த்து, நான்கு மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு களைந்து... தேங்காய்த் துருவல், கருப்பட்டி (பனைவெல்லம்), உப்பு சேர்த்து சற்று கொரகொரவென அரைக்கவும். மாவை ஆறு மணிநேரம் புளிக்க வைக்கவும். புளித்த மாவை பணியாரக்கல்லில் ஊற்றி நெய் விட்டு இருபுறமும் வேகவைத்து எடுக்கவும்.

மூங்கில் அரிசி பாயசம்

தேவையானவை: மூங்கில் அரிசி - கால் கப், பால் - 4 கப், வெல்லத்தூள் - அரை கப், தேங்காய்த் துருவல் - அரை கப், நெய் - 2 டீஸ்பூன், உலர் திராட்சை, முந்திரி - தேவையான அளவு, ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்.

செய்முறை: மூங்கில் அரிசியைக் கழுவி நான்கு மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு களைந்து, மிக்ஸியில் சேர்த்து தண்ணீர் தெளித்து கொரகொரப்பாக அரைக்கவும். பாலை பாதியாகும் வரை சுண்டக்காய்ச்சவும். அடிகனமான பாத்திரத்தில் அரிசி மாவுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த் துக் கரைத்து நன்கு வேகவைக்கவும். வாணலியில் நெய்யைச் சூடாக்கி முந்திரி, திராட்சை சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக வைக்கவும். பிறகு, அதே நெய்யில் தேங்காய்த் துருவல் சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். வேகவைத்த மூங்கில் அரிசி மாவுடன், பால், வெல்லத்தூள், தேங்காய்த் துருவல், முந்திரி, திராட்சை சேர்த்து, ஒரு கொதி விட்டு ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கவும். சூடா கவோ, குளிரவைத்தோ பரிமாறலாம்.

ராகி ஸ்வீட் தோசை

தேவையானவை: ராகி மாவு (கேழ்வரகு மாவு) - ஒரு கப், அரிசி மாவு - கால் கப், பொடித்த வெல்லம் - அரை கப், தேங்காய்த் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், ஏலக் காய்த்தூள் - அரை டீஸ்பூன், நெய் - தேவையான அளவு, உப்பு - ஒரு சிட்டிகை.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் வெல்லம் மூழ்கும் வரை தண்ணீர் சேர்த்து சூடாக்கி ஒரு கொதிவிட்டு இறக்கவும். கல், மண் போக வடி கட்டி ஆறவிடவும். அகலமான பாத்திரத்தில் ராகி மாவு, அரிசி மாவு, வெல்லக் கரைசல், தேங்காய்த் துருவல், ஏலக்காய்த்தூள், உப்பு சேர்த்து தோசை மாவு பதத்துக் குக் கரைக்கவும். தோசைக்கல்லில் மாவை ஊற்றி, இருபுறம் நெய் விட்டு வேகவைத்து எடுத்துப் பரிமாறவும்.

க்ரீம் பட்டர் ஸ்ப்ரெட்

தேவையானவை: க்ரீம் பிஸ்கட், முந்திரிப்பருப்பு - தலா 15, வெண்ணெய் - ஒரு டீஸ்பூன், சர்க்கரை - 2 டீஸ்பூன், கலர் ஸ்ப்ரிங்ளர்ஸ் - ஒரு டேபிள் ஸ்பூன்.

செய்முறை: பிஸ்கட்டை உடைத்து, அதனுடன் முந்திரி, வெண்ணெய், சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் அரைத்து, ஒரு டப்பா வில் சேகரிக்கவும். பரிமாறும் போது கலர் ஸ்ப்ரிங்ளர்ஸ் தூவவும்.

குறிப்பு: இதை ஃப்ரிட்ஜில் இரண்டு வாரம் வரை வைத் திருந்தும் பயன்படுத்தலாம்.

புளிப்பு

கறுப்பு அரிசி - அவகாடோ புளிப்பு சாலட்

சாலட் செய்ய: கறுப்பு அரிசி - அரை கப், பேபி ஸ்பினாச் (ராக்கெட் போன்று தோற்றமளிக்கும் பச்சை சாலட் இலைகள்) - ஒரு கப், டிராகன் பழம், அத்திப்பழம் - தலா ஒன்று (பொடியாக நறுக்கவும்), பாதாம் – தேவையான அளவு.

டிரெஸ்ஸிங் செய்ய: அவகாடோ பழம் - பாதியளவு, கொத்தமல்லித்தழை - கால் கப், பச்சை மிளகாய் - ஒன்று, மோர் - அரை கப், வினிகர், வறுத்த எள் - தலா ஒரு டீஸ்பூன், தண்ணீர், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: அரிசியை வேகவிடவும். பாதாமை வெறும் வாணலியில் வறுக்கவும்.டிரெஸ்ஸிங் செய்யக் கொடுத்துள்ளவற்றை மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். அகலமான பாத்திரத்தில் அரிசி, ஸ்பினாச் இலைகள், பழத்துண்டுகள், பாதாம் சேர்த்துக் கலக்கவும். அதன் மேல் அரைத்த டிரெஸ்ஸிங் கலவையை ஊற்றிப் பரிமாறவும்.

புளி மிளகாய்

தேவையானவை:புளி - எலுமிச்சை அளவு, பச்சை மிளகாய் – 10 (பொடி யாக நறுக்கவும்), தோலுரித்த சின்ன வெங்காயம் - 20, கடுகு - கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் - தலா ஒரு சிட்டிகை, நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன், வெல்லம், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: புளியை சுடுநீரில் ஊறவைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கி, கடுகு, பெருங்காயத்தூள், உளுத்தம்பருப்பு சேர்த்து வறுக்கவும். இதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு புளிக்கரைசல், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.

பின்னர் வெல்லம் சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும். ஆறவிட்டு, காற்றுப்புகாத பாட்டிலில் சேகரிக்கவும்.

தோசை வாஃபிள்ஸ்

தேவையானவை: வாஃபிள்ஸ் அச்சு - ஒன்று (பாத்திரக்கடைகளில் கிடைக்கும்), புளித்த தோசை மாவு - ஒன்றரை கப், வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்க வும்), பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்), கடுகு, வெண்ணெய் - தலா அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை: வாணலியில் எண்ணெ யைக் காயவிட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். இதில் கொத்தமல்லித்தழைத் தூவி இறக்கி, தோசை மாவுடன் சேர்த்து, உப்பு போட்டு கலக்கவும். வாஃபிள்ஸ் அச்சைச் சூடுசெய்து வெண்ணெய் தடவவும். அதில் தோசை மாவை ஊற்றி வேகவைத்து எடுக்கவும்.

மாங்காய் சட்னி

தேவையானவை: புளிப்பு மாங்காய் (தோல் சீவி துருவியது), தேங்காய்த் துருவல் - தலா ஒரு கப், பச்சை மிளகாய் - 2, சின்ன வெங்காயம் - 4, பூண்டுப் பல் (தோல் நீக்கியது) - 4, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, கறிவேப்பிலை - சிறிதளவு, எண் ணெய், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை: தேங்காய்த் துருவல், மாங்காய், பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், பூண்டு, உப்பு ஆகியவற் றுடன் தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து அரைத்துவைத்த சட்னியுடன் சேர்க்கவும்.

வாழைப்பூ புளிக்குழம்பு

தேவையானவை:வாழைப்பூ (ஆய்ந்து, நறுக்கியது), புளிக்கரைசல் - தலா ஒரு கப், சின்ன வெங்காயம் - 5 (நறுக்க வும்), வெல்லம், கடுகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன், வெந்தயம் - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, நல்லெண்ணெய் - 3 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

மசாலா தயாரிக்க: தேங்காய்த் துருவல் - அரை கப், தனியா - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, சின்ன வெங்காயம் - 5, பூண்டு - 5 பல், எண்ணெய் - 2 டீஸ்பூன், தக்காளி - ஒன்று (பொடியாக நறுக்கவும்).

செய்முறை: வெறும் வாணலியில் தனியா, தேங்காய்த் துருவலைத் தனித்தனியாக வறுக்கவும். அதே வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு காய்ந்த மிளகாய், பூண்டு, சின்ன வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். ஆறியதும் அதனுடன் தனியா, தேங்காய்த் துருவல் சேர்த்து, தண்ணீர்விட்டு விழுதாக அரைக்கவும்.

வாணலியில் நல்லெண்ணெய்விட்டு... கடுகு, சீரகம், கறிவேப்பிலை, வெந்தயம் சேர்த்துத் தாளித்து, நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி, புளிக்கரைசல், வெல் லம், வாழைப்பூ சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்கவிடவும். இதனுடன் அரைத்த விழுது, உப்பு சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும். சூடான சாதத்துடன் பரிமாறவும்.

உவர்ப்பு

பூண்டு ஊறுகாய்

தேவையானவை: பூண்டுப் பல் - ஒன்றரை கப், வெல்லம், கடுகு - தலா ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - 2 டேபிள் ஸ்பூன், வெந்தயத்தூள் - கால் டீஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, நல்லெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை: வாணலியில் நல்லெண்ணெயைக் காயவிட்டு கடுகு, பெருங்காயத்தூள் சேர்த்துத் தாளித்து, பூண்டு சேர்த்து வதக்கவும். இதனுடன் உப்பு, மஞ்சள்தூள், மிள காய்த்தூள், வெந்தயத்தூள், வெல்லம் சேர்த்து வதக்கி, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கிளறி இறக்கவும். ஆறவைத்து காற்றுப்புகாத பாத்திரத்தில் சேகரிக்கவும்.

உப்பு - நெய் சாதம்

தேவையானவை: பாசு மதி அரிசி - ஒரு கப், நெய், மிளகுத்தூள் - தலா ஓரு டீஸ்பூன், உப்பு – தேவைக் கேற்ப.

செய்முறை: பாசுமதி அரிசியைச் சாதமாக வடிக்க வும். இதனுடன் உப்பு, நெய், மிளகுத்தூள் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

பறங்கி கார தோசை

தேவையானவை: பறங்கிக்காய்த் துருவல், இட்லி அரிசி, சாமை அரிசி - தலா ஒரு கப், உளுத்தம்பருப்பு - கால் கப், நறுக்கிய சின்ன வெங்காயம் - 10, காய்ந்த மிளகாய் - 7, எண்ணெய், உப்பு - தேவைக் கேற்ப.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் இட்லி அரிசி, உளுத்தம்பருப்பு, சாமை அரிசி ஆகியவற்றைச் சேர்த்து ஐந்து மணி நேரம் ஊறவைக்கவும். வாணலியில் எண்ணெய் காயவிட்டு காய்ந்த மிளகாய், நறுக்கிய சின்ன வெங்காயம், பறங்கித் துருவல், உப்பு சேர்த்து வதக்கவும். இதை ஊறவைத்த அரிசி - உளுந்துடன் சேர்த்து நைசாக அரைக்கவும். மாவை ஏழு மணி நேரம் புளிக்கவைத்து, தோசைக்கல்லில் தோசைகளாக ஊற்றி இருபுறமும் திருப்பிப்போட்டு எடுக்கவும்.

பனீர் குழம்பு

தேவையானவை: பனீர் - 200 கிராம், எலுமிச்சைப் பழம் - ஒன்று, சீரகம் - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப.

வறுத்து அரைக்க: சீரகம், தனியா, மிளகு - தலா அரை டீஸ்பூன், சோம்பு - அரை டீஸ்பூன், பட்டை - சிறிய துண்டு.

மசாலாவுக்கு: வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கவும்), கொத்தமல்லித்தழை, புதினா - தலா அரை கப், பச்சை மிளகாய் - 3, இஞ்சி - பூண்டு விழுது - சிறிதளவு.

செய்முறை: வறுத்து அரைக்கக் கொடுத்துள்ளவற்றை வெறும் வாணலியில் சேர்த்து வறுத்துப் பொடிக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லித்தழை, புதினா, பச்சை மிளகாய், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். ஆறியபின் கொஞ்சம் தண்ணீர் விட்டு விழுதாக அரைக்கவும். மற்றொரு வாணலியில் எண்ணெய்விட்டு பனீரை வறுத்து தனியே எடுத்து வைக்கவும். அதே வாணலியில் சீரகம் தாளித்து, அரைத்த விழுது, அரைத்த பொடி, உப்பு சேர்த்து வதக்கவும். இதனுடன் பொரித்த பனீர் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும். எலுமிச்சைச் சாறு சேர்த்துப் பரிமாறவும்.

காரம்

தாய் ரெட் கறி சாம்பார்

தேவையானவை: ரெட் கறி விழுது - ஒரு டேபிள்ஸ்பூன், துவரம்பருப்பு - அரை கப், இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், காய்கறிகள் கலவை - அரை கப், தக்காளி - ஒன்று (பொடியாக நறுக்கவும்), சின்ன வெங்காயம் - 10 (நறுக்கவும்), மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், தேங்காய்ப்பால் - அரை கப், தேங்காய் எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், கொத்தமல்லித்தழை, உப்பு - தேவைக்கேற்ப.

ரெட் கறி விழுது (தாய் கறி பேஸ்ட்) செய்ய: காய்ந்த மிளகாய் - 5-7, பூண்டு - 10 பல், எலுமிச்சை இலை - 2, இஞ்சி - ஒரு இன்ச் துண்டு, செலரி - 3 கிராம், சின்ன வெங்காயம் - 5, மல்லித்தூள் (தனியாத்தூள்) - 3 டீஸ்பூன், சீரகத்தூள் - 2 டீஸ்பூன், தேங்காய்ப்பால் - ஒரு டேபிள்ஸ்பூன், லெமன் கிராஸ் - 2, சோயா சாஸ் - ஒரு டீஸ்பூன். (இவை அனைத்தையும் மிக்ஸியில் ஒன்றாக அரைத்துக் கொள்ளவும்).

செய்முறை: துவரம்பருப்பை மலர வேகவிடவும். வாணலி யில் தேங்காய் எண்ணெயைக் காயவிட்டு இஞ்சி - பூண்டு விழுது, நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். இதனுடன் காய்கறிகள், உப்பு, மஞ்சள்தூள், ரெட் கறி விழுது சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். பிறகு துவரம் பருப்பு, தேங்காய்ப்பால் சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கி, கொத்தமல்லித்தழை சேர்த்துப் பரிமாறவும்.

சம்பால் கத்திரிக்காய்

தேவையானவை:நறுக்கிய கத்திரிக்காய் - 2 கப், நறுக்கிய வெங்காயத்தாள் - அரை கப், நல்லெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், பூண்டுப் பல் - 5, தோல் சீவி, துருவிய இஞ்சி - அரை டீஸ்பூன்.

சம்பால் செய்ய: காய்ந்த மிளகாய் - 15, வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - ஒன்று, தட்டிய பூண்டு பல் - 6, இஞ்சி - சிறிதளவு, தக்காளி - 2, சர்க்கரை - 2 டீஸ்பூன், பால் - அரை கப், எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை: காய்ந்த மிளகாயை வெந்நீரில் சிறிது நேரம் ஊறவைத்து, அதனுடன் வெங்காயம், பூண்டுப் பல், இஞ்சி, தக்காளி, சர்க்கரை, உப்பு சேர்த்து விழுதாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, அரைத்த விழுது, பால் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். ஆறிய பின் காற்றுப் புகாத பாட்டிலில் சேகரிக்கவும். பிறகு வாணலியில் நல்லெண்ணெயைக் காயவிட்டு கத்திரிக்காய் துண்டுகள் சேர்த்து வறுக்கவும். இதனுடன் பூண்டு, இஞ்சித் துருவல் சேர்த்து சிவப்பாகும் வரை வதக்கி, நறுக்கிய வெங்காயத்தாள், சம்பால் விழுது சிறிதளவு சேர்த்துக் கிளறி இறக்கவும்.

பூண்டு கார முறுக்கு

தேவையானவை: பூண்டுப் பல் - ஏறக்குறைய 15, மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், அரிசி மாவு - மூன்றரை கப், உளுந்தை வறுத்து அரைத்த மாவு - அரை கப், வறுத்த எள் - 2 - டீஸ்பூன், பெருங் காயத்தூள் - ஒரு சிட்டிகை, வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை: பூண்டுடன் மிளகாய்த் தூள், உப்பு, தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும். ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, உளுந்து மாவு, பெருங்காயத்தூள், வெண்ணெய், எள், அரைத்த பூண்டு விழுது, தண்ணீர் சேர்த்துக் கெட்டியாகப் பிசையவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு, மாவை முறுக்கு அச்சில் போட்டு, சூடான எண்ணெயில் பிழிந்து வேகவிட்டு எடுக்கவும்.

கடலைப்பருப்பு வெங்காயத் தொக்கு

தேவையானவை: கடலைப்பருப்பு - அரை கப், வெங்காயம் - 3 (பொடியாக நறுக்கவும்), மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், மல்லித்தூள் (தனியாத்தூள்) - ஒன்றரை டீஸ்பூன், மிளகாய்த்தூள், சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், பொட்டுக்கடலைப் பொடி - 2 டேபிள்ஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை: கடலைப்பருப்பை அரை மணி நேரம் ஊறவைக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். இதனுடன் கடலைப்பருப்பு, உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேகவிடவும். முக்கால் பதம் வெந்ததும் மஞ்சள்தூள், மல்லித்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்கவிடவும். பிறகு பொட்டுக் கடலைப் பொடி சேர்த்துக் கிளறி இறக்கவும். கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

கசப்பு

பாகற்காய் பாஸ்தா

தேவையானவை: வேகவைத்த பாஸ்தா - ஒரு கப், பூண்டுப் பல் - 4 (நறுக்கவும்), சின்ன வெங்காயம் - 5 (நறுக்கவும்).

பெஸ்டோ சாஸ் செய்ய: பாகற்காய் - ஒன்று, பாதாம் - 10, பச்சை மிளகாய் - 2, தேங்காய்த் துருவல் - கால் கப், கொத்தமல்லித்தழை - கால் கப், ஆலிவ் எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை: பாகற்காயை நீளவாக்கில் இரண்டாக வெட்டி, விதைகளை நீக்கவும். உப்பு சேர்த்துப் பிசைந்து அரைமணி நேரம் ஊறவைக்கவும். பிறகு, தண்ணீரை வடியவிட்டு, பாகற்காயைக் கைகளால் பிழிந்து, பெஸ்டோ சாஸ் செய்யத் தேவையான மற்ற பொருள்களுடன் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும். அரைத்த பெஸ்டோவைச் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கி, வேகவைத்த பாஸ்தா சேர்த்துக் கிளறி இறக்கவும். சூடாகப் பரிமாறவும்.

டார்க் சாக்லேட் கிரீன் டீ வாஃபிள்ஸ்

தேவையானவை: உருக்கிய டார்க் சாக்லேட் - 3 டேபிள்ஸ்பூன், கிரீன் டீ தூள் - 2 டீஸ்பூன், மைதா மாவு, கோதுமை மாவு - தலா அரை கப், பேக்கிங் சோடா - கால் டீஸ்பூன், பிரவுன் சுகர் (பழுப்பு சர்க்கரை) - 2 டீஸ்பூன், பால் (காய்ச்சி ஆறவைத்தது) - ஒரு கப், வெனிலா எசன்ஸ் - ஒரு டீஸ்பூன், உருக்கிய வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, கோதுமை மாவு, உப்பு, பேக்கிங் சோடா, கிரீன் டீ தூள் ஆகியவற்றைச் சேர்த்துக் கலந்து, சல்லடை யில் சலிக்கவும். இதனுடன் பால், பாதியளவு வெண்ணெய், பிரவுன் சுகர், டார்க் சாக்லேட், வெனிலா எசன்ஸ் சேர்த்து, தோசை மாவு பதத்துக்குக் கரைக்கவும். வாஃபிள்ஸ் அச்சைச் சூடாக்கி மீதியுள்ள வெண்ணெய் தடவவும். மாவை வாஃபிள் ஸில் ஊற்றி வேகவைத்து எடுக்கவும். வாஃபிள்ஸ் அச்சு இல்லை என்றால், தோசைக்கல்லில் பான் கேக் போல ஊற்றி வேகவைத்து எடுக்கவும்.

முளைகட்டிய வெந்தய சாதம்

தேவையானவை: பாஸ்மதி அரிசி - ஒரு கப், முளைகட்டிய வெந்தயம் - அரை கப், வெங்காயம், தக்காளி - தலா ஒன்று (பொடியாக நறுக்கவும்), மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்), கொத்தமல்லித்தழை - சிறிதளவு, கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: அரிசியை சாதமாக வடிக்கவும். வாணலியில் நெய் விட்டு சூடானதும், கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு தாளித்து... கறிவேப்பிலை, நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். இதனுடன் மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கவும். பிறகு, முளைகட்டிய வெந்தயம், வடித்த சாதம் சேர்த்துக்கிளறி கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

பாகற்காய் - ரைஸ் நூடுல்ஸ் சூப்

தேவையானவை: பாகற்காய் - ஒன்று, உப்பு சேர்த்து வேகவைத்த ரைஸ் நூடுல்ஸ் (இது அரிசி சேவைதான். இதை தனியாக வேகவைத்து எடுத்துக்கொள்ளலாம் அல்லது இடியாப்பம் சேர்க்கலாம்) - அரை கப், விரும்பிய காய்கறிகள் கலவை (கேரட், காலிஃப்ளவர், புரொக்கோலி, காளான், குடமிளகாய்) - அரை கப், தேங்காய்ப்பால் - ஒரு கப், வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), மிளகுத்தூள், மிளகாய்த்தூள், தோல் சீவி, துருவிய இஞ்சி - தலா அரை டீஸ்பூன், வெங்காயத்தாள் - 2 (பொடியாக நறுக்கவும்), எண்ணெய் - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை: பாகற்காயை இரண்டாக நறுக்கவும். விதைகளை எடுத்து விட்டு, சிறிய துண்டுகளாக நறுக்கி உப்புத் தண்ணீரில் சேர்த்துக் கலக்கவும். அரை மணிநேரம் ஊறவிடவும். பிறகு, தண்ணீரை வடித்துவிட்டு வேகவைக்கவும். குழியான வாணலியில் எண்ணெய்விட்டு நறுக்கிய காய்ந்த மிளகாய் (செதில் மட்டும்), வெங்காயம், இஞ்சி சேர்த்து வதக்கவும். இதனுடன் பாகற்காய், காய்கறிகள் கலவை, உப்பு, மிளகாய்த்தூள், மிளகுத்தூள் சேர்த்து வதக்கவும். பிறகு, வேகவைத்த ரைஸ் நூடுல்ஸ், ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். இதனுடன் தேங்காய்ப்பால் சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும். நறுக்கிய வெங்காயத்தாள் சேர்த்துப் பரிமாறவும்.

சுண்டைக்காய் வற்றல் பொடி

தேவையானவை: சுண்டைக் காய் வற்றல், பொட்டுக்கடலை – தலா அரை கப், மிளகு - அரை டீஸ்பூன், எள் - 2 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, கறிவேப்பிலை, உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை: கொடுக்கப்பட்ட பொருள்கள் அனைத்தையும் (உப்பு நீங்கலாக) வெறும் வாணலியில் தனித்தனியாக வறுத்தெடுக்கவும். அவற்றை ஆறவைத்து, உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடியாக அரைக்கவும்.

இது... சாதம் மற்றும் இட்லி, தோசையுடன் சேர்த்துச் சாப்பிட சுவையாக இருக்கும்.'

முருங்கைக்கீரை - பனீர் கிரேவி

தேவையானவை: முருங்கைக்கீரை - 3 கப், பனீர் துண்டுகள், காய்ச்சிய பால் - தலா அரை கப், வெங்காயம், தக்காளி - தலா 2 (பொடியாக நறுக்கவும்), இஞ்சி - பூண்டு விழுது - சிறிதளவு, மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - முக்கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள், சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை: வாணலியில் சிறிதளவு எண்ணெ யைக் காயவிட்டு, இஞ்சி - பூண்டு விழுது, நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். இதனுடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத் தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கி இறக்கவும். ஆறியபின் தண்ணீர் விடாமல் விழுதாக அரைக்கவும். அதே வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு சீரகம் தாளித்து, அரைத்த விழுதைச் சேர்த்து ஒரு கொதிவிடவும். பிறகு முருங்கைக்கீரை, உப்பு சேர்த்து மூடி போட்டு வேகவைக்கவும். பின்பு வறுத்த பனீர், காய்ச்சிய பால் சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும்.

முருங்கைக்கீரை ஸ்வீட்கார்ன் சூப்

தேவையானவை: முருங்கைக்கீரை, ஸ்வீட்கார்ன் முத்துகள் - தலா 2 கப், காய்ச்சி, ஆறவைத்த பால் - அரை கப், வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்க வும்), பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்), பூண்டுப் பல் - 5 (தட்டவும்), மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை: ஸ்வீட்கார்ன் முத்து களை வேகவிட்டு, ஆறவைத்து, பால் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி பூண்டு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், முருங்கைக்கீரை சேர்த்து வதக்கவும். இதனுடன் அரைத்த ஸ்வீட் கார்ன் விழுது, உப்பு சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கவும். மிளகுத்தூள் சேர்த்து சூடாகப் பரிமாறவும்.

நாவல்பழம் லஸ்ஸி

தேவையானவை: நாவல் பழம் - 10, கொழுப்பு நீக்கிய தயிர் - கால் லிட்டர், சீரகத்தூள் - கால் டீஸ்பூன், புதினா, உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை: நாவல் பழத்தைக் கழுவி, கொட்டை நீக்கி, சதைப் பகுதியைத் தனியாக எடுக்கவும். இதனுடன் புதினா, சீரகத்தூள், உப்பு, தயிர் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். டம்ளரில் ஊற்றிப் பரிமாறவும்.
குறிப்பு: சீரகத்தூளை மேலே தூவியும் பரிமாறலாம்.

நெல்லிக்காய் சட்னி

தேவையானவை: நெல்லிக்காய் துண்டுகள் - ஒரு கப், தேங்காய்த் துருவல் - கால் கப், பூண்டுப் பல் - 2 (தட்டவும்), வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி - தலா ஒன்று (பொடியாக நறுக்கவும்), காய்ந்த மிளகாய் - 2, கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், கொத்தமல்லித்தழை - கால் கப், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை: வாணலியில் எண்ணெ யைக் காயவிட்டு... நறுக்கிய நெல்லிக்காய், வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, தேங்காய்த் துருவல், பூண்டு, கொத்த மல்லித்தழை, உப்பு சேர்த்து வதக்கி, ஆற
வைக்கவும். தண்ணீர் சேர்த்து கொரகொரப் பாக அரைக்கவும். சிறிதளவு எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளித்து அரைத்து வைத்த சட்னியுடன் சேர்த்துக் கலக்கவும்.

மாதுளை - ஆப்பிள் ஜூஸ்

தேவையானவை: மாதுளை முத்துகள் - 2 கப், தோல் சீவி துருவிய சிவப்பு ஆப்பிள் - 2.

செய்முறை: ஆப்பிள் துரு வலுடன் மாதுளை முத்துகள், தண் ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டிப் பரிமாறவும். சர்க்கரை சேர்க்கத் தேவையில்லை.

குறிப்பு: விரும்பினால் அரை கப் கொழுப்பு நீக்கிய பால் (காய்ச்சி ஆறவைத்தது) சேர்த்து அரைக்கலாம்.

வெற்றிலை வெஜ் ஸ்ப்ரிங் ரோல்

தேவையானவை: வெற்றிலை - 4, கேரட் துருவல் - ஒரு கப், வேகவைத்து, தோலுரித்து, மசித்த உருளைக்கிழங்கு - அரை கப், குல்கந்து, இஞ்சி - பூண்டு விழுது - தலா ஒரு டீஸ்பூன், கொத்தமல்லித்தழை, புதினா, உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப.

செய்முறை: மசித்த உருளைக்கிழங்கு, கேரட் துருவல், கொத்தமல்லித்தழை, புதினா, உப்பு, குல்கந்து, இஞ்சி - பூண்டு விழுது ஆகியவற்றை பாத்திரத்தில் சேர்த்து நன்கு கலக்கவும். உருளைக்கிழங்குக் கலவையை வெற்றிலையின் பளபளப்பான பக்கத்தில் வைத்து ஸ்ப்ரிங் ரோலுக்கு மடிப்பதுபோல மடிக்கவும். தோசைக்கல்லில் எண்ணெய் தடவி ஸ்ப்ரிங் ரோல்களை அடுக்கவும். சுற்றிலும் எண்ணெய் ஊற்றி வேகவைத்து எடுக்கவும். பானி பூரி சட்னி சேர்த்துப் பரிமாறவும்.

நெல்லிக்காய் பஃப் பேஸ்ட்ரி

தேவையானவை: பஃப் பேஸ்ட்ரி ஷீட் - ஒன்று (பெரியது), நெல்லிக்காய் ஜாம் - ஒரு டேபிள்ஸ்பூன், நெல்லிக்காய்த் துருவல் - 2 டீஸ்பூன், வெண்ணெய், ராப் பேப்பர் - தேவைக்கேற்ப.

செய்முறை: பஃப் பேஸ்ட்ரி ஷீட்டை ஃப்ரீஸரில் வைத்து வெளியே எடுத்து வைக்கவும். அந்த ஷீட்டில் நெல்லிக்காய் ஜாம் தடவி, அதன் மேல் நெல்லிக்காய்த் துருவலைத் தூவவும். பஃப் பேஸ்ட்ரி ஷீட்டை ஓர் ஓரத்திலிருந்து இறுக்கமாகச் சுற்றி, ஷீட்டின் இறுதியில் சிறிது நீர் தடவி ஒட்டவும். ஒரு ராப் பேப்பரில் சுற்றி 15 நிமிடம் ஃப்ரீஸரில் வைக்கவும். பின்னர் வெளியில் எடுத்து கத்தியால் வட்ட வடிவத்தில் வெட்டி எடுத்து, படத்தில் காட்டியுள்ளபடி மேல்நோக்கி மடித்து ஒட்டிக்கொள்ளவும். பேக்கிங் தட்டில் சிறிது இடைவெளி விட்டு வெட்டிய ரோல்களை அடுக்கி, வெண்ணெயை பிரஷ் பயன்படுத்தித் தடவவும். 180°C முன்சூடு (ப்ரீ ஹீட்) செய்த மைக்ரோவேவ் அவனில் இருபது நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும். பத்து நிமிடங்களில் ஒருபுறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி விடவும்.