Published:Updated:

தீயாக பரவும் கவுன் டிரெண்ட் !

படங்கள்: ஜெ.தான்யராஜுமோ.அருண் ரூப பிரசாந்த்

தீயாக பரவும் கவுன் டிரெண்ட் !

படங்கள்: ஜெ.தான்யராஜுமோ.அருண் ரூப பிரசாந்த்

Published:Updated:
##~##

நேற்று ஃபேஷன் என்று சொல்லப்பட்ட 'மசக்கலி', இன்று இல்லை! இன்று டிரெண்டில் உள்ள 'டபாங்', நாளை கண்டிப்பாக இருக்காது. இப்படி ஃபேஷன் உலகில் புதுசு புதுசாக... தினுசு தினுசாக அறிமுகப்படுத்திக் கொண்டேயிருப்பது, ஃபேஷன் டிசைனிங் துறையினரின் கடமை!

நாளைய ஃபேஷன் உலகை ஆள்வதற்காகப் பயிற்சி எடுத்துக்கொண்டு இருக்கும் ஃபேஷன் டிசைனிங் துறையைச் சேர்ந்த இளம் மாணவர் பட்டாளம் ஒன்றை, 'கொஞ்சம் காபி... நிறைய பேச்சு' என அரட்டைக் கச்சேரிக்கு ஆயத்தப்படுத்தினோம். இடம், வடபழனியில் உள்ள ராஃபெல்ஸ் ஃபேஷன் இன்ஸ்டிடியூட்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கத்தரியும் கையுமாக கர்மசிரத்தையோடு வேலை பார்த்துக் கொண்டிருந்தவர்களில், ''இந்தப் படிப்பு... எங்களுக்குச் சுமையா இல்லை. ஏன்னா, மனசுக்குப் பிடிச்ச விஷயத்தையே படிப்பாவோ, தொழிலாவோ எடுக்கும்போது, அதில் ஒரு ஆத்ம திருப்தி கிடைக்கும்'' என்று பொறுப்பாக பிள்ளையார் சுழி போட்டார் பூஜா.

தீயாக பரவும் கவுன் டிரெண்ட் !

உண்மைதான். பெஞ்ச், டெஸ்க் போட்டு கையில் சாக்பீஸோடு இங்கே பாடம் நடத்தப்படுவதில்லை. கம்யூனிகேஷன், மார்க்கெட்டிங், கலர் சைக்காலஜி என ஃபேஷன் உலகின் 'அ’ முதல் 'ஃ’ வரை அவர்களின் மூளைக்குள் அல்ல, மனதுக்குள் ஏற்றுகிறார்கள் மெக்ஸிகோவில் இருந்து வந்திருக்கும் அழகு டீச்சர் பமீலா  மற்றும் சென்னையைச் சேர்ந்த சரண்யா.

மெஹீல் கொஞ்சம் விவரமான ஆள். ''சாஃப்ட்வேர், பெட்ரோலியம், தங்கம்... இதோட சேர்ந்து பொருளாதாரமும் ஏறி, இறங்கிக்கிட்டே இருந்தாலும்... உணவு, ஆடை இது ரெண்டும் எப்பவுமே சோடை போகாதுங்கற நம்பிக்கையிலதான் ஃபேஷன் துறையைத் தேர்ந்தெடுத்தேன்'' என்றார்.

தீயாக பரவும் கவுன் டிரெண்ட் !

''கடையில் நீங்க எடுக்கிற ரெடிமேட் துணிகள் எல்லாம் பொதுவான அளவுகள்ல இருக்கும். அதுவே டிசைனர் உடைகள்னா, கனகச்சிதமா பொருந்தியிருக்கும். காரணம்... அதுக்கான அளவுகளையே கிட்டத்தட்ட அரை மணி நேரத்துக்கு மேல அலசி ஆராய்வோம். சொல்லப் போனா, உங்களுக்கான ஆடைகளைச் செதுக்குவோம். அதனால்தான் டிசைனர் உடைகள் எப்பவும் கொஞ்சம் காஸ்ட்லி!''

- இது சஞ்சனாவின் விளக்கம்.

''முன்ன எல்லாம் கிறிஸ்டியன் மேரேஜ்ல மட்டும்தான் கவுன் போட்டுப் பார்த்திருப்போம். இப்போ... கவுன் டிரெண்ட்தான் உலகம் முழுக்கத் தீயா பரவிட்டு இருக்கு. குறிப்பா, டின்னர் பார்ட்டிகளுக்கு ஏற்ற டிரெஸ், கவுன்தான்!'' என சூடம் அணைக்காத குறையாக சத்தியம் செய்தார் ஸ்ம்ரிதி.

''ஒவ்வொரு துறையிலும் 'தம்ப் ரூல்'னு ஒண்ணு உண்டு. எக்காரணம் கொண்டும் அது மாறாது. அப்படியான சில விதிகள் ஃபேஷன் துறைக்கும் உண்டு'' என்று அர்த்தமாகப் பேசிய ஷாஃபியா,

தீயாக பரவும் கவுன் டிரெண்ட் !

''டெனிம் டாப்ஸ், டெனிம் பாட்டம்... ரெண்டுமே பெண்கள் அணியலாம். ஆனா... ரெண்டையும் ஒரு சேர அணியக்கூடாது. தோல் பொருட்கள் (பெல்ட், காலணி, கைப்பை) உபயோகிக்கும்போது, அதன் கலர் ஷேட் ஒரே மாதிரியா இருக்கணும். கொஞ்சம் குண்டானவங்க, குறுக்குக் கோடுகள் போட்ட 'ஹரிசான்ட்டல் ஸ்டிரைப்ட்’ டாப்ஸ் அவங்களை இன்னும் குண்டா காட்டும்ங்கிறதால, அதைத் தவிர்க்கணும். ஒல்லியான உருவம் கொண்டவங்க நேர் கோடுகள் போட்ட 'வெர்ட்டிகல் ஸ்டிரைப்டு’ டாப்ஸைத்

தீயாக பரவும் கவுன் டிரெண்ட் !

தவிர்க்கணும்'' என்று பாடம் எடுத்தார்.

''உலகின் ஃபேஷன் தலைநகரம், இத்தாலியில் உள்ள மிலன் நகரம். எல்லா ஸ்டைல்களோட பிறப்பிடமும் மிலன்தான். முடிந்தவரை அதையெல்லாம் இன்டர்நெட்டில் தேடிபிடிச்சு புதுப் புது டிசைன்களை உடனுக்குடன் அப்டேட் செய்றதுதான், ஃபேஷன் டிசைனர்களுக்கு சவாலான விஷயம்.

ஒண்ணு தெரியுமா... ரெடிமேட் புடவைதான் இப்போ மேற்கத்திய நாடுகளில் செம ஹிட். கவுன்போல வடிவமைக்கப்பட்டு இருக்குற அந்தப் புடவை, உடுத்திக்கவும் சுலபமா இருக்கும். வடிவம் மாறினாலும், ஃபேஷன் அரங்கில் புடவைக்குக் கிடைச்சுருக்குற அங்கீகாரம், நம் நாட்டுக்கு கிடைத்த பெருமைதான். கணுக்கால் வரை நீளும் அனார்கலி டிரெஸ்ஸும் இப்போ ஃபாரினில் பாப்புலர்'' என்று ஃபேஷன் உலகில் இந்தியாவின் பங்கை 'ரமணா’ விஜயகாந்த் போல விவரங்களோடு அடுக்கியது... அக்ஷயா.

இரண்டாம் தர நகரங்களிலும், கிராமங்களிலும் உள்ள மாணவர்கள் பணம் சம்பாதிக்கும் படிப்பையே இன்னும் சுற்றி வருகின்றனர். அவர்களும் கற்பனைத் திறனை மூலதனமாக்கி, கூட்டைவிட்டு வெளியேறினால், நம் அப்பத்தாவின் கண்டாங்கி சேலையுடுத்தி, வெள்ளைக்காரப் பெண் ஒருத்தி, 'மிலன் ஃபேஷன் ஷோ'வில் நாளை ஒய்யார நடை போடலாம்..!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism