Published:Updated:

மனுஷி - 11 - மெனோபாஸ் ஆண்களுக்கும் உண்டு!

பிரீமியம் ஸ்டோரி

சுபா கண்ணன் - ஓவியம்: ஸ்யாம்

முதாயம் என்பது ஆண்-பெண் இருவரின் உயிரோட்டம் உள்ள வாழ் வியல் முறையைக் குறிப்பதாகும். இ்ப்படியில் லாமல், உயர்வு - தாழ்வு பேசிக்கொண்டு செயல்படுவதல்ல. உரிமை என்பது ஒருவர் கொடுப்பதுமன்று; மற்றவர் வாங்குவது மன்று. அது எவரிடத்தும் எவ்விடத்தும் இயல்பாக அமைந்து இருப்பதாகும்.

- `பெண்ணின் பெருமை’ நூலில் திரு.வி.க.

மனுஷி - 11 - மெனோபாஸ் ஆண்களுக்கும் உண்டு!

மாயாவின் ஏற்பாட்டின்படி தன்னுடைய பிறந்தநாளுக்கு வீட்டுக்கு வந்து வாழ்த்துச் சொன்ன பள்ளித்தோழி வாஸந்தி மேனனுடன் பேசியதில், ஆனந்திக்கு ஓரளவு தெளிவு கிடைத்துவிட்டது. புறப்படும்போது தோழியின் மொபைல் நம்பரை வாங்கிக் கொண்டதால், அடிக்கடி பேசக்கூடிய சந்தர்ப்பங்கள் ஏற்பட்டன.

ஒருநாள் யதேச்சையாக கடற்கரையில் இருவரும் சந்திக்க நேர்ந்தது. ‘`என்ன ஆனந்தி, எப்படி இருக்கிறாய்? வீட்டுக்கு வந்துவிட்டுப் போன பிறகு இப்பத்தான் நாம சந்திக்கறோம். தினமும் வாக்கிங் வருவியோ?’’ என்று கேட்டாள் வாஸந்தி.
``இல்லைப்பா... இப்ப ஒருவாரமாத்தான் வர்றேன்’’ என்றாள் ஆனந்தி.

``இத்தனை நாளா இல்லாம இப்ப என்ன திடீர்னு வாக்கிங் வரத் தோணுச்சு?’’

- வாஸந்தி கேட்டாள்.

``என்னவர்தான் ஒருவாரமா என்னை நடக்கச் சொல்லிப் படுத்தறார். ஆறு மாசமாவே அவருக்குள்ள நிறைய மாற்றம் ஏற்பட்டிருக்கு. மாரத்தானில் கலந்துக்கணுமாம். சைக்கிளிங் போறதும், ஸ்விம்மிங் பண்றதுமா உடம்பை டிரிம்மா வெச்சுக்கணும்னு மெனக்கெடறார். என்னையும் சேர்ந்து நடக்கச் சொல்றார்’’ என்று அலுத்துக்கொண்டாள் ஆனந்தி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மனுஷி - 11 - மெனோபாஸ் ஆண்களுக்கும் உண்டு!‘`அதுல உனக்கு என்ன நஷ்டம்? வாக்கிங் போறது நல்லதுதானே?’’

‘`வாஸ்தவம்தான் வாஸந்தி. நான் தினமுமே வீட்டில யோகா செய்வேன். வேலை முடிஞ்சதுக்கப்புறம் ட்ரெட் மில்ல நடப்பேன். இதையெல்லாம் வீட்டுவேலையைப் பார்த்துக்கிட்டே செய்யறதால, எளிமையாவும் சுலபமாவும் இருக்கும். ஆனா, இங்க வந்து நடக்கறது பிடிச்சிருந்தாலும், ரெடியாகி வரவும், திரும்பப் போகவுமே சரியா இருக்கும். வீட்டில செஞ்சா நேரம் மிச்சமாகும். அந்த நேரத்துல தோட்டத்துக்கு தண்ணீர் விடுவேன். அப்பல்லாம் அந்தச் செடிகளும் பூக்களும் என்னோடு பேசற மாதிரி இருக்கும். இங்கிருந்து போறதுக்குள்ள இருட்டிடறதால, என்னால  செடிகளைக் கவனிக்கமுடியாம போயிடுதேன்னு கஷ்டமா இருக்கு’’ என்றாள் ஆனந்தி.

``கூல் கூல்’’ என்று சிரித்தபடியே பேசினாள் வாஸந்தி... “நீ ஏன் எல்லாத்துக்கும் அப்செட் ஆகறேன்னே தெரியலை. மாற்றம் ஒன்றே மாறாதது. உன்னோட கணவர் திடீர்னு மாறினாருன்னு சொல்ற இல்லையா? இதுக்கு ஒரு மெடிக்கல் டேர்ம் இருக்கு... அதோட பேர் `மேல் மெனோபஸ்’ (male menopause). என்ன ஆச்சர்யமா இருக்கா? பெண்களைப் போலவே ஆண்களுக்கும் 40 வயசாகும் சமயத்தில் ஹார்மோன்கள் சுரப்பு குறையும். டெஸ்ட்ரோஜன் குறைவதால், பாடி சிஸ்டம் அந்த லெவலை மெயின்டெயின் செய்வதற்காக வீர விளையாட்டுகள், நீச்சல் போன்றவற்றைச் செய்யத் தூண்டும், இது அனிச்சையாக நடைபெறும் ஒரு நிகழ்வுதான்.

அந்தச் சுரப்பிகளின் அளவு குறைவதால்தான் இப்படி நடப்பார்களா என்றால், அதை பொதுவாக எல்லோருக்குமான பதிலா சொல்லிட முடியாது. சிலர் இந்த நிலையை ரொம்பவே இயல்பா கடந்துடுவாங்க. சிலரோ இளையவர்களுடன் நட்பாகப் பழகுவது, மாடர்னாக தங்களைக் காட்டிக்கொள்வது, ட்ரெண்டியான உடை, ஹேர்கட் என்று தங்களை மாற்றிக்கொள்வார்கள். இன்னும் சிலரோ, வீட்டில் உள்ள பெண்களை அளவுக்கு அதிகமாகக் கட்டுப்படுத்துவது, அவர்களுடைய ஆடை, அலங்காரங்களில் ஆதிக்கம் செலுத்துவது என்று நடந்துகொள்வார்கள். வேறு சிலரோ, திடீரென ஆன்மிகத்தில் கவனம் செலுத்தி தங்களைப் பக்திப் பழமாகக் காட்டிக்கொள்வார்கள். இவை எல்லாமே மேல் மெனோபஸ்ஸின் எஃபெக்ட்ஸ்தான்!’’ என்றாள் வாஸந்திமேனன்.

‘`இவ்வளவு சொன்ன நீயே இதை எப்படி எதிர்கொள்றதுன்னும் சொல்லிடேன்’’ என்றாள் ஆனந்தி.

``நீ ஒண்ணுமே செய்ய வேண்டாம். அவங்களை ஃப்ரீயா விட்டாலே போதும். ஆண்களுக்கு மனைவியிடம் இருந்து கிடைக்கும் பாராட்டே பெரிய அங்கீகாரம்தான். ‘போங்கப்பா, ரொம்ப யங்கா இருக்கீங்க என்னாலல்லாம் உங்களவுக்கு வாக் பண்ண முடியாது’ன்னு அடிச்சுவிடு. வேலை சம்பந்தமான மனஅழுத்தம், பிள்ளைகளுக்கு செய்யவேண்டிய கடமைகள், நண்பர்கள் வீடு வாங்கினால் தானும் வாங்க வேண்டும் என்கற  ஒரு துடிப்புன்னு முற்றுப்பெறாமல் அவங்களோட கடமைகள் தொடர்ந்துக்கிட்டேதான் இருக்கும். ஒருவகையில் பார்த்தா ஆண்களும் பாவம்தான்’’ என்ற வாஸந்தி தொடர்ந்தாள்...
          
‘`இது மாதிரி பிரச்னைகளைப் பெண்களால சுலபமா பேசிட முடியும்... ஆண்களால பேசக்கூட முடியாது. நமக்காக கஷ்டப்படற கணவருக்காக இதை ஒரு எல்லைவரை ஏத்துக் கறதுல தப்பே இல்லை. ரொம்ப ஓவரா போனா அப்ப பார்த்துக்கலாம். ஆனா, பெரும்பாலும் அப்படி ஆகாதுன்னே சொல்லலாம்’’ என்றாள்.

“நம்ம ஆளுங்க `40 வயதில் நாய்குணம்'னு கண்டுக்காம விட்டது இதைத்தானோ” என ஆனந்தி சொல்ல, இருவரும் சிரித்தனர்.

``உண்மையா சொல்லப் போனா, `அந்தம்மாக்கு மெனோபாஸ் ஸ்டேஜ்... அதான் சிடுசிடுங்கும்’ என்பவர்கள்கூட ஆண்களின் இந்த நிலையைப் பேசுவதில்லை. பெண்கள், பதின்ம வயதில் இருக்கும் பிள்ளைகள், 40 வயதில் இருக்கும் கணவர் என்று இருவேறு எமோஷன்களில் இருப்பவர்களை அழகாக ஹேண்டில் செய்வதற்காகவே பெண்களுக்கு ஒரு சபாஷ் சொல்லலாம். ஆண்களைவிட பெண்களுக்கு குறைந்த வயசுல திருமணம் செய்ததும் இதற்குத்தான். குழந்தைகளும் தகப்பனும் ஓரளவுக்குப் பக்குவம் பெற்று, அம்மாவுக்கு மெனோபஸ் வரும்போது சப்போர்ட்டாக இருந்தால், குடும்பத்தில் என்றுமே ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே...’’ என்ற வாஸந்தி, ‘`கிளம்பு... உன் வீட்டுக்காரரும், தோட்டத்துச் செடிகளும் உனக்காகக் காத்திருப்பார்கள். வேற ஒரு சந்தர்ப்பத்தில் பேசலாம்’’ எனச் சொல்லி எழுந்தாள்.

(இன்னும் உணர்வோம்)சமுதாயம் என்பது ஆண்-பெண் இருவரின் உயிரோட்டம் உள்ள வாழ் வியல் முறையைக் குறிப்பதாகும். இ்ப்படியில் லாமல், உயர்வு - தாழ்வு பேசிக்கொண்டு செயல்படுவதல்ல. உரிமை என்பது ஒருவர் கொடுப்பதுமன்று; மற்றவர் வாங்குவது மன்று. அது எவரிடத்தும் எவ்விடத்தும் இயல்பாக அமைந்து இருப்பதாகும்.

- `பெண்ணின் பெருமை’ நூலில் திரு.வி.க.

மாயாவின் ஏற்பாட்டின்படி தன்னுடைய பிறந்தநாளுக்கு வீட்டுக்கு வந்து வாழ்த்துச் சொன்ன பள்ளித்தோழி வாஸந்தி மேனனுடன் பேசியதில், ஆனந்திக்கு ஓரளவு தெளிவு கிடைத்துவிட்டது. புறப்படும்போது தோழியின் மொபைல் நம்பரை வாங்கிக் கொண்டதால், அடிக்கடி பேசக்கூடிய சந்தர்ப்பங்கள் ஏற்பட்டன.

ஒருநாள் யதேச்சையாக கடற்கரையில் இருவரும் சந்திக்க நேர்ந்தது. ‘`என்ன ஆனந்தி, எப்படி இருக்கிறாய்? வீட்டுக்கு வந்துவிட்டுப் போன பிறகு இப்பத்தான் நாம சந்திக்கறோம். தினமும் வாக்கிங் வருவியோ?’’ என்று கேட்டாள் வாஸந்தி.
``இல்லைப்பா... இப்ப ஒருவாரமாத்தான் வர்றேன்’’ என்றாள் ஆனந்தி.

``இத்தனை நாளா இல்லாம இப்ப என்ன திடீர்னு வாக்கிங் வரத் தோணுச்சு?’’

- வாஸந்தி கேட்டாள்.

``என்னவர்தான் ஒருவாரமா என்னை நடக்கச் சொல்லிப் படுத்தறார். ஆறு மாசமாவே அவருக்குள்ள நிறைய மாற்றம் ஏற்பட்டிருக்கு. மாரத்தானில் கலந்துக்கணுமாம். சைக்கிளிங் போறதும், ஸ்விம்மிங் பண்றதுமா உடம்பை டிரிம்மா வெச்சுக்கணும்னு மெனக்கெடறார். என்னையும் சேர்ந்து நடக்கச் சொல்றார்’’ என்று அலுத்துக்கொண்டாள் ஆனந்தி.

‘`அதுல உனக்கு என்ன நஷ்டம்? வாக்கிங் போறது நல்லதுதானே?’’

‘`வாஸ்தவம்தான் வாஸந்தி. நான் தினமுமே வீட்டில யோகா செய்வேன். வேலை முடிஞ்சதுக்கப்புறம் ட்ரெட் மில்ல நடப்பேன். இதையெல்லாம் வீட்டுவேலையைப் பார்த்துக்கிட்டே செய்யறதால, எளிமையாவும் சுலபமாவும் இருக்கும். ஆனா, இங்க வந்து நடக்கறது பிடிச்சிருந்தாலும், ரெடியாகி வரவும், திரும்பப் போகவுமே சரியா இருக்கும். வீட்டில செஞ்சா நேரம் மிச்சமாகும். அந்த நேரத்துல தோட்டத்துக்கு தண்ணீர் விடுவேன். அப்பல்லாம் அந்தச் செடிகளும் பூக்களும் என்னோடு பேசற மாதிரி இருக்கும். இங்கிருந்து போறதுக்குள்ள இருட்டிடறதால, என்னால  செடிகளைக் கவனிக்கமுடியாம போயிடுதேன்னு கஷ்டமா இருக்கு’’ என்றாள் ஆனந்தி.

``கூல் கூல்’’ என்று சிரித்தபடியே பேசினாள் வாஸந்தி... “நீ ஏன் எல்லாத்துக்கும் அப்செட் ஆகறேன்னே தெரியலை. மாற்றம் ஒன்றே மாறாதது. உன்னோட கணவர் திடீர்னு மாறினாருன்னு சொல்ற இல்லையா? இதுக்கு ஒரு மெடிக்கல் டேர்ம் இருக்கு... அதோட பேர் `மேல் மெனோபஸ்’ (male menopause). என்ன ஆச்சர்யமா இருக்கா? பெண்களைப் போலவே ஆண்களுக்கும் 40 வயசாகும் சமயத்தில் ஹார்மோன்கள் சுரப்பு குறையும். டெஸ்ட்ரோஜன் குறைவதால், பாடி சிஸ்டம் அந்த லெவலை மெயின்டெயின் செய்வதற்காக வீர விளையாட்டுகள், நீச்சல் போன்றவற்றைச் செய்யத் தூண்டும், இது அனிச்சையாக நடைபெறும் ஒரு நிகழ்வுதான்.

அந்தச் சுரப்பிகளின் அளவு குறைவதால்தான் இப்படி நடப்பார்களா என்றால், அதை பொதுவாக எல்லோருக்குமான பதிலா சொல்லிட முடியாது. சிலர் இந்த நிலையை ரொம்பவே இயல்பா கடந்துடுவாங்க. சிலரோ இளையவர்களுடன் நட்பாகப் பழகுவது, மாடர்னாக தங்களைக் காட்டிக்கொள்வது, ட்ரெண்டியான உடை, ஹேர்கட் என்று தங்களை மாற்றிக்கொள்வார்கள். இன்னும் சிலரோ, வீட்டில் உள்ள பெண்களை அளவுக்கு அதிகமாகக் கட்டுப்படுத்துவது, அவர்களுடைய ஆடை, அலங்காரங்களில் ஆதிக்கம் செலுத்துவது என்று நடந்துகொள்வார்கள். வேறு சிலரோ, திடீரென ஆன்மிகத்தில் கவனம் செலுத்தி தங்களைப் பக்திப் பழமாகக் காட்டிக்கொள்வார்கள். இவை எல்லாமே மேல் மெனோபஸ்ஸின் எஃபெக்ட்ஸ்தான்!’’ என்றாள் வாஸந்திமேனன்.

‘`இவ்வளவு சொன்ன நீயே இதை எப்படி எதிர்கொள்றதுன்னும் சொல்லிடேன்’’ என்றாள் ஆனந்தி.

``நீ ஒண்ணுமே செய்ய வேண்டாம். அவங்களை ஃப்ரீயா விட்டாலே போதும். ஆண்களுக்கு மனைவியிடம் இருந்து கிடைக்கும் பாராட்டே பெரிய அங்கீகாரம்தான். ‘போங்கப்பா, ரொம்ப யங்கா இருக்கீங்க என்னாலல்லாம் உங்களவுக்கு வாக் பண்ண முடியாது’ன்னு அடிச்சுவிடு. வேலை சம்பந்தமான மனஅழுத்தம், பிள்ளைகளுக்கு செய்யவேண்டிய கடமைகள், நண்பர்கள் வீடு வாங்கினால் தானும் வாங்க வேண்டும் என்கற  ஒரு துடிப்புன்னு முற்றுப்பெறாமல் அவங்களோட கடமைகள் தொடர்ந்துக்கிட்டேதான் இருக்கும். ஒருவகையில் பார்த்தா ஆண்களும் பாவம்தான்’’ என்ற வாஸந்தி தொடர்ந்தாள்...
          
‘`இது மாதிரி பிரச்னைகளைப் பெண்களால சுலபமா பேசிட முடியும்... ஆண்களால பேசக்கூட முடியாது. நமக்காக கஷ்டப்படற கணவருக்காக இதை ஒரு எல்லைவரை ஏத்துக் கறதுல தப்பே இல்லை. ரொம்ப ஓவரா போனா அப்ப பார்த்துக்கலாம். ஆனா, பெரும்பாலும் அப்படி ஆகாதுன்னே சொல்லலாம்’’ என்றாள்.

“நம்ம ஆளுங்க `40 வயதில் நாய்குணம்'னு கண்டுக்காம விட்டது இதைத்தானோ” என ஆனந்தி சொல்ல, இருவரும் சிரித்தனர்.

``உண்மையா சொல்லப் போனா, `அந்தம்மாக்கு மெனோபாஸ் ஸ்டேஜ்... அதான் சிடுசிடுங்கும்’ என்பவர்கள்கூட ஆண்களின் இந்த நிலையைப் பேசுவதில்லை. பெண்கள், பதின்ம வயதில் இருக்கும் பிள்ளைகள், 40 வயதில் இருக்கும் கணவர் என்று இருவேறு எமோஷன்களில் இருப்பவர்களை அழகாக ஹேண்டில் செய்வதற்காகவே பெண்களுக்கு ஒரு சபாஷ் சொல்லலாம். ஆண்களைவிட பெண்களுக்கு குறைந்த வயசுல திருமணம் செய்ததும் இதற்குத்தான். குழந்தைகளும் தகப்பனும் ஓரளவுக்குப் பக்குவம் பெற்று, அம்மாவுக்கு மெனோபஸ் வரும்போது சப்போர்ட்டாக இருந்தால், குடும்பத்தில் என்றுமே ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே...’’ என்ற வாஸந்தி, ‘`கிளம்பு... உன் வீட்டுக்காரரும், தோட்டத்துச் செடிகளும் உனக்காகக் காத்திருப்பார்கள். வேற ஒரு சந்தர்ப்பத்தில் பேசலாம்’’ எனச் சொல்லி எழுந்தாள்.

(இன்னும் உணர்வோம்)