Published:Updated:

அருமை - மாற்றுத்திறனாளிகளுக்கு மகத்தான உடைகள்!

அருமை - மாற்றுத்திறனாளிகளுக்கு மகத்தான உடைகள்!
பிரீமியம் ஸ்டோரி
அருமை - மாற்றுத்திறனாளிகளுக்கு மகத்தான உடைகள்!

சபாஷ் முயற்சிஆர்.வைதேகி

அருமை - மாற்றுத்திறனாளிகளுக்கு மகத்தான உடைகள்!

சபாஷ் முயற்சிஆர்.வைதேகி

Published:Updated:
அருமை - மாற்றுத்திறனாளிகளுக்கு மகத்தான உடைகள்!
பிரீமியம் ஸ்டோரி
அருமை - மாற்றுத்திறனாளிகளுக்கு மகத்தான உடைகள்!
அருமை - மாற்றுத்திறனாளிகளுக்கு மகத்தான உடைகள்!

ணம் கொட்டும் துறைகளில் இன்று ஃபேஷன் இண்டஸ்ட்ரியும் ஒன்று. பெரிய பெரிய ஃபேஷன் ஷோக்களில் பங்கேற்பதன் மூலம் உலக அளவில் கவனம் ஈர்ப்பது, திரைப்படங்களில் பணிபுரிவதன்மூலம் பிரபலங்களுக்கு நெருக்கமாவது என இதில் விரைவிலேயே உச்சம் தொடும் வாய்ப்புகள் அதிகம். ஆனாலும், அவற்றை எல்லாம் புறந்தள்ளிவிட்டு, தனது ஆர்வத்தையே சேவையாக மாற்றிக்கொண்டிருக்கிறார் ஷாலினி விசாகன். தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான உடை வடிவமைப்பை அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர் இவர்!

‘ட்ரையோ ஃபேஷன் ஷோ’ என்கிற பெயரில், சென்னையில் சமீபத்தில் ஒரு ஃபேஷன் ஷோ நடந்தது. அதில் பங்கேற்ற மூன்று ஃபேஷன் டிசைனர்களில் ஷாலினியும் ஒருவர். ஷாலினியின் சிறப்பு, ‘அடாப்டிவ் க்ளோத்திங்’ என்கிற மாற்றுத்திறனாளிகளுக்கான உடை வடிவமைப்பு.

எங்கே, எப்படித் துளிர்த்தது இந்த ஆர்வமும் முயற்சியும்?

கனிவான குரலில் இனிமையாகப் பேசுகிறார் ஷாலினி...

‘`எனக்குப் பூர்வீகம் ஹைதராபாத். 2009-ல் கல்யாணமானதும் சென்னையில செட்டிலானோம். கல்யாணத்துக்கு நாலு வருஷங்களுக்குப் பிறகுதான் ஃபேஷன் டிசைனிங் படிச்சேன். என் கணவர் விசாகன், பிறந்த மூணு மாசத்துலயே போலியோவால் பாதிக்கப்பட்டவர். 33 வருஷங்களா வீல் சேர்லதான் அவர் வாழ்க்கை நகர்ந்திட்டிருக்கு. இப்போ ஒரு பெட்ரோல் பங்க் வெச்சு நடத்திக்கிட்டிருக்கார். தனியா பயணம் பண்றது, தானே டிரைவ் பண்றதுன்னு தனக்கான வேலைகளைத் தானே பார்த்துக்கிற அளவுக்குத் தன்னம்பிக்கை உள்ளவர். ஆனாலும், அவருக்கு அதிக சிரமம் கொடுத்த ஒரு விஷயம் - உடை.

விசாகனுக்கு டிரெஸ் பண்றதுல உள்ள நடைமுறைச் சிக்கல்களைக் கூடவே இருந்து பார்த்தேன். டிராவல் பண்ணும்போதும் நிறைய பிரச்னைகள்... வீல் சேர்லேருந்து, சாதாரண நாற்காலிக்கு மாத்தறது, பாத்ரூம் போறதுன்னு பல சிக்கல்களுக்கும் டிரெஸ்ஸை கொஞ்சம் மாத்தினா வசதியா இருக்கும்னு தோணிச்சு. விசாகனுக்காக நானே சில உடைகளை  டிசைன் பண்ணிக் கொடுத்தேன். அந்த உடைகள் அவருக்கு வசதியா இருக்கிறது தெரிஞ்சது. வழக்கமான நடைமுறைச் சிக்கல்கள்லேருந்து விடுதலை கிடைச்ச மாதிரி உணர்ந்தார்.

அருமை - மாற்றுத்திறனாளிகளுக்கு மகத்தான உடைகள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விசாகனோட நண்பரின் அம்மாவும் மாற்றுத்திறனாளி. அவங்களும் வீல் சேர்லதான் இருக்காங்க. ‘எங்கம்மா கோயிலுக்குப் போகணும்னு ஆசைப்படறாங்க. ஆனா, நைட்டி போட்டுக்கிட்டுப் போக முடியலை’ன்னு விசாகனோட நண்பர் அடிக்கடி கவலையோட சொல்வார். அவங்களுக்கும் வசதியான உடையை டிசைன் பண்ண முடியுமான்னு யோசிச்சேன். அப்படி டிசைன் பண்ணினதுதான் ‘ஒன்பீஸ் புடவை’. அதை நைட்டி மாதிரி அப்படியே அணியலாம். ஆனா, பார்க்கிறதுக்கு புடவை மாதிரியே இருக்கும். பிளவுஸும் புடவையும் சேர்த்தே தைக்கப்பட்டிருக்கும். பட்டன் போட வேண்டிய அவதியும் இருக்காது. அந்த ஆன்ட்டிக்கு இந்தப் புடவை ரொம்பப் பிடிச்சுப் போச்சு. இந்த ஒன்பீஸ் புடவையைக் கொடுத்ததும் அவங்களோட சந்தோஷம் மட்டுமில்லாம, தன்னம்பிக்கையும் பல மடங்கு அதிகமானதைப் பார்த்தேன்.

என் கணவர்கிட்டயும் இந்த ஆன்ட்டிகிட்டயும் நான் பார்த்த மாற்றங்கள்தான், மாற்றுத் திறனாளிகளுக்கான உடைகளை வடிவமைக் கிறதுல என்னைத் தீவிரமா ஈடுபட வெச்சது. வெளியில வரத் தயங்கற பலருக்கும் இது உதவியா இருக்கும்னு நினைச்சேன்...’’ - அசத்த லான ஆரம்பத்தை அழகாக விவரிக்கிறார் ஷாலினி.

எத்தனையோ ஃபேஷன் ஷோக்கள் நடத்தி யும் வெளியில் தெரியாத ஷாலினியின் பெயர், மாற்றுத்திறனாளிகளுக்கான உடை வடி வமைப்பின் மூலம் பிரபலமாகிவிட்டது.

‘`இந்த ஷோவுல கலந்துக்கிட்ட மூணு டிசைனர்கள்ல நான் மட்டும்தான் மாற்றுத் திறனாளிகளுக்கான உடைகளை டிசைன் செய்தேன். மாற்றுத் திறனாளிகளும் மனுஷங்க தானே... மாற்றுத்திறன் காரணமா, சராசரி மனுஷங்களைப்போல உடையணியவும், அழகாகக் காட்சியளிக்கவும் முடியாம போகணுமா என்ன? இந்தக் கேள்விகள் தாம் இந்த ஐடியாவுக்கு விதை போட்டன.

அருமை - மாற்றுத்திறனாளிகளுக்கு மகத்தான உடைகள்!

இந்த ஷோவுக்காக நிறைய உழைக்க வேண்டியிருந்தது. டிசைன் செய்ய ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி நிறைய ஆராய்ச்சிகள் செய்ய வேண்டியிருந்தது. `வித்யாசாகர்' என்கிற சிறப்புக்குழந்தைகளுக்கான பள்ளிக்குப் போய் மாற்றுத்திறனாளிக் குழந்தைகளையும் பெற்றோரையும் சந்திச்சேன். சிலருக்குக் கைகள் வளையாது. இன்னும் சிலருக்குக் கால்களை நீட்டி, மடக்க முடியாது. அந்தக் குழந்தைகளுக்கு டிரெஸ் பண்ணிவிடும்போது எந்த மாதிரியான பிரச்னைகளைச் சந்திக்கிறாங்கன்னு கேட்டுக் குறிப்புகள் எடுத்துக்கிட்டேன். எந்தெந்த விஷயங்களில் மாற்றங்கள் எதிர்பார்க்கிறாங் கன்னு கேட்டு, அதுக்கேற்றபடி உடைகளை டிசைன் பண்ணினேன். அப்படிப் பண்ணின உடைகள் முதல்முறையிலேயே அவங்களுக்குப் பொருந்திப் போகலை. இரண்டு, மூன்று முறை ட்ரயல் பார்த்ததுல, இன்னும் சில மாற்றங்கள் தேவையா இருந்தன. அவற்றையெல்லாம் சரிசெய்து, கடைசியா அவங்களுக்கான பக்கா உடைகளைக் கொடுக்க முடிஞ்சது.

சிலர், முதுகெலும்பு உடைஞ்சு இயக்கம் தடைப்பட்டவங்களா இருப்பாங்க. விரல்களை அசைக்கிறதுல சிரமங்கள் இருக்கும். பட்டன் போடறதுகூட கஷ்டமா இருக்கும். அவங்களுக்கு விரல் நுனியில தொட்டதும் `ஜிப்' திறக்கிற மாதிரியும், மூடற மாதிரியும் டிசைன் பண்ணினேன். டயப்பர் உபயோகிக்கிறவங்களுக்கு பின்பக்கம் ஓப்பனிங் வெச்ச மாதிரி டிரெஸ் டிசைன் பண்ணிக் கொடுத்திருக்கேன். இதுல சுலபமா டயப்பரை மாத்த முடியும்...’’ என்கிற ஷாலினி,  இந்த ஃபேஷன் ஷோவில், மாற்றுத் திறனாளிகளுக்கான பார்ட்டி உடைகளையும் வடிவமைத்து, கவனம் ஈர்த்திருக்கிறார்.

‘`மாற்றுத்திறனாளிகளுக்கான உடைகள் லேயே அடுத்தகட்டமா, இண்டோ-வெஸ்டர்ன் பார்ட்டி உடைகளும் டிசைன் பண்ணி யிருக்கேன். உடலளவுல குறைகள் இருந்தாலும் மாற்றுத்திறனாளிகளுக்கு மனசுல மத்தவங்களைப் போலத்தானே ஆசைகள் இருக்கும்? அவங்க வாழ்க்கையில கல்யாணம் மாதிரியான சிறப்பு நிகழ்வுகள் வரும்போது, எல்லாரையும் போல டிரெஸ் பண்ண முடியாத ஏக்கம் இருக்கிறதைப் பார்த்தேன். அப்படி சிலர்கிட்ட பேசினபோது, மாற்றுத்திறன் காரணமா அவங்களால உடலை உறுத்தற மாதிரியான உடைகளை அணிய முடியாத ஏக்கத்தையும், காற்றோட்டம் அதிகம் தேவைப்படற உடைகளா இருந்தா நல்லதுங்கிற தேவையையும் வெளிப்படுத்தினாங்க. உடம்பையும் மனசையும் உறுத்தாதபடி பார்த்துப் பார்த்துப் பண்ணினேன்.

அருமை - மாற்றுத்திறனாளிகளுக்கு மகத்தான உடைகள்!

இந்த ஃபேஷன் ஷோவை பத்திக் கேள்விப் பட்ட பலரும், இப்போ அவங்களுக்கோ, அவங்களைச் சார்ந்தவங்களுக்கோ இப்படி ஸ்பெஷல் உடைகள் வேணும்னு கேட்க ஆரம்பிச்சிருக்காங்க. ‘இப்படி ஒரு டிசைனரைத் தான் தேடிக்கிட்டிருந்தோம்’னு சொல்றதைக் கேட்கிறபோது, நான் பண்ற விஷயத்துக்கு ஓர் அர்த்தமும் திருப்தியும் இருக்கறதை உணர்ந்தேன்.

சாதாரண உடையை வடிவமைக்க ஆகிறதை விட மூன்று மடங்கு அதிக நேரம் இதுக்குத் தேவை. இவங்களுக்குப் பெரும்பாலும் காட்டன்லதான் உடைகள் வடிவமைக்க வேண்டியிருக்கும். கல்யாணத்துக்கோ, பார்ட்டிக்கோ கேட்கிறபோது, காட்டனை அடிப்படையா வெச்சுக்கிட்டுத்தான் அதை இன்னும் ஸ்பெஷலானதா மாத்த வேண்டி யிருக்கும். அப்படி நான் டிசைன் பண்ற உடை அவங்க உடம்பையும் உறுத்தக்கூடாது; பார்க்கிறதுக்கும் அசத்தலானதா இருக்கணும். அந்த சவால் எனக்குப் பிடிச்சிருக்கு...’’ - சந்தோஷமாகச் சொல்கிறார் ஷாலினி.

‘`எல்லா ஃபேஷன் டிசைனர்களையும் போல ஆரம்பத்துல எனக்கும் வித்தியாசமான உடைகளை வடிவமைக்கிறதும், பெரிய பெரிய ஃபேஷன் ஷோஸ்ல கலந்துக்கிறதும்தான் லட்சியங்களா இருந்தன. ஆசைப்பட்டது போலவே நிறைய ஃபேஷன் ஷோக்கள் பண்ணியிருக்கேன். அந்த ஷோக்கள் எதுவும் கொடுக்காத ஆத்ம திருப்தியை மாற்றுத்திறனாளிகளுக்கான ஃபேஷன் ஷோ கொடுத்ததுங்கிறதுதான் நிஜம்.

எப்போ வேணாலும் பணத்தைச் சம்பாதிச்சுட முடியும். இப்படியொரு சேவையைச் செய்ய இதுதான் சரியான நேரம்னு யோசிச்சேன். என் கணவருக்காக ஆரம்பிச்ச இந்த முயற்சியால, இன்னிக்குப் பல பேரோட தேவையை என்னால நிறைவேத்த முடியுது அவங்க முகங்கள்ல சிரிப்பைப் பார்க்க முடியுது. இது எனக்குப் பணத்தைவிடவும் பெரிய விஷயமாகப்படுது. இனிமேலும் என்னோட கவனம், மாற்றுத்திறனாளிகளுக்கான உடைகள் வடிவமைப்புலதான் இருக்கும். கூடிய சீக்கிரமே அவங்களுக்கான `பொட்டிக்' ஆரம்பிக்கிற திட்டமும் இருக்கு...’’ - மனதிலிருந்து பேசுகிறார் ஷாலினி விசாகன்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism