Published:Updated:

வேதனை - விவசாய நிலத்தில் பெண்கள்

வேதனை - விவசாய நிலத்தில் பெண்கள்
பிரீமியம் ஸ்டோரி
வேதனை - விவசாய நிலத்தில் பெண்கள்

மாற்றம் வருமா?யாழ் ஸ்ரீதேவி

வேதனை - விவசாய நிலத்தில் பெண்கள்

மாற்றம் வருமா?யாழ் ஸ்ரீதேவி

Published:Updated:
வேதனை - விவசாய நிலத்தில் பெண்கள்
பிரீமியம் ஸ்டோரி
வேதனை - விவசாய நிலத்தில் பெண்கள்

லர்ந்த மண்ணில் வெடித்துச் சிதறும் கண்ணீர்த் துளிகள், மார்பிலும் தலையிலும் அடித்துக்கொண்டு அழும் சொந்தங்கள், ஒரு பக்கம் குழந்தைகள்...  மறுபக்கம் கணவன் வாங்கிய கடன், மனதில் `இனி எப்படி குடும்பத்தை நடத்தப் போகிறோம்?' என்கிற கேள்வி... இவையே விவசாயிகளின் மரணம், அவர்களை நம்பி வாழ்ந்த பெண்களுக்கு விட்டுச் சென்ற சாபம்.

வேதனை - விவசாய நிலத்தில் பெண்கள்

லட்சக்கணக்கில் கடன் சுமை அழுத்த, குடும்பத்தலைவனை இழந்து நிற்கும் விவசாயக் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால், அதைப் பெற அரசு வகுத் திருக்கும் விதிமுறைகள், பாதிக் கப்பட்ட பெண்களால் இழப்பீடு வாங்கவே முடியாத அளவுக்கு இறுக்கமாக இருக்கிறது என்று சொல்கிறது, விவசாயப் பெண் களுக்கான கூட்டமைப்பு. தேசிய அளவில் இயங்கும் இந்த அமைப்பின் பொறுப்பாளர்கள், தமிழகத்தின் ஆறு மாவட்ட விவசாயப் பெண்களிடம் கள ஆய்வு செய்துள்ளனர். திருச்சி, தஞ்சை, திருவண்ணாமலை, நாகப்பட்டினம், விழுப்புரம், வேலூர் ஆகிய மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான பெண்களின் கண் ணீர்க் கதைகள் நம்மை உலுக்குகின்றன.

நிலத்தில் உழைக்கும் பெண்ணுக்கு ‘விவசாயி’ என்ற அங்கீகாரம் இல்லை..!


விவசாயப் பெண்கள் அமைப்பின் தேசியப் பொறுப்பாளர் பர்னாட் பார்த்திமா, ‘`விவசாய நிலத்தில் உழைத்தாலும் விவசாயி என்ற அடையாளம் பெண்ணுக்கு இல்லை. நிலம், வீடு போன்ற அசையாச் சொத்துகளிலும் பெண்களுக்கு உரிமை வழங்கப்படவில்லை. வரதட்சணையைக் காரணம் காட்டி இன்றளவும் பெண்களுக்குச் சொத்தில் உரிமை மறுக்கப் படுகிறது. வரதட்சணையாகக் கொண்டு செல்லும் பணமும் நகையும் கணவன் கைக்குப் போய்விடுகிறது.

குடும்பத்தை நிர்வகிக்கும் பொறுப்போ பெண் தலையில் சுமத்தப்பட்டிருக்கிறது. குடும்ப அட்டையில் குடும்பத் தலை வராக கணவர்தான் இருக்க முடிகிறது. அதேபோல, விவசாய நிலத்தில் ஓயாது உழைக்கும் பெண்களுக்கு ‘விவசாயி’ என்ற அடையாளமோ, அங்கீகாரமோ இல்லை. நிலம் ஆண் பெயரில் இருக்கிறது. நிலத்தைக் குத்தகைக்கு விடுவதும், குத்தகைக்கு எடுப்பதும்கூட ஆணின் பெயரில்தான். பெண்ணின் உழைப்பு தேசிய வருவாய் கணக்கில்கூட மறைக்கப்பட்டிருக்கிறது. 13 கிராமங்களில் நடத்திய ஆய்வின்படி, பல பெண்கள் அடுத்து என்ன செய்வது என்கிற கேள்வியோடு இருக்கிறார்கள்; அவர்கள் பெயரில் எந்தச் சொத்தும் இல்லை; விவசாயம் நடந்தாலாவது உழைத்துக் கடனைக் கட்டிவிடலாம் என்று நினைக்கிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வேதனை - விவசாய நிலத்தில் பெண்கள்

விவசாய நிலத்தில் 90% வேலை பெண்களுடையது. ஆனால், 9% சொத்து கூட அவர்கள் பெயரில் இல்லை. பெண்ணாகப் பிறந்தால் சார்ந்தேதான் வாழ வேண்டும் என்ற அமைப்புதான் இதற்குக் காரணம். பெண்ணுக்கு அரசு இரண்டு ஏக்கர் நிலம் வழங்க வேண்டும். அதோடு, நீர்வள ஆதாரங்களை பெருக்கும் வேலைகளைத் துரிதப்படுத்த வேண்டும். நிலத்தில் உழவு, விதைப்பு என்று படிப்படியாக நடக்கிற எல்லா வேலைகளுக்கும் மானியம் உள்பட அரசு உதவிகள் வேண்டும். பெண்ணுக்கு ‘விவசாயி’ என்கிற அடையாள அட்டையைக் கொடுக்க வேண்டும்’’ என்கிறார் பாத்திமா.

அரசின் இழப்பீடு உண்மையிலேயே கிடைக்குமா?


‘`அரசு சொல்லியிருக்கிற இழப்பீடு எவ்வளவு பொய் தெரியுமா?” என குமுறுகிறார் இந்த அமைப்பின் தேசிய உறுப்பினர் கல்பனா. ‘`மழை பெய்யும் என்று நம்பி விதைத்த மக்கள் இப்போது கொத்துக் கொத்தாகச் சாவதைப் பார்க்கிறோம். ஒரு ஏக்கருக்கு குறைந்தபட்சம் 25 ஆயிரம் ரூபாய் வரை உழவுக்குச் செலவு செய்திருக்கிறார்கள். நிலத்தின் குத்தகைக்குக் கடன் வாங்கியது, விதைப்புக்கு வாங்கியது எனப் பல லட்சம் கடனுடன் தத்தளிக்கிறான் விவசாயி. கடந்த நான்கு வருடங்களாக இதே நிலைமைதான். இந்த வருடமாவது விளைந்தால் வட்டியாவது கட்டலாம் என்று காத்திருந்தவர்களுக்கு இப்போதும் ஏமாற்றம்தான் மிச்சம்.

வேதனை - விவசாய நிலத்தில் பெண்கள்

இறந்த விவசாயியின் குடும்பம் அரசு வழங்கும் மூன்று லட்சம் ரூபாய் இழப் பீட்டைப் பெற என்னென்ன தேவை தெரியுமா?

*விவசாயி, விளைச்சல் பொய்த்த அதிர்ச்சியில் மாரடைப்பால் இறந்தாரா, விஷம் குடித்து இறந்தாரா என்கிற விவரத்துடன், அவர் இறந்ததும் காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப் பட்டிருக்க வேண்டும்.

*இறந்த விவசாயியின் உடல் போஸ்ட்மார்ட்டம் செய்யப்பட்டு, அந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

*இறந்த விவசாயி பெயரில் உள்ள நிலப் பத்திரம் அல்லது அவர் குத்தகைக்கு எடுத்த பத்திரம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

இப்படிப் பல விதிமுறைகள் வகுக்கப் பட்டுள்ளன. கணவனைப் பறிகொடுத்த விவசாயக் குடும்பத்துப் பெண், எஃப்.ஐ.ஆருக்கும், போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் டுக்கும் எங்கு போவார்? வெறும் வெள்ளைத் தாளில் எழுதப்பட்ட குத்தகை பத்திரத்தை அரசு ஏற்குமா? அதுவும் இருப்பது நிலத்தின் உரிமையாளரிடம் என்கிற நிலையில், அவர் என்னதான் செய்வார்? அரசின் இழப்பீடு பல குடும்பங்களுக்குக் கிடைக்கப் போவதில்லை என்பதுதான் உண்மை. பெண்கள் வயலுக்குச் செல்லும்போது கதறி அழுது மனதில் இருப்பதைக் கொட்டுகிறார்கள். இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பது தலித் பெண்கள்தான். வேதனை தாங்க முடியாமல் நிலத்தில் மயங்கி விழுந்து சாவது, விஷம் குடித்தும், தூக்குப்போட்டும் சாவது என 140-க்கும் மேற்பட்ட ஆண்கள் உயிரிழந்திருக் கிறார்கள். எஃப்.ஐ.ஆர் போடப்பட்ட மரணங்களை மட்டுமே அரசு கணக்கில் காட்டுகிறது. கணக்கில் வராத மரணங்களும் கண்ணீர்த் துளிகளும் மிக அதிகம்’’ என்கிறார் கல்பனா.

நிலம் பெண் பெயரில் இருக்க வேண்டும்!


``இந்த வருடம் பெய்யாத மழைக்காக ஆரம்பித்த பிரச்னை இல்லை இது'' என்கிறார் கீதா நாராயணன். பெண்களின் பிரச்னைகள் பற்றி கள ஆய்வு செய்து அவற்றுக்கான போராட்டங்களை நடத்தி வரும் இவர், ‘‘டெல்டா மாவட்டங்கள் விவசாயத்துக்குக் காவிரி நீரையே நம்பியிருக்கின்றன.  வருடத்தில் 180 நாட்கள் வரை காவிரி நீர் விவசாயத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்படுவது வழக்கம். கடந்த சில வருடங்களாக தண்ணீர் திறப்பு குறைந்துகொண்டே வருகிறது. இந்த வருடம் 20 நாட்கள்தான் காவிரி நீர் கிடைத்திருக்கிறது. கடந்த பல வருடங்களாக விவசாயத்தை நம்பிஇருக்கும் மாவட்டங்களில் என்னென்ன பிரச்னைகள் இருக்கின்றன, அவற்றைத் தீர்ப்பதற்கான தொலைநோக்குத் திட்டங்கள் என்ன என்கிற கேள்விக்கான பதில்கள் அமைச்சர்களிடம் இல்லை.

வேதனை - விவசாய நிலத்தில் பெண்கள்

மினரல் வாட்டர் மற்றும் மதுபானம் தயாரிக்கிற நிறுவனங்களால் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுகிறது. இதனால் பல ஆயிரம் அடி வரை போர் போட வேண்டிய நிலைமை விவசாயிகளுக்கு. போர்வெல்லில் தண்ணீர் எடுக்க 15 லட்சம் ரூபாய் வரை செலவழிக்க வேண்டிய நிர்பந்தம். இப்படி நிலத்தடி நீரையும் தொலைத்துவிட்டோம்.

கடந்த ஐந்து வருடங்களாகத் தொடர்கிற வறட்சியின் கோரத் தாண்டவமே தொடர் மரணங்கள். உச்ச நீதிமன்ற உத்தரவுக்குப் பின்னும் தண்ணீர் தராத மெத்தனமும் இத்தனை உயிர்களைக் காவு கொடுக்கக் காரணம். கணவனை இழந்து, விவசாயக் கடன், குழந்தைகளைப் படிக்க வைக்கக் கடன் என்று பல பிரச்னைகள் இருந்தாலும், பெண்கள் விவசாய நிலத்தில் உழைக்கத் தயாராக இருக்கிறார்கள். விளைச்சலுக்குத் தேவையான நீர் ஆதாரங்களைப் பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்ணுக்கு விவசாயி என்ற அடையாளம் கிடைப்பதுடன், நிலமும் அவள் பெயரில் இருக்க வேண்டும். அப்போதுதான் நெருக்கடியான நேரங்களில் அவளால் நம்பிக்கையோடு செயல்பட முடியும்'' என்கிறார்.
 
விவசாயப் பெண்கள் கட்டுமானத் தொழிலாளர்களாக மாறியிருக்கிறார்கள்

விவசாயப் பெண்கள் அமைப்பின் ஒருங்கிணைப் பாளர் விமலா, ``ஆறு மாவட்டங்களில் நூற்றுக் கணக்கான விவசாயக் குடும்பங்களைச் சந்தித்தோம். இதில் மனநலம் பாதிக்கப்பட்டும், உடல் ஊனமுற்றும் செயல்பட முடியாதவர்களும் அடக்கம். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளைகள் படிப்புக்காகக் கடன் வாங்கி கல்லூரிப் படிப்பை முடித்திருக்கிறார்கள். அந்தக் கடன் ஒரு பக்கம், விவசாயக் கடன்கள் ஒரு பக்கமும் வளர்ந்து நிற்கின்றன. வறட்சியால் விவசாயத்தைக் கைவிட்டு, ஆண்கள் வேறு மாவட்டங்களுக்கு பிற வேலைகள் தேடிச் செல்ல, பெண்கள் கட்டுமானத் தொழிலாளர்களாக மாறியிருக்கிறார்கள்.

மத்திய அரசின் 100 நாள் வேலைத்திட்டத்தில் வேலை செய்தவர்களுக்கான சம்பளம் கடந்த ஐந்து மாதங்களாக நிலுவையில் இருக்கிறது. உழைப்புக்கான பணமும் அவசரத்துக்கு இல்லாமல் அடைபட்டிருக்கிறது. இப்படி எல்லா வழிகளும் அடைக்கப்பட்டுத் தத்தளிக்கும் நிலையிலும், விவசாயம் மீண்டும் தழைக்க வேண்டும் என்று பெண்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். ‘மண்ணு வௌஞ்சா அத்தனை துன்பமும் காணாமப் போயிடும்’ என்ற மிச்ச நம்பிக்கையைப் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார்கள். அரசாங்கம் போர்க்கால அடிப்படையில்  வேலையைத் தொடங்க வேண்டும். இழப்பீடு மட்டுமே தீர்வாகாது’’ என்கிறார்.
 
விவசாய நிலங்களில் அடையாளமற்று உழைக்கும் இந்தப் பெண்களின் கண்ணீர்த் துளிகளுக்குப் பதில் என்ன?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism