Published:Updated:

ஒரு மின்னஞ்சல் உங்கள் வாழ்க்கையை மாற்றிடுமோ?!

ஒரு மின்னஞ்சல் உங்கள் வாழ்க்கையை மாற்றிடுமோ?!
பிரீமியம் ஸ்டோரி
ஒரு மின்னஞ்சல் உங்கள் வாழ்க்கையை மாற்றிடுமோ?!

ஆன்லைன் சேஃப்டிமு.நியாஸ் அகமது

ஒரு மின்னஞ்சல் உங்கள் வாழ்க்கையை மாற்றிடுமோ?!

ஆன்லைன் சேஃப்டிமு.நியாஸ் அகமது

Published:Updated:
ஒரு மின்னஞ்சல் உங்கள் வாழ்க்கையை மாற்றிடுமோ?!
பிரீமியம் ஸ்டோரி
ஒரு மின்னஞ்சல் உங்கள் வாழ்க்கையை மாற்றிடுமோ?!

வர் பெயர் அன்பரசி. திருச்சி சொந்த ஊர். சென்னையில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். சில மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. எல்லாம் மிகச்சரியாகவும் அழகாகவும் சென்று கொண்டிருந்தது. அன்பான கணவர்... திகட்டத் திகட்ட காதல்...இப்படி, ஒரு மலைப்பாதையில் நீளும் ஜன்னலோரப் பயணமாக, ரம்மியமாக நகர்ந்துகொண்டிருந்தன நாட்கள். ஆனால், ஒரு மின்னஞ்சல் அவர்கள் வாழ்க்கையை முழுவதுமாகச் சுழற்றிப் போட்டது. மகிழ்ச்சி வேரறுந்து வீழ்ந்தது.

ஒரு மின்னஞ்சல் உங்கள் வாழ்க்கையை மாற்றிடுமோ?!

நடந்த சம்பவம் இதுதான்... அன்பரசியை கல்லூரி நாட்களில் துரத்தித் துரத்திக் காதல்செய்த ஒருவன், அன்பரசியின் மின்னஞ்சலை ‘ஹேக்’ செய்து, அதிலிருந்த மின்னஞ்சல் முகவரிக்கெல்லாம் ஆபாச மின்னஞ்சல் அனுப்பி இருக்கிறான். மின்னஞ்சல் அவளுடைய கணவர், பாஸ், டீம் லீடர் என எல்லோருக்கும் சென்று இருக்கிறது. கணவரும், மற்ற நண்பர்களும் புரிந்துகொண்டார்கள்தான். ஆனால், அவளுக்கு மிகுந்த அவமானம் ஏற்பட்டுவிட்டது. தினம் தினம் இந்த நினைவுகளில் இருந்து மீண்டெழ முயற்சி செய்து தோற்றுக்கொண்டிருக்கிறார். இப்போது அவர் தூங்குவதே பெரும்பாலும் தூக்க மாத்திரை துணையுடன்தான்.

சம்பவம் வேண்டுமானால் வேறாக இருக்கலாம். ஆனால், நம் அனைவருக்கும் இந்த மின்னஞ்சல் சம்பந்தமான பிரச்னை இருக்கும்தானே..? நம் மின்னஞ்சலை ‘ஹேக்’ செய்து, `நான் நேபாளத்துக்கு ஒரு வேலையாக வந்தேன். என் பர்ஸைத் திருடி விட்டார்கள். பணம் இல்லாமல் நிற்கிறேன். என் வங்கிக் கணக்கில் பணம் போடவும்' என்று மின்னஞ்சல் அனுப்பிய சம்பவங்களை கேள்விப்பட்டிருக்கிறோம்தானே..?

சரி, இதற்கெல்லாம் தீர்வு என்ன? நம் மின்னஞ்சல் கணக்கைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்வது எப்படி? நம் மொபைலில் இருந்து தகவல்கள் திருடு போகாமல் பார்த்துக்கொள்வது எப்படி? இது குறித்த கருத்தரங்கம் அண்மையில் சென்னையில் நடந்தது. அதில் இலவச மென்பொருள் இயக்கத்தைச் சேர்ந்த பொறியாளர் யோகேஷ் கிரிகுமார், இணையப் பாதுகாப்பு குறித்துப் பேசினார்...

இப்படித்தான் இருக்க வேண்டும் பாஸ்வேர்ட்!

நம்மில் பலர் பாதுகாப்பான பாஸ் வேர்ட் என நினைப்பது ஆறு எழுத்து களையும், இரண்டு எண்களையும், ஒரு ஸ்பெஷல் கேரக்ட ரையும்தான்! ஆனால், இது பாதுகாப்பான கடவுச்சொல் இல்லை என்கிறார் யோகேஷ். அவர், ``Password என்ற சொல்லே தவறு. அது `Pass phrase' என்பதாகத்தான் இருக்க வேண்டும். அதாவது, உங்கள் மின்னஞ்சலுக்குக் குறைந்தது 30 எழுத்துகள் பாஸ்வேர்டாக இருக்க வேண்டும். அதுதான் Pass phrase. அந்த Pass phrase-ல் எண்கள், ஸ்பெஷல் கேரக்டர்ஸ் எல்லாம் கலந்திருக்க வேண்டும். ஆறு எழுத்துகளைக் கொண்ட உங்கள் பாஸ்வேர்டைத் திருட, ஒரு செகண்ட் போதும். உங்கள் பாஸ் வேர்ட் 30 எழுத்துகள் இருக்கும்போது, அந்த மின்னஞ்சலை ‘ஹேக்’ செய்ய பல வருஷங்கள் ஆகும்” என்கிறர் யோகேஷ்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒரு மின்னஞ்சல் உங்கள் வாழ்க்கையை மாற்றிடுமோ?!பாஸ்வேர்டை நினைவில்கொள்ள...

‘இவ்வளவு நீளமான பாஸ்வேர்டை எப்படி நினைவில் வைத்துக்கொள்வது?’ என்கிற நம் கேள்விக்கு, “அதற்காக நிறைய இலவச மென்பொருட்கள் இருக்கின்றன. எடுத்துக்காட்டாக, ’KeePassX’ என்ற இலவச மென் பொருளைத் தரவிறக்கம் செய்து, நீளமான பாஸ்வேர்டை உண்டாக்கி, அதிலேயே சேமித்து வைத்துக்கொள்ளலாம். உதாரணமாக, உங்களுக்கு ‘கூகுள்’, ‘யாஹூ’ ஆகியவற் றில் மின்னஞ்சல் கணக்கு இருந்தால்... ஒவ்வொன்றுக்கும் 30 எழுத்துகளில் பாஸ் வேர்டை உண்டாக்கி, அதை நினைவில் வைத்துக்கொள்வது கடினம். இதற்கு உதவத் தான் இந்த மென்பொருள். இதில் நீங்கள் பாஸ்வேர்டை உண்டாக்கி அதிலேயே சேமித்துக்கொள்ளலாம். ‘KeePassX’ பாஸ் வேர்டை மட்டும் நீங்கள் நினைவில் வைத்துக் கொண்டால் போதும்” என டிப்ஸ் தந்தார் அவர்.

மொபைல் உங்கள் நண்பனா?

“டிஜிட்டல் இந்தியாவில் இருக்கிறோம். அன்புசூழ் உலகு இல்லாமல்கூட இருந்து விடலாம். ஆனால், ஆண்ட்ராய்ட் மொபைல் இல்லாமல் இருக்க முடியாது. ஆனால், அந்த ஆண்ட்ராய்ட் மொபைல் உங்களுக்கு உண்மையான நண்பனாக இருக்கிறதா? இல்லவே இல்லை” என்கிறார் யோகேஷ்.

ஒரு மின்னஞ்சல் உங்கள் வாழ்க்கையை மாற்றிடுமோ?!

“தகவல்கள் திருடு போகாமல் இருக்க வேண்டுமென்றால், நம் மொபைல் ‘encrypt’ செய்யப் பட்டிருக்க வேண்டும். ஆனால், நம் மொபைல் ‘encrypt’ செய்யப்பட்டிருக்கிறதா என்று பார்த்திருக்கிறோமா? (உங்கள் மொபைலை எடுத்துப் பாருங்கள்!) ‘encrypt’ செய்யப்படாத மொபைலில் இருந்து சுலபமாக அனைத்து தகவல்களையும் திருடலாம், உங்கள் ‘மொபைல் பேங்க்கிங்’ பாஸ்வேர்ட் உள்பட!

உங்கள் மொபலை ‘encrypt’ செய்வது மிகவும் சுலபம். அதை நீங்களே மொபைல் செட்டிங்ஸ் சென்று செய்துவிடலாம். அதற்குத் தேவை, கொஞ்சம் பொறுமையும் மொபைலில் 80 சதவிகிதம் சார்ஜும்!”

இங்கு யோகேஷ் பகிர்ந்திருக்கும் விஷயங்கள் மிகவும் சுலபமானவைதான். இனி எல்லாமே இணையம் என்றாகிவிட்டது, அதில் நம் பாதுகாப்புக்கும் கொஞ்சம் கவனம் செலுத்து வோம். தவறுவோமேயானால், நேற்று அன்பரசிக்கு நடந்தது நாளை நமக்கும் நேரலாம். எச்சரிக்கையாக இருப்பதில் எந்தத் தவறும் இல்லை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism