Published:Updated:

18 ஆண்டுகளாக பட்டையைக் கிளப்பும் ‘சிஐடி’ சீரியல்!

18 ஆண்டுகளாக பட்டையைக் கிளப்பும் ‘சிஐடி’ சீரியல்!
பிரீமியம் ஸ்டோரி
News
18 ஆண்டுகளாக பட்டையைக் கிளப்பும் ‘சிஐடி’ சீரியல்!

ஹோம் தியேட்டர்பா.விஜயலட்சுமி

ஸ்மைல் ப்ளீஸ்!

“வில்லி ரோலில் என்னை நினைச்சுப் பாருங்களேன்... உங்களுக்கே சிரிப்பு வருதுல்ல! அந்த அளவுக்கு பால்வடியற ஃபேஸ் என்னோடது. ஆனா, வாழ்க்கையில் ஒரே ஒரு முறையா வது பயங்கர வில்லத்தனமான ரோலில் நடிச்சுடணும்” என்கிறார் ஸ்ரிதிகா!

18 ஆண்டுகளாக பட்டையைக் கிளப்பும் ‘சிஐடி’ சீரியல்!

சன் டி.வி  ‘குலதெய்வம்’ தொட ரில் அலமேலுவாகக் கலக்கிக் கொண்டிருப்பவரிடம், `அழகின் ரகசியம்..?' என்றதும் வெட்கத் துடன் புன்னகைக்கிறார். ``நிறைய தண்ணீர், நிறைய பழங்கள்... இதுதான் என்அழகின் சீக்ரெட். நேரம் தவறாமல் சாப்பிடுவேன். அதுக்கும் மேல ஸ்மைல் பண்ணிக் கிட்டே இருப்பேன். எந்தப் பிரச்னையையும் என் தலைக்குள்ள ஏத்திக்கவே மாட்டேன்’' என்று குயில் குரலில் சொல்லுகிறார் ஸ்ரிதிகா!

வாவ்... சிஐடி!

புத்தகம் போய் ஐபேட், கிண்டில் வந்துவிட்ட இந்த ஹைடெக் காலத்திலும், துப்பறியும் கதைகளுக்கும், மாயாஜாலக் கதைகளுக்கும் செம கிரேஸ் இருந்துகொண்டுதான் இருக்கிறது. படிப்பது தாண்டி, அதையே சின்னத்திரையில் பார்த்தால் இன்னும் ஜோர்! அந்த வகையில்  ஜீ தமிழ் சேனலில் தினந்தோறும் இரவு 11 மணிக்கு ஒளிப்பரப்பாகும் ‘சிஐடி’ சீரியலுக்குச் சுட்டிகள் முதல் பெரியவர்கள் வரை ரசிகர் பட்டாளம் ஏராளம்!

வித்தியாசமான கொலை, கொள்ளைச் சம்பவங்களைச் சுவாரஸ்யம் சற்றும் குறை யாமல் துப்பறியும் சிஐடி டீம்தான் இந்த சீரியலின் அடித்தளம். ஹிந்தியில் இந்த சீரியல் ஆரம்பித்து, இது 19-வது வருடத்தின் தொடக்கம் என்பதுதான் ஸ்பெஷல்!
கடந்த 2013-ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் `சிஐடி' தொடர் அதன் ஆயிரமாவது எபிசோடை எட்டியது. ஹிந்தியில் சோனி டி.வி-யில் சனி மற்றும் ஞாயிறன்று மட்டும் ஒளிபரப்பாகும் இத்தொடர், தமிழில் டப் செய்யப்பட்டு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பாகிறது.

`ஏசிபி' பிரத்யுமன், இன்ஸ்பெக்டர்கள் தயா, அபிஜித் (தமிழில்... பார்த்திபன், தயா, அபிஷேக்) ஆகிய மூவரும் இதில் மெயின் கேரக்டர்கள். இதில் பிரத்யுமன் என்னும் சிவாஜி சத்யம் மற்றும் தயா என்னும் தயானந்த் ஷெட்டி ஆகிய இருவரும் 1998-ம் ஆண்டிலிருந்து இந்த சீரியலில் நடிக்கிறார்கள். அபிஷேக் என்னும் ஆதித்யா ஸ்ரீவத்ஸவா (தமிழில் அஜித் படமான ஆழ்வாரில் காவல்துறை அதிகாரியாக நடித்தவர்) 1999-ம் ஆண்டிலிருந்து இந்த சீரியலில் இருக்கிறார்.

இவர்களோடு, குற்றவியல் ஆய்வாளர் மற்றும் மருத்துவர் சலோங்கி, அவர் உதவியாளர் மருத்துவர் தாரிகா, சப் இன்ஸ்பெக்டர்கள் ஸ்ரேயா, பூர்வி, ஃப்ரெட்ரிக்ஸ், டி.எஸ்.பி சித்ரவ்லி ஆகியோரும் இன்றுவரை மாறாமல் தொடரும் கேரக்டர்கள்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
18 ஆண்டுகளாக பட்டையைக் கிளப்பும் ‘சிஐடி’ சீரியல்!

இந்த சீரியலில் இதுவரை ஃபாரன்சிக் லேப் மருத்துவர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் உள்பட 53 பேர் மாறிமாறி நடித்துள்ளனர். குற்றங்களில் மாட்டிக்கொள்ளும் நபர்கள், கொலையாகும் நடிகர்கள், சிஐடி அதிகாரிகளின் உறவினர்கள் என்று கணக்கிட்டால், இரண்டாயிரம் பேரைத் தாண்டும்!

சிறப்புத் தோற்றங்களில் சல்மான் கான், ஷாரூக் கான், வித்யா பாலன், அமீர் கான், சோனாக்‌ஷி சின்ஹா, பிபாஷா பாசு என்று முக்கால்வாசி பாலிவுட் நடிகர்கள் இதில் ஏதாவது ஓர் எபிசோடில் தலைகாட்டியிருக்கிறார்கள்!

இதுவரை இந்த சீரியலை 21 இயக்குநர் களுக்கும் மேல் இயக்கியுள்ளனர். 100-க்கும் அதிகமான கதாசிரியர்கள் த்ரில் கொஞ்சமும் குறையாமல்,  ரத்தம் சொட்டச் சொட்ட எபிசோடுகளை எழுதியுள்ளனர். மனதை நடுநடுங்க வைக்கும் இசையுடன் தமிழ் ரசிகர்கள் மனதிலும் சிம்மாசனம் போட்டு அமர்ந்துள்ளது இந்த சீரியல்.

இவ்வளவு பெருமைகளுக்கும் சொந்தமான சீரியலில் நடிக்கும் பிரபலங்களிடம் இதுபற்றிக் கேட்காமல் இருந்தால் எப்படி?

`` `சிஐடி' சீரியல் என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு வாய்ப்பு. எவ்வளவோ வருடங்களாகக் கலைத்துறையில் இருந்தாலும் கூட, இன்று பலருக்கும் என் நிஜப்பெயரைவிட ‘டாக்டர் சலோங்கி’ என்கிற பெயர்தான் உடனடியாக நினைவுக்கு வருகிறது. அந்தள வுக்கு இந்த நரேந்திர குப்தாவை, சலோங்கியாக மாற்றிய பெருமை `சிஐடி' சீரியலையே சேரும். அதற்கும் மேலாக, ரத்த உறவுகள் தாண்டிய ஒரு குடும்பத்தையும், நண்பர்களையும் எனக்கு பெற்றுக் கொடுத்தது `சிஐடி'!'’ என்று மகிழ்கிறார் நரேந்திர குப்தா. 

டாக்டர் தாரிகாவாக நடிக்கும் ஸ்ரதாவோ, `‘மாடலிங், சினிமா தாண்டி எனக்கு ஓர் அழுத்தமான அறிமுகத்தை ரசிகர்களிடையே உருவாக்கிக் கொடுத்துள்ளது `சிஐடி' தொடர். பலபேர் என்னை உண்மையான மருத்துவர் என்றெல்லாம் நினைத்துப் பேசியிருக்கிறார்கள். தொடரில் எனக்கும் அபிஷேக்குக்குமான காதல் நிறைவேற வேண்டும் என்றெல்லாம் ரசிகர்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. அந்தளவுக்கு லட்சக்கணக்கான மக்கள் மனதில் என்னை சிம்மாசனம் போட்டு அமரச் செய்துவிட்டது இந்த வாய்ப்பு’' என்றார்.

18 ஆண்டுகளாக பட்டையைக் கிளப்பும் ‘சிஐடி’ சீரியல்!

`சிஐடி' சீரியலில் நடப்பதுபோலவே பல கட்டத் தேடல்களுக்குப் பிறகு இத்தொடரின் ஹீரோக்களும் நம்மிடம் சிக்கிக்கொண்டனர். சிஐடி இன்ஸ்பெக்டர் அபிஷேக்காகப் பட்டையைக் கிளப்பும் ஆதித்யா ஸ்ரீவத்ஸவா, ‘`நான் நாடக உலகம் மூலமாகத்தான் இந்தத் தொடருக்குள் நுழைந்தேன். தமிழில்கூட ஒரு படத்தில் நடித்திருக்கிறேன். ஹிந்தியிலும் நிறைய படங்களில் நடித்திருக்கிறேன். ஆனாலும், `சிஐடி' தொடர் கொடுத்த ஒரு கிரேஸ், வேறு எதிலும் இதுவரை கிடைத்ததில்லை. தமிழகத்திலும் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் இருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது’' என்கிறார்.

தயாவாக நடிக்கும் தயானந்த் ஷெட்டி, ‘`1998-லிருந்து நான் இந்த சீரியலுக்குள் இருக்கிறேன். விளையாட்டுத் துறையில் இருந்து நடிப்புக்குள் நுழைந்தபோது ஒரு சிறு வருத்தம் இருந்தது... பிடித்த விளையாட்டை விட்டுவிட்டு வருகிறோமே என்று. ஆனால், சிஐடி-யில் நடிக்க ஆரம்பித்ததும், என்னை சிறுகுழந்தைகள்கூட அடையாளம் கண்டுவிடுகிறார்கள். அதனால் அப்படி ஒரு சந்தோஷம் எனக்கு. என்ன... இதுவரை தோராயமாக 1000 கதவை நொறுக்கியிருக்கிறேன் என்பதுதான் கொஞ்சம் ஜெர்க் ஆக வைக்கிறது’' என்று சிரிக்கிறார்.

சீரியல் என்பதைத் தாண்டி, அழுகாச்சி காட்சிகள் இல்லாமல், தமிழில் கலக்கும் க்ரைம் கதை மன்னர்களுக்குச் சமமான கதையோட்டத்துடன், சின்னத்திரையில் ஆயிரக்கணக்கான நடிகர்களுக்கும், பின்புல ஊழியர்களுக்கும் ஏதோ ஒரு வகையில்  இத்தனை வருடங்களாக வருமானத்துக்கு வழியமைத்துக் கொடுத்துள்ள இந்த சீரியலுக்கு ஒரு ராயல் சல்யூட்!