Published:Updated:

ட்ரெண்டி... வெஸ்டர்ன் பாணியில் நம்ம ஊர் நைட்டிகள்!

ட்ரெண்டி... வெஸ்டர்ன் பாணியில் நம்ம ஊர் நைட்டிகள்!
பிரீமியம் ஸ்டோரி
News
ட்ரெண்டி... வெஸ்டர்ன் பாணியில் நம்ம ஊர் நைட்டிகள்!

இது புதுசு யாழ் ஸ்ரீதேவி

பெண்களின் மனதுக்கு மிகவும் நெருக்கமான உடை நைட்டி. ரிலாக்ஸ்டாக உணரச்செய்கிற வசதியான உடையும் இதுதான். பல ஆண்டுகளாக ஒரே பாணியிலேயே தயாரிக்கப்பட்டு வந்த நைட்டிகள், இப்போது புதிய வடிவங்களுக்கு மாறி, ஃபேஷன் உலகிலும் இடம்பிடித்துவிட்டன. ஆம்... தோள் தொட்டு, கால் பட்டு தொடரும் நைட்டியின் ஸ்டைல் அவ்வப்போது மாறினால்தானே பெண்களின் விருப்பமும் தொடரும்..? திருப்பூர் நிஃப்ட்-டி காலேஜ் ஆஃப் நிட்வேர் ஃபேஷன் மாணவிகளின் சிந்தனையில் உதித்த இந்த மாற்றம் மார்க்கெட்டுக்கும் வரப்போகிறது!

ட்ரெண்டி... வெஸ்டர்ன் பாணியில் நம்ம ஊர் நைட்டிகள்!

`எம்.பி.ஏ அப்பாரல் பிசினஸ்’ முதலாம் ஆண்டு மாணவிகளின் கைவண்ணத்தால் உருவான நைட்டி ஃபியூஷனில் வெஸ்டர்ன் ஸ்டைல் வசீகரிக்கிறது. அனுப்பிரியா, சந்தியா, வாசுகி, தனுஸ்ரீ, கீர்த்தனா, வைஷ்ணவி... இந்த ஆறு பெண்களும் சேர்ந்து உருவாக்கிய நைட்டிகளுக்கு `ட்ரெண்டி’ எனப் பெயர் சூட்டியுள்ளனர். இந்த ட்ரெண்டி நைட்டிகளுக்கு உயிர்கொடுத்த மாடங்களையும் ஸ்டைலாக க்ளிக் செய்து நமக்கு அளித்திருக்கிறார், `காஸ்ட்யூம் டிசைனிங்’ முதலாம் ஆண்டு மாணவி சௌமியா.

``காட்டன் ஃபேப்ரிக் அல்லது பனியன் கிளாத், சிங்கிள் பீஸ் உடை... அப்படியே உள்ளே புகுந்து உடலை மூடிக்கொள்கிற மாதிரி ஒரு ஸ்டைல்... இப்படி ஒரே மாதிரி நைட்டியை வெறுக்கும் பெண்கள் பலரும் கனவில் வந்து எங்களைத் திட்டித் தீர்க்கிற மாதிரி ஒரு ஃபீல். வீட்டுக்கு விருந்தாளி வந்துட்டா ஷால் தேடி ஓட வேண்டிய சங்கடம். வீட்டுவேலைகளுக்கு இடையில் பக்கத்துக் கடைக்குக்கூட டக்குன்னு கிளம்ப முடியாது. அதனால, எல்லாப் பிரச்னைகளையும் ஒரே மாத்திரையில் குணமாக்கிற மாதிரி ஸ்டைல மாத்திட்டோம்’’ என்று அறிமுகம் தருகின்றனர் இந்த ஸ்டைலிஷ் மாணவிகள்.

`ட்ரெண்டி நைட்டியில் அப்படி என்ன ஸ்பெஷலோ?' சொல்கிறார் தனுஸ்ரீ...

‘‘நைட்டியோட கான்செப்டை மாற்றுவதற்காக ஃபேப்ரிக்கையே மாற்றினோம். காட்டனுக்குப் பதிலா டெனிம். இது ஜீன் லுக் தரும். ஷாஃப்ட் டெனிம் ஃபேப்ரிக்ல நிறைய கலர்ஸ் தேடினோம். டெனிம்ல டிசைன் பண்றதே ரொம்ப ஸ்பெஷல். வெஸ்டர்ன் ஸ்டைல் காலர், கட்டிங்... இப்படி  அடுத்தடுத்த விஷயங்கள் அழகாவே அமைஞ்சது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ட்ரெண்டி... வெஸ்டர்ன் பாணியில் நம்ம ஊர் நைட்டிகள்!

இதில் சுருக்கம் விழாது. எத்தனை முறை துவைத்தாலும் கலர் போகாது. விரைவில் உலர்ந்துவிடும். டெனிம் கிளாத் நைட்டியைப் பராமரிக்கிறதும் ஈஸி. மெல்லிய டெனிம் கிளாத் நைட்டி போட்டுக்கிட்டா, உடலோடு மேகத்தைக் கட்டிக்கிட்டாற்போல உணரலாம்!’’

வெஸ்டர்ன் ஸ்டைலையும் டெனிமையும் மிக்ஸ் செய்த கலாட்டாவைப் பகிர்ந்து கொள்கிறார் அனுப்பிரியா... ‘‘வெஸ்டர்ன் ஸ்டைல் உடைகள் ஹெவியா இருப்பதில்லை. வழக்கமான உடைகளுக்கு நேரெதிர் அனுபவங்களைத் தரும். உடலில் சிக்கெனப் பொருந்தும். பருமனான பெண்களையும் ஸ்லிம் தோற்றத்தில் காட்டும். அடிப்படையில், இதுபோன்ற நைட்டிக்கு ஒன்றரை மீட்டர் டெனிம் துணிதான் தேவை. காலர், கழுத்து, கை, பாட்டம்னு அங்கங்க எக்ஸ்ட்ரா பிட் வொர்க் சேர்த்து வெஸ்டர்ன் ஸ்டைலை மிளிர வெச்சிருக்கோம். தாய்மைக் காலத்தில் பால் புகட்ட வசதியா ஓப்பனிங் வெச்சிருக்கோம்.

ட்ரெண்டி... வெஸ்டர்ன் பாணியில் நம்ம ஊர் நைட்டிகள்!

காட்டன் நைட்டில இருக்கும் பிரச்னைகள் எதுவும் டெனிம்ல இல்ல. டிரான்ஸ்பரன்டா தெரியாது. முன் கழுத்து பகுதிக்கான டிசைனில், குனிந்து, நிமிர்ந்து வேலை பார்த்தாலும் சங்கடப்பட வேண்டிய அவசியமில்லாம பார்த்துக்கிட்டோம். உட்கார்ந்து, எழுந்து செய்ய வேண்டிய வேலைகளின்போதும் டெனிம் கிளாத் வளைந்து கொடுக்கும். வீட்டில் தடபுடல் சமையலுக்கு இடையில் வெளியில் ஷாப்பிங் செல்ல நேரிடலாம். அதற்காக புதிதாக உடுத்திக் கொண்டிருக்கத் தேவையில்லை. ட்ராவல், டிரைவிங் பண்ணும்போதும் இது ஸ்டைலாகவே இருக்கும். டெனிம் ஃபேப்ரிக் நைட்டியைக் கொஞ்சம் ஷார்ட்டாகத் தைத்து லெகின்ஸுடன் மேட்ச் செய்தும் போடலாம். பெண்கள் ஆசைப்படும் அத்தனை ஸ்டைலும் இதில் சாத்தியம்!’’

அட... இனி ஆசை ஆசையாக நைட்டியும் அணியலாம்!